தமிழர் மதம்
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான். - (குறள் 1073)
உரை: தேவர்கள் கயவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
பொருள் : இறைவனின் அனுமதியின்றி தேவர்கள் மனம் விரும்பியபடி செயவார்களாயின் அவர்களும் கயவர்களே.
இஸ்லாம்
தேவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். - (குர்ஆன் 2:32)
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (குர்ஆன் 21:26,27)
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் (குர்ஆன் 16:50)
கிறிஸ்தவம்
தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள்.. (சங்கீதம் 103:20, 21)
இதில் குறள் வஞ்சப் புகழ்ச்சி அணியில், இகழ்வது போல் புகள்வதாகும்
பதிலளிநீக்குஅன்று நின்றான் கிடந்தான்
பதிலளிநீக்குஅவன் என்று
சென்று நின்று எண்திசை
ஏத்துவர் தேவர்கள்
என்று நின்று ஏத்துவன் எம்பெருமான் தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே
(திருமந்திரம்-1762)
கருத்து: சிவபெருமான் அங்கு நின்றான், இங்கு கிடந்தான் என்று தேவர்கள் எட்டுத் திசைகளிலும் போய் நின்று வழிபடுவார்கள். என் உயிருக்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நிற்கும் அந்தச் சிவபெருமானை நான் என்றைக்கும் வணங்கிக் கொண்டே இருப்பேன்.