தமிழர் சமயம்
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
பொருள்: "இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்."
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்கனைகழல் ஈசனைக் காண அரிதாம்கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. (திரு - 7ஆம் தந்திரம் - 1795)
பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.
அறம் விளக்கல்
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்அறத்தை விளக்குதல் நற்கு. - (அருங்கலச்செப்பு, 24)
பொருள்: அனைவருக்கும் அறத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்க வைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம்.
யூதம்
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். என்று மோசே கூறினார் - (உபாகமம் 4:14)
கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்” (சங்கீதம் 105:1)
கிறிஸ்தவம்
அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்” (மத்தேயு 15:24)
ராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத்தேயு 24: 14)
இஸ்லாம்
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களிடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் 16:125)ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! - (அல்குர்ஆன் 103:3)
(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான் - (அல்குர்ஆன்16:125)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - (அல்குர்ஆன் 2:256)
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)
முடிவுரை
வேதத்தை ஓதினால் மட்டும் போதாது அதை பொருள் உணர்ந்து அது கூறும் நெறிகளை பின்பற்றி பிறருக்கும் எடுத்து கூறவேண்டும் என்பது அனைத்து நெறிகளும் இடும் கட்டளை ஆகும். ஆனால் மற்றவரை கட்டாய படுத்துவதை அவைகள் விரும்பவில்லை.
எல்லோரும் அவரவர் சமயத்தை போதிக்க வேண்டும் என்றால் மாதங்களுக்கு இடையே சண்டை வராமல் இருக்குமா என்று சிந்தித்தால், நான்மறை என்றால் என்ன? கல்வி என்றால் என்ன? என்று அறிந்தால் இப்படி பட்ட குழப்பங்கள் தோன்றாது. இறைவன் ஒருவனே, அனைத்து வேதங்களும் அவனிடம் இருந்தே வந்தது, அனைத்து சமயங்களும் அவன் உருவாக்கியது. அதை கற்காமல் பிழையாக புரிந்துகொண்டு அவன் கூறும் அறத்தில் நில்லாமல் போன மக்களால் ஏற்படும் குழப்பங்கள் இவைகளெல்லாம்.
பதிலளிநீக்குபள்ளிக்காலங்கள் கிறிஸ்தவ நிறுவனத்தில் அமைந்து இருந்த எனக்கு சமைய நமபிக்கை என்பது பல காலம் இந்து மதத்திலும், தமிழின் மீது ஆர்வமேற்பட்ட பிறகு நாத்தீகத்திலும் பொதுவுடைமையிலும், பிறகு ஒரு சிறந்த நாளிலிருந்து இஸ்லாத்தில் அடியெடுத்து வைத்து நிலை பெற்றது. அந்த சிறந்த நாளுக்கு முன் என்னைப்போன்று ஒருவனுக்கு இயல்பாக ஏற்படும் கேள்விகளுக்கு பதிலை எளிமையாக ஆதாரத்துடன் விளக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் நோக்கமாக மாறிப்போனது. எனவே இந்த தலைப்பு தொடர்பான எனது எழுத்தும் வாழ்க்கையின் எல்லை வரை அமையும் என்று நம்புகிறேன்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)
பதிலளிநீக்குஇந்த வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் சுட்டி காட்டி ''இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர)லி நூல்: புகாரீ 11
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187
அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
பதிலளிநீக்குதிருக்குர்ஆன் 5:42
‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா திருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்; யாவற்றையும் மிகைத்தவன்.” (22:40)
பதிலளிநீக்குஉங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்
பதிலளிநீக்கு40 ,“உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2010&version=ERV-TA
அப்போஸ்தலர்களை அனுப்புதல்
பதிலளிநீக்கு10 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:
சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
அவரது சகோதரன் யோவான்,
3 பிலிப்பு
மற்றும் பார்த்தலோமியு,
தோமா
மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
4 சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8 நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9 உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11 ,“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2010&version=ERV-TA
மத்தேயு 28:18-20
பதிலளிநீக்கு18 ஆகவே இயேசு அவர்களிடம்,, “வானத்திலும் பூமியிலும் முழு அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகவே உலகில் உள்ள மக்கள் அனைவரையும் சீஷர்களாக்குங்கள். பிதாவின் பெயராலும் குமாரனின் பெயராலும் பரிசுத்த ஆவியானவரின் பெயராலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குங்கள். 20 நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்றார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2028%3A18-20%2CMatthew%2028%3A18-20&version=ERV-TA;NIV
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
பதிலளிநீக்குசுத்த சிவன்எங்கும் தோய்வுஉற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார்; குணம்கொண்டு கோதாட்டார்;
பித்துஏறி நாளும் பிறந்துஇறப் பாரே (திருமந்திரம் 1538)
தங்களுடைய குரலைக் கேட்டு உலகம் கடுப்பாவது கழுதைகளுக்குத் தெரியாது. உலகத்தின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது தம்பாட்டுக்கு இன்பமாகக் கத்திக்கொண்டிருக்கும் அவை. அந்தக் கழுதைகளைப் போலவே காள் காளென்று கத்துகிறார்கள் மூதேவிகள் (கலதிகள்). என்ன இவ்வளவு கடுமையாகச் சொல்கிறார்? வேறு எப்படிச் சொல்வார்? பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருந்திருக்கிறது பரிபூரண ஆனந்தமாகிய சுத்த சிவம். அதனை உணர மாட்டாமல், ‘எங்கள் வழிக்கு வா, எங்கள் விதிகளைப் பின்பற்று, அப்போதுதான் இறையருள் பெறுவாய்’ என்று பாழ்த்த குரல் எடுத்துப் பாடினால், திருமூலர் கடுமையாகச் சொல்லாமல், பின் என்ன கொஞ்சுவாரா? தங்களுடைய குற்றத்தை உணர்கிற அறிவும்கூட இவர்களுக்குக் கிடையாது. இவர்களெல்லாம் பிறப்பார்கள், சாவார்கள், வேறேதும் ஆக மாட்டார்கள், பைத்தியக்காரர்கள்!
https://www.hindutamil.in/news/spirituals/126383-29-6.html
இப்பாடலுக்கு இங்கே விளக்கம் எழுதிய ஆசிரியர் யாரை குறிப்பிட்டு எழுதினார் என்று தெரியவில்லை, ஆனால் சிவா இலிங்ககத்தையோ அல்லது உருவத்தையோ நம்புபவராகவோ வணங்குபவராகவோ இருந்தால் அவர் அவரைத்தான் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "தங்களுடைய குற்றத்தை உணர்கிற அறிவும்கூட இவர்களுக்குக் கிடையாது. இவர்களெல்லாம் பிறப்பார்கள், சாவார்கள், வேறேதும் ஆக மாட்டார்கள், பைத்தியக்காரர்கள்!