விபச்சாரமும் வறுமையும்

தமிழர் சமயம்


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் (நல்வழி வெண்பா : 20)

விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இஸ்லாம்


'விபசாரத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

கிறிஸ்தவம் 


ஒரு விபச்சாரி உன்னை வறுமையில் தள்ளுவாள், ஆனால் வேறொருவரின் மனைவியுடன் உறங்குவது உங்கள் உயிரை இழக்க செய்யும்- (நீதிமொழிகள் 6:26)

4 கருத்துகள்:

  1. “ஒருவன் அவனது மனைவியை விவாகரத்து செய்கிறான்.
    அவள் அவனை விட்டு விலகுகிறாள்.
    அவள் இன்னொருவனை மணந்துகொள்கிறாள்.
    அவனால் அவனது மனைவியிடம் மீண்டும் வர முடியுமா? இல்லை!
    அவன் அந்தப் பெண்ணிடம் மீண்டும் போனால் பிறகு அந்நாடு ‘அழுக்காகி’ விடும்.
    யூதாவே, பல நேசரோடே (பொய்த் தெய்வங்களோடு) நீ ஒரு வேசியைப்போன்று நடந்தாய்.
    இப்போது நீ என்னிடம் திரும்பி வா!”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    2 “யூதாவே, மலை உச்சிமீது கண்களை ஏறெடுத்துப் பார்.
    உன் நேசர்களோடு (பொய்த் தெய்வங்கள்) பாலின உறவுகொள்ளாத இடம் ஏதாவது இருக்கிறதா?
    ஒரு அரபியன் பாலைவனத்தில் காத்திருப்பதுபோன்று நீ சாலை ஓரத்தில்,
    உன் நேசர்களுக்காகக் காத்திருந்தாய்.
    நீ இந்த நாட்டை ‘அசுத்தம்’ பண்ணிவிட்டாய்! இது எப்படி?
    நீ பல தீயச் செயல்களைச் செய்தாய்.
    எனக்கு விசுவாசமற்றவளாக இருந்தாய்.
    3 நீ பாவம் செய்தாய்.
    எனவே மழை பெய்யவில்லை.
    மழைகாலத்திலும் மழை பெய்யவில்லை.
    ஆனால் இன்னும் நீ வெட்கப்பட மறுக்கிறாய்.
    ஒரு வேசி வெட்கப்பட மறுக்கும்போது அவளின் முகம்போன்று,
    உன் முகத்தின் தோற்றம் இருக்கிறது.
    நீ செய்தவற்றுக்காக, வெட்கப்பட மறுக்கிறாய்.
    4 ஆனால் இப்போது என்னை நீ ‘தந்தையே’ என்றழைக்கிறாய்.
    ‘நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நீர் எனது நண்பனாக இருந்தீர்’ என்று கூறுகிறாய்.
    5 ‘தேவன் எப்பொழுதும் என்மீது கோபங்கொள்வதில்லை.
    தேவனுடைய கோபம் எப்பொழுதும் தொடராது’
    என்றும் கூறுகிறாய்.
    https://www.biblegateway.com/passage/?search=Jeremiah+3%3A1-25&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  2. எபிரேயர் 13:4 ESV / 74 பயனுள்ள வாக்குகள்
    திருமணம் அனைவருக்கும் மரியாதைக்குரியதாக இருக்கட்டும், மற்றும் திருமண படுக்கை மாசுபடாததாக இருக்கட்டும், ஏனென்றால் பாலியல் ஒழுக்கக்கேடான மற்றும் விபச்சாரிகளை கடவுள் நியாயந்தீர்ப்பார்.

    ஜேம்ஸ் 4:4 ESV / 72 பயனுள்ள வாக்குகள்
    விபச்சாரிகளே! உலகத்துடனான நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்தின் நண்பனாக இருக்க விரும்புகிறவன் தன்னைக் கடவுளுக்கு எதிரியாக்கிக் கொள்கிறான்.

    பதிலளிநீக்கு
  3. பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
    அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
    புஹாரி 5347

    https://mugavaiulama.blogspot.com/2017/01/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 5:7 என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள். 8 விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே. 9 நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள். 10 உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள். 11 உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும். 12-13 பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன். 14 இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%205&version=ERV-TA

    பதிலளிநீக்கு