மெய்ப்பொருள் காண்

இஸ்லாம்


நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6
 
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6)

தமிழர் சமயம் 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

மணக்குடவர் உரை: யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.   

கிறிஸ்தவம் 

முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான். (நீதிமொழிகள் 14:15)

1 கருத்து:

  1. 1. 1 சாமுவேல் 24:9 அவர் சவுலை நோக்கி, “ தாவீது உனக்குத் தீங்கு செய்ய நினைக்கிறான் என்று மனிதர்கள் சொல்வதை ஏன் கேட்கிறாய் ?

    2. நீதிமொழிகள் 17:4 பொல்லாததைச் செய்கிறவன் பொல்லாத பேச்சைக் கவனிக்கிறான்;

    3. 1 தீமோத்தேயு 5:19 ஒரு பெரியவருக்கு எதிரான குற்றச்சாட்டை இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் முன்வைக்காத வரையில் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

    4. நீதிமொழிகள் 18:7-8 மூடர்களின் வாய் அவர்களுக்கு அழிவு; அவர்கள் தங்கள் உதடுகளால் தங்களைப் பொறித்துக் கொள்கிறார்கள். வதந்திகள் என்பது ஒருவரின் இதயத்தில் ஆழமாக பதியும் நயமான துகள்கள்.

    பைபிள் என்ன சொல்கிறது?

    5. நீதிமொழிகள் 26:20-21 விறகு இல்லாமல் நெருப்பு அணையும். வதந்திகள் இல்லாமல், வாக்குவாதங்கள் நின்றுவிடும் . கரி நிலக்கரியை பளபளக்க வைக்கிறது, மரம் நெருப்பை எரிய வைக்கிறது, பிரச்சனை செய்பவர்கள் வாதங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

    6. யாத்திராகமம் 23:1 “நீங்கள் பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். சாட்சி ஸ்டாண்டில் படுத்துக் கொண்டு தீயவர்களுடன் ஒத்துழைக்கக் கூடாது.

    7. லேவியராகமம் 19:16 மற்றவர்களுக்கு எதிராகப் பொய்க் கதைகளைப் பரப்பக் கூடாது. உங்கள் அண்டை வீட்டாரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் செய்யாதீர்கள். நான் இறைவன்.

    https://biblereasons.com/rumors/

    பதிலளிநீக்கு