மருந்து

இந்துமதம் 


உணவும் மருந்தும் எனது 

गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: || 15- 13||

கம் = பூமியில்
அவிஸ்ய = நுழைந்து
ச = மேலும்
பூதாநி = உயிர்களைத்
தாரயாமி = தாங்குகிறேன்
அஹம் = நான்
ஒஜஸா = சக்தியால்
புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்
ச = மேலும்
ஔஷதீ: = மருந்தாக
ஸர்வா: = அனைத்து
ஸோமோ = சாறாக, அமிர்தமாக
பூத்வா = ஆனபின்
ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்

பொருள்: நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் பலப் படுத்துகிறேன். மேலும் மருந்தாக அனைத்தின் சாரமாக ஆனபின் அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்.  - (கீதை - 15.13)
 

இஸ்லாம்


அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி : உஸாமாபின்ஷரீக் (ரலி), நூல் : அபூதாவூத் 3855, 3357, திர்மிதீ 1961) 
 

 கிறிஸ்தவம் & யூத மதம்


உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். - (யாத்திராகமம் 23:25
 


6 கருத்துகள்:

  1. ஸஹீஹுல் புகாரீ - தொடர் » 76.மருத்துவம்

    பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5680

    இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்’ என்று கூறினார்கள்.

    மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது’ என வந்துள்ளது.

    பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5681

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

    பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5682

    ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.

    பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5683

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

    பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5688

    அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாமைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது’ என்று கூறினார்கள்.

    இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: ‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.

    https://www.islamkalvi.com/?p=118314

    பதிலளிநீக்கு
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.

    அறி: ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம்-4432

    https://www.bayanapp.indiabeeps.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  3. தோல் வியாதியைப்பற்றிய விதிகள்

    லேவியராகமம் 13, 14

    தொழுநோயாளியைச் சுத்தப்படுத்துவதற்கான விதிகள்
    14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்குமுரிய விதி முறைகளாகும்.

    “தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். 4 அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும். 5 பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 6 அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும். 7 பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.

    8 “பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும். 9 ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2014&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  4. லேவியராகமம் 15

    உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களுக்கான விதிகள்
    15 பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, 2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். 3 இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.....

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2015&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  5. நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.(அல்குர்ஆன் 26:80)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (இறைவா !) நீயே நிவாரணம் அளிப்பவன். உன்னுடைய நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் கிடையாது. (நூல் புகாரி 5351)

    பதிலளிநீக்கு
  6. நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்­க் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்த­ல் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.

    அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மா­க் (ர­), நூல் :முஸ்­ம் (4427)

    பதிலளிநீக்கு