தமிழையே சரிவர பேசாமல் தமிழர் என்று பெருமைப்படுவது சரியா?

அற்புதமான கேள்வி!

தமிழர் என்பதில் ஏதும் பெருமை உண்டா? இல்லை.

ஏன் இல்லை? எந்த மொழிக்கும் பெருமை இல்லை.

அப்போ எதுக்குத்தான் பெருமை உண்டு? தமிழ் கூறும் அறத்துக்கு தான் பெருமை உண்டு.

அதற்கு முதலில் தமிழை முறையாக கற்று பேச வேண்டும், தமிழர் அற நூல்களையும் மறை நூல்களையும் கண்டறிய வேண்டும் அதை கற்க வேண்டும்.

அடுத்து அந்த மறை நூலின் படி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

இது ஏதும் இல்லமால் தமிழ் தமிழர் என்று பெருமையடிப்பது பேதைமை.

இன்னாத கூறல் பிழை என்கிறது தமிழ் - வாய்க்கு வந்த மோசமான வார்த்தைகளை சரளமாக பேசுகிறோம்.

பிறன் மனை நோக்கவும் கூடாது என்கிறது தமிழ் - கள்ளத்தொடர்பில் திளைக்கிறது தமிழர் சமூகம்.

பொறாமை பெருமை கூடாதென்கிறது தமிழ் - காட்டிக்கொள்ள போட்டி போட்டு பணத்தை சேமிக்கிறோம்.

இறைவன் ஏகன் என்கிறது தமிழ் - சிலை, விலங்குகள், மனிதர்கள், இயற்கை என எல்லாவற்றையும் வணங்குகிறோம்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் தமிழ் கூறும் அறத்துக்கும் தமிழர் வாழும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை. இதில் தமிழர் என்று பெருமை கொள்வதால் யாருக்கு என்ன பயன்?


காலம் மாறும், மொழி மாறும், நிலம் மாறும், அரசு மாறும் ஆனால் அறமும் அதை வகுத்த இறைவனும் மாறா.

1 கருத்து:


  1. தமிழன் என்பவன் வெறும் மொழியை மட்டும் சார்ந்தவனா அல்லது அழகிய பண்பாட்டை சார்ந்தவனா?

    வெறும் மொழி மட்டுமே என்றால் பேச்சு வழக்கில் ஆங்கிலமும் வடமொழியும் கலக்கும் முன்வரை தமிழன் என்பவன் இருந்தான்..

    ஆனால் பண்பாடு என்றால் தமிழ் நன்னெறி நூல்களுடன் முரண்படும் சித்தாந்தம் வந்தபொழுதே தமிழர் பண்பாடு அழிய தொடங்கிவிட்டது. அதாவது எதுவரை தமிழினம் அதன் பண்பாட்டில் வடக்கத்திய மற்றும் மேற்கத்திய பண்பாட்டை சேர்க்காமல் இருந்ததோ அதுவரை... இவைகளின் பண்பாடுகள் தமிழர் பண்பாட்டுடன் ஒத்துபோயிருந்தால் இழப்பொன்றும் இல்லை.. ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படை கொள்கைக்கு முரணாக அமைந்ததால்தான் இழப்பு.. தமிழர் பண்பாட்டை மீட்டுக்கும் கடமை தமிழ் பண்பாட்டை மதிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு..

    சங்க காலம் மூன்றாக பிரிக்க பட்டு இருக்கிறது அதில் முதல் சங்க காலமே உண்மை தமிழ் பண்பாடாகும்... அந்த வகையில் அது இடைசங்க காலத்திலே வடமொழி கலந்தபோழுதே தமிழரின் உண்மை பண்பாடு நீர்த்துபோய் உருமாற தொடங்கிவிட்டது. இரண்டாம் சங்ககாலமாக பிரிக்க பட்டகாலத்தில் இருந்து வந்த பக்தி நூல்கள் அதற்கு முன் இருந்த நன்னெறி நூல்களுடன் முரண்பட முடியாது.. ஏனெனில் ஒரே பண்பாட்டு வாழ்க்கை நெறியை போதிக்கும் நூல்களில் முரண்பாடுகள் இருக்க முடியாது. இருந்தால் அது வேற்று கலாச்சார திணிப்பு.

    எனவே வரலாற்றை கால அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் பகுக்க தெரிந்து இருக்க வேண்டும்.. தமிழ்மொழி அழகிய ,மற்றும் அறிவு பொதிந்த போதனைகள் அடங்கிய நூல்கள் கொண்ட மொழி ஆனால் அதன் அறிவு சுரங்கத்தை படித்து கற்று அறியாமல் பண்பாட்டின் சாராம்சம் என்ன என்று அறியாமல் மொழியை மட்டும் தூக்கி பிடித்தால் "தமிழ் இனி மெல்லச் சாவும்". அந்த நூல்களை வாசிப்பதும் பேசுவதுமே கேளிக்கைக்கு உரியதாக ஆன இக்காலத்தில் வெறுமனே தமிழ் தமிழன் தமிழினம் தமிழனடா என்பதுவெல்லாம் வெறும் அரசியலே அல்லது அறிவீனமே.. எனவே தமிழர் ஒவ்வொருவரும் தமிழ் பண்பாட்டு நெறியை ஆய்வு செய்ய தொடங்க வேண்டும்.. மேலும் தொடங்கும் எவரும் இவைகளை நினைவில் கொண்டு ஆய்வில் ஈடுபடுங்கள்..மக்கள் வாழ்வில் வாழ்க தமிழர் நேறி..

    பதிலளிநீக்கு