தமிழர் சமயம்
பாம்புஉண்ட நீர்எல்லாம் நஞ்சுஆம்; பசுஉண்ட
தேம்படு தெள்நீர் அமுதமாம் - ஓம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோல்
களியாம் கடையாயார் மாட்டு. - (அறநெறிச்சாரம் பாடல் - 187)
விளக்கவுரை பாம்பு உண்ட நீர் முழுவதும் நஞ்சாக மாறும்; அதுபோலக் அறிவற்றவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் மயக்கத்தையே ஏற்படுத்தும்; பசுக்கள் குடித்த இனிய தெளிந்த நீர் பாலாக ஆகும்; அதைப் போல் உயர்ந்தவர்கள் கற்கும் ஞானநூல்கள் அவர்களிடம் போற்றுதற்குரிய அறிவை வளர்க்கும்.
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு. (சிறுபஞ்ச மூலம் 21)
சொற்பொருள் கடையாயயர் (கடை+ஆயர்). கடை ஆயர் என்பது அறிவீனர்களிலே மிகவும் கீழ்தட்டில் இருப்பவர்கள் என்று பொருள்.
விளக்கவுரை ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
சொற்பொருள்: நன்று - நன்மை தேற்றாதார் - தெரியாதார்
கோதை யருவிக் குளிர்வரை நன்னாடபேதையோடு யாதும் உரையற்க - பேதைஉரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்வழுக்கிக் கழிதலே நன்று. - (நாலடியார் - 8:71)
விளக்கவுரை மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.
(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் திட்டமாக அதிகமான நன்மைகளைக் கொடுக்கப் பட்டுவிடுகிறார். மேலும், அறிவாளிகளைத் தவிர வேறெவரும் உபதேசம் பெறமாட்டார்கள். - (குர்ஆன் 2:269)
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை. (குர்ஆன் 10:108)
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். - (குர்ஆன் 2:6)
கிறிஸ்தவம்
ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். (யோபு 11:12)
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். - (நீதிமொழிகள் 1:5-7)
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
பதிலளிநீக்குமூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு. 21
நன்று - நன்மை தேற்றாதார் - தெரியாதார்
ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html
15:13. அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
பதிலளிநீக்கு10:108. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை
பதிலளிநீக்கு34:50. (மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்.
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவை, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதை உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கமடையமாட்டான்; ஆகவே, விசுவாசங்கொண்டிருக்கிறார்களே அத்தகையோர் நிச்சயமாக அது தங்கள் இரட்சகனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். எனவே, நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு, அல்லாஹ் என்னதான் நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். இதைக்கொண்டு அவன் அநேகரை, நேர் வழி பெறச்செய்கிறான்; இன்னும், தீயவர்களைத் தவிர (மற்றெவரையும்) இதைக் கொண்டு அவன் வழிதவறச் செய்யமாட்டான்.
7:155. இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
16:37. (நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
35:8. எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
39:41. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
4:88. (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுவிட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகிறீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவரை அல்லாஹ் வழிதவற விட்டு விட்டானோ அவருக்கு (மீட்சி பெற்றுத் தர) ஒரு வழியையும் நீர் காணமாட்டீர்!
5:77. “வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையல்லாததைக் (கூறுவது) கொண்டு வரம்பு மீறாதீர்கள், அன்றியும் (இதற்கு)முன்னர், (இவ்வாறு) திட்டமாக வழிதவறிவிட்ட கூட்டத்தாரின் மனோ இச்சைகளையும் நீங்கள் பின்பற்றாதீர்கள், (ஏனென்றால், முன்பே அவர்களும் வழிகெட்டு) இன்னும் அனேகரை வழி தவறவும் செய்துவிட்டனர், மேலும், அவர்கள் நேரான வழியைவிட்டும் முற்றிலும் தவறிவிட்டனர்.
நாலடியார் - 8.பொறையுடைமை
பதிலளிநீக்குகோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. 71
மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.
https://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar8.html
120. மூடனுக்குச் செய்த உபதேசம்
பதிலளிநீக்குமனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலையில்லதவர்களாகி, நல்லது எது என்பதையும் உணராதவர்கள் ஆகிய, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி மொய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சபையினுள்ளே சென்று, உடலளவான மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு, உறுதி தரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும். அது, கடலினுள் மாம்பழத்தைக் கொட்டுவது போன்ற பயனற்ற செயலுமாகும்.
நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.
அறிவுடையோர் புல்லறிவு உடையோருக்கு உபதேசம் செய்வதற்கு முயலுதல் கூடாது; அவர்க்கு உரைப்பது எல்லாம் வீணே என்பது கருத்து. 'கடலுளால் மாவடித் தற்று' என்பது பழமொழி.
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_58.html
10:101. “வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
பதிலளிநீக்குயோபு 11:12
பதிலளிநீக்குஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான்.
https://www.biblegateway.com/quicksearch/?quicksearch=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&version=ERV-TA