வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

வேதங்களை ஒப்பு நோக்குவது கல்வியின் ஒரு இன்றியமையாத பகுதி. அது உண்மை வேதம், உண்மை குரு, உண்மை தெய்வம் மற்றும் பொய் வேதம், பொய் குரு, பொய் தெய்வங்களுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குவதுடன் அதில் உண்மையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கும். உண்மை பிறப்பறுத்து வெற்றிக்கு வழிகாட்டும். வேதங்களை ஒப்பு நோக்கும் காரணத்தையும் அவசியத்தையும் நான்மறைகள் கீழ்கண்டவாறு விளக்குகிறது. 

தமிழர் சமயம் 


உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது. (ஏலாதி 64)

பொருள்: எல்லாரினும் உயர்ந்தவன் தலைவனாவா என்று ள்ளங்கொண்டு, மாற்றவர்க்குச் சொன்ன நன்மையானே யொக்க வாராய்ந்து, உயர்ந்தவனாற் சொல்லப்பட்ட வாகமத்தை யோதி, அவ்வாகமத்திற் சொன்ன வகையானேயடக்க முடையவனாய்; அவ்வுயர்ந்தவன் சொல்லிய வரிய தவத்தை மிகவுஞ் செய்தால், பிறப்பில்லாத வீடாமென்று சொல்லினார், மிகவும் பெருந் தவஞ்செய்தார்.

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு. (ஏலாதி  75)

விளக்கவுரை ஆறு வகையான சமயத்தவர் நூல்களையும் அறிந்து உணர்ந்து, மறு வரவில் ஆராய்ந்து நீக்கி தம் உணர்வுக்கு மாறாக விளங்கும் கருத்துகளையும் நீக்கி. மறுவரவின் ஆசிரியனாக மீண்டும் சொல் மாற்றுதலே ஆசாரியனின் அமைவு. (இது வழி நூல் வரும் முறையை சொல்கிறது)

இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். - (அறநெறிச்சாரம் பாடல் - 39)
 
விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!  
 
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பு இன்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு - (அறநெறிச்சாரம்: அறத்துக்கு இன்றியமையா 4: 3)

விளக்கவுரை: அறத்தை உரைப்பவனையும், அந்த அறத்தைக் கேட்பவனையும் உரைக்கப்படும் அறத்தையும், கூறியதால் ஏற்படும் பயனையும் குற்றம் இல்லாமல் ஆராய்ந்து, அந்நான்கினுள்ளும் குற்றமானவற்றை அகற்றி, (நல்லனவற்றை) நிலைபெறும்படி செய்தல் உயர்ந்தவர் கடனாகும்.   

1) தேவர் குறளும் 2) திருநான் மறைமுடிவும்
3) மூவர் தமிழும் 4) முனிமொழியும் 5) கோவை
திருவா சகமும் 6) திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலக வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் -  சித்தர் பாடல்கள்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்,  திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் அவிழ்வது எளிது.

குறிப்புரை: "திருக்குறளை விரும்பி ஓதி தெளிந்தவர்க்கு மறைநூல்கள் அனைத்தின் விளக்கம் கிடைப்பது எளிது" என்பதன் பொருள் திருக்குறள் என்னும் மறைநூலைஓதி உணர்ந்து விரும்புபவர்களுக்கு நான்மறை மறைநூல்களை ஒப்பு நோக்கினால் அவைகளிடம் ஓர் இணக்கப்பாட்டை காணமுடியும், அவைகள் ஒரே கருத்தை உரைப்பனவாகவும் இருக்கும், இதைக் கொண்டு மற்ற மறை நூல்களை அடையாளம் காணமுடியும் என்பதாம். எனவே தற்செயலாக குறளை கீதையுடனும், பைபிளுடனும், குர்ஆனுடனும் சிலர் ஓப்பு நோக்கி நூல்கள் எழுதி இருப்பதை காண முடிகிறது. 
 
தமிழர் சமயம் கூறும் நான்மறை பற்றியும், ஆறு சமயம் பற்றியும் முதல் மற்றும் வழி நூல் பற்றியும் அறிவோர் வேத மற்றும் சமய ஒப்பு நோக்கின் காரணத்தை அறிவர்.    
 

 இஸ்லாம்


“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (அல்குர்ஆன் 3:64
 

கிறிஸ்தவம் 


வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். - (ஏசாயா 1:18)

13 கருத்துகள்:

  1. இதை இவ்வாறு நடைபெற செய்பவன் கடவுள் ஆவான்

    பதிலளிநீக்கு
  2. https://www.the-criterion.com/wisdom-as-elucidated-in-the-bible-and-bhagavad-gita-a-brief-comparative-study/

    பதிலளிநீக்கு
  3. தேவாரம் பேசும் திருமந்திரம்

    முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
    எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
    நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குஉளன்
    அத்தகு சோதி அதுவிரும் பாரே? (திருமந்திரம் 2115)

    ஈசனை வழங்குகிற முத்தியை, முத்தியை வழங்குகிற அறிவை, அறிவை வழங்குகிற முத்தமிழ் ஓசையை எப்போதும் போற்றுக. பாலில் நெய் கலந்திருப்பதைப் போல அறிவினில் அறிவாக ஈசன் கலந்து நிற்கிறான். அறிவை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா?

    முத்தமிழ் என்பது
    தேவாரம் திருவாசகம் திருமந்திரமா
    அப்பர் சுந்தரர் சம்பந்தர்-இன் தேவாரமா
    இயல் இசை நாடகமா?

    பதிலளிநீக்கு
  4. மறைநூலைகளை பற்றி ஆராயாக் கூடாதா?

    அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் ((இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

    இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! (அல்-குர்ஆன் 17:41)

    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்-குர்ஆன் 4:82)

    பதிலளிநீக்கு
  5. 2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. 5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. 5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

    பதிலளிநீக்கு
  8. வேதங்கள் ஏன் சில விடயங்களில் ஏன் முரண்படுகிறது? உதாரணமாக புலால்.

    3:50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. தமிழ் சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை

    https://twitter.com/jaya2016maha/status/1777279701125611844?t=bthj7cqpJGmrgq_OZhCG1w&s=19

    பதிலளிநீக்கு
  10. மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
    பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
    கேட்கும் திருவுடை யாரே பிறவியை
    நீக்கும் திருவுடை யார். - (பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை பாடல் - 2)

    விளக்கவுரை: பாவத்தை வளர்க்கின்ற செய்திகளும், ஆசையை வளர்க்கும் செய்திகளும், மாற்றப்பட்ட வேறு பொருள் தரப்பட்ட செய்திகளும் கலந்து நிறைந்த நூல்கள் உள்ள இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

    https://araneriislam.blogspot.com/2024/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  11. தமிழர்கள் குறளை ஒரு அலுவக்கோளாக எடுத்துக்கொண்டு உலகில் மற்ற மொழியில் உள்ள வேதங்களை ஆய்வு செய்தால் அது வேதமா இல்லையா என்று கண்டுபிடிக்கலாம்.

    எப்படி?

    தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்- கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

    குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4)

    பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது


    பதிலளிநீக்கு
  12. நூலை உணரும் முறை

    நிறுத்துஅறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
    அறத்தினும் ஆராய்ந்து புக்கால் - பிறப்புஅறுக்கும்
    மெய்ந்நூல் தலைப்பட லாகும்மற்று ஆகாதே
    கண்ணோடிக் கண்டதே கண்டு. பாடல் - 41

    விளக்கவுரை (பொன்னை) நிறுத்தும் அறுத்தும் தீயால் சுட்டும் உரைத்துப் பார்த்தும் பொன்னை வாங்குபவனைப் போல், அற நூல்களையும் பலவற்றால் தேடி ஆராய்ந்தோமானால் பிறப்பினை நீக்கும்படியான உண்மை நூலைப் பெறலாகும்; (மாறாக) கண்போய்ப் பார்த்ததையே பார்த்து விரும்பி உண்மை எனக் கற்றால் உண்மை நூலை அடைய இயலாது.

    பதிலளிநீக்கு
  13. இவ்வாறு ஒப்பு நோக்குவது என்பது பொய்யை நிறங்கண்டு அகற்ற உதவும். அதாவது மறை நூலில் இடைசொருகப்பட்ட பாடல் அல்லது வசனம், உள்ள பாடலுக்கு பொருள் திரித்து கூறுதல், போன்றவற்றை இனங்காண முடியும். உதாரணமாக சைவ ஆகம நூல்களான தேவாரம் திருவாசகம் மற்றும் திருமந்திரத்திற்கு வேத வியாசர் எழுதிய சிவ புராணத்தை கொண்டு விளக்கம் எழுதப்படுகிறது. அதற்கு பதிலாக அந்த வேதங்களை உலக நான்மறைகளோடு ஒப்பிட்டால் முரண்பாடுகள் களைந்து சத்தியத்தை அறியும் வாய்ப்பு கிட்டும்.

    பதிலளிநீக்கு