பச்சை குத்துதல் *

கிறிஸ்தவம் 


மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர். (லேவியராகமம் 19:28) 
 
மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். (வெளி 14:9

இஸ்லாம் 


அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று கூறினார்கள்... (ஸஹீஹுல் புகாரீ - தொடர் » 65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4886)

சவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி. 

3 கருத்துகள்:

  1. வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி - கலி 96/27
    மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி

    http://sangacholai.in/sangpedia-u.html

    பதிலளிநீக்கு
  2. பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
    அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
    புஹாரி 5347

    https://mugavaiulama.blogspot.com/2017/01/blog-post_29.html

    பதிலளிநீக்கு