மரணமில்லாத ஒரே ஒருவன்

தமிழர் சமயம்


அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர் புகு மாறறி யேனே. (திருமந்திரம் 5


இஸ்லாம்


(உலகிலுள்ளவை) யாவும் அழிந்து போகக்கூடியதே, மிக்க வல்லமையும், கண்ணியமுமிக்க உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:26,27)  
 

கிறிஸ்தவம் & யூதம்


அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென். (1 தீமோத்தேயு 6:16)

முடிவுரை

மரணமில்லாத அமரன் ஒரே ஒருவன் தான் அவனே நம் இறைவன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளும் ஒரு நாள் நிச்சயமாக மரணித்தோ அழிந்தோ போகும்.  

6 கருத்துகள்:

  1. அந்தம் இல் ஈசன்

    சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
    அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
    நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
    புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே. 27

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு
  2. >பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
    **இறப்பு இலி** யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. *(திருமந்திரம் *25)

    பதிலளிநீக்கு
  3. அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
    விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

    அவிநாஸி² து = அழிவற்றது தான் என்று
    தத்³ வித்³தி⁴: = அதை அறிந்து கொள்
    யேந இத³ம் ஸர்வம் = எதனால் இவை அனைத்தும்
    ததம் = வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    அஸ்ய அவ்யயஸ்ய = அந்த அழிவற்றதற்கு
    விநாஸ²ம் கர்தும் கஸ்²சித் ந அர்ஹதி = அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது

    இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

    https://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-2

    பதிலளிநீக்கு
  4. நித்திய ஜீவன் (என்றென்றும் நிலைத்திருப்பவன்):

    அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;...2:255

    இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். 20:111

    (பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே -55:26

    மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.55:27

    https://www.islamkalvi.com/basic/believes/001.htm

    பதிலளிநீக்கு
  5. திருநாவுக்கரசர்

    நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
    ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
    ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
    ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே - தேவாரம்:2078

    ஈறு - முடிவு

    பதிலளிநீக்கு
  6. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:8

    பதிலளிநீக்கு