பாவ புண்ணியம் பயனளிக்கும்

தமிழர் சமயம் 

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் - (நல்வழி பாடல் 1)

விளக்கம்மனிதன் இறக்கும் போது அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

இஸ்லாம்  

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள் எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8)

கிறிஸ்தவம்  

6 கடவுள் “ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவாறு பிரதிபலிப்பார்.” 7 விடாமுயற்சியுடன் நன்மை செய்வதால் மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுபவர்களுக்கு அவர் நித்திய ஜீவனைக் கொடுப்பார். 8 ஆனால், சுயதேடும், சத்தியத்தை நிராகரித்து தீமையை பின்பற்றுகிறவர்களுக்கு கோபமும் கோபமும் இருக்கும். 9 தீமை செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் துன்பமும் இருக்கும்: முதலில் யூதனுக்கும், பிற இனத்தவருக்கும்; 10 நன்மை செய்கிற யாவருக்கும் மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்: முதலில் யூதனுக்கும் பின்பு புறஜாதியாருக்கும். 11 ஏனெனில் கடவுள் தயவைக் காட்டுவதில்லை. 12 நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாகப் பாவம் செய்கிற யாவரும் நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாக அழிந்துபோவார்கள்; (ரோமர்கள் 2 கடவுளின் நீதியான தீர்ப்பு)

4 கருத்துகள்:

  1. “நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது… (31:34)

    ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
    தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக்கேட்டேன். ( புகாரி 4936)

    உலக அழிவு நாள்…
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548)

    https://islamkalvi.com/?p=113091

    பதிலளிநீக்கு
  2. (‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.) (அல்குர்ஆன் 23 : 115)

    (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா? பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா? அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். (அல்குர்ஆன் 82 : 17-19)

    நான் நபி என்பதன் காரணமாகவோ அல்லது நபியுடைய மகளாக நீ ஆகி விட்டதன் காரணத்தாலோ நீ நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் இதை காரணமாக சொல்லி வெற்றி பெற முடியாது.(1)

    அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2548.

    (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். (அல்குர்ஆன் 18 : 49)

    ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான். (அல்குர்ஆன்17 : 13)

    நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய செயலும், நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு பெரிய செயலும் அதில் எழுதப்படுகின்றது. எந்த ஒன்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்54 : 53)

    உன்னை விசாரிப்பதற்கு நீ உனது புத்தகத்தைப் படித்துப் பார், உன்னுடைய செயல்களை எழுதப்பட்ட அந்த ஏட்டை படித்துப் பார். (அல்குர்ஆன் 17 : 14)

    கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். (அல்குர்ஆன்26 : 82)

    மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். (அல்குர்ஆன்13 : 21)

    யா அல்லாஹ்! நாளை மறுமையில் உன்னுடைய அடியார்களை ஒன்று சேர்த்து விசாரிக்கும் அந்த நாளில்உன்னுடைய தண்டனையிலிருந்து நீ என்னைப் பாதுகாத்து கொள்வாயாக.

    அறிவிப்பாளர் : ஹஃப்சா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 4388.

    யார் தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்த காரணத்தால், அவனுடைய கண்கள் கண்ணீரை சிந்தினவோ இவர்கள் நாளை மறுமையில் அர்ஸ் உடைய நிழலில் இருப்பார்கள்.(3)

    அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 620.

    https://www.muftiomar.com/videodetails/633

    பதிலளிநீக்கு
  3. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார். அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார். (அல்குர்ஆன்84 : 7-9)

    அது விசாரணை அல்ல, விசாரணையை அல்லாஹ் சொல்லவில்லை, அல்லாஹு ரப்புல் ஆலமீன் எடுத்துக் காட்டுவான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதன் செய்த செயல்களை அவனுக்கு காண்பிப்பான், விசாரிக்க மாட்டான். யாரொருவன் நாளை மறுமையில் தோண்டித் துருவி துருவி விசாரிக்கப்பட்டு விடுகின்றானோ அவன் நிச்சயமாக வேதனை செய்யப்பட்டே தீருவான்.

    அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 100.

    அடியானே! இந்த குற்றங்களை எல்லாம் நான் உலகத்திலேயே யாரும் கண்டுகொள்ளாமல் யாரும் அதைப் பார்க்காமல் மறைத்து வைத்திருந்தேன், நீ செய்த பாவங்களை நான் உனக்கு உலகத்தில் மறைத்தேன், இப்போது நான் அந்தப் பாவங்களை அப்படியே மன்னித்து விடுகிறேன் என்று சொல்வான். நீ சுவர்க்கத்திற்கு செல்! என்பதாக.(4)

    அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2261.

    (நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17 : 36)

    (ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 284)

    நாளை மறுமையில் ஒரு அடியானை கொண்டு வரும் போது, 5கேள்விகள் கேட்கப்படும், அந்த 5கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை யாருடைய பாதமும் இறைவனுடைய அந்த முன்னிலையில் இருந்து நகர முடியாது.

    அவருடைய வாழ்க்கையைப் பற்றி கேட்கப்படும்

    1. உன்னுடைய வாழ்க்கையை நீ எப்படி செலவு செய்தாய்?

    2. உன்னுடைய வாலிபத்தை நீ எங்கே கழித்தாய்?

    3. உன்னுடைய செல்வம், நீ எந்த வழியில் சம்பாதித்தாய்?

    4. சம்பாதித்த அந்த செல்வத்தை எந்த வழியில் செலவு செய்தாய்?

    5. உனக்குத் தெரிந்த மார்க்க கல்வியை கொண்டு நீ எப்படி வாழ்க்கை நடத்தினாய்?

    நாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மிடத்தில் இந்த 5கேள்விகளைக் கொண்டு விசாரணை செய்வான்.

    அறிவிப்பாளர் : அபூபர்சா அல்அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2417.

    பதிலளிநீக்கு
  4. யோபு 13:10
    ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால், தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%207&version=ERV-TA

    39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான்

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%206&version=ERV-TA

    என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2012&version=ERV-TA

    பதிலளிநீக்கு