தமிழர் சமயம்
அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (ஞானக்குறள் 93)சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.
இஸ்லாம்
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத மனிதன் நரகத்தில் நுழைய மாட்டான் கறந்த பால் மடியில் மீண்டும் செல்லும் வரை. (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1633, தரம் : ஸஹீஹ் (அல்பானி))
ஏழு மனிதர்களுக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அர்ஷின் நிழலை கொடுக்கின்றான். அதிலே ஒருவர்; தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடிக்கும் மனிதன். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.)
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; இரண்டு கண்கள், நரக நெருப்பு அவற்றை தீண்டாது. ஒன்று அல்லாஹ்வுடைய பயத்தால் அழுத கண்கள், இரண்டாவது அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாத்துக்கொண்டிருந்த கண்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1639, தரம் : ஸஹீஹ் அல்பானி)
கிறிஸ்தவம்
என் வருத்தத்தை நீர் அறிகிறீர். என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர். என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர். (சங்கீதம் 56:8)
அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள் (1சாமு. 1:10)
யாக்கோபு 4:8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்கு9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள்.
10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81+4%3A1-10&version=ERV-TA