சிறியாரையும் போற்று

பெரியோர் சிறியோர் என்பது வயதின் அடிபப்டையில் மட்டுமல்ல, அவரவர் பண்பு உட்பட பல்வேறு அடிப்படையிலும் கூட.

தமிழர் சமயம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - (புறநானூறு

பொருள்: எனவே, செல்வத்தாற் பெரியவரை வியந்து மதித்தலும் செய்ய மாட்டோம் ; சிறியோரை இகழ்தலும் செய்ய மாட்டோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே கருதுவோம்.

இஸ்லாம்

சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். [புகாரி 4918

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதை கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “விஷயம் தெரியுமா? (குழந்தைகளுக்கு) கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அபூஹுரைரா (ஸஹீஹ் முஸ்லிம் 4637)

 கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை (இரக்கக் குணத்தை)ப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636)

கிறிஸ்தவம் 

“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும்... ...இந்தச் சிறியவர்களில் ஒருவரையும் நீ அசட்டை செய்யாதபடி பார்த்துக்கொள். பரலோகத்தில் அவர்களுடைய தூதர்கள் எப்போதும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முகத்தைப் பார்க்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் (மத்தேயு 18:10)

கருத்து

செல்வத்தில், கல்வியில், வயதில், பதவியில் உயர்ந்தவர்களை அதிகமாக புகழ்தலும் கூடாது. இவைகள் இல்லாதவர்களை இகழ்தலும் கூடாது. உள்ளத்தில் உள்ளதை இறைவனே அறிவான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக