மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்

தமிழர் சமயம்


மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7 
 
பொருள்: மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள்.

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8

பொருள்: தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள்.

மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9- 

பொருள்: மண் நீர் தீ மதி காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள்

இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10- 

பொருள்: இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது.

இஸ்லாம் 


இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல் குர்ஆன் 30: 20)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன்  21:30)

கிறிஸ்தவம் 


கர்த்தராகிய ஆண்டவர் பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார். அவர் தனது நாசியில் ஜீவ மூச்சை ஊதினார், மேலும் மனிதன் ஒரு உயிரினமானான். (ஆதியாகமம் 2.7)

2 கருத்துகள்:

  1. Being meticulous about definitions is commendable.

    If I, as an individual, can't personally verify the laws across all scientific disciplines, should I still believe in science? It seems challenging for anyone to comprehend every scientific discipline, even with explanations.

    This situation resembles a form of faith, akin to religious beliefs.

    பதிலளிநீக்கு
  2. வரையறைகளில் உன்னிப்பாக இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு தனிநபராக என்னால், அனைத்து அறிவியல் துறைகளிலும் உள்ள சட்டங்களை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை என்றால், நான் இன்னும் அறிவியலை நம்ப வேண்டுமா? ஒவ்வொரு அறிவியல் துறையையும், விளக்கங்களுடன் கூட புரிந்துகொள்வது எவருக்கும் சவாலாகத் தெரிகிறது. இந்த நிலைமை மத நம்பிக்கைகளுக்கு நிகரான நம்பிக்கையின் வடிவத்தை ஒத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு