கடவுளை மறப்பது பாவத்தின் விளைவு

தமிழர் சமயம் 


தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே (பாடல் எண் : 13)

பொழிப்புரை: இறைவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அது  தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; அவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் பத்தி செய்பவராயே விளங்குவர்.

இஸ்லாம் 

“அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை (பாவங்களையும் தீய செயல்களும்) அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. உள்ளது” - (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்  83:14)

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள். (குர்ஆன்  59:19)


கிறிஸ்தவம் 

 
ஆனால் உங்கள் அக்கிரமங்கள் உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையே ஒரு பிரிவினை உண்டாக்கியது, உங்கள் பாவங்கள் அவர் கேட்காதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைத்துவிட்டது. (ஏசாயா 59:2)
 
கிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்கள் சொந்த செயல் அல்ல; இது கடவுளின் பரிசு, செயல்களின் விளைவு அல்ல, அதனால் யாரும் பெருமை பேசக்கூடாது. (எபேசியர் 2:8-9)

3 கருத்துகள்:

  1. அருளினா லன்றி யகத்தறி வில்லை
    அருளின் மலமறுக்க லாம். 101

    இறையருள் இருந்தாலன்றி நெஞ்சில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. 1 ஜான் 3:17
    ஆனால் ஒருவன் உலகப் பொருட்களை வைத்திருந்து, தன் சகோதரன் தேவைப்படுவதைக் கண்டு, அவனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தை மூடிக்கொண்டால், அவனிடத்தில் தேவனுடைய அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

    https://www.openbible.info/topics/bad_friends

    பதிலளிநீக்கு
  3. இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
    தெருளும் சிவசிந்தை யால். 102

    இறைவன் அருளால் மனத்திருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும்.

    பதிலளிநீக்கு