தமிழர் சமயம்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
பொருள்: உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்.
இஸ்லாம்
மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)
இது முஸ்லிம்களின் நன்மை, நம்பிக்கை மற்றும் பரவலின் ஒரு கட்டமாக இருக்கும். பின்னர் மற்றொரு கட்டம் வரும், அதில் விசுவாசிகளின் எண்ணிக்கை குறையும் வரை அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் ஒரு காற்றை அனுப்பும் வரை, அந்த நேரம் வரும் மனிதர்களில் மிகவும் தீயவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். முஸ்லீம் (148)
கிறிஸ்தவம்
நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார் (மத்தேயு 5:45)
முடிவுரை
நல்லோரால் தான் மழை பொழிகிறது ஆனால் அதனால் தீமை செய்வோருக்கும் சேர்த்துதான் பொழிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக