தமிழர் சமயம்
“பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - தொல்காப்பியம் 573 “என தொல்காப்பியத்துக்கு விளக்க உரை எழுதிய இளம்பூரணர் கூறுவார் "பிறவாவது தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர்" என்று.
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை - (திருமந்திரம் 5)
பொருள்: சிவனன்றி அவனால் படைக்கப்பட்ட மூவர்களாகிய தேவர்கள், மனிதர்கள், அசுரர்களால் செய்ய முடிந்தது ஏதும் இல்லை.
மேற் சொன்ன கூற்று உண்மையா என்று ஆய்வோமா? அசுரர் என்ற சொல் தேவர் மற்றும் மனிதர் ஆகிய படைப்புகளோடு சேர்த்து பேசபப்டுவதன் மூலம் அசுரர் என்பது ஒரு தனி படைப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது.
கீழ்கண்ட திருமந்திர பாடல்களில் அசுரர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுளள்து .
44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடிபோற்றி என்பார் அசுரர் புனிதன் அடிபோற்றி என்பார் மனிதர் புனிதன் அடிபோற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.
10 செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.
8 நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க எனவில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
5 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடைவந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடைவந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.
3 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உறவன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்திதன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.
18 மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
அதுமட்டுமில்லாமல் அசுரருக்கு வேறு சில பெயர்களும் தமிழ் நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?... - (பரிபாடல் 60)மாயம் செய் அவுணரை - (கலித்தொகை 2:3)
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி - (காலிததகை 1:3)
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும் - (அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)
பொழிப்பு: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)'
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். - (அல்குர்ஆன் 7 : 27)
மேலும் சூரத்துல் ஜின் என்கிற அத்தியாயம் குர்ஆனில் இறக்கி அருளப்பட்டுள்ளது. அதில் அவர்களது உணவு, உறைவிடம் உட்பட ஆற்றல், செயல்கள் மற்றும் பண்புகள் என பலவும் விரிவாக கொடுக்கப் பட்டுள்ளது.
கிறிஸ்தவம்
எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனிதனை படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். - (ஆதியாகமம் 1:27)
ஒருநாள், தேவதூதர்கள் யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள் சாத்தானும் அவர்களோடு வந்து நின்றான். - (யோபு 1:6)
சாத்தான் என்பவன் fallen Angel என்ற கருத்து கிறிஸ்த்தவர்களிடம் நிலவுகிறது அது பிழை என்பதற்கு ஆதாரம் இந்த வசனம். தேவர்களுடன் சாத்தான் வந்து நின்றான் என்கிற வசனம் சாத்தான் தேவர் இனத்தை சார்ந்தவன் அல்ல என்று கூறுகிறது. ஆனால் சாத்தான் என்கிற பெயர் அவனது (அரக்க) செயலால் அவனுக்கு வழங்கப் பேட்ட பெயர். எனவே மனிதனும் அல்லாமல், தேவரும் அல்லாமல், பேராற்றல் (அசுர பலம்) வழங்கப்பட்ட இனத்தை சார்ந்தவன் சாத்தான் என்று விளங்க முடிகிறது.
எசேக்கியேல் 28- 14:18 (அசுரர் பற்றி)
14 You were the anointed cherub who [h]covers, And I placed you there. You were on the holy mountain of God; You walked in the midst of the stones of fire.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது சிறகுகள் என் சிங்காசனத்தின் மேல் விரிந்தன. நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன். நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய். நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 You were blameless in your ways, From the day you were created, Until unrighteousness was found in you.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய். ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16. By the abundance of your trade, You were internally filled with violence, And you sinned; Therefore I have cast you as profane From the mountain of God. And I have destroyed you, you covering cherub, From the midst of the stones of fire.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது. ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய் எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன். நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன். நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன். உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும் நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது. உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது. எனவே உன்னைத் தரையில் எறிவேன். இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 By the multitude of your wrongdoings, In the unrighteousness of your trade You profaned your sanctuaries. Therefore I have brought fire from the midst of you; It has consumed you, And I have turned you to ashes on the earth In the eyes of all who see you.
18 நீ பல பாவங்களைச் செய்தாய் நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய். இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய். எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன். இது உன்னை எரித்தது! நீ தரையில் எரிந்து சாம்பலானாய். இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.
சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”— (யோபு 1:6)
சாத்தான்; சோதனைக்காரன்.— (மத்தேயு 4:3)
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 44)உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:9)
இறைவனால் படைக்கப்பட்ட மூன்று இனங்கள்
- தேவர்கள் (அ) அமரர் (அ) தேவ தூதர்கள் (அ) வானவர்கள் (அ) மலக்குகள் (அ) Angel - இறைவனுக்கு பணிவிடை செய்பவர்கள் - with no free will
- அசுரர்கள் (அ) ஜின்கள் (அ) பூதம் (அ) அவுணர் (அ) கேரூப்கள் - பல்வேறு பிரமாண்ட "அசுர பலம்" கொண்டவர்கள் - with free will
- மனிதர்கள் (அ) இயக்கர்கள் (அ) நரர் (அ) Humans - இது நாம் with free will
இமூவரும் வெவேறு பரிமானங்களில் (Dimensions) வாழுகிறார்கள். அறிவியல் பதினோரு பரிமாணங்கள் இருப்பதாக கூறுகிறது.அரக்கர்கள் - "அரக்க குணம்" என்பார்களே அவர்கள் தன் இனத்தில் சக நபருக்கு இடையில் இரக்கம் காட்டாதவர்கள். இறைவன் வகுத்த அறங்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள், பின்பற்றாதவர்கள்தான் அரக்கர்கள் ஆவர்.பேய் (அ) அலகை (அ) கூளி (அ) அரக்கன் (அ) சாத்தான் (அ) சைத்தான் (அ) இராட்சதர் என்று இவர்கள் அழைக்கப் படுகிறார்கள். இந்த பண்பு முதலில் அசுரர் குலத்தில் தோன்றியதால் அரக்கர்கள் அசுர குலத்தை சார்ந்தவர்களாக கருதபடுகிறார்கள் ஆனால் மனிதர்களிலும் அரக்கர்கள் உள்ளார்கள் என்பதை கீழுள்ள செய்திகள் உறுதிப்படுத்துகிறது.
இந்துமதம்
மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || கீதை - 9.12||
மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கிமோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கிமோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கிவிசேதஸ: | = குழம்பிராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போலஅஸுரீம் = அசுரர்களைப் போலச = மேலும்எவ = நிச்சயமாகப்ரக்ருதிம் = இயற்கையில்மோஹிநீம் = மயக்கம் மற்றும் குழப்பம்ஸ்²ரிதா: = அடைக்கலம் கொள்கிறார்கள்
ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில் இருக்கிறார்கள்.
பொருள்: ஆசைகள், அந்த ஆசைகளை அடைய வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற அறிவு.... இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன் உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.
இஸ்லாம்
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக. (குர்ஆன் 6:112)
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (குர்ஆன் 114:4-6)
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் மீண்டும் மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர் தான் ஷைத்தான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (நூல் : புகாரீ 3275)
கிறிஸ்தவம்
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். (யோவான் 8:44)
https://vedathiyanam.blogspot.com/2016/12/blog-post_47.html?m=1
பதிலளிநீக்குபாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21 மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன். https://wol.jw.org/ta/wol/b/r122/lp-tl/nwtsty/48/5#study=discover
பதிலளிநீக்குஆவியுலகத் தொடர்பு
பதிலளிநீக்குஉயிரோடு இருக்கிறவர்களிடம் செத்தவர்களின் ஆவியால் பேச முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட பழக்கம். ஒருவர் சாகும்போது, உடல் அழிந்தாலும் அவருடைய ஆவி அழிவதில்லை என்றும், அது தன் பிடியில் சிக்கிய ஆட்களைப் பயன்படுத்தி மற்ற மனிதர்களோடு பேசுகிறது என்றும் நம்பப்படுகிறது. “ஆவியுலகத் தொடர்புகொள்வது” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபார்மக்கியா. “போதைப்பொருளைப் பயன்படுத்துவது” என்பது இதன் நேரடி அர்த்தம். பழங்காலத்தில், பில்லிசூனியம் செய்வதற்காகப் பேய்களிடம் சக்தியைக் கேட்கும்போது போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால், இந்த வார்த்தை, காலப்போக்கில் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது.—கலா 5:20; வெளி 21:8.
உபாகமம் 18:10-13 இப்படிச் சொல்கிறது: “உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.” ஏனென்றால், “இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். . . . உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.
பதிலளிநீக்குசில பேய்கள் மக்களுக்கு நல்லது செய்வதுபோல் தோன்றலாம். (2 கொரிந்தியர் 11:14) ஆனால், உண்மை என்னவென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளாதபடி மக்களின் கண்களை அவை குருடாக்குகின்றன.—2 கொரிந்தியர் 4:4. https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-2-2017-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/
பதிலளிநீக்குஜனங்களை ஏமாற்றுவதற்காக, பேய்கள் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகின்றன. ஆவியுலகத் தொடர்பு என்பது பேய்களோடு நேரடியாக அல்லது ஒரு மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்பு கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய ஆவியுலகத் தொடர்பை பைபிள் கண்டனம் செய்கிறது, அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி நம்மை எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21) https://tamilnews.cc/news/enews/96380
பதிலளிநீக்குகுறள் 850:
பதிலளிநீக்குஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
மு.வரதராசன் விளக்கம்:
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான். https://www.ytamizh.com/thirukural/kural-850/
சாத்தான்; இதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.”—யோபு 1:6.
பதிலளிநீக்குபாம்பு; “ஏமாற்றுக்காரன்” என்ற அர்த்தத்தைத் தருவதற்காக பைபிள் சில சமயம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.—2 கொரிந்தியர் 11:3.
சோதனைக்காரன்.—மத்தேயு 4:3.
பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். யோவான 44
உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்துதல் 12:9
பதிலளிநீக்குபேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும். திரிகடுகம் 60
பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும். http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/thirikadugam_12.html
ஷைத்தானின் சூழ்ச்சிகள்
பதிலளிநீக்குhttps://www.bayanapp.indiabeeps.com/10-%E0%AE%B7%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
ஆடுகின்ற வண்டர்கூடு மப்புற மதிப்புறம்
பதிலளிநீக்குதேடுநாலு வேதமுந் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை யில்லையே. 279
உடலினுள்ளே ஆடும் அருட்சோதியாக உள்ளது கண்கள். அக்கண்கள் சேருமிடம் அறிவு உள்ள இடம். நான்கு வேதங்களும் மும்மூர்த்திகளும் தேடுவது அதையே. ஐம்பூதங்களும், அவைகள் நின்ற நிலைகளும் ஆடவல்லானின் திருவடிகளே. இதையொழிய அனைத்தும் மெய் இல்லை.
அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
பதிலளிநீக்கு*புக்கிருந்த பூதமும்* புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. சிவவாக்கியம் 210
உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? பிராய்மரத்தில் இருந்த பூதமும் , ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.
புக்கு-https://agarathi.com/word/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
எபிரேயர் 1:7
பதிலளிநீக்குதேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது, “தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்” எனக் குறிப்பிடுகிறார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%201%3A6%2D8&version=ERV-TA
சீவர் -உயிருள்ளவர் - மனிதர்
பதிலளிநீக்குபடைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே. - திருமந்திரம் 6
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே. - 91. திருஆரூர் - திருஇருக்குக்குறள் 990.
வெண்பா : 23
பதிலளிநீக்குவேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
விளக்கம்:
வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.
பிசாசானவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” (யோவான் 8:44)
பதிலளிநீக்கு6.ஜின் இனத்லிருந்து வந்த நபிமார்கள்
பதிலளிநீக்குஉலகிற்கு வருகை தந்த நபிமார்கள் யாவரும் மனிதர்களே என்று 12:109,16:43,21:7 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்களிலிருந்தும் மனிதர்களிருந்தும் நபிமார்கள் வந்ததாக 6:130 வாசகம் அறிவிக்கிறது. எனவே அவர்களும் மனித இனத்தவர்களே என்று இதிலிருந்து தெளிவாகிறது.
12.தவ்ராத்தை பின்பற்றி வந்த ஜின்கள்
திருக்குர்ஆனுக்கு முன்பாக இறக்கி அருளப்பட்ட தவ்ராத்தை ஜின்கள் பின்பற்றி வந்ததாக 46:30 வாசகம் அறிவிக்கின்றது. மேலும் அவர்கள், திருக்குர்ஆன் தவ்ராத்தை உண்மைப் படுத்துவதாகவும் தம் சமூகத்தாரிடம் அறிவிக்கிறார்கள். இன்றைக்கும் திருக்குர்ஆனின் உண்மைகளை அவர்களுக்கும் எடுத்துரைத்து உலகை சிறப்பிக்கச் செய்யலாம்.
13.திருக்குர்ஆனை கேட்க வந்த ஜின்கள்
திருக்குர்ஆன் இறக்கி அருளப்படும் காலக் கட்டத்தில் ஜின்கள் மறைந்திருந்து திருக்குர்ஆனை கேட்க வந்ததாகவும், அவர்கள் தம்மோடு வந்த தோழர்களை நோக்கி மவுனமாக இருந்து அங்கு சொல்லப்படும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதலை கேட்கும்படி அறிவுருத்தியதாகவும் 46:29 மற்றும் 72:1 ஆகிய வாசகங்கள் அறிவிக்கின்றன. மேலும் ஜின்கள் தம் சமூகத்தாரிடம் சென்று, அவர்கள் கேட்ட திருக்குர்ஆனின் உண்மைகளை எடுத்துரைத்ததாகவும் 72:2-19 வாசகங்கள் அறிவிக்கின்றன. கூட்டுமுறை வாழ்க்கையைத் தான் “சமுதாயம்” என்று சொல்வோம். எனவே அவர்களும் மனித இனத்தைப் போன்றவர்களே என்பது உறுதியாகிறது.
https://www.quranthelivurai.com/topic-18.html
ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!
பதிலளிநீக்குஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!
நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)
https://www.facebook.com/photo/?fbid=583885889642746&set=a.107220557309284
திருமந்திரம் - தந்திரம் 1 - பாடல் எண் : 02
பதிலளிநீக்குஅவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
பொழிப்புரை : சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி அவனது மூன்று படைப்பான தேவர், அசுரர், மனிதர் ஆகியவரால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
குறிப்பு: மூவர் என்பதை மும்மூர்த்தி என்பர் அது பிழை, ஏனென்றால் மும்மூர்த்தி என்கிற கற்பனை பாத்திரத்தில் சிவனும் ஒருவர். சிவனன்றி சிவனால் செய்வது ஏதுமில்லை என்பதை எப்படி விளங்குவது?
https://marainoolkal.blogspot.com/
பாடல் எண் : 10
பதிலளிநீக்குமொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
பொழிப்புரை : பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான் மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோக மாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.
மூவர்க்கும் - தேவர், அசுரர், இயக்கர்
நால்வருக்கும் - சிவயோக மாமுனி,
பதஞ்சலி, வியாக்கிரமர், எண்மர்
யூதா 6
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
6 தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.
பாடல் எண் : 27
பதிலளிநீக்குமண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
மண்ணகத்தான் - மனிதன்
வானகத்தான் - அசுரர், ஜின்
விண்ணகத்தான் - தேவர்
வேதகத்தான் - சிவன், இறைவன்
பாடல் எண் : 1
பதிலளிநீக்குதந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே
.
இப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க
மூடுக | திறக்க
பொழிப்புரை:
தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10204&padhi=+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
பாடல் எண் : 8
பதிலளிநீக்குநல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
பொழிப்புரை :
நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10204
30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.
பதிலளிநீக்கு31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2013&version=ERV-TA
எண்ணாகமம் 14
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. 3 நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.
4 பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2014&version=ERV-TA
எது பேய்?
பதிலளிநீக்குபேய்மை என்பது இயல்பை மீறியது. இயல்புக்குப் பகையாய் இருப்பதெல்லாம் பேய். பேய்ச் சுரைக்காய், பேய் முருங்கை, பேய்ப் புடலை, பேய்ச் சுண்டை, பேய்க் கரும்பு என்று இவை எல்லாம் இயல்பு மீறியவை; இயல்பான சுவை கூட்டாமல் கசப்புச் சுவை கூட்டுபவை.
குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்துஎன்ன?
குட்டநோய் கொண்டும் என்ன?...
உணவுஅற்ற பேய்ச்சுரை
படர்ந்துஎன்ன படராது
உலர்ந்துதான் போகில் என்ன?...
- அறப்பளீசுர சதகம்:22
மனித உணவுக்குப் பயன்படாத பேய் முருங்கையும் பேய்ச் சுரையும் தழைத்தால் என்ன? வெம்பிச் செத்தால்தான் என்ன? என்று வம்பு பேசுகிறது அறப்பளீசுர சதகம். "உலகம் பிறந்தது எனக்காக! எனக்குப் பயன்படாத உலகம் எதற்காக?" என்ற தன்-மையப் பார்வை அதற்கு. போகட்டும். "ஏழு மணிக்கு மேலே இன்பலட்சுமிகளாக" இருக்கவென்று கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள், விடுதலை விரும்பிகளாகி, சிற்றின்ப உலகுக்கு அப்பாலே சென்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் இயல்பு மீறியவர்கள்தாமே? பேய்ப்பெண்கள்தாமே?
https://www.facebook.com/SitharkalinKuralShivaShangar/posts/3111695392380025/?locale=zh_CN&paipv=0&eav=AfZ8JGzeyBSZKGF1ZwnF0z5QAFrGibn1lBtqmaeeXy2ZhByQS_T1BsCzaUIWOqSx16Q&_rdr
பேய்கள் நிஜமானவையா?
பதிலளிநீக்குபைபிள் தரும் பதில்
ஆம், நிஜமானவை. கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த, ‘பாவம் செய்த தேவதூதர்கள்’தான் பேய்கள். (2 பேதுரு 2:4) தன்னையே ஒரு பேயாக ஆக்கிக்கொண்ட முதல் தேவதூதன் பிசாசாகிய சாத்தான்; பைபிள் அவனை “பேய்களுடைய தலைவன்’ என்று அழைக்கிறது.—மத்தேயு 12:24, 26.
நோவாவின் நாட்களில் கலகம்
நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளத்திற்கு முன்பு தேவதூதர்கள் செய்த ஒரு கலகத்தைப் பற்றி பைபிள் இப்படிப் பதிவு செய்திருக்கிறது: “பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள் கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.” (ஆதியாகமம் 6:2) அந்தப் பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்தில் ‘தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு,’ பூமியிலிருந்த பெண்களோடு உறவுகொள்வதற்காக மனித உடலை எடுத்துக்கொண்டார்கள்.—யூதா 6.
பெருவெள்ளம் வந்தபோது, அந்தக் கலகக்கார தேவதூதர்கள் தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டு, பரலோகத்துக்குத் திரும்பிப் போனார்கள். ஆனால், கடவுள் அவர்களைத் தன் குடும்பத்தைவிட்டு ஒதுக்கித்தள்ளினார். அவர்களால் இனி ஒருபோதும் மனித உடலை எடுக்க முடியாதபடி செய்து அவர்களைத் தண்டித்தார்.—எபேசியர் 6:11, 12.
https://www.jw.org/ta/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/
44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
பதிலளிநீக்குபோற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே.
10 செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.
8 நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
5 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.
3 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.
பாடல் எண் : 18
பதிலளிநீக்குமும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
பொழிப்புரை :
`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.
குறிப்புரை :
`ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.
பாடல் எண் : 3
நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
பொழிப்புரை :
`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.
குறிப்புரை :
`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*
பாடல் எண் : 4
பதிலளிநீக்குபிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
பொழிப்புரை :
பெரிய நிலவுலகத்தவர் யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திரு வடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு மாறுபடாதீர்கள்.
குறிப்புரை :
``தட்டை யிடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா;
பேணித் தொழுமின்கள்``9
என்றாற் போல ஞானம்பந்தரும் அருளிச் செய்வார். ``நிலம்`` என்றும் ``கணம்`` என்றும் கூறினமையால், ``எழும்`` என்று அஃறிணை முடிபு தந்தார். ``பெருநிலம் முற்றும், கணம் பதினெட்டும் - எம் ஈசனே ஈசன் என்று இணங்கி, உன்னி, காண வணங்கி எழும்` என இயைந்து, ``காண வணங்கி`` என்பவற்றில் விகுதி பிரித்துக்கூட்டி, `கண்டு வணங்க எழும்` என முடிக்க. `வணங்கி` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. ``பிறைநுதல் வண்ணமாகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே``8 என்றதும் காண்க.
பதினெண் கணங்கள் இவை என்பதை,
``விரவுசா ரணரே, சித்தர்,
விஞ்சையர், பசாசர், பூதர்
கருடர், கின்னரர், இயக்கர்,
காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர், ஆகாச வாசர்,
உத்தர குருவோர், யோகர்,
நிருதர், கிம் புருடர், விண்மீன்
நிறைகணம் ``மூவா றாமே``3
என்னும் நிகண்டினால் அறிக. விஞ்சையர் - வித்தியாதரர். இயக்கர் - யட்சர். காந்தர்வர் - கந்தருவர். சுரர் - தேவர். தைத்தியர் - அசுரர். உரகர் - நாகர் உத்த குருவோர் - போக பூமியர். யோகர் - முனிவர். நிருதர் - அரக்கர். விண்மீன் - நட்சத்திர மண்டலர்.
இதனால், `உயர்ந்தோர் நெறி சிவநெறியே` என்பது வலியுறுத்தப்பட்டது.
எண் : 9
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.
பொழிப்புரை :
தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.
குறிப்புரை :
`அஃதவர் வினையிருந்தவாறே என்பது குறிப்பெச்சம்.
`ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்``3
என்பனபோலும் சான்றோர் மொழியினை உணராதார் பிணங்குவர் என்பது முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டது. `ஒன்றுபட்டார்` என்பது பாடமாயின், `அவனது பெருமையை உணர்வினால் உணர்ந்து, அகமாகிய உள்ளத்துள் தியானித்துச் சமாதி நிலை கூடினர்` என உரைக்க. சிவன் இருப்பது வெள்ளிமலையாயினும், முகில்கள் தவழ்தலும், பசுமை படர்ந்திருத்தலும் பற்றி, `கருவரையான்` என்றார். `ஒன்றுபட்டார்` என்பதையே பாடமாகக்கொள்வார், `கரு - பிறப்பை. வரையான் - ஏற்காதவன்` என உரைப்பர்.
இதனால், உண்மை உணராதார் பத்திசெய்து பயன் பெறும் இடம் அறியாமை கூறப்பட்டது.
பாடல் எண் : 8
பதிலளிநீக்குநல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
பொழிப்புரை :
நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.
குறிப்புரை :
அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
- தி.8 திருச்சதகம், 4
எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.
எண் : 1
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
பொழிப்புரை :
சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.
குறிப்புரை :
கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது
பாடல் எண் : 2
பதிலளிநீக்குமுளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.
பொழிப்புரை :
`தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.
குறிப்புரை :
`அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது
மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே.
பொழிப்புரை :
அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.
குறிப்புரை :
`பகையாகிய தீக்குணம் அழிவைத் தருதலல்லது ஆக்கத்தைத் தாராது` என்பது உணர்த்துதற்குத் தேவாசுரரது நிலைமையை எடுத்துக் காட்டினார். `இவ்வாறு எவ்விடத்தும் தீமையையே பயக்கும் பகை, சிலரது உள்ளத்தில் சிவபிரானைப் பற்றித் தோன்றின், அவர் பெருந்தீங்கிற்கு உள்ளாதல் சொல்ல வேண்டுமோ` என்பது பின்னிரண்டு அடிகளால் பெறப்படும் கருத்து.
தேவர்கட்கு இறப்பில்லையாயினும், இறந்தாரொடு ஒப்பக் கரந்துறைதலும், அசுரர்க்கு அடிமைசெய்து நிற்றலும் ஆகிய நிலையை இறத்தலாக வைத்துக் கூறினார். ``எப்பகையாகிலும் எய்தார்`` என்றது, `உள்ளத்தில் சிறிது பகையும் இல்லாதவர்` என்றவாறு. தமக்குப் பகையில்லையாயினும், பகைகொண்டாரைத் திருத்தும் வலியின் மையால் தாமும் பகைகொண்டு சிவபிரானை இகழ்வார்போல நிற்பார் அழிதற்கு, தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களே சான்றாவர். `எய்தாரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், எளியன் என்று எண்ணும் எண்ணத்தினாலன்றிப் பகையால் சிவநிந்தை செய்தலின் குற்றமும், அச்செயலுக்கு உடன் படுதலின் குற்றமும் கூறப்பட்டன.
7. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
பதிலளிநீக்குதன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. திருமந்திரம் 7
தேவர் அசுரர் இயக்கருக்கு மூத்தவன்.
தனக்கு உருவில், ஆற்றலில், குணத்தில், அன்பில், பண்பில், வலிமையில் ஒப்பாக யாரும் இல்லாத தலைமகன்.
அப்பா என்று அழைத்தால் அப்பனை போல அறிவு தந்து பாதுகாப்பவன். பொன்போன்ற மதிப்புடைய போதனையை வழங்குபவன்.
https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html
44. போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
பதிலளிநீக்குபோற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. 44
அன்பினுள் விளங்க வைத்தேன்! வானவரும், அசுரரும், மனிதரும் இறைவனை வாழ்க என அன்பின்றி வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலைபெறும்படி செய்தேன். சிவனது திருவடியை அன்போடு வணங்க வேண்டும். திருமந்திரம் 44
அசுரர் - அமரர் - மனிதர்
தேவர் அசுரர் நரர்
பதிலளிநீக்கு83. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந்தேனே. 11
திருமூலர் வந்த வழி! காமத்தை வெல்கின்ற அறிவு பொருந்திய ஞான முனிவ ரான சிவனை நினைந்து திருக்கைலாயத்திலிருந்து செல்லு கின்ற சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகு வந்தேன் என்கிறார் திருமூலர்.
https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html
தேவாரம் : அவுணர், அரக்கன்
பதிலளிநீக்கு50. ஒட்டாத வாளவுணர் புரமூன்று
மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்
கண்ணினெடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை
யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே.
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!
பொ-ரை: தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.
51. மறுத்தானொர் வல்லரக்க னீரைந்து
முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானையெழின் முளரித்தவிசின்மிசையி
ருந்தான்றன்தலையி லொன்றை
அறுத்தானை யாரூரி லம்மானை
யாலால முண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
இரும்புகடித் தெய்த+C36த வாறே.
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!
10. பொ-ரை: தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவனாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.
https://www.tamilvu.org/library/l4140/html/l4140ind.htm
அரக்கன்
பதிலளிநீக்குதேவாரம் 103
பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத்
தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார்
ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர,
கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே.
103. பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 10
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருந்திய திருவடியை உடையவர்.
https://www.tamilvu.org/library/l4140/html/l4140ind.htm
தேவாரம் - 4 ஆம் திருமுறை - அசுரர்
பதிலளிநீக்கு517 ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.
630 வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி
அடைந்து, “நும் சரணம்” என்ன, அருள் பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
685 அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.
691 மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!
817 வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!
919 எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்!
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே!
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே.
https://www.tamilvu.org/library/l4140/html/l4140ind.htm
பாடல் எண் :1111
பதிலளிநீக்குஅரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?
https://www.tamilvu.org/library/l4150/html/l4150inx.htm
6:38. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
பதிலளிநீக்குபாடல் எண் :1294
பதிலளிநீக்குஅன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.
பாடல் எண் :1294
அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக் கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே.
10
பொ-ரை: அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்றுதான் எடுக்க, உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான்.
கு-ரை: அன்றுதான் - முன்னொரு காலத்தே தான் என்ற முனைப்போடு. எடுக்க - தூக்க. நன்று தான் நக்கு - நன்மை உண்டாகச் சிரித்து. முப்புரமழித்த சிரிப்புப் போல அழியச் சிரித்த சிரிப்பன்று என்பார் நன்று தான் நக்கு என்றார். கொன்று - வருத்தி. கீதம் - சாமகானம். உறைவது என வருவிக்க.
https://www.tamilvu.org/slet/l4150/l4150son.jsp?subid=2039
ஷெடிம் ( ஹீப்ரு : שֵׁדִים ; ஒருமை: שֵׁד ஷெய்ட் ) [ 3 ] என்பது தனாக் மற்றும் யூத புராணங்களில் உள்ளஆவிகள் அல்லது பேய்கள் . எவ்வாறாயினும், கிறித்துவத்தில் தோன்றிய பேய்கள் தீய நிறுவனங்கள் என்ற நவீன கருத்தாக்கத்துடன் ஷெடிம் சரியாக பொருந்தவில்லை. [ 4 ] தீய ஆவிகள் நோய்களுக்குக் காரணம் என்று கருதப்பட்டாலும், ஷெடிம் தீய ஆவிகளிடமிருந்து கருத்துரீதியாக வேறுபட்டது. [ 5 ] ஷெடிம்கள் தீய தெய்வங்களாகக் கருதப்படவில்லை , மாறாக வெளிநாட்டவர்களின் கடவுள்களாகக் கருதப்பட்டனர், மேலும் அவர்கள் கடவுள் இல்லை என்ற பொருளில் மட்டுமே தீயவர்களாகக் கருதப்பட்டனர். [ 6 ]
பதிலளிநீக்குதோற்றம்
ஒரு புராணத்தின் படி, ஷெடிம் என்பது பாம்புகளின் வழித்தோன்றல்கள் அல்லது பாம்பு வடிவில் உள்ள பேய்களின் வழித்தோன்றல்கள், ஆதியாகமத்தில் தொடர்புடைய ஏதனில் உள்ள பாம்பின் கதையைக் குறிக்கிறது . [ 14 ] இரண்டாவது பார்வை என்னவென்றால், அவர்கள் லிலித்தின் சந்ததியினர் , [ 15 ] ஆடம் அல்லது பிற மனிதர்களுடன் அவள் இணைந்ததிலிருந்து ,
ராஷியின் கூற்றுப்படி , ஷெடிம் , லில்லினைப் போன்றது, ஆனால் ருச்சோஸைப் போலல்லாமல் , மனித உடல் இல்லை என்றாலும், மனித வடிவத்தைக் கொண்டுள்ளது. மனிதர்களைப் போலவே அவர்களும் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். [ 19 ] (p177)
அவை நோய் மற்றும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும், [ 17 ] இறந்தவர்களைப் பின்தொடர்ந்து கல்லறைகளைச் சுற்றி பறக்கும்.
விசில் அடிப்பது அல்லது " ஷெடிம் " என்ற வார்த்தையைச் சொல்வது போன்ற பல விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
தலைப்பைப் பற்றி விவாதிக்கும் இறையியலாளர் அத்தகைய அழைப்பை சூனியம் செய்வதாகக் கருதுகிறாரா என்பதைப் பொறுத்து, ஷெடிமைக் கற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்படவில்லை. ஷெடிமை வரவழைப்பது சூனியத்தின் செயலாக இருந்தாலும் , இவ்வாறு தடைசெய்யப்பட்டிருந்தாலும், யூதர் அல்லாத ஒருவரால் சூனியம் செய்யப்பட்ட ஷெடிமைக் கலந்தாலோசிப்பது அனுமதிக்கப்படும். [ 19 ] (p179)
https://en.wikipedia.org/wiki/Shedim
பாடல் #1776: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
பதிலளிநீக்குமலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்
பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மலரந தயனமாலு முருததிர மகெசன
பலநதெழு மைமுகன பரவிநது நாதம
நலநதரு சததி சிவன வடிவாகிப
பலநதரு லிஙகம பராநநதி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மலர்ந்த அயன் மாலும் உருத்திரன் மகேசன்
பலந்து எழும் ஐம் முகன் பர விந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் இலிங்கம் பரா நந்தி ஆமே
பதப்பொருள்:
மலர்ந்த (திருமாலின் தொப்புள் கொடியின் தாமரை மலரிலிருந்து வெளிப்படுகின்ற) அயன் (பிரம்மாவும்) மாலும் (திருமாலும்) உருத்திரன் (உருத்திரனும்) மகேசன் (மகேஸ்வரனும்)
பலந்து (அருளை வழங்குவதற்கு தம்மை பலவிதமாக பிரிந்து) எழும் (எழுகின்ற) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவனும்) பர (பரம்பொருளாகிய) விந்து (வெளிச்சத்திலும்) நாதம் (சத்தத்திலும் இருந்தே வெளிப்படுகின்றனர்)
நலம் (அந்த வெளிச்சமும் சத்தமும் அனைத்து நன்மைகளையும்) தரும் (தருகின்ற) சத்தி (வெளிச்ச வடிவாகிய இறைவி மற்றும்) சிவன் (சத்த வடிவாகிய இறைவனின்) வடிவு (வடிவங்களாக) ஆகி (ஆகி)
பலம் (இந்த ஐந்து தெய்வங்களுக்கும் சக்தியை) தரும் (தருகின்ற) இலிங்கம் (சிவ இலிங்க வடிவமாகவும்) பரா (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகவும்) நந்தி (குருநாதனாகவும் இருந்து அருளுகின்ற) ஆமே (ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது).
விளக்கம்: அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருந்து தனது பேரருளால் வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவி, சத்தத்தின் வடிவமாகிய இறைவன், அவர்களுக்கு கீழே ஐந்து விதமான தொழில்களை புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் இருந்து அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் இருக்கின்றான்.
https://kvnthirumoolar.com/song-1776/
மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
பதிலளிநீக்குராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || கீதை - 9.12||
மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம் மற்றும் குழப்பம்
ஸ்²ரிதா: = அடைக்கலம் கொள்கிறார்கள்
ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில் இருக்கிறார்கள்.
ஆசைகள், அந்த ஆசைகளை அடைய வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற அறிவு.... இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன் உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.
மூஸா நபி காலத்தில் பரவலாகவும், வெளிப்படையாகவும் ஜின்கள் பற்றிய விவரங்களை மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், ஜின்களை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளவே பலரும் முயன்றனர். இறுதியில் அவர்களை தெய்வங்களாக வணங்கவும் முற்பட்டனர். இறை சக்தியில்லாத ஒன்றுக்கு இறைவன் அந்தஸ்த்தை கொடுத்து இணை வைத்தனர். அதனையும் திருக்குர்ஆன் மிக கடுமையாக கண்டித்தது. இதுபற்றிய திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-
பதிலளிநீக்கு“எங்கள் இறைவனே, நீ மிக பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக அவர்கள் ஜின்னை வணங்கி கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள் என்று வானவர்கள் கூறுவர்” (திருக்குர்ஆன் 34:41).
ஜின்களிலும் அல்லாஹ்வை அறிந்து கொண்ட நல்லவர்களும், மனித இனத்தை கெடுக்கும் தீமைகளைச் செய்யும் தீயவர்களும் இருந்தனர். அந்த நல்லவர்கள், திருக்குர்ஆன் வசனங்களை செவியுற்று தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியதாகவும் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது:
“நபியே! இந்த குர்ஆனை கேட்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில், அவர்கள் தங்கள் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாய்பொத்தி இதைக் கேட்டுக்கொண்டு இருங்கள்’ என்று கூறினார்கள். இது ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்” (திருக்குர்ஆன் 46:29)
அதுமட்டுமல்ல, ‘திருக்குர்ஆன் உண்மையான வேதம், அதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்று ஜின்கள் தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியது. அது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“எங்கள் இனத்தாரே, நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது மூஸாவிற்கும் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதத்தையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும் நேரான வழியிலும் செலுத்துகிறது” (திருக்குர்ஆன் 46:30),
“எங்கள் இனத்தாரே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்” (திருக்குர்ஆன் 46:31).
https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.135105/page-14
ஏசாயா 37:16 ESV / 18 பயனுள்ள வாக்குகள்
பதிலளிநீக்கு“ சேனைகளின் கர்த்தாவே , இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களின் மேல் வீற்றிருக்கிறீர், நீங்கள் ஒருவரே, பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் தேவன்; நீங்கள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்கள்.
அசுரன் என்றால் யார் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில் சாத்தான் என்றால் யார் என்று தேடுவோம்
பதிலளிநீக்குபாடல் எண் : 1
கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
பொழிப்புரை :
அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொ
டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.
சான்று :
https://www.quranthelivurai.com/topic-16.html