தமிழர் மதம்
ஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்வேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பாலதீண்டாவிடுதல் அரிது.. - (நாலடியார் 109)(பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.
(வி-ம்.) மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில் யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் (விதியினால்) அவர்கள்பால் வந்து அடையகூடியது நன்மையோ தீமையோ அடையாமல் விடுதல் இல்லை.ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும். - 380பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.
இஸ்லாம்
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57 : 22)
ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆம் (தெரியும்)'' என்று சொன்னார்கள். அவர் "அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள்? நற்செயல் புரிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஒவ்வொருவரும் "எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது "எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 6596)
”அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து ‘அலக்’ (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318)
விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியும்..!
பதவுரை: மதி - அறிவு, வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)
நாயகம் (ﷺ) நவின்றார்கள்; “விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” (ஆதாரம் இப்னு மாஜா: 4914)
குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139 :16)எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை! பறவை வானில் பறப்பது உட்பட⁉ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. (மத்தேயு 10 :29)
முடிவுரை
ஊழ் எனப்படும் விதி உண்டென்றும் அனைத்தும் அவற்றின் அடிப்படையிலேயே நிகழுகிறது.
71 ஆம்குறள் பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் ஊக்கம் பிறக்கும்; அது நீங்குதற்குரிய ஊழிருந்தால் சோம்பல் வந்துவிடும் என்கிறது.
பதிலளிநீக்கு372 ஆம்குறள் கேடான ஊழ் வந்தால் அறியாமையைக் கொடுக்கும்; நல்ல ஊழ் தோன்றினால் அறிவுப்பெருக்கம் உண்டாகும் எனச் சொல்கிறது.
373 ஆம்குறள் நுட்பமான நூல்கள் பலவற்றையும் கற்றாலும் தன் ஊழ் ஆணைப்படியான அறிவே மிகுந்து தோன்றும் என்கிறது.
374 ஆம்குறள் உலகத்து இயல்பு இரண்டு வகைப்பட்டது; செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு எனக் கூறுகிறது.
375 ஆம்குறள் ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும்; தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும் எனக் கூறுகிறது.
376 ஆம்குறள் ஊழால் தமக்கு இல்லாதவை வருந்திக் காத்தாலும் தங்கா; ஊழால் தமக்கென அமைந்த பொருள்கள் புறத்தே கொண்டு போய் எறிந்துவிட்டாலும் தம்மை விட்டு நீங்கா எனச் சொல்கிறது.
377 ஆம்குறள் ஊழை வகுத்தவன் அமைத்த முறைப்படியன்றி கோடி தொகுத்தவர்க்கும் அவற்றை நுகருதல் இயலாது என்கிறது.
378 ஆம்குறள் ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே? எனச் சொல்கிறது.
379 ஆம்குறள் நன்மை தரும்போது நல்லதாக ஏற்றுக்கொள்பவர்கள் தீமை நேரும்போது ஏற்கமுடியாது வருந்துவது ஏனோ? எனக் கூறுகிறது.
380 ஆவது குறள் ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும் என்கிறது. http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/038Oozh.aspx
குறள் 371:
பதிலளிநீக்குஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
மு.வரதராசன் விளக்கம்:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
மு.வரதராசன் விளக்கம்:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
குறள் 374:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
மு.வரதராசன் விளக்கம்:
உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
குறள் 375:
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
மு.வரதராசன் விளக்கம்:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
குறள் 376:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
மு.வரதராசன் விளக்கம்:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
மு.வரதராசன் விளக்கம்:
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
குறள் 378:
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
மு.வரதராசன் விளக்கம்:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
குறள் 379:
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
மு.வரதராசன் விளக்கம்:
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.
குறள் 380:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
https://www.ytamizh.com/thirukural/chapter-38/
குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஎன் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :16
எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை! பறவை வானில் பறப்பது உட்பட⁉
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு 10 :29
தீர்சனங்களும், தீர்க்கதரிசிகளும் கூட எழுதப்பட்டபடியே நடக்கிறார்கள்
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10 :7
விதிக்கப்பட்ட யாவையும் நிச்சயமாக நடக்கும் என இயேசு கூறுகிறார்
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள், இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. மாற்கு 13 :7
இதே கருத்து மத்தேயு 24:6-லும் சொல்லப்படுகிறது.
தம்முடைய விதியின்படி தாம் செல்லவேண்டிய நேரம் குறித்து இயேசு அறிந்திருந்தார்
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13 :1
இரட்சிப்பு கூட தேவனின் சித்த்ப்படியே முன்னமே குறிக்கப்பட்டது தானே தவிர கிரியைகலினாலே அல்ல!
அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை #இரட்சியாமல், #தம்முடைய_தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1 :9
இரட்சிப்பும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கே !
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் #முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். எபேசியர் 1 :12
தேவனின் சித்தப்படி, தேவனால், தேவன் முன் குறித்தபடியே முன்குறித்தவர்களுக்கே இரட்சிப்பு! இதனை மனதிற்கொண்டு தான் இயேசு இவ்வாறான பிரார்த்தனையை செய்கிறார்
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26 :39
முடிவுரை:
ஊழ் எனப்படும் விதி உண்டென்றும் அனைத்தும் அவற்றின் அடிப்படையிலேயே நிகழுகிறது.
சான்று http://answeringchristian.blogspot.com/
”உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ” (திருக்குர்ஆன் 57:23)
பதிலளிநீக்குமூதுரை பாடல் 19 :
பதிலளிநீக்குஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி–தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.
பொருள்:
தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.
மூதுரை பாடல் 22 :
பதிலளிநீக்குஎழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
பொருள்:
மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம்
சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன்
வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக்
கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
பதிலளிநீக்குஇன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக எண்ண வேண்டும் பாடல் - 149
பதிலளிநீக்குபேறுஅழிவு சாவு பிறப்புஇன்பத் துன்பம் என்ற
ஆறுஉள அந்நாள் அமைந்தன - தேறி
அவைஅவை வந்தால் அழுங்காது விம்மாது
இவைஇவை என்றுஉணரற் பாற்று.
விளக்கவுரை செல்வம், வறுமை, இறப்பு, பிறப்பு, இன்பம், துன்பம் என்னும் இந்த ஆறும் முன்பு செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; (ஆதலால்) இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் மகிழாது, வருந்தாது நம்மை நாடி வந்த இவை, இன்ன வினைகளால் வந்தன என்று ஆராய்ந்து அடங்குவதே செய்யத்தக்கது. https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
பதிலளிநீக்குநாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். - மூதுரை
பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
பதிலளிநீக்குகருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. மூதுரை
பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம்
சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன்
வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக்
கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
பதிலளிநீக்குநாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். மூதுரை
பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் விதியின் அளவைப் பொறுத்தது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவிதியை மதியால் வெல்லலாம் என்றால் அது விதி மீறல் இல்லையா?
பதிலளிநீக்குவிதி என்று நாம் கருதும் ஒன்றால் மட்டும் எல்லாம் நடப்பதில்லை, அப்படி இருந்தால் மனிதர்கள் நற்கருமங்கள் செய்ய வேண்டியதில்லை.
மனித வாழ்வில் நிகழும் நன்மை தீமைகள் இந்த மூன்றின் சரியான கலவை ஆகும்.
விதி - ஊழ்
வினைப்பயன் - கர்மா
பிராத்தனை - இறைவணக்கம், பாவமன்னிப்பு, தியானம், வேதம் ஓதுதல்
விதியை ஏற்படுத்தியவன் இறைவன் எனவே அதில் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் மற்ற இரண்டும் நமது கைகளில் உள்ளது. நமது மதியை கொண்டு இறைவன் கூறும் அறங்களை பேனுபவர்களாக இருந்தால், இறைவனிடம் பிராத்தனை செய்பவர்களாக இருந்தால் நாம் இவைகள் மூலம் விதியை வெல்லலாம்.
இவ்வாறு விதியை வெல்வது விதி மீறல் அல்ல, விதி விலக்கு ஆகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதும் விதி தான்.
விதி என்பதை ஒரு நேர் கோடு போல கற்பனை செய்யாமல், அது ஒரு மென்பொருள் புரோகிராம் போல புரிந்து கொண்டால், விதியை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒரு புரோகிராம் ஒரே வகையான வெளியீட்டை தராது, அதன் மாறுபட்ட உள்ளீடுகளுக்கு ஏற்ப்ப வெளியீடுகள் மாறுபடும். இங்கே உள்ளீடுகள் என்பது நாம் செய்யும் செயல்கள். அதே சமயத்தில் வேறொரு காரணத்துக்காக செய்யப்பட்ட புரோகிராம் தரும் வெளியீடு நமது புரோகிராம் கொடுத்த வெளியீடு உடன் ஒத்துபோகாது. ஒரு காம்ப்ளக்ஸ் புரோகிராம் என்பது டைனமிக் ஆக இருக்கும் ஆனால் அது அதன் எல்லையை கடக்க முடியாது. எனவேதான் ஒரு நேரத்தில் பிறந்த வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமான வழக்கை நிலையை அடைகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் பிறப்பின் நோக்கம் வேறு வேறு, சூழ்நிலை வேறு வேறு, அவர்கள் செயல்கள் வேறு வேறு, அவர்களின் கல்வி வேறு வேறு, பக்தி வேறு வேறு ஆகும்.
எனவே புண்ணியத்தை விடுத்து பாவமே செய்பவர்களாக நாம் இருந்தால் அப்பொழுது தீமையான கர்ம வினைகள் நமக்கு ஏற்படும். அதுவும் விதிதான். அதைத்தான் வள்ளுவர்,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். - 380
என்று கூறுகிறார்.
ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும்,
பதிலளிநீக்கு'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும்,
காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர்
தாம் அறிவர், தாம் கண்டவாறு. . . . .[திரிகடுகம் 36]
ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்
தானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்
காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு. . . . .[36]
விளக்கம்:
உயிரைக் கொன்று தின்று இரக்கமுடையவன் என்பானும், எல்லாம் விதி என்று சோம்பி இருப்பவனும், வேள்வியில் ஓருயிரைக் கொல்வானும், நூல்களின் உண்மையை அறியாதவன் ஆவான்.
45. விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
பதிலளிநீக்குவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே. 45
பகலவன் ஆவான்! உலகம் சிவன் விதித்த முறையின்படியே நடக்கின்றது. நமது வாழ்க்கையும் சிவன் விதித்தபடியே தான் நடக்கின்றது. அந்த சிவனை தோத்திரம் செய்து வழிபடுவோர்க்கு சிவன் முத்திநெறி காட்டியருளும் சிவசூரியனாவான்.
ஏசாயா 65:11
பதிலளிநீக்கு“ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள.
https://www.biblegateway.com/quicksearch/?quicksearch=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+&version=ERV-TA
விதி : கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
பதிலளிநீக்குதேவாரம் பாடல் எண் : 9
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கழற்போது தந்துஅளித்த கள்வர் போலும்,
செருவில் புரமூன்றும் அட்டார் போலும்,
தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்,
மருவிப் பிரியாத மைந்தர் போலும்,
மலரடிகள் நாடி வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்,
இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
பொழிப்புரை :இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும் அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும் , போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும் , தேவர்க்கும் தேவராம் செல்வரும் , கூடியபின் பிரியாத மைந்தரும் , தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார் .
https://kuganarul.blogspot.com/2018/06/blog-post_159.html
2030. விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
பதிலளிநீக்குதுதியின் பெருவழி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.
பொருள் : கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்க்கை அமையும். சிவத்தைத் துதித்துப் பெருமையான வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வானுலகம் அமையும். சந்திர மண்டல வல்லமைக்கு ஏற்ப மானிடர் வாழ்க்கை உள்ளது. அட்டமா சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவலியாகும்
https://www.facebook.com/permalink.php/?story_fbid=402689429826322&id=396225460472719
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
பதிலளிநீக்குஅடிகள் உறையும் அறனெறி* நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-payiram-kadavul-vazhthu/#gsc.tab=0
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
பதிலளிநீக்குவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45
Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-payiram-kadavul-vazhthu/#gsc.tab=0
விதிவழி அல்லது இவ்வேலை உலகம்
பதிலளிநீக்குவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே
(பாடல் 45)
இந்த உலகம் விதித்த முறைப்படியே இயங்குகிறது. விதியின்படியே ஆன்மாக்கள் அடைகிற இன்பம் அமையும். இதில் மாற்றமில்லை. தினமும் இறைவனைப் போற்றி, தொழுது, துதி செய்வதன் மூலம், சுடர் ஒளி சோதியாக திகழும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பேரின்பமாகிய வீடு பேறு அடைய வழி காட்டும் கதிரவன் போல அவன் இருக்கிறான் என்பது பொருள்
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/Jul/17/mantra-is-worshiped--thirumanthiram-is-worshiped----8-3436650.html
13. ஊழ் - திருமந்திரம்
பதிலளிநீக்கு#2847. தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்!
#2848. நான்முன்னம் செய்ததே நன்னில மானதே
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே
சீவன்கள் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் அவரவர் செய்த வினைகளினால் மட்டுமே அமைகின்றன. இறைவன் சிவன் இவற்றைச் சீவன்களுக்காக முன்பே அமைத்து விடவில்லை. அந்தத் தலைவனை நான் நோக்கிய போது, நான் முன்னம் செய்த தவம் என்னைச் சென்னியின் வழியே செலுத்தி, எனக்கு உன்னதமான இடத்தைத் தந்தது
#2849. நந்தியை என் உள்ளம் பிரியகில்லாவே.
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.
ஆற்றில் வந்து சேரும் நுண்மையான மணல் அந்த ஆற்றால் சுமக்கப்படுவதில்லை. பொங்கி வரும் ஆற்று வெள்ளம் மேடுகளைப் பள்ளங்கள் ஆக்கலாம். பள்ளங்களை மேடுகள் ஆக்கலாம். அது போன்றே ஒருவன் செய்த நல்வினைகள், தீவினைகள் இவற்றின் பயன்கள் அவனையே வந்து சேரும். நீறு அணிந்த இறைவன் சிவனையே நான் பெறும் பேறாகக் கருதி நான் அவனை விட்டு விலகாமல் இருப்பேன்.:
#2850. நாதனை நாடுவன் நானே.
வான்நின்று இடிக்கில்என்? மாகடல் பொங்கில்என்?
கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்?
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்?
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.
வானம் இடிந்து விழுந்தால் தான் என்ன? அலைகடல் பொங்கினால் தான் என்ன? காட்டுத்தீயினால் உடல் வெந்து அழிந்து போனால் தான் என்ன? சண்டமாருதம் பெரும் அழிவைப் ஏற்படுத்தினால் தான் என்ன? நான் அவற்றைச் சற்றும் பொருட்படுத்த மாட்டேன். நான் என் நாதனையே எப்போதும் வழுவாமல் நாடுவேன்.
https://onbathaamthanthiram.wordpress.com/13-%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D/2847-to2852/
“ஜிஹாத் (அல்லாஹ்வின் வழியில் போராடுவது) உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விதிக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதை விரும்பவில்லை என்றாலும், அது உங்களுக்கு நல்ல ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பாதது மற்றும் உங்களுக்கு கெட்டதை நீங்கள் விரும்புவது. அல்லாஹ் அறிவான் ஆனால் உனக்குத் தெரியாது” (அல்-பகரா 2:216)
பதிலளிநீக்கு"நிச்சயமாக, நாம் அவருக்கு வழியைக் காட்டினோம், அவர் நன்றியுள்ளவராக இருந்தாலும் அல்லது நன்றி கெட்டவராக இருந்தாலும் சரி" (அல்-இன்சான் 76:3)
"அவருக்கு (நல்லது மற்றும் தீமை) இரண்டு வழிகளைக் காட்டியதா?" [அல்-பலாத் 90:10]
"உங்கள் இறைவனிடமிருந்தே சத்தியம்" என்று கூறுவீராக. பின்னர் எவர் விரும்புகிறாரோ அவர் நம்பட்டும்; எவர் விரும்புகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்” [அல்-கஹ்ஃப் 18:29]
https://islamqa.info/en/answers/20806/fate-in-islam
“மேலும், கைபின் திறவுகோல்கள் (மறைக்கப்பட்ட அனைத்தும்) அவனிடம் உள்ளன, அவனைத் தவிர வேறு யாரும் அவற்றை அறிய மாட்டார்கள். மேலும் அவர் நிலத்திலும் கடலிலும் உள்ள அனைத்தையும் அறிவார்; ஒரு இலை உதிர்வது இல்லை, ஆனால் அது அவருக்குத் தெரியும். பூமியின் இருளில் ஒரு தானியமும் இல்லை, புதியது அல்லது உலர்ந்தது எதுவுமில்லை, ஆனால் தெளிவான பதிவேட்டில் எழுதப்பட்டுள்ளது” (அல்-அன்அம் 6:59)
பதிலளிநீக்கு“பூமியிலோ அல்லது உங்களுக்கோ எந்தப் பேரழிவும் ஏற்படாது, ஆனால் நாம் அதை உருவாக்குவதற்கு முன்பே அது ஆணைகளின் புத்தகத்தில் (அல்-லாவ் அல்-மஹ்ஃபுஸ்) பொறிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது” (அல்-ஹதீத் 57:22)
"அல்லாஹ்வின் (மனிதகுலம், ஜின்கள் மற்றும் இருப்பவற்றின்) இறைவனாகிய அல்லாஹ் நாடினால் ஒழிய உங்களால் விரும்ப முடியாது" (அல்-தக்வீர் 81:29)
"நிச்சயமாக, நாம் அனைத்தையும் கதர் மூலம் படைத்தோம் (அனைத்தும் படைத்ததற்கு முன்னரே அனைத்தையும் தெய்வீக முன்னறிவிப்பு அல்-லாவ் அல்-மஹ்ஃபுஸ் ஆணைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது)" [அல்-கமர் 54:49]