விபச்சாரம் செய்யாதே

யூதம் 

விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார். (நீதிமொழிகள் 22:14)

நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக. (யாத்திராகமம் 20:14)

விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே. (உபாகமம் 5:18)

 8 “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. 9 நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 7)

கிறிஸ்தவம் 

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார் - எபிரெயர் 13:4

“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது.  (மத்தேயு 19:18)

இஸ்லாம்  

"மேலும் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது ஒரு அநாகரீகமும் தீய வழியும் ஆகும்." (சூரா அல்-இஸ்ரா', 17:32 ) 

 விபசாரியும், விபசாரனும்-இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம்; இன்னும், அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கை யாளர்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (குர்ஆன் 24:2)
 
என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்தவிட்டான். திருமணம் ஆகாதவன், திருமணம் ஆகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஓராண்டு காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆனவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (நூல்: முஸ்லிம் 1245.)

யூதமும் கிறிஸ்தவமும் ஒன்றா? வேறு வேறா?

இந்த கேள்விக்கு பதிலைப் பெற இரண்டு கோணத்தில் ஆராயப்படவேண்டும். முதலில், ஒரு கிறிஸ்தவரின் கண்ணோட்டத்தில் இதற்கான பதிலை ஆய்ந்து அறிவோம்: 

இன்றைய நடைமுறை ஒருபுறம் இருக்க இயேசு இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பைபிளில் பவுலின் கடிதங்கள்தான் மிகையொடி கிடக்கின்றது. அவைகளை விடுத்து இயேசு அவர்களின் நேரடி கூற்றை மட்டும் நாம் ஆய்வு செய்யும் பொழுது உண்மைக்கு நெருக்கமான முடிவை எடுக்க அது வாய்ப்பாக அமையும்.  

பழைய ஏற்பாட்டை அவர் நிராகரித்தாரா? இல்லை.

17,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது. (மத்தேயு 5:17-5:18)

மோசே உட்பட ஏசுவுக்கு முன் வந்த எந்த தீர்க்கதரிசியின் சட்டங்களையும் அவர் நிராகரிக்க வரவில்லை, மாறாக முழுமைப் படுத்தவந்தார். எனவே அவரின் போதனைகள் அனைத்தும் யூத நூல்களின் நீட்சியே ஆகும். யூதர்களின் பத்து கட்டளைக்கு முரணாக எதையும் போதிக்கவில்லை.  

யூதரல்லாதோருக்கு அவர் போதனை அல்லது உதவி செய்தாரா? 

22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.

23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.

24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.

26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.

27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.

28 பின்னர் இயேசு அவளை நோக்கி,, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் மகள் குணப்படுத்தப்பட்டாள். (மத்தேயு 15)

தந்து வருகையின் நோக்கத்தை கூறிய இயேசு, அந்த பெண்ணின் நம்பிக்கையை கண்டு உதவி செய்தார். அதன் பிறகு யூதரல்லாதோரை அவர் தேடி சென்று உபதேசம் செய்ததாகவோ உதவி செய்ததாகவோ தெரியவில்லை. 

யூதரல்லாதோருக்கு போதனை செய்ய தன் சீடர்களை அனுப்பினாரா?

மத்தேயு 10: அப்போஸ்தலர்களை அனுப்புதல்

1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:

  1. சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)
  2. மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,
  3. செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
  4. அவரது சகோதரன் யோவான்,
  5. பிலிப்பு
  6. மற்றும் பார்த்தலோமியு,
  7. தோமா
  8. மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
  9. அல்பேயுவின் மகன் யாக்கோபு,
  10. ததேயு,
  11. சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.
  12. இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். (மத். 10:5-6)

எனவே பழைய ஏற்ப்பாட்டு கட்டளைகளுக்கு முரண்படாமல், அவைகளின் நீட்சியாக இயேசுவின் போதனைகள் உள்ளதோடு, அவரின் பிரதான நோக்கமாக யூதர்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது. 

ஒருவேளை ஒருசில கிறிஸ்தவர்கள் பழைய ஏற்ப்பாட்டை நிராகரித்து புதிய ஏற்பாட்டை மட்டும் பின்பற்றினால் பல கட்டளைகள் முழுமையாக இருக்காது. பல கேள்விகளுக்கு புதிய ஏற்பட்டுடன் சேர்த்து புரிந்து கொள்ள முயன்றால்தான் முழுமையான பதில் கிடைக்கும். 

யூதர்களின் கோணத்தில் ஆராய்ந்தால் சில அடிப்படை கேள்விகள் உண்டு. 

இயேசு யூத பாரம்பரியத்தில் வந்தவரா? 

1 இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.
ஈசாக்கின் மகன் யாக்கோபு.
யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும். 
 
3 யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.)
பாரேசின் மகன் எஸ்ரோம்.
எஸ்ரோமின் மகன் ஆராம். 
 
4 ஆராமின் மகன் அம்மினதாப்.
அம்மினதாபின் மகன் நகசோன்
நகசோனின் மகன் சல்மோன்.

5 சல்மோனின் மகன் போவாஸ்.
(போவாசின் தாய் ராகாப்.)
போவாசின் மன் ஓபேத்.
(ஓபேத்தின் தாய் ரூத்.)
ஓபேத்தின் மகன் ஈசாய்.

6 ஈசாயின் மகன் அரசனான தாவீது.
தாவீதின் மகன் சாலமோன்.
(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

7 சாலமோனின் மகன் ரெகொபெயாம்.
ரெகொபெயாமின் மகன் அபியா.
அபியாவின் மகன் ஆசா.

8 ஆசாவின் மகன் யோசபாத்.
யோசபாத்தின் மகன் யோராம்.
யோராமின் மகன் உசியா.

9 உசியாவின் மகன் யோதாம்.
யோதாமின் மகன் ஆகாஸ்.
ஆகாஸின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே.
மனாசேயின் மகன் ஆமோன்.
ஆமோனின் மகன் யோசியா.

11 யோசியாவின் மக்கள் எகொனியாவும்
அவன் சகோதரர்களும். (இக்காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.)

12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:
எகொனியாவின் மகன் சலாத்தியேல்.
சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.

13 சொரொபாபேலின் மகன் அபியூத்.
அபியூத்தின் மகன் எலியாக்கீம்.
எலியாக்கீமின் மகன் ஆசோர்.

14 ஆசோரின் மகன் சாதோக்.
சாதோக்கின் மகன் ஆகீம்.
ஆகீமின் மகன் எலியூத்.

15 எலியூத்தின் மகன் எலியாசார்.
எலியாசாரின் மகன் மாத்தான்.
மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் யோசேப்பு.
யோசேப்பின் மனைவி மரியாள்.
மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என
அழைக்கப்பட்டவர் இயேசுவே.

17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள். (மத்தேயு 1)

யூதர்களுக்கு ஆசிரியராக வர ஒரு யூதர் தான் தேர்வு செய்யப்படுவார், என்கிற கோணத்தில் இயேசு யூதர்தான் என்பதோடு அவர் தாவீதின் வம்சம் என்பதை இங்கு காணமுடிகிறது.

இயேசுவை பற்றிய யூத நூல்களில் தீர்க்கதரிசனம் உண்டா?  

 இயேசுவின் பிறப்பைப் பற்றி  
 
13 பிறகு ஏசாயா, “தாவீதின் குடும்பமே, கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் ஜனங்கள் பொறுமையைச் சோதிக்கிறீர்கள். அது உங்களுக்கு முக்கியமாகப்படவில்லை. எனவே இப்பொழுது என் தேவனுடைய பொறுமையைச் சோதிக்கிறீர்கள்.

14 ஆனால் எனது தேவனாகிய ஆண்டவர் உனக்கு ஒரு அடையாளம் காட்டுவார். இந்த இளம் கன்னிப் பெண்ணைப் பாரும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். இவள் ஒரு மகனைப் பெறுவாள் அவள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

15 இம்மானுவேல் வெண்ணெயையும் தேனையும் தின்பார், அவர் இவ்வாறு வாழ்வார், நல்லவற்றை எவ்வாறு செய்வது என்றும் பாவத்தை எவ்வாறு செய்யாமல் விடுவது என்றும் வாழ்ந்துக்காட்டுவார்.

16 ஆனால் அக்குழந்தை நன்மை தெரிந்து தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளும் வயது வரும் முன்னால், எப்பிராயீம் (இஸ்ரவேல்) மற்றும் ஆராம் நாடு காலியாகிவிடும். நீ இப்பொழுது அந்த இரண்டு நாட்டு அரசர்கள் பற்றியும் பயப்படுகிறாய். (ஏசாயா 7)

 10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். அவன் ஆத்துமா தன்னைத்தானே மீட்டுக்கொண்டால். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார். (ஏசாயா 53)

 ஏசாயா 9:6 : “நமக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது, நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார், அரசாங்கம் அவருடைய தோளில் இருக்கும். அவர் அற்புதமான ஆலோசகர், வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதான இளவரசர் என்று அழைக்கப்படுவார். 

மீகா 5:2 : "பெத்லேகேமில் மேசியா பிறப்பார் 2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே, நீதான் யூதாவிலேயே சிறிய நகரம். உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது, ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார். அவரது துவக்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.

இயேசுவின் ஊழியம் மற்றும் மரணத்தைப் பற்றி — சகரியா 9:9 : “சீயோன் குமாரத்தியே, மிகவும் சந்தோஷப்படு! எருசலேமின் மகளே, கத்தவும்! இதோ, உன் ராஜா நீதியுள்ளவனும், இரட்சிப்பை உடையவனும், சாந்தகுணமுள்ளவனும், கழுதையின் மீதும், கழுதைக்குட்டியின்மேலும் ஏறி உன்னிடத்தில் வருகிறான்." 

சங்கீதம் 22:16-18 : “நாய்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; ஒரு தீய மனிதர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள், அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகள் அனைத்தையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னைப் பார்த்து மகிழ்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் ஆடைகளுக்குச் சீட்டுப் போடுகிறார்கள்”

ஏசாயாவின் 53வது அத்தியாயமே இயேசுவைப் பற்றிய தெளிவான தீர்க்கதரிசனமாக இருக்கலாம். ஏசாயா 53:3-7 குறிப்பாக தெளிவாக உள்ளது: “அவர் மனிதர்களால் இகழ்ந்து நிராகரிக்கப்பட்டார், துக்கங்கள் நிறைந்தவர், துன்பங்களை நன்கு அறிந்தவர். மனிதர்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் ஒருவரைப் போல அவர் இகழ்ந்தார், நாங்கள் அவரை மதிக்கவில்லை. நிச்சயமாக, அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டார், நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், ஆனால் நாங்கள் அவரைக் கடவுளால் அடிக்கப்பட்டார், அவரால் அடிக்கப்பட்டார், துன்பப்பட்டார் என்று கருதினோம். ஆனால் அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் குத்தப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தைத் தந்த தண்டனை அவர்மேல் இருந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதவறிப்போய், அவனவன் தன்தன் வழிக்குத் திரும்பினோம்; கர்த்தர் நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இருந்தபோதிலும், அவர் வாய் திறக்கவில்லை; அவன் ஆட்டுக்குட்டியைப்போலக் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டான், செம்மறி ஆடு மவுனமாய் இருக்கிறான், அதனால் அவன் வாயைத் திறக்கவில்லை."
 
எனவே இயேசு யூதர் என்பது மட்டுமல்லாமல் அவரின் வருகை ஏற்கனவே பல தீர்க்க தரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்டு உள்ளது. யூத தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்க தரிசி எப்படி யூத மதத்தை சாராதவராக இருப்பார்? 

எனவே இயேசுவின் போதனைகள் யூத மத புத்தகங்களோடு சேர்த்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவைகள். இயேசு யூதமதத்தை சார்ந்தவர்.
சரி அப்படி என்றால் கிறித்தவம்? அது இயேசுவின் இறப்புக்கு பிறகு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு பிறகு பவுல் என்பவரால் மோசேயின் இயேசுவின் கொள்கைக்கு முரணாக பல செய்திகளை உள் திணித்து உண்டாக்கிய புதிய பைபிளை கொண்டு உருவாக்கிய மதம் தான் கிறிஸ்தவம். கிறிஸ்த்தவத்துக்கும் கிறிஸ்துவுக்குமே சம்பந்தம் இல்லை. பழைய ஏற்பாட்டோடு இயேசுவின் உண்மை சீடர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தான் சேர்க்கப்படவேண்டுமே தவிர பவுல் பலருக்கு எழுதிய கடிதங்கள் அல்ல. 

பலியிடுதல்

தமிழர் சமயம் 


“கள்ளும் கண்ணியும் கையுறைகா
நிலைக்கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய்” - அகநானூறு 156

என்று பாடுகின்றார். காதலில் இருக்கும் தலைவியை கண்டு அவள் தாய் நீர்த்துணைக்கு அருகில் நிலை பெற்றிருக்கும் கடவுளுக்கு மகளின் இந்த நிலைக்குத் தெய்வ குற்றம் எனக் கருதி கள்ளும் காந்தள் பூக்களால் ஆன கண்ணியும் நிலையான கொம்புகளையும் தொங்கும் காதுகளையும் உடைய வெள்ளாட்டுக் கிடாயும் உட்பட எல்லாம் கையுறையாகப் படைத்துப் பலியிட்டுப் போற்றினாள் என்று ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார்.

இதற்கு முந்தைய பதிவில் “வேலன் விளையாட்டு அயர்தல்” என்று பார்த்திருந்தோம். குறிஞ்சி நிலத்தில் மகளானவள் காதல் பித்து பிடித்திருந்தால் வேலன் என்பவன் அதாவது முருகனைப் பூசிக்கும் பூசாரி வேல் கொண்டு “வேலன் வெறியாட்டு” நிகழ்த்தி அந்தப் பெண்ணின் மனநிலையை மாற்றுவானாம். அதே போன்று மருத நிலத்திலும் அந்த நில மக்கள் நீர் துறைக்கண் உள்ள கடவுளுக்குப் பலியிட்டுப் போற்றி வணங்குவார்கள்.

வேலன் விளையாட்டு

வேலன் பூக்களும் புகையுமிட்டு முருகனை வாழ்த்தி ஆடிப்பாடி வழிபாடு நிகழ்த்துவான். திருமுருகாற்றுப்படையில் “வேலன் வெறியாட்டு” விரித்துக் காணப்படுகின்றது.

” சிறு தினை மலரோடு விரைஇயை மறியறுத்து
வாராணக் கொடியொடு வழிபட நிறீஇ”

என்று வரும் பாடலில் சிறு தினையோடு ஆடு அறுத்துப் படைத்துக் கோழிக் கொடியுடன் மலர்கள் பரப்பியும் விழா எடுக்கப்பட்டது என்கிறது. ஆட்டுக்கிடாய் அறுத்து தினையுடன் அல்லது சோற்றுடன் கலந்து படைக்கப்படும். இது “முருகையர்தல் அல்லது முருகாற்றுப் படுத்துதல்” என்று அழைக்கப்படும். எளியோரின் தெய்வமாய் நின்று முருகன் தினையையும் ஆட்டையும் ஏற்றுத் தமிழரோடு நின்ற காலம் போய் இன்று வேறு நிலை வந்து விடக் காரணம் ஆரியர் வருகையே என்பது இங்கு புலப்படுகின்றது.

கிறிஸ்தவம் 

23,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். - (மத்தேயு 5)

19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. (மத்தேயு 23:19)

இதில் இயேசு விலங்குகளை பலியிடும் வழிபாட்டு முறையானது மக்களிடம் நன்முறையில் நடந்து கொண்டால்தான் பிரயோஜனம் எனும் கருத்தில் கூறுகிறார்.

வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள். (மத்தேயு 12:7
 
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். (மத்தேயு 9:13)

விலங்குகளை பலியிடும் முறை ஏறக்குறைய கிறிஸ்தவத்தில் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது நேரடியாக பலியிடுவதை தடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதற்கான குறியீடும் அந்த வசனத்தில் உளள்து. மேலும் அவர் மோசஸின் சட்டத்தை முழுமைப்படுத்தவே வந்தார். 

அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? - (1கொரிந்தியர் 10:20-22)

யூதம் 

எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது. “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20:23-24

குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்! - (உபாகமம் 17:1) 

சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளை விட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். - (நீதிமொழிகள் 21:3

இஸ்லாம்  

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் – 2வது வசனம்)

குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் 37
 
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். (குர்ஆன் 2:67
 
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். (குர்ஆன் 2:71)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (திருக்குர் ஆன் 2:173

 

உணவளிப்பவன்

தமிழர் சமயம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே

கிறிஸ்தவம்

25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு

இஸ்லாம்

 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேழும். உடனே அவர்கள் “அல்லாஹ்” எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக (அல்குர்ஆன்: 10:31)

 பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைப் பெறும் வழியைக் காட்டித் தருவது அல்லாஹுவின் பொறுப்பாகவே உள்ளது. அதன் உறைவிடத்தையும் அதுபோய் சேருகின்ற இடத்தையும் அவன் (அல்லாஹுவே) அறிவான். எல்லாம் தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) உள்ளன. (அல்குர்ஆன்:11:06)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையைத் தேடி வெளியே செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகின்றன. அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) - (நூல் : திர்மிதீ)

வரி

இன்றைய இந்திய அரசாங்கம் பல்வேறு வகையிலான வரிகளை வானளாவிய அளவில் விதித்து வருகிறது. எனவே வரி பற்றி சமயங்கள் என்ன சொல்கிறது என்று ஆராய துவங்கி உள்ளோம். 
தமிழர் சமயம் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (குறள்: கொடுங்கோன்மை - 552)  
 
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. —மு. வரதராசன்


முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். —மு. வரதராசன் 
 
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. (புறநானூறு 184)

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாகும் நெல் அதிகமாகும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக. 
 
 “குடி புரவு இரக்கும் கூதிலாண்மைச் சிறியோன்” - புறநானூறு 75  
 
என மன்னன் சோழன் நலங்கிள்ளி இந்த பாடலில் ஏளனவரிகளை விதித்தவனாகச் குறிப்பிடபப்ட்டு இகழப் படுகிறான். 

சங்க காலத்தில் ஆறில் ஒரு பகுதி தான் வரி இருந்தது என்று ஒரு தி ஹிந்து கட்டுரை கூறுகிறது.  


இந்துமதம் 


ராமாயணம் ஆறில் ஒரு பங்கு அதாவது 16.6% க்கு மேல் வரி விதிப்பது அதர்மம் என்கிறது.

அர்த்தசாஸ்திரத்தின்படி வைசியர்கள் அதாவது வியாபாரிகள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்

யூதம் 

ஒரு யூதர் அனைத்து நிகர லாபத்தில் பத்தில் ஒரு பங்கை (10%) தொண்டுக்கு கொடுக்கிறார். - Chabad.org  

கிறிஸ்தவம் 

23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் (10%) கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள் (மத்தேயு 23:23-24)

இன்றும் கிறிஸ்தவ நாடுகளில் சர்ச் வரி என்று 0.7% இலிருந்து 2% வரை வசூலிக்கப்படுகிறது .  

ஆனால் அக்காலத்தில் ரோமானிய அரசாங்கம் அதன் குடிமக்கள் மீது மிகப்பெரிய வரிச்சுமையை சுமத்தியது. இஸ்ரவேல் ஜனங்களும் சர்ச்கும் அரசுக்கும் தனித்தனியே வரி செலுத்த வேண்டியிருந்தது.  இயேசு கிறிஸ்து தனது வரிகளை முழுவதுமாக செலுத்தினார் மற்றும் ரோமானியர்களின் ஊழல் அமைப்பின் கீழும் அவ்வாறு செய்வது தான்  சரியானது என்று கற்பித்தார் - தி அசவுண்டிங் ஹிஸ்ட்ரியன் ஜெர்னல்

இஸ்லாம் 

 மழை, மற்றும் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ந்து விளைந்த பொருளாக இருக்குமானால், அதற்கு 10% ஜகாத் கொடுக்க வேண்டும். செலவு செய்து நீர் பாய்ச்சி விளைந்ததாக இருக்குமானால் அதற்கு 5% ஜகாத் கொடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் இவ்வேறுபாடு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை அதாவது, அன்பளிப்பு, வாரிசுரிமை போன்ற சிரமம் அற்ற வழிமுறைகளில் செல்வம் கிடைத்திருக்குமானால், அதற்கு கூடுதல் சதவிகிதமும், சிரமத்தோடு தொழில் செய்து பொருளீட்டியிருந்தால் அதற்கு குறைவான சதவிகிதம் வழங்கவேண்டும் என யாரும் கூற மாட்டார்கள்.

எல்லா நிலையிலும் பொருளாதாரத்திற்கான ஜகாத்தின் சதவிகிதம் 2.5 சதவீதமாகவே உள்ளது. - இஸ்லாம் கல்வி 

இஸ்லாத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான  ஜிஸியா வரி கூட 10% தான் உள்ளது. அது அவர்கள் நாட்டில் செலுத்தும் அதே 10% தான் இஸ்லாமிய ஆட்சியின் கீழும் செலுத்துகிறார்செலுத்தினார்கள். 

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) - (நூல் : புகாரி 7144)

முடிவுரை

எந்த சமயத்தை பின்பற்றும் அரசும் 10 முதல் 16.6% வரை மட்டுமே வரி விதித்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு வரி இல்லை என்றும், செல்வந்தர்களுக்கு 16.6% (அதிகப்படியாக) என்றும் உள்து. மேலும் மறைமுக வரிகளும் பெரும்பாலும் இல்லை என்று கூறலாம்.  

இன்றைய இந்திய அரசு ஒரு சாமானியனுக்கு 30% வரை நேரடி வரி விதிக்கிறது ஆனால் ஒரு வியாபாரிக்கு கடனையும் கொடுத்து அதை தள்ளுபடியும் செய்கிறது. ஒரு ஏழை தான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 5% முதல் 28% வரை மறைமுக வரி விதிக்கிறது. சராசரியாக ஒரு நடுத்தர வர்க்க இந்தியன் 50%  வரை வரி செலுத்தும் நிலை உள்ளது. இதன் மூலம் தான் ஒரு கொடுங்கோன்மை அரசு என்று ஆளும் கட்சி நிறுவுகிறது. 

உலகில் உள்ள பணக்காரர்கள் எல்லாம் 2% வரி செலுத்தினாலே உலகில் உள்ள வறுமை போய்விடும் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி இருக்க இந்தியாவில் ஒரு தனி நபர் ஏறக்குறைய 50% வரி செலுத்தியும் இந்தியாவில் வறுமை ஒழியாதது ஏன்?