இஸ்லாமியர்களின் குண்டுவெடிப்புகளும் மற்றும் கலவரங்களும் :



1993 பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் உலகிலேயே ஒரு நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு உதவமுன்வந்த ஒரு நபரை தூக்கில் போட்ட பெருமை இந்திய அரசுக்கு மட்டுமே..
சான்று :
- http://www.firstpost.com/india/forgive-heres-jail-officials-say-yakub-memons-last-words-2376116.html
- http://scroll.in/article/744801/the-yakub-memon-story-the-man-who-helped-india-expose-pakistans-role-in-1993-bombay-blasts
- http://www.firstpost.com/india/all-you-need-to-know-about-1993-mumbai-blasts-accused-yakub-memon-2354838.html
- http://indianexpress.com/article/explained/yakub-memons-story-he-saw-it-as-sacrifice/
- http://www.rediff.com/news/special/it-is-important-to-know-the-truth-in-the-yakub-memon-case/20150727.htm
- https://en.wikipedia.org/wiki/Bharatiya_Janata_Party

2001-ல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் நிரூபிக்கபடாமல் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த உலகிலேயே தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரே நபர் அப்சல் குரு
சான்று:
- https://www.theguardian.com/commentisfree/2013/feb/10/hanging-afzal-guru-india-democracy
- http://www.news18.com/news/india/full-text-supreme-court-judgement-on-afzal-guru-589761.html
- http://www.thehindu.com/opinion/lead/the-disturbing-truth-about-an-execution/article4501567.ece

கோத்ரா ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு 2000 முஸ்லிம்களைக் குஜராத்தில் கொன்று குவித்ததை நாட்டு மக்கள் மறக்க முடியாது. கோத்ரா ரயிலை எரித்ததே சங்பரிவாரர் தான் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்திய பிறகும் முஸ்லிம்களுக்கு எதிராக
அவதூறு பரப்பும் மீடியாக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.
சான்று:
- http://www.wsws.org/tamil/articles/2011/apr/110412_guj.shtml
- https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots
- http://www.vinavu.com/2011/04/19/godhra-injustice/
- http://www.tehelka.com/2012/09/the-sting-in-the-story/
- https://en.wikipedia.org/wiki/Sanjiv_Bhatt
-https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_2002

2002ல் மோவ் எனும் ஊரிலுள்ள கோவிலில் வெடிகுண்டு வெடித்தது. முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்படாலும் தீவிர விசாரணைக்குப் பின் வி.ஹெச்.பி. தொண்டர்கள் தான் குண்டு வைத்தனர் என்று காவல்துறை கண்டு பிடித்து கைது செய்தது. இவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
சான்று:
- http://www.sakshitimes.net/blog/2008/09/08/reporting-and-exposing-orissa-persecution-by-hindu-terrorists-rss-updated-2/
- http://www.thehoot.org/media-watch/media-practice/bombs-defused-in-newsrooms-3302l

2002ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகில் உள்ள சதுமுகையில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதை முஸ்லிம்கள் மீதும், திகவினர் மீதும் போட்டு  இந்துத்துவா இயக்கங்கள் ஆர்ப்பரித்தனர். கடைசியில் தீவிர விசாரணைக்குப் பின் செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகிய இரண்டு இந்து முன்னணியினர் தான் விநாயகர்  சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் என்று அம்பலமாகி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சான்று:
- http://keetru.com/index.php?option=com_content&view=article&id=10112:2010-07-24-03-47-52&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
- http://idhuthanunmai.blogspot.in/2008/10/blog-post_8955.html
- http://9k.9941.yi.org/0/?url=bG10aC4yMF90c29wLWdvbGIvMTEvODAwMi9tb2MudG9wc2dvbGIucm9vam5hdi1yb29qbmF2Ly9BMyVwdHRo

2003 ஆம் ஆண்டு மும்பை ரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இது வரை வழக்கில் எந்தத் துப்பும் இல்லை.
சான்று:
- http://www.milligazette.com/news/9388-from-day-one-of-my-arrest-in-2003-till-today-i-am-in-custody-without-any-relief-or-trial-muzammil-akhtar
- http://www.globalresearch.ca/india-s-9-11-who-was-behind-the-mumbai-attacks/11217
- http://indianexpress.com/article/india/india-others/unraveling-the-truth-behind-7-11-mumbai-train-blasts-probe/

2006 ஏப்ரல் 7 அன்று மராட்டிய மாநிலம் நான்டெட் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து சங்பரிவாரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டு வைப்பதற்காக தயார் செய்த போது  வெடித்து விட்டதாகக் கூறினார்கள். அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைத்தன .முஸ்லிம்கள் அதிகமாகக் கூடும் பள்ளிவாசல்களில் குண்டு வைப்பது இவர்களின் சதித் திட்டத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பள்ளிவாசலில் குண்டு வைத்தாலும் அதையும் முஸ்லிம்கள் மீது போடுவதற்கு மீடியாக்கள் தயாராக இருப்பதால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று இவர்கள்  நம்புகின்றனர்.
சான்று:
- http://archives.peoplesdemocracy.in/2006/0709/07092006_nanded%20bomb.htm
- http://www.satp.org/satporgtp/countries/india/database/maharashtra_Incidents.htm

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நடந்த மகாராட்டிர மாநிலம் மாலேகான் என்ற ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பல்லாயிரம் மக்கள் வெள்ளிக் கிழமை தொழுது கொண்டிருந்த போது மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 125 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இதே மாலேகான் நகரில்ஆம் தேதியன்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட சிமி அலுவலகம் அருகில்  மோட்டார் சைக்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.இந்தக் குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியையும் மராட்டியக் காவல் துறை முஸ்லிம்கள் மீது தான் போட்டது.

இதே (2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29) நாளில் குஜராத் மாநிலம் மொடாசா நகரிலும் குண்டு வெடித்தது. இதனால் கொந்தளித்துப் போன முஸ்லிம்கள் இது குறித்து  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த மராட்டிய அரசு ஏ.டி.எஸ். எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் படையிடம்  மறு விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

இந்த மோட்டார் சைக்கிள் இளம் பெண் துறவியான பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது. இவர் ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யிலும், ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் மகளிர் பிரிவான துர்கா  வாஹினியிலும் அங்கம் வசித்தவர் என்பதும் தெரிய வந்தது. குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்களில் குர்ஆன் வசனம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.  அப்போது தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் என்பது இவர்களின் எண்ணம். இந்தக் குண்டு வெடிப்புகளில் ஜெலட்டின், அமோனியம் நைட்ரேட் போன்ற  வெடிமருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆர்.டி.எக்ஸ். என்னும் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மற்ற வெடி மருந்துகளைப் போல் இது எங்கேயும் கிடைக்காது. இராணுவத்தில் மட்டுமே இந்த வகை வெடிமருந்து இருக்கும். மாட்டிக் கொண்ட இவர்கள் குண்டு  வைத்ததை ஒப்புக் கொண்டதுடன் ஆர்.டி.எக்ஸ். எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது தான் முன்னாள் இராணுவத்தினரும் இந்நாள் இராணுவத்தினரும்  ஆர்.டி.எக்ஸ். சப்ளை செய்ததும் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தது. மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரபாகர் குல்கர்னி, உபாத்யாயா ஆகிய இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கர்னல் என்ற உயர்  அந்தஸ்தில் உள்ளவருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டு பிடித்து இராணுவத்தின் அனுமதி பெற்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு வைத்ததில்  தொடர்புடைய சியாம்சாரு, திலீப் நஷர், சிவநாராயனன் ஆகிய மூவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல சங்பரிவாரத்தினரும், காஷ்மீர் சாமியாரும் கைது  செய்யப்பட்டுள்ளனர். பெரும் பண முதலைகள் இதற்குப் பெருமளவில் பண உதவி செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் புள்ளி ஒருவரைக் கைது செய்ய  நீதி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் சாமியார், பா..ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும்  தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன. மேலும் அந்தச் சாமியார் வந்தேமாதரம் என்ற அமைப்பை குஜராத்தில் நிறுவியுள்ளார். இதற்கு குஜராத் மோடி அரசு நிதியுதவி
அளித்ததும் அம்பலமாகியுள்ளது. மோடி அரசு வந்தபிறகு அவர் விடுதலை செய்துள்ளார்..
சான்று :
- https://en.wikipedia.org/wiki/2006_Malegaon_bombings
- http://thewire.in/4767/10-facts-about-the-malegaon-blasts/
- http://www.thehindu.com/news/2006-malegaon-blasts-case-accused-disharged/article8519574.ece
- http://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/
- http://www.vinavu.com/2013/06/04/malegaon-chargesheet-exposes-hindu-terrorists/
- http://www.firstpost.com/india/malegaon-blasts-sadhvi-pragya-nia-ats-hemant-karkare-2780250.html
- http://www.hardnewsmedia.com/2010/06/3562

2007 பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் சென்ற சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் செத்தனர். பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஆயினும் இந்தப் பழியும் முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த அசிமானந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்
சான்று:
- https://en.wikipedia.org/wiki/Samjhauta_Express
- https://en.wikipedia.org/wiki/Swami_Aseemanand
- http://www.tehelka.com/2013/01/not-just-a-confession-forensic-evidence-piles-up-against-hindutva-terror/

2007 மே 18 அன்று ஹைதாரபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடித்து 11 பேர் செத்தனர். அந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே
போட்டனர். ஆனால் துப்பு துலக்கவில்லை கடைசியில் அசீமனந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
சான்று:
- http://www.tehelka.com/2013/01/not-just-a-confession-forensic-evidence-piles-up-against-hindutva-terror/
- https://en.wikipedia.org/wiki/Mecca_Masjid_bombing

2007 ஆகஸ்ட் 25 அன்று ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இது வரை தடையங்கள் இல்லை.
சான்று:
- http://www.firstpost.com/india/hyderabad-blasts-indian-mujahideen-plot-a-year-in-making-635207.html
- https://www.facebook.com/shamsherkhan.pathan/posts/699481976854459

19.10.2008 அன்று கேரள மாநிலம் தலைச்சேரியை அடுத்த தர்மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீட்டுத் தோட்டத்தில் சக்திவாய்ந்த 20 குண்டுகளைக் காவல்துறை கண்டு  பிடித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமான ஷோபாசதனம் என்ற வீட்டில் தான் மேற்படி குண்டுகள் எடுக்கப்பட்டன. மேலும் இதே போல் நிகழ்வு ஆந்திர மாநிலத்திலும் அதே ஆண்டு நடைபெற்றது.
சான்று:
- http://twocircles.net/2014sep12/1410463310.html#.V96KNoh94dU
- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=53443

2008ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இதைத் செய்தனர் என்று ராமகோபாலன் உள்ளிட்ட  இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் முடிவில் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர் தான்  குண்டு வைத்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சான்று:
- http://twocircles.net/2008feb26/terrorisms_tenkasi_moment.html#.V96MuIh94dU
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rss-office-blast-three-arrested/article1193363.ece

ஜூன்-4-2008 அன்று மராட்டிய மாநிலம் தானேயில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், அத்காரி ரக்சயாதன் என்ற ஆடிட்டோரியத்திலும் நடத்தப்பட்ட குண்டு  வெடிப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரின் தீவிர புலனாய்வுக்குப் பின் 1. மங்கேஷ் தினகர் நிகாம், 2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி, 3. சந்தோஷ் ஆங்ரே, 4. விக்ரம் பவே ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராய்காட் மாவட்டம் வர்சா கிராமம் மற்றும் பென் ஆகிய கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் சோதனையிட்ட போது பாக்கெட் பாக்கெட்டாக அமோனியம் நைட்ரேட் 200ட்டனேட்டர்கள், டைமர்கள், வோல்டேஜ்  மீட்டர்கள், இரண்டு ரேடியோ சர்க்யூட்கள், ரிமோட் கன்ட்ரோல்கள், ரிவால்வர், 92தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் அப்பாவி  இந்துக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்துக்களின் கோபத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்காக சில இந்துக்களை அழிப்பது தவறில்லை என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கை.
சான்று :
- http://zeenews.india.com/news/maharashtra/thane-blast-prosecution-did-not-prove-terror-act_730771.html
- http://dnasyndication.com/dna/Mumbai/dna_english_news_and_features/Two-convicted-for-2008-Thane-blasts/DNMUM220748

2008 செப் 21 அன்று கர்நாடகா புத்துர் எனும் இடத்தில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காமத்துக்குச் செந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து 397 ஜெலட்டின் குச்சிகள்,  1200 டெட்னேட்டர்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் சுரேஷ் காமத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சான்று :
- https://faketerrorism.wordpress.com/2008/11/17/recap-large-quantity-of-explosives-recovered-from-bajrang-dal-activist-in-puttur/

2016 திருவனந்தபுரம் கேரளாவில் வீட்டுக்குள் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்துவந்த பா.ஜ.க. தொண்டர் குண்டு வெடிப்பில் பலி
சான்று:
- http://www.news18.com/news/india/kerala-police-suspect-bjp-worker-killed-in-blast-was-making-bomb-1283926.html

கோவை குண்டுவெடிப்பும் மும்பை தொடர் குண்டுவெடிப்பும் ஆகிய இரண்டு மட்டுமே முஸ்லிம்கள் மீது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போலீசும், அரசும் இந்துத்துவா சக்திகளும் ஒருமித்து தாக்குதல் நடத்தி 19 பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடிக்கு சேதம்  ஏற்பட்டது. இதற்கு அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவற்றையெல்லம் தொகுத்துப் பார்க்கும் போது கோவை, மும்பை தொடர் குண்டுவெடிப்பு தவிர அனைத்துமே சங்பரிவாரத்தின் சதித் திட்டம் என்பது தெளிவாகிறது.

அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற செயல் யார் செய்யினும் தண்டனைக்கு உரியதே. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து  நீதி சமநிலையில் வழங்கப்பட வேண்டும்..

ORIGINAL STORY : http://www.tntjlalpet.com/2015/08/pdf.html

ஊணன் - foodie (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)

தமிழர் சமயம்

மிகுதியாய் உண்ணக் கூடாது 

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் - புலன்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத் துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன். - அறநெறிச்சாரம் பாடல் - 135

விளக்கவுரை உள்ளமே! பின்னால் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பத்தின் பொருட்டுத் தீவினைக்குரிய செயல்களைச் செய்யாதே! அத் தீவினைகள் உன்னை ஒறுக்கும்போது அப்பொறிகள் ஐந்தும் உனக்கு அறிவுரை கூறுதற்கேற்ற துணையும் ஆகா. ஆதலால் புலன் நுகர்ச்சி காரணமாக மிக்க உணவை விரும்பாது அளவுடன் உண்பது கடமையாகும்.

மிக்க உணவால் வரும் கேடு 

புகாப்பெருக ஊட்டின் புலன்கள் மிக்கூறி
அவாப்பெருகி அற்றம்தருமால் - புகாவும்ஓர்
பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன். - அறநெறிச்சாரம் பாடல் - 136

விளக்கவுரை வயிற்றுக்கு உணவை மிகுதியாக ஊட்டினால் ஐம்பொறிகள் அடங்காமல் ஆசை மிகப்பெற்று அழிவை அளிக்கும்; ஆகவே உணவைக் கரணங்கள் தொழிப்படுவதற்கு ஏற்ற நிலையில் சிறிதளவே உண்டு இந்த உடலால் வீடு பேற்றுக்கு உரிய செயல்களைச் செய்துகொள்வதே அற நூல்களைக் கற்றுத் தெளிந்தோர் கடமையாகும்.

 உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 7)


பதவுரை: உண்டி - மிக்க உணவை, உறு பிணி - மிகுந்த நோய்


பொருள்: உணவினை மிகுதியாக விரும்புபவர்களுக்கு நோய் உண்டாகும்.

 மீதூண் விரும்பேல்” (ஆத்திச்சூடி 91)  

பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே. 

இஸ்லாம்

இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட வேண்டும்!

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான முஃமினுக்கு அழகல்ல!

(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), (ஆதாரம்: புகாரி.)

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்), (ஆதாரம்: புகாரி.)

கிறிஸ்தவம்

...எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.. - (நீதிமொழிகள் 23:1-3)

19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. 20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! 21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள். - (நீதிமொழிகள் 23:19-21)

சூது

அறநெறிச்சாரம்: சூதால் உண்டாகும் தீமை 

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
 மேதை எனப்படும் மேன்மையும் - சூது
 பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
 இருளாம் ஒருங்கே இவை. பாடல் -  87

 விளக்கவுரை சூதாடுவான் என்ற சொல்லால் ஒருவன் பற்றப்படுவானானால் அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்னும் பெருமையும் - இவை முழுதும் அவனை விட்டு மறையும்.

திருக்குறள் அதிகாரம் : சூது

சிறுமை பலசெய்து சீரழிக்குங் சூதின்
வறுமை தருவதொன் றில். - 934

பொருள்: சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் = தன்னை விழைந்தார்க்கு முன்னில்லாத பல துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல்= நல்குரவினைக் கொடுக்கவல்லது பிறிதொன்றில்லை.

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

ஆத்திசூடி : உயிர்மெய் வருக்கம்

சூது விரும்பேல் / Don't gamble48

 (பதவுரை) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.

(பொழிப்புரை) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

திருக்குர்ஆன் :

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

பைபிள் :

இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் சூது செய்து எடுத்துக்கொள்ளக்கூடாது.யாத்திராகமம் 20:17


பூமியில் மனிதனை இறைவன் படைப்பதற்கு என்ன காரணம்?


தமிழர் சமயம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - (குறள் - 01:09)

விளக்கம்குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும். 

எனவே இந்த மனிதன் (தலை) படைக்கப் பட்டதன் நோக்கமாக சிரம் தாழ்ந்து எட்டு குணங்களை உடைய ஒரு இறைவனை வணங்கவே. (எட்டு குணங்கள் உடைய பலர் இல்லை, ஒருவன்)

பெறுதற்கறிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே - திருமந்திரம் 2109

விளக்கம்பெறுதற்கு அறிய பிறவி பெற்றதே இறைவனடி பேணவே.

வானவர் என்றும், மனிதர் இவர் என்றும்’
தேன் அமர் கொன்றைக் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை;
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே - (பிறவிப் பயன் 109)

விளக்கம்வானவர் இவர் என்றும் மனிதர் இவர் என்றும் பெயர் வேறுபடுவது தேன் நிறைந்த கொன்றை மலர்களை அணிந்த சிவபெருமான் தந்து ஓம்பும் பல வித உடல்களின் வேறுபாட்டினால் மட்டுமே ஆகும். வேறு எந்தச் சிறப்பும் உயிர்வகையால் ஏற்படுவது இல்லை. ஒப்பற்ற தெய்வம் சிவபெருமான் ஒருவரே அன்றி வேறு எவரும் இலர். இந்த உடலில் வாழும் நம் கடமை சிவபெருமானை அறிந்து கொள்வதே ஆகும். 
 
இஸ்லாம்:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - (குர்ஆன் 22:77)

மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்கும் படைக்கவில்லை. (குர்ஆன் 51:56)

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - (குர்ஆன் - 2:171)

விளக்கம்இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல உள்ளவர்கள். இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள் ஆவர். மனிதனையும் ஜின்களையும் படைத்த பிரதான நோக்கமே இறைவனை  வணங்குவதற்காகும், மற்ற காரணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 

குறிப்பு:
  • கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
  • "எண்குணத்தோன்" ஒவ்வொரு பொழிப்புரையாளர்களும் ஒவ்வொரு பொருள் தருகின்றனர்.. ஆனால் வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டுக்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.
1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்). 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).

கிறிஸ்தவம்:

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள். (ஏசாயா 43:21)

 விளக்கம் : நாம் கடவுளை வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ளோம்; அதுவே நமது வாழ்வின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு தயாரிப்பும் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது. 

எனக்கென்று ஏற்படுத்தினேன் என்று கூறுகிறானே தவிர (பிதா, சுதன் & பரிசுத்த ஆவிகளாகிய) எங்களுக்கென்று கூறவில்லை, ஏனென்றால் கர்த்தர் ஒரே ஒருவர்.

முடிவுரை

அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை வணங்குவதே பிறப்பின் காரணமாக உலக சமயங்கள் சொல்கிறது.

References

உள்ளத்தை அறிந்தவன் *

கிறிஸ்தவம் 


மரணத்திற்கு அழைத்துச் செல்லப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்; படுகொலைக்கு தடுமாறுபவர்களை தடுத்து நிறுத்துங்கள். "இதோ, இதை நாங்கள் அறியவில்லை" என்று நீங்கள் சொன்னால், இதயத்தை எடைபோடுபவர் அதை உணரவில்லையா? உன் ஆத்துமாவைக் காக்கிறவன் அதை அறியவில்லையா? (நீதிமொழிகள் 24:11-12)

இஸ்லாம்  


‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (குர்ஆன் 2:284)