பூமியில் மனிதனை இறைவன் படைப்பதற்கு என்ன காரணம்?


தமிழர் சமயம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. - (குறள் - 01:09)

விளக்கம்குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும். 

எனவே இந்த மனிதன் (தலை) படைக்கப் பட்டதன் நோக்கமாக சிரம் தாழ்ந்து எட்டு குணங்களை உடைய ஒரு இறைவனை வணங்கவே. (எட்டு குணங்கள் உடைய பலர் இல்லை, ஒருவன்)

பெறுதற்கறிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே - திருமூலர் திருமந்திரம் பாடல் 2109

விளக்கம்பெறுதற்கு அறிய பிறவி பெற்றதே இறைவனடி பேணவே.

இஸ்லாம்:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். - (குர்ஆன் 22:77)

மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்கும் படைக்கவில்லை. (குர்ஆன் 51:56)

(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். - (குர்ஆன் - 2:171)

விளக்கம்இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல உள்ளவர்கள். இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள் ஆவர். மனிதனையும் ஜின்களையும் படைத்த பிரதான நோக்கமே இறைவனை  வணங்குவதற்காகும், மற்ற காரணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 

குறிப்பு:
  • கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள. 
  • "எண்குணத்தோன்" ஒவ்வொரு பொழிப்புரையாளர்களும் ஒவ்வொரு பொருள் தருகின்றனர்.. ஆனால் வள்ளுவரே என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யாரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்புபெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டுக்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.
1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்). 2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).

3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).

4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).

5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).

6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).

7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).

8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).

கிறிஸ்தவம்:

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள். (ஏசாயா 43:21)

 விளக்கம் : நாம் கடவுளை வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ளோம்; அதுவே நமது வாழ்வின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு தயாரிப்பும் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது. 

எனக்கென்று ஏற்படுத்தினேன் என்று கூறுகிறானே தவிர (பிதா, சுதன் & பரிசுத்த ஆவிகளாகிய) எங்களுக்கென்று கூறவில்லை, ஏனென்றால் கர்த்தர் ஒரே ஒருவர்.

முடிவுரை

அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை வணங்குவதே பிறப்பின் காரணமாக உலக சமயங்கள் சொல்கிறது.

References

9 கருத்துகள்:

  1. அருகப் பெருமானின் திருவடிகளை வணங்குவனவே தலைகள்
    அறநெறிச்சாரம் பாடல் - 203

    குற்றம் குறைத்துக் குறைவுஇன்றி மூவுலகின்
    அற்றம் மறைத்துஆங்கு அருள்பரப்பி - முற்ற
    உணர்ந்தானைப் பாடாத நாவல்ல, அல்ல
    சிறந்தான் தாள் சேராதவை.

    விளக்கவுரை காமம் வெகுளி மயக்கங்களைக் கெடுத்து மூன்று உலகத்தில் உள்ளவா¢ன் அச்சத்தை குறைவு இல்லாமல் போக்கி அவர்களுக்கெல்லாம் அருள் செய்து இயல்பாகவே எல்லாம் உணர்ந்த அருகதேவனைப் பாடாதவை நா அல்ல. சிறந்த அக்கடவுளின் திருவடிகளைச் சேராத தலைகள், தலைகள் ஆகா.

    பதிலளிநீக்கு
  2. சங்கீதம் 96:9
    கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கொலோசெயர் 1:16
    ஏனென்றால், பரலோகத்திலும் பூமியிலும் காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத அனைத்தும், சிம்மாசனங்களாக இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, அவர் மூலமாகவும் அவருக்காகவும் எல்லாம் படைக்கப்பட்டன.

    பதிலளிநீக்கு
  4. பிரசங்கி 12:13-14
    Tamil Bible: Easy-to-Read Version
    13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

    பதிலளிநீக்கு
  5. WHAT THIS LIFE IS ALL ABOUT? இந்த வாழ்க்கையின் காரணம் என்ன?

    Quran / குர்ஆன் - 23:1

    Successful are true believers [of ALLAH/GOD]
    [இறை]நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.

    Quran / குர்ஆன் - 29:2

    Do men think that they will be left alone on saying, "We believe", and that they will not be tested?
    மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?

    Quran / குர்ஆன் - 29:3

    We did test those before them, and Allah will certainly know those who are true from those who are false.
    இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.

    Quran / குர்ஆன் - 1:255

    And We will surely test you with something of fear and hunger and a loss of wealth and lives and fruits, but give good tidings to the patient.
    நிச்சயமாக பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நாம் உங்களைச் சோதிப்போம். சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

    Quran / குர்ஆன் - 21:35

    And We test you with evil and with good as trial
    நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம்.

    Quran / குர்ஆன் - 47:31

    And We will surely test you until We make evident those who strive among you [for the cause of Allah] and the patient.
    உங்களில் தியாகம் செய்தோரை யும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம்.

    Quran / குர்ஆன் - 67:2

    [He] who created death and life to test you [as to] which of you is best in deed
    உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத் தையும், வாழ்வையும் அவன் படைத்தான்.

    For further more..

    3:154, 5:48, 5:94, 6:165, 7:163, 8:17, 11:7, 18:7, 20:131, 27:40, 47:4, 72:17, 76:2 and etc

    பதிலளிநீக்கு
  6. “அல்லாஹ்வை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்;கள்.” (புகாரி, முஸ்லிம்)

    அறநெறிச்சாரம்மங்கல வாழ்த்து

    முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்
    குற்றம்ஒன்று இல்லா அறம். 1

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  7. 2. உடம்பின் பயன்
    உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
    முடம்பினி லுத்தமனைக் காண். 11

    உடம்பினை நாம் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் எல்லாமே நம் உடம்பில் இருக்கும் உத்தமனைக் காண்பதே. உத்தமன் – ஒப்புயர்வற்ற இறைவன்.


    உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
    யுணர்க உணர்வு டையார். 12 ஞானக்குறள்

    அந்த உத்தமனை உணர்வால்தான் காணமுடியும். அந்த உணர்வுதான் உடம்பின் பயன். எனவே உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
    அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18 ஞானகுரல்

    உயிருக்கு உறுதி எல்லாமே உடம்பும் அதன் பயனுமே. உயிர் சோரும் அயிர் பீறிட்டுக்கொண்டு வந்தால் ஆதியாகிய இறைவனை விரும்பித் தேடிக்கொள். உடலோ மனமோ சோர்ந்தால் இறைவனைப் பற்றிக்கொள்

    பதிலளிநீக்கு
  9. போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
    போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
    போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
    போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. திருமந்திரம் 44

    அன்பினுள் விளங்க வைத்தேன்! வானவரும், அசுரரும், மனிதரும் இறைவனை வாழ்க என அன்பின்றி வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலைபெறும்படி செய்தேன். சிவனது திருவடியை அன்போடு வணங்க வேண்டும்.

    அசுரர் - அமரர் - மனிதர்

    பதிலளிநீக்கு