பிறந்த நாள் *

கிறிஸ்தவம் 

நல்ல தைலத்தை விட நல்ல பெயர் சிறந்தது, ஒருவர் பிறந்த நாளை விட இறந்த நாள் சிறந்தது. (பிரசங்கி 7:1)

இஸ்லாம் 

நபி அவர்கள் பிறந்தநாளை கொண்டாடியதற்கான ஆதாரம் இஸ்லாமிய ஆதாரநூல்களில் எதிலும் காணப்படவில்லை. அவர்களின் சஹாபாக்கள் கொண்டாடியதற்கான ஆதாரமும் இல்லை. எனவே அது வேற்று சமய மக்களின் கன்டுபிடிப்பாகும்.

“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116

நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் *

தமிழர் சமயம்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம் புறத்திணை இயல் 88)

உவகை: மகிழ்ச்சி
எச்சம்: மிச்சம்
புள்: பறவை
நிமித்தம்: சகுனம், குறி பார்த்தல், சாதகம்
கண்ணிய: நினைத்த, அரும்பு, சுருக்கு, பொறி, சிக்கு
ஓம்படை (ஓம்பு+அடை=பாதுகாப்பு+சேர்): பாதுகாப்பான இடம் சேர்த்தல்

விளக்கம்: பயம் விருப்பம் என்பன சிறிதும் இன்றி, நல்ல நாள் கெட்ட நாள், பறவை உள்பட மற்ற சகுனம் பார்ப்பதும், கடுங் காலத்தில் சிக்கியதை நினைத்து பாதுகாப்பான காலம் வருவது பற்றி அறிய விரும்புதல் உள்பட உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது ஆகியவற்றை அறிய விரும்பினால் முக்காலத்திலும் (இம்மை, பிறப்பு, மறுமை) சிக்கிகொள்வீர்கள்.

இஸ்லாம் 

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அன்றை அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெரியும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னைவிட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்) 

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்: புஹாரி 4826


 

அண்டை வீடு

தமிழர் சமயம் 

அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,
மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்
கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,
உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. - (சிறுபஞ்ச மூலம் 60)

கிளை - உறவினர்கள்

பொருள் : அரம் போன்ற சுற்றமும், அடங்காத மனைவியும், அடங்காதன செய்யும் அடிமையும், மரம் போன்ற புதல்வனும், வஞ்சனை செய்கின்ற அயலிருப்பும் உடையவர்களுக்கு வேறு நோய் எதுவும் வேண்டாம். அவையே பெரும் துன்பத்தைத் தரும்

யூதம் 

இதுபோலவே உனது அண்டை வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான். (நீதிமொழிகள் 25:17)

 உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள். (நீதிமொழிகள் 3:29)

உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். 2 ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். 3 அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும். (உபாகமம் 22:1-3)

கிறிஸ்தவம் 

37 இயேசு அதற்கு,, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ [a] 38 இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. 39 இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே அண்டை வீட்டானையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:37-39)

15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. (யாக்கோபு 2:15-16)

இஸ்லாம் 

“மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” (குர்ஆன் 4:36).



பெண்கள் தனியே வெளியே செல்லுதல்

தமிழர் சமயம்

கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் 

தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து
வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோல்தொடியாள் கோள் அழியுமாறு. (பாடல் - 161)

விளக்கவுரை: கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.


கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162


அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்

கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்

வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்

தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.


விளக்கவுரை: கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் செல்லும் இயமனாவாள்.

இஸ்லாம் 

மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1862)

கிறிஸ்தவம் 

அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை. (யோவான் 4:27)

குறிப்பு: பெண்ணோடு தனியே பேசுவது கூட யூத சமுதாயத்தில் வழக்கமாக இருந்திருக்கவில்லை என்று இந்த வசனம் காட்டுகிறது.

பெண்களின் ஒப்பனை

தமிழர் சமயம் 

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் (உலக நீதி 90)


கற்பொழுக்கத்துக்கு ஆகாத செயல்கள் 


தலைமகனில் தீர்ந்துஉறைதல் தான்பிறர்இல் சேர்தல்

நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலன்அணிந்து

வேற்றுஊர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்

கோல்தொடியாள் கோள் அழியுமாறு. (பாடல் - 161)


விளக்கவுரை: கணவனிடமிருந்து பிரிந்து வாழ்தல், அடிக்கடி அயலார் வீடுகளுக்குப் போதல், நெறியில் நீங்கிய தீய மகளிருடன் சேர்ந்து பழகுதல், அணிகளை அணிந்து அயலூர்க்குத் தனியே செல்லுதல், தனியே சென்று திருவிழாவைக் காணுதல், கணவன் ஆணையின்றி விரதம் மேற்கொள்ளுதல் ஆகிய இவை பெண்ணின் கற்புக் கெடுதலுக்குரிய வழிகளாகும்.


கற்பற்ற மனைவியர் கணவர்க்கு இயமன் பாடல் - 162


அயல்ஊர் அவன்போக அம்மஞ்சள் ஆடிக்

கயல்ஏர்கண் ஆர எழுதிப் - புயல்ஐம்பால்

வண்டுஓச்சி நின்றுஉலாம் வாள்ஏர் தடங்கண்ணாள்

தண்டுஓச்சிப் பின்செல்லும் கூற்று.


விளக்கவுரை: கணவன் வேற்றூரை அடைந்த சமயம் பார்த்து, அழகுடைய மஞ்சளைப் பூசி நீராடி, கயல் மீனைப் போன்ற அழகுடைய கண்கள் எழில் பெற மையைத் தீட்டி, கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மலரில் உள்ள வண்டுகளை ஓட்டிக் கொண்டு, வெளியில் உலவும் ஒளியுடைய அழகிய பெரிய கண்களை உடையவள், தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அவன் அறியாமல் செல்லும் இயமனாவாள்.


கிறிஸ்தவம் 

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது (1 பேதுரு 3:3)

யூதம் 

16 கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார். 17 சீயோனிலுள்ள பெண்களின் உச்சந்தலையை என் ஆண்டவர் புண்ணாக்குவார். அவர்களின் முடிகளெல்லாம் உதிர்ந்து மொட்டையாகும்படிச் செய்வார். 18 அப்போது, பெருமைக்காரர்களிடம் உள்ள பொருட்களை கர்த்தர் எடுத்துக்கொள்வார். அழகான தண்டைகளையும், சுட்டிகளையும், சூரியனும், பிறையும் போன்ற சிந்தாக்குகளையும் எடுத்துக்கொள்வார். 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும் தலைமுக்காடுகளையும், 20 தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்த பரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத ஆடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துப்போடுவார்.. (ஏசாயா 3:16-23)

இஸ்லாம் 

ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி) 

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். (நூல் : நஸாயீ) 

உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

அனுபவ அறிவா? வேதமா?

ஒருவர் தான் வாழும் முறையினை நெறிப்படுத்த மறைநூலின் அவசியம் உண்டா? அல்லது அவரவர் அனுபவப்படி நம்மை தீமையை வரையறுத்து வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் சிறந்ததா?

இறைமறுப்பாளர்கள் மட்டும் அல்ல, இறை நம்பிக்கை உடைய பலரும், மறைநூல்களை பொருட்படுத்தாமல் தனது அனுபவத்தை மட்டுமே சார்ந்து உள்ளனர். அதிலும் சிலர் முன்னோர்களின் கருத்துக்களையும் ஏற்கின்றனர் ஆனால் மறைநூல்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

ஏனென்றால் மனிதனின் அனுபவத்தில் விளைந்த அறிவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மறை நூல்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் மறைநூல்கள் மனிதனின் அறிவின் மூலம் விளைந்த நூல்கள் என்று இவர்களால் கருதப்படுகிறது.

  1. (மறை)நூல் என்றால் என்ன? இறைவனால் வெளிப்படது நூல் ஆகும்.
  2. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட நூல் உண்டா? உண்டு.
  3. உலகின் அனைத்து மறைநூல்களுக்கிடையில் தொடர்பு உண்டா? உண்டு.

இவையெல்லாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் பேசப்பட்டுவிட்டது. எனவே இக்கட்டுரையில் மறைநூலை சார்ந்தது இராமல் சுயஅறிவை மட்டும் அல்து அனுபவ அறிவை மட்டும் சார்ந்து இருத்தல் தகுமா? எனபதை கற்று அறிவோம் வாருங்கள்.

தமிழர் சமயம்


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே. - (திருமந்திரம்)

விளக்கம்அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (குறள் 636)

விளக்கம்: மதி நுட்பமும் உள்ளவர்கள் நூலின் வழிகாட்டுதலோடு நின்றால் அவர் முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்?

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெல்என்றல் சால அஃதுஆகும் - அதே போல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்மகட்குக்
கல்லினும் வல்என்னும் நெஞ்சு. (அறநெறிச்சாரம் 31)

விளக்கம்: நாள்தோறும் நீரினுள்ளே கிடந்தாலும் கல்லுக்கு மென்மை அடைதல் சிறிதும் இல்லை! அதைப் போல் நாள்தோறும் நல்ல அறநூல்களை கல்லார் கூறக் கேட்டாலும், கீழ் மக்களுக்கு மனமானது கல்லைவிடத் திண்மையுடையதாகவே இருக்கும்.


தத்தமதுஇட்டம் திருட்டம் எனஇவற்றோடு

எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தர்அவர்

நூல்களும் பொய்யேஅந் நூல் விதியின் நோற்பவரும்

மால்கள் என உணரற் பாற்று. (அறநெறிச்சாரம் 47)


இட்டம்: விருப்பம், இஷ்டம் 
திருட்டம்: தெளிவு, விளக்கம் 
திறம்: கூறு, வகை 
மாறா: நிலையான 
பித்தர்: பைத்தியக்காரன்

நோற்றல்: தவஞ்செய்தல்

மால்: மயக்கம், ஆசை 


விளக்கம்: வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தங்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு விளக்கம் கூறி, அவர்கள் கூற்றுடன் எதுவும் பொருந்தாதபடி சொல்பவரை பைத்தியக்காரன் எனவும் அவர்கள் கூறும் நூல்களைப் பொய்ந்நூல்கள் எனவும் அந்த நூல்கள் கூறும் நெறியில் நின்று தவம் செய்பவரும் மயக்கம் உடையார் எனவும் உணரும் தன்மை உடையது.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்

விண்ணுறுவார்க் கில்லை விதி. (நல்வழி வெண்பா 37)


விளக்கம்வினைப் பயன்களை போக்குவதற்கான முதல் வழி வேதம் ஆகும், மற்ற எல்லா நூல்களிலும் அந்த பயன் இல்லை. அவ்வாறு உலக நூல்களை வாசிப்போர் பொறாமை படுவதை தவிர வேறென்னே சிந்திக்க முடியும். உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.


சொற்ப்பொருள்: ஆயம்: இரகசியம்; கண்ணூறு: பொறாமை; விண்ணூறு: சொர்கத்தை அடைவோர்.


கிறிஸ்தவம்

அதற்கு இயேசு, "மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல, மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது" என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார். (மத்தேயு 4:4)

 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. (மாற்கு 12:24)

யூதம் 

 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. (யாத்திராகமம் 18:20)

இஸ்லாம் 

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (குர்ஆன் 7:40)

முடிவுரை 

இறைவனின் வழிகாட்டுதல் என்பது அறம், நூல், வேதம், சட்டம், வார்த்தை, வசனம் அல்லது வேதவாக்கியம் என்று வெவேறு பன்பாடுகளில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகிறது.  
 
மனிதனின் தினசரி செயல்பாடுகளில் இறைவனின் வழிகாட்டுகள் பேணப்பட வேண்டும். ஏனென்றால் உலகம் அவனை விதித்த விதிகளின்படிதான் இயங்குகிறது. மனிதர்களின் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே கொண்டு வெற்றியும் நிம்மதியும் பெறமுடியாது என்பது உலக நெறிகள் கூறும் வாய்மை ஆகும்.

வேதம் படித்து அதை அறிவு கொண்டு செயல்படுத்த வில்லை என்றாலும் நட்டம், உலக அறிவு இருந்து அதை மறைநூலோடு சேர்த்து புரிந்து கொள்ள முயலவில்லை என்றாலும் நட்டம். இந்த தத்துவத்தை தான் மேற்சொன்ன பலசமய நூல் வரிகள் தெளிவு படுத்துகிறது.  


ஆதம் ஏவாள் கதை பொய்யா? *

நான்மறை தத்துவத்தின் படி, ஆதாம் ஏவாள் கதை உண்மையாக இருந்தால் உலக வேதங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டு இருக்கும். ஆதாம் ஏவாள் கதை எவை எவையோடு தொடர்புடையது? ஒரே கடவுள், உலகத்தின் படைப்பு, மனித படைப்பு, மனிதன் சொர்கத்திலிருந்து விரட்டப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தேடுவோம் வாருங்கள்! 

1) எத்தனை கடவுள் உண்டு? ஒரே ஒருவன்

தமிழர் சமயம்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4) 


இந்து மதம்

எல்லா மக்களாலும் வணங்கப்பட வேண்டிய ஒரே கடவுள். (அதர்வா வேதம் 2.2.9) 


இஸ்லாம்

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு இறைவன் இல்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார். - (குர்ஆன் 7:59) 
 
வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22) 


யூதம்

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (பைபிள் நெகேமியா 9:6) 


கிறிஸ்தவம்

அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25] 

எத்தனை கடவுள் உள்ளது என்கிற கேள்வி எப்படி இந்த கேவியுடன் தொடர்புரடையது? என்று கேட்டால், கடவுள் பலவாக இருந்தால், ஒருவரிடம் இருக்கும் வேத செய்தி இன்னொருவரிடம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரே கடவுளால் உலகம் படைக்கப்பட்டது  என்றால் பல சமய வேதங்களில் ஒரே செய்தி இருப்பதில் என்ன வியப்பு  இருக்க முடியும்? ஒரே கடவுளால் ஒரே உலகம் படைக்கப்பட்ட விதம் மதத்துக்கு மதம் மாறவா செய்யும்?

2) கடவுள் உலகை படைதார் என்பது ஆபிரகாமிய மாதங்களில் மட்டும் உள்ள செய்தியா? எல்லா மதங்களும் அவ்வாறுதான் சொல்கிறது.

உலகம் முழுமையும் படைத்தவன் தான் கடவுள் ஆவான் என்று எல்லா சமயங்களும் சொல்கிறது.

மந்திரம்

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)
 

குர்ஆன்

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' (திருக்குர்ஆன் 30:40)   

 

தோரா

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். (ஆதியாகமம் 1:1) 
 
தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். (சங்கீதம் 136:25) 
 

அழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் நெருங்கிவிட்டது. அது சர்வவல்லவரிடமிருந்து அழிவாக வரும். (ஏசாயா 13:6)  

 

பைபிள்

சகலமும் அவர் மூலமாக உண்டானது, அவர் இல்லாமல் உண்டானது எதுவும் உண்டாகவில்லை. (ஜான் 1:3) 


3) கடவுள் மனிதனை படைத்தானா? அல்லது மனிதன் பரிணமித்தனா? 

மனிதனை கடவுள்தான் படைத்தான், அவன் அமீபாவிலிருந்தோ, குரங்கிலிருந்தோ அல்லது வேறு ஒன்றிலிருந்தோ பரிணமிக்கவில்லை.

இந்து மதம்

sa ikshateme nu loka lokapalannu srija iti .. so.adbhya eva purusha.n
samuddhrityamurchayat.h .. (ஐத்ரேய உபநிடதம் 3) 
 
He bethought Himself: "Here now are the worlds. Let Me now create world guardians." Right from the waters He drew forth the Person in the form of a lump and gave Him a shape. 
 

அவர் தன்னைத்தானே நினைத்துக்கொண்டார்: "இதோ இப்போது உலகங்கள் உள்ளன. நான் இப்போது உலகக் காவலர்களை உருவாக்குவேன்". தண்ணீரிலிருந்து அவர் ஒரு நபரை ஒரு கட்டியின் வடிவத்தில் வெளியே இழுத்து அவருக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். (ஐத்ரேய உபநிடதம் 3)  

 

யூதம்/ கிறிஸ்தவம்

கர்த்தராகிய தேவன் தரையிலே புழுதியிலே மனுஷனை உண்டாக்கி, ஜீவபூமியின் மூக்கினால் மூச்சுத்தி, மனுஷன் ஜீவாத்துமாவானான்." (ஆதியாகமம் 2:7)  

 

இஸ்லாம்

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். (திருக்குர்ஆன்  32:7)

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (திருக்குர்ஆன் 30:20)  

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (குர்ஆன்  21:30)

 

4) மனிதன் சொர்க்கத்தில் இருந்து செய்த பாவத்தால் பூமிக்கு விரட்டப்பட்டனா?

சைவம்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. (திருமந்திரம் 113)  

 

இஸ்லாம்

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். - (குர்ஆன் 2:36)  

 

கிறிஸ்தவம் / யூதம்

ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். - (ஆதியாகமம் 3:23)  

 

5) ஒரே ஆண் பெண்ணிலிருந்து மனிதகுலம் பெருகியதா?

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. (இரண்டாம் தந்திரம் - 9.6)

பொருள்: ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்துதான் மனித இனம் தழைத்து ஓங்கியது.

இஸ்லாம்

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். (குர்ஆன்)  

 

கிறிஸ்தவம்

"அவர் ஒரு மனிதனிலிருந்து மனிதகுலத்தின் ஒவ்வொரு தேசத்தையும் பூமியின் முகமெங்கும் வாழச் செய்தார்."(அப்போஸ்தலர் 17:26)  

 

முடிவுரை:

  • மொழிக்கு ஏற்றார் போல பெயர் மாறுபடுவது இயற்கை தான். எனவே கடவுளின் பெயர் வேறுபடுகிறதே என்று கருதாமல் அவற்றின் இலக்கணத்தை நோக்குவது தான் சரியான வழிமுறை. அந்த வகையில் மனிதனை கடவுள் படைத்ததும், மனிதன் செய்த பிழையால் அவனை பூமிக்கு விரட்டப்பட்டதும், ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து இவ்வுலகம் தழைத்து ஓங்கியதையும் அனைத்து சமயங்களும் வழிமொழிகிறது.
  • ஒரு மதத்தில் உள்ளது போல ஒரு நிகழ்வின் அனைத்து செய்திகளும் இன்னொரு மதத்தில் அப்படியே இருக்கவேண்டும் என்று கருதுதல் அவசியமற்றது. காரணம் பல ஆயிரம் ஆண்டு நிகழ்வுகளை ஒரு சிறிய நூலில் சுருக்கும் பொழுது அந்த நூல் இறங்கும் காலத்தில் உள்ள அந்த மக்களுக்கு என்ன செய்தி தேவை என்று இறைவன் கருதுகிறானோ அதை மட்டுமே கொடுக்கிறான். அது மனிதனின் தேர்வு அல்ல.
குறிப்பு*: ஆய்வு முழுமை பெறவில்லை, ஆதாரங்கள் கிடைக்க கிடைக்க மேலும் சேர்க்கப்படும்.