தீர்க்கதரிசிகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - திருமந்திரம் 2104

ஒரே ஒரு தெய்வம்தான் அவனை விட்டால் புகும் கத்தி வேறு இல்லை என்று பாடிய திருமூலருக்கு கோவில் அமைத்து தெய்வமாக வணங்கப் படுகிறது. 
 
 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - அகத்தியர் ஞானம் - 1:4

தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும் என்று பாடிய அகத்தியருக்கு கோவில் அமைத்து தெய்வமாக வணங்கப்படுகிறது. 


கிறிஸ்தவம்

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.”— (மத்தேயு 23:9) என்றும் 

 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவருக்கு மட்டுமே பணி செய்’ என்று எழுதியிருக்கிறது” என்றார். (லூக்கா 4:8என்றும் 

சொன்ன தீர்க்கதரிசி இயேசுவிற்கு உருவம் கொடுக்கப்பட்டு ஏசப்பா என்று அழைக்கப்பட்டு உலகம் முழுதும் வணங்கப்பட்டு வருகிறது. 
 

 இஸ்லாம் 

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80) 

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்:9:31

அளவுக்கு அதிகமாக தூதர்களை புகழும் சமீபத்திய உதாரணம்.



படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17)

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது" - (மெயில் ஆப் இஸ்லாம்)

முடிவுரை 


உருவவழிபாடு கூடாது அது மாபாதக செயல் என்று இந்து, இஸ்லாம் கிறிஸ்தவம், தமிழர் சமயங்கள் உள்ளிட்ட அனைத்து உலக வேதங்களை வாசித்தால் ஒரு லட்சம் தடவைக்கு குறையாமல் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதை போதித்த மகான்களையே வணங்குவதென்பது பரிதாபத்துக்கு உரியது. 

5 கருத்துகள்:

  1. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

    (அல்குர்ஆன்:9:31)

    பதிலளிநீக்கு
  2. அதேபோல் அப்போஸ்தலன்
    யோவான் ஒரு தேவதூதனை
    வணங்க முற்பட்டபோது
    “வேண்டாம், வேண்டாம்; . . . கடவுளையே தொழுதல் வேண்டும்” என்று கூறி அந்தத் தூதன் அவரை கடிந்துகொண்டார்
    (⁠திருவெளிப்பாடு 22:⁠9)

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை செய்யவோ, தீமை செய்யவோ ஒரு சிறிதும் சக்தியற்றவன்'' என்றும் கூறுவீராக! ‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 21, 22)

    பதிலளிநீக்கு
  4. மத்தேயு 23

    29 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.

    33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.

    35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.

    எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு
    37 ,“எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2023&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  5. "மாலும் மனிதன்
    மலரோனும் தான் மனிதன்
    ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்
    சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
    கற்றுமறிந்தார் இல்லை"
    - ஔவையார்


    "மாலும் மனிதன்" - திருமாலும் மனிதனே

    "மலரோனும் தான் மனிதன்" - பிரம்மாவும் மனிதன்

    "ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்" - சிவபெருமானும் மனிதனே

    "சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
    கற்றுமறிந்தார் இல்லை" - இந்த மானிடரே கடவுளாக முடியும். எத்தனை வேதங்களைக் கற்றாலும், இந்த உண்மையை உணர்ந்தோர் எவருமேயில்லையே என வருத்தப்படுகிறார் முற்றுப்பெற்ற ஞானி ஔவைப் பிராட்டியார்.

    பதிலளிநீக்கு