இறைவனின் சவால் : உங்கள் தெய்வங்களை பேச சொல்லுங்கள் பார்ப்போம்

கிறிஸ்தவம்


“நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்!  என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். (ஏசாயா 44:8)

கர்த்தரும், விக்கிரகங்களும்
1 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்லாம் 


இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ளமாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப்பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.  அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரைஅழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும்கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்குஉதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (அல்குர்ஆன் 7:192-197)

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். - (அல்குர்ஆன் 21:92)

தமிழர் மதம்


“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ - சிவவாக்கியர் பாடல்-520


2 கருத்துகள்:

  1. படைத்த ஏக இறைவனை விட்டு வேறு ஒன்றை வணங்கினால் ?
    பைபிள்

    நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான். - யோசுவா 24:20

    https://lord.activeboard.com/t45198158/topic-45198158/
    ___________________________________________________________

    குர்ஆன்

    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)

    1) http://www.islamkalvi.com/discipline/prohibited_01.htm
    2) https://www.readislam.net/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/
    ____________________________________________

    திருமந்திரம்

    இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
    முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
    பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே

    இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
    முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
    பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே

    பொழிப்புரை
    அயலும் புடையும் மண்ணான மண்ணுக்குரிய வானவரும் விண்ணுக்கு உரிய வானவர்களும்

    திருமூலர் உரைக்கிறார் எம் ஆதியை நோக்கி இயலும் பெருந் தெய்வம் ஈசனிடம் இன்றி வேறு யாதும் வேறு ஒன்று இல்லை

    எங்கு எவ்வளவு முயன்றாலும் முடிவான மற்றும்

    ஆங்கே பெயலும் பொழியும் மழையாக மழை முகலாக இருக்கும் தூதுவர் வானவர் பெயர் நந்தி தானே
    அயலும் புடையும் மண்ணான மண்ணுக்குரிய வானவரும் விண்ணுக்கு உரிய வானவர்களும்

    திருமூலர் உரைக்கிறார் எம் ஆதியை நோக்கி இயலும் பெருந் தெய்வம் ஈசனிடம் இன்றி வேறு யாதும் வேறு ஒன்று இல்லை

    எங்கு எவ்வளவு முயன்றாலும் முடிவான மற்றும்

    ஆங்கே பெயலும் பொழியும் மழையாக மழை முகலாக இருக்கும் தூதுவர் வானவர் பெயர் நந்தி தானே

    https://tamil.samayam.com/religion/religious/tirumular-tirumantiram-song-11-and-explanation-in-tamil/articleshow/70024849.cms

    பதிலளிநீக்கு
  2. பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
    பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
    ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
    காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252

    பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு