கே.ஜி.எப் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

திரைப்படத்தில் கெட்ட குணமுடைய, செயலுடைய ஒருவரை மக்கள் திட்டி தீர்த்த ஒரு காலமுண்டு.

பணத்துக்காக ஒருவன் ஒரு கொலையோ திருட்டோ செய்தால் அந்த கதாபாத்திரம் இழிவாக பார்க்கப் பட்டது.

ராதா ரவி ஒரு நேர்காணலில் சொன்னார் "மக்கள் காரி துப்பனும், அப்பத்தான் நான் என் வில்லன் பாத்திரத்தை சரியாக செய்ததாக நான் நம்புவேன்" என்றார். ஏனென்றால் பொது மக்களின் மன நிலை அப்படி இருந்தது. சாதாரணமான மக்களில் பெரும்பாலானோர் கெட்டதை வெறுத்தார்கள், அதை அவமானமாக கருதினார்கள்.

KGF-இன் வெற்றி மட்டுமல்ல இது போன்ற ஒவ்வொரு படத்தின் வெற்றியும் மக்களின் மனநிலையை பிரதி பலிக்கிறது. அதன் காட்சி அமைப்பு, பிரமாண்டம் மட்டும் வெற்றிக்கான காரணமல்ல, அதன் என்ன ஓட்டமும் மிகப் பிரதானமானது. கொலையும் கொள்ளையும் தற்ப்பெருமையும் குடியும் கூத்தும் தானே இந்த திரைப்படத்தில் பிரதான இடத்தை பிடித்து இருந்தது. மக்களின் மனநிலையை யூகித்து படங்கள் எடுக்கப்படுகின்றன, சரியான யூகங்கள் வெற்றி பெறுகின்றன. பலப்படங்கள் மக்களை வழிநடத்த எடுக்கப் படுகின்றன, சில சரியான வழிகளில், பல தவறான வழிகளில்.

இது ஒரு cyclic effect - மக்களால் திரைப்படமும், திரைப்படத்தால் மக்களும் மோசமாகி கொண்டே போகிறனர். பகவாதர் தூரத்தில் இருந்து "மேயாத மான்" என்று பாடியதில் துவங்கி இன்று எப்படிப்பட்ட வக்கிரத்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் அறிவோம். நாளை எங்கே செல்லும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இது போல ஒவ்வொரு ஒழுக்கநெறியையும் அறநெறியையும் உடைத்துக்கொண்டே வருகின்றன திரைப்படங்களும் அது போன்றவைகளும்.

மக்களின் மனங்களில் ஏற்படும் தவறுகளை போக்க நெறிநூல்கள் முயல்கிறது, மக்களின் தவறான மனஓட்டத்தை ஊக்குவிக்கிறது திரைப்படங்கள். நல்லதை சொல்லும் திரைப்படங்கள் வெறும் 1% தான், அதிலும் 1% தான் வெற்றி பெறுகிறது. எனவே திரைப்படத்தின் தன்மையே இதுதான். இன்னும் சொல்லப்போனால் இன்றைய வியாபாரத்தின் தன்மையே இதுதான். இலாபம் மட்டுமே நோக்கு, நல்லது கெட்டது பற்றி கவலை இல்லை.

உண்மையான இன்பம் இது போன்ற திரைப்படங்களில் அல்லது அது அழைத்துச் செல்லும் அசிங்கங்களில் இல்லை. உண்மையான இன்பம் என்பது

  • சக மனிதனை மதிப்பதில் உள்ளது
  • ஒருவன் ஏமாற்றினாலும் அவனை மன்னிப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உழைப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு தர்மம் செய்வதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உதவி செய்வதில் உள்ளது
  • ஒழுக்கமாக வாழ்வதில் உள்ளது
  • நேர்மையாக வாழ்வதில் உள்ளது
  • விட்டுக்கொடுப்பதில் உள்ளது
  • இறை நேசத்துடன் வாழ்வதில் உள்ளது
  • அறநெறிகளுடன் வாழ்வதில் உள்ளது
  • செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உயர்ந்த கூலி உண்டு என்று அறிவதில் உள்ளது

தனி மனிதனும் சமுதாயமும் தன்னை சீர்படுத்த தவறினால்..! பேரழிவு நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக