தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்

தமிழர் சமயம் 

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439

பதவுரை:
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை.
நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்
நன்றி - நன்மை; உதவி; அறம்.
பயவா - பயக்காத, தாராத, பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
வினை- செயல் 
 
உரை: எந்தக் காலத்திலும் தன்னை வியந்து பாராட்டி நலலவனாகக்கருதி உயர்வாக நினைக்கும் நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும் - [பொருட்பால், அரசியல், வலியறிதல்குறள் 474]

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்

“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)

உரை:  எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிக்கும் பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)

உரை: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).  

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (அடக்கமுடைமை குறள் எண்:123
 
உரை: அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். 

இஸ்லாம் 

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப் படமாட்டார்கள். (குர்ஆன் 4:49) 

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

கிறிஸ்தவம்


ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறவனே நல்லவன். (2 கொரி 10:17-18
 
இயேசு கூறினார் "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே" (மத்தேயு 19:17, மாற்கு 10:18)

கடவுள் பாவிகளின் ஜெபங்களுக்கு அவர்கள் நின்று, ஜெபித்து, தங்களைத் தாழ்த்தும்போது அவர்களுக்குப் பதிலளித்தார். “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ண கோவிலுக்குள் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். "பரிசேயன் நின்று தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தான்: 'கடவுளே, நான் மற்றவர்களைப் போல அல்ல: மோசடி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது இந்த வரி வசூலிப்பவர்களைப் போல இல்லை. 'வாரத்தில் இருமுறை நோன்பு நோற்பேன்; எனக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்.' "ஆனால் வரி வசூலிப்பவர், சிறிது தூரத்தில் நின்று, வானத்தை நோக்கி தனது கண்களை உயர்த்தக்கூட விரும்பவில்லை, ஆனால் கடவுளே, பாவியான என்மீது கருணை காட்டுங்கள்!" என்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் மற்றவனை விட நியாயமானவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார். - (லூக்கா 18:10-14)

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. (1 கொரி 13:4)

இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.  (1 சாமுவேல் 2:3

10 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 165 மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களை கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாக கர்த்தர் தண்டிப்பார்.

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 1619 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

    பதிலளிநீக்கு
  3. நீதிமொழிகள் 129 மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 2124 பெருமைகொண்டவன் மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைக்கிறான். அவன் தனது செயல்கள் மூலம் தீயவன் என்று காட்டுகிறான்.

    பதிலளிநீக்கு
  5. லூக்கா 18:10-14 இல், கடவுள் பாவிகளின் ஜெபங்களுக்கு அவர்கள் நின்று, ஜெபித்து, தங்களைத் தாழ்த்தும்போது அவர்களுக்குப் பதிலளித்தார். “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ண கோவிலுக்குள் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். "பரிசேயன் நின்று தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தான்: 'கடவுளே, நான் மற்றவர்களைப் போல அல்ல: மோசடி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது இந்த வரி வசூலிப்பவர்களைப் போல இல்லை. 'வாரத்தில் இருமுறை நோன்பு நோற்பேன்; எனக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்.' "ஆனால் வரி வசூலிப்பவர், சிறிது தூரத்தில் நின்று, வானத்தை நோக்கி தனது கண்களை உயர்த்தக்கூட விரும்பவில்லை, ஆனால் கடவுளே, பாவியான என்மீது கருணை காட்டுங்கள்!" என்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் மற்றவனை விட நியாயமானவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்.

    https://omstars.com/blog/yoga-philosophy-insight/the-postures-of-prayer/

    பதிலளிநீக்கு
  6. குறள் 978:
    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
    கலைஞர் மு.கருணாநிதி உரை:
    பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
    மு.வரதராசனார் உரை:
    பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  7. குறள் 979:
    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.

    பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

    பதிலளிநீக்கு
  8. உலகோர் ஒவ்வா துஞற்றுவ பொய்யே
    உலகநீதி 206
    தற்புகழ்தல் புறங்கூறன் மிகஇருணம்
    வாங்குதல்பொய்ச் சான்று ரைத்தல்
    பற்பலவாக் கட்சாடை சிரகரகம்
    பிதஞ்செய்து பசுமை பொய்போற்
    பிற்பயன்றோன் றிடச்செய்தன் மெய்யுரைக்க
    வஞ்சிவாய் பேசி டாமல்
    சற்பனையா யிருத்தல்பொய்க் கதைகூறல்
    கேட்டலெலாஞ் சலங்க ளாமோ.

    தன்னையே புகழ்ந்து கொள்ளல், புறஞ் சொல்லுதல், அளவுக்கு மிஞ்சிக் கடன் வாங்குதல், பொய்ச்சான்று கூறல், கண் தலை கை முதலியவற்றால் (ஒப்புக்கொள்ளும் அடையாளமாகிய) சாடை செய்து உண்மையைப் பொய்போல் பயனிலதாக்கல், மெய்சொல்ல அஞ்சி ஊமைபோல் வஞ்சித்திருத்தல், பொய்க்கதை சொல்லல், கேட்டல் இவைகளெல்லாம் பெரும்பழி தரும் பொய்க்குற்றங்களாம்.
    இருணம்-கடன். சற்பனை-வஞ்சனை. சலம்-பொய்.

    https://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=139&pno=101

    பதிலளிநீக்கு
  9. யோபு 40:8 “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா?
    என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்!
    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%2040&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  10. நம்மிடம் பாவம் இல்லை என்று சொன்னால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், உண்மை நம்மில் இல்லை. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்க அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:8-9)

    பதிலளிநீக்கு