கட்டாய மதமாற்றம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பொதுவாக இந்த குற்றச்சாட்டு இஸ்லாமிய கிறிஸ்தவ சமயங்கள் மீதுதான் அதிகமாக உள்ளது. ஆனால் அப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் சொல்கிறதா? என்று அவைகளின் மூல நூலை ஆய்வு செய்வோம்.

மதங்கள் கட்டாய மதமாற்றம் செய்ய சொல்கிறதா?

என் மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மரணம் என்று கிறிஸ்தவம் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அது யூதர்களுக்கு வந்த மதம்.

உபதேசமும் உதவியும் யூதர் அல்லாதவர்களுக்கு செய்ய இயேசு மறுத்து உள்ள பொழுது கிறிஸ்தவம் அப்படி சொல்ல வாய்ப்பே இல்லை.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்!….24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். மத்தேயு 15

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். மத்தேயு 10:5-6

இஸ்லாம் உலகம் முழுமைக்கும் வந்த சமயம் என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் மதம் மாற்ற முகமது நபிக்கே அனுமதி இல்லை.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

எனவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் மற்றவரை கட்டாயப்படுத்துகிறது என்று கூறுவது உண்மை அல்ல.

இந்த மதங்களை சார்ந்தவர்கள் மற்றவர்களை வேறுவகையில் மதம் மாற்றுகிறார்களா?

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மற்றவர்களுக்கு தனது மதத்தை எடுத்து கூறுகிறீர்களா என்று கேட்டால், ஆம் செய்கிறார்கள்! தான் சார்ந்த மதத்தை தத்துவத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா? என்று கேட்டால் இல்லை என்பது தான் அனைத்து சமயங்களும் கூறும் உண்மை.

இது போல போதனை செய்து இந்து மதத்துக்கு மக்களை யாரும் மாற்றவில்லையா என்று கேட்டால் மாற்றுகிறார்கள் எனபதுதான் உண்மை. ஆதாரங்கள் இங்கே: இந்துக்களும் கிறிஸ்தவர்களைப் போன்று தன் மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்!

ஆனால் கிறிஸ்தவ இஸ்லாமிய சமயத்தில் சாமானியர்கள் அல்லது சமய அறிஞர்கள் மக்களை கட்டாயப் படுத்துகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது. இன்று இவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் அரசியல் விளையாட்டுதானே தவிர வேறு இல்லை. போதனையின் மூலம் ஒருவர் விரும்பி ஏற்பதை தடை செய்ய "கட்டாய மத மாற்றம்" என்று திரித்து சொல்லப்படுகிறது. இதன் மூலம் சமய போதனைகளை தடை செய்வதே இவர்களின் நோக்கம்.

சரி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் வேலைகளை யாருமே செய்யவில்லையா? என்று கேட்டால் செய்தார்கள் என்பது உண்மை தான். அவர்கள் நிச்சயமாக பாசிசவாதிகள், தனது சொந்த சமயத்தின் கட்டுப்பாட்டை மீறிய தற்குறிகள். உதாரணமாக,

இஸ்லாத்தின் பெயரில்

  • சிரியாவில் ஆட்சியை பிடித்த ISIS இந்த வேலையை செய்தது (யாசிடி இனப்படுகொலை). ஆனால் இஸ்லாமிய சமூகம் ISIS-க்கு எதிராக பேசிய அளவு பொது சமூகம் கூட பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

கிறிஸ்தவத்தின் பெயரில்,

  • லோரெய்ன், லோயர் ரைன், பவேரியா மற்றும் போஹேமியா, மைன்ஸ் மற்றும் வார்ம்ஸில் சிலுவைப்போர்களால் யூதர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ரைன்லேண்ட் படுகொலைகள், புழுக்கள் படுகொலை (1096) பார்க்கவும்).

இந்து மதத்தின் பெயரில்,

  • சைவ வைணவங்கள் எல்லாம் சனாதன மதத்துக்குள் உள் இழுக்கபப்ட்டு இந்து என்று பெயர் மாறி நிற்கிறது. இதுவும் ஒரு வகை கட்டாய மதமாற்றம் தான். எந்த சைவராவாது தான் இந்துவாக ஒப்புதல் அளித்தாரா? அல்லது அவரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதா? இவைகளுக்குள் நடந்த கருத்து மற்றும் கள யுத்தங்கள் தான் கடந்த 5000 ஆண்டுகால இந்திய நிலத்தின் வரலாறு ஆகும்.

நன்றாக கவனித்தால் கட்டாய மதமாற்றங்கள் எல்லாம் மதம் சார்ந்த அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. அது இந்தியாவிலும் இப்பொழுது நடைபெறுகிறது. ஆனால் வரலாறு இவைகளை பதிந்து வைத்துக்கொண்டே வருகிறது.

கட்டாய மதமாற்றத்தை எந்த சமயமும் அங்கீகரிக்கவில்லை. போதனை செய், விரும்பினால் ஏற்கட்டும் என்றுதான் சொல்கிறது. ஆனால் அதிகாரம் கிடைத்த மமதையில் எல்லா சமய அரசுகளும் தத்தம் சமய போதனைக்கு எதிராக கட்டாய மத மாற்றம் செய்ய துணிகிறார்கள். இதனால் அந்த அரசுக்கோ, அந்த நாட்டுக்கோ, அந்த சமயத்துக்கோ எந்த பிரயோசனமும் இல்லை, மாறாக அழிவுதான் நேரும் என்கிற அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

அரேபிய பாலைவன காட்டு மிராண்டி ஆபிரஹாமிய மதங்களின் கோட்பாடுகள் படி இறைவன் மனிதர்களை படைப்பதற்கு முன் சாத்தானை படைத்தாரா அல்லது சாத்தானை படைத்த பின்பு மனிதனை படைத்தாரா? தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யூத மதம் இல்லாமல் போய் இருந்தால் ஏசுவும் முகமதுவும் ஹிந்து மத கதைகளை காப்பி அடித்து இருப்பார்களா?

இந்துக்கள் ஏன் தங்கள் மதத்தை பரப்பவில்லை?

மதமாற்ற தெரசா எப்படி மதர் தெரசா வாக மாற்றப்பட்டார்?

போலி சாமியார்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன?

கடவுளை நம்பும் மனிதர்கள் ஏன் சாமியார்களை நம்புகிறார்கள்?

ராமாயணத்திலும் மகாபாரத்திலும் வரும் கடவுள்கள் பிறந்த நட்சத்திரங்கள் துல்லியமாக எப்படி கணிக்கப்பட்டன?

சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா?

சிவனைப் பற்றி பலர் அறியாததைப் பற்றி கூற முடியுமா?


ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues)

பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற

ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற

சாத்தானை வழிபடலாமா?

கடவுளை வழிபட்டால் கூட ஒன்றும் விளங்கவில்லை. நான் சாத்தானை வழிபடலாமா? - Quora 

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணம்! உங்களுக்கு கடுமையாக பசிக்கிறது, ஆனால் நீங்களே சமைத்து உண்ணும் நிலை. எனவே மற்றவர்கள் சமைப்பதை பார்த்து நீங்களும் சமைகின்றீர்கள். ஆனால் உங்களுடைய உணவில் ருசியும் பக்குவமும் இல்லை. இப்பொழுது என்ன நினைப்பீர்கள்? சாப்பாடே வேண்டாம் என்று கருதுவீர்களா? சாப்பாட்டுக்கு பதிலாக வேறொன்றை தேர்வு செய்வீர்களா? அல்லது முறையாக சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா?

சமையல் முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்துக்கும் அதற்கு ஏற்ற அளவு முறையாக கற்க வேண்டி உள்ளது என்கிற அடிப்படை அறிவுடைய நமக்கு கடவுளை வணங்கி வழிபட தேவையான கல்வியை கற்கவேண்டும் என்ற அடிப்படை தெரிவதில்லை.

இப்போ நீங்க கேட்ட கேள்வியில் உங்களுக்கு தெளிவு உண்டா என்று பார்ப்போமா?

வழிபடுதல் என்றால் கோவிலுக்கு சென்று வணங்குவதை நீங்க குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உண்மையில் கடவுளை வழிபடுதல் என்றால் என்ன?

வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் (அ) பின்பற்றுதல் என்று பொருள்! கடவுளுக்கு வழிப்பட உங்களுக்கு கடவுளின் அறிவுரைகள் என்னென்ன, நீங்கள் செய்யும் தினசரி விடயங்களில் சரி பிழைகளை கடவுள் எவ்வாறு வரையறுத்து உள்ளார், என்று நீங்கள் கற்று அறிந்து உள்ளீர்களா? கடவுள் நிமிடம் பேசும் முறை மறைநூல்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக உங்கள் வாழ்நாளில் எத்தனை நிமிடம் இதுவரை செலவு செய்து உள்ளீர்கள்?

கடவுள் கூறியுள்ள விதத்தில் நாம் கடவுளை வணங்கினால், நாம் கடவுளுக்கு வழிப்படுவதாக பொருள். ஆனால் இது கடவுளுக்கு வழிப்படுதலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால் விழிப்பது முதல் உறங்குவது வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு கால சூழ்நிலைக்கும் கடவுள் சில விதிகளையும் அறங்களையும் வகுத்து தந்துள்ளார். அதை கற்பதுதான் கல்வி ஆகும். எனவே நீங்கள் கடவுளை எப்படி வழிப்பவேண்டும் என்று விளங்காமல் வழிப்பட்டு உள்ளதால், உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கருதுகிறேன்.

சாத்தானை வழிபடலாமா? என்று கேட்டால், மேற்சொன்ன விடயங்களில் கல்வி இல்லாததால் நீங்கள் ஏற்கனவே நேரடியாக அல்லது மறைமுகமாக சாத்தானை பின்பற்றி கொண்டுதான் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இறைவனை வழிப்படும் பொழுது மன அமைதியும், சாத்தானை பின்பற்றும் பொழுது குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் இருப்பதுதான் இயல்பு.

சுருக்கமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதென்றால் இறைவனை அறிந்து அவனது மறைநூல்களை கற்று அதைக்கொண்டு அவனுக்கு வழிப்பட்டால் உங்களுக்கு மனத் தெளிவும் நிமமதியும் கிடைக்கும்.

மேலும் அறிய வாசிக்க வாய்மை.

சகுனம்

தமிழர் சமயம்

 

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி 

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலங் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே. (தொல்காப்பியம் புறத்திணை இயல் 88)


உவகை: மகிழ்ச்சி
எச்சம்: மிச்சம்
புள்: பறவை
நிமித்தம்: சகுனம், குறி பார்த்தல், சாதகம்
கண்ணிய: நினைத்த, அரும்பு, சுருக்கு, பொறி, சிக்கு  
ஓம்படை (ஓம்பு+அடை=பாதுகாப்பு+சேர்): பாதுகாப்பான இடம் சேர்த்தல் 

விளக்கம்: பயம் விருப்பம் என்பன சிறிதும் இன்றி, நல்ல நாள் கெட்ட நாள், பறவை உள்பட மற்ற சகுனம் பார்ப்பதும், கடுங் காலத்தில் சிக்கியதை நினைத்து பாதுகாப்பான காலம் வருவது பற்றி அறிய விரும்புதல் உள்பட உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பது ஆகியவற்றை அறிய விரும்பினால் முக்காலத்திலும் (இம்மை, பிறப்பு, மறுமை) சிக்கிகொள்வீர்கள். 

இஸ்லாம்

சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (அபூ தாவூத் : 3411)

கிறிஸ்தவம் / யூதம்

எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம். (லேவியராகமம் 19:26)

மதம் மாறுபவர்களை கொலை செய்ய வேண்டுமா?


எளிமையாக தேடி வாசிக்கும் அளவுக்கு குர்ஆன் அனைத்து சமய மக்களிடமும் சென்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே.

ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தோகோடு பிற மதங்களின் / குறிப்பாக தான் வெறுக்கும் சமயத்தின் நூலை வாசித்து நேரத்தை வீணாக்குவதை விட, தான் நம்பும், விரும்பும் சமய நூலை வாசித்தாலாவது அதை ஏற்று நடக்க அவரவருக்கு உதவியாக இருக்கும்.

ஏனென்றால் வேதம் தான் அறம். தத்தமது வேதத்தை ஓதி, உணர்ந்து, பிறருக்கு சொல்லி தானும் அடங்கினால்தான் வீடு பெற முடியும் என்பது நிதர்சனம். எனவே தனது வீடுபேற்றை உறுதி செய்ய உழைத்தல் அவரவர்க்கு நலம் பயக்கும்.

சரி விடயத்துக்கு வருவோம். இப்பொழுது குர்ஆன் வசனம் 4:89 என்ன சொல்கிறது என்பதை அதன் முன் பின் வசனத்தோடு வாசித்தால் ஒருவேளை முழு பொருளை அது கொடுக்கலாம்.

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர். (குர்ஆன் 4:88)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். (குர்ஆன் 4:89)

ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை. (குர்ஆன் 4:90)

முதலில், இது இஸ்லாமிய அரசுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறை, எனவே ஒரு தனி மனிதன் இதை செய்ய அனுமதி இல்லை. 
 
இரண்டாவது, இந்த செய்தியை பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு புரியலாம். இது உள்ளுக்குள்ளே இருந்து நயவஞ்சகமாக செயல்பட்டவர்களைப் பற்றிய செய்தி. மேலும் அவர்கள் வேறு நாட்டவருடன் சேர்ந்து இவர்களுடன் போர் புரியவோ இடையூறு தரவோ திட்டமிடுபவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட சட்டம். 
 
மூன்றாவது, நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி வந்த பிறகு யூதர்களும், கிறிஸ்தவர்களும், சிலையை வாங்குபவர்களும் சம உரிமையோடு அங்கே வாழத்தான் செய்தார்கள். அதற்கு ஆதாரம் உலகில் முதல் முதலில் எழுதப்பட்ட மதீனாவின் அரசியல் அமைப்பு சட்டம்.

நான்காவது, கட்டாயமாக ஒருவரை இஸ்லாத்தை ஏற்க சொல்லுவது நபிக்கே தடை செய்யப்பட்ட ஒன்று என்கிற பொழுது வேறு யார் அதை செய்ய அனுமதி உண்டு?

(நபியே!) மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

என்ன தான் அரசாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்ய சொல்வதெல்லாம் தவறு என்று யாராவது நினைத்தால்.. இந்த கட்டுப்பாடு இல்லாத சமயமே இல்லை எனலாம். ஏனென்றால் அனைத்து சமயமும், மறைநூல்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்துள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது.

தமிழர் சமயம்

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே (திருமந்திரம் 246)

கருத்து: தத்தமது சமயம் கூறும் அறத்தின்படி நடக்காதவருக்கு மறுமையில் சிவனின் ஆகம நூல் நெறியில் சிவன் சொன்னபடியும் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு அவர்களுக்கு இம்மையில் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

குறிப்பு: இதில் கூட சைவ சமயத்தத்தின்படி நடவாதவரை என்று குறிப்பிடப்படவில்லை, தத்தமது சமயத் தகுதி என்கிறது திருமந்திரம். தத்தமது சமயத்தில் ஒருவர் நிற்கவில்லை என்றால் அவர் இறைவனின் வேறொரு சமயத்தை தேர்ந்தெடுத்து அதை பின்பற்றுவதால் என்ன பிழை? தத்தம் சமயம் என்று ஏன் குறிப்பிடுகிறது என்றால், நான்மறையை தாங்கிய உலக சமயங்கள் அனைத்தும் ஏகனிடம் இருந்து வந்தது என்பதால்.

கிறிஸ்தவம் / யூதம்

இறைவன் கொடுத்த நெறியை பின்பற்றாத யூத மக்களுக்கு இறைவன் மோசஸ் மூலம் கொடுத்த தண்டனை என்ன?

19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். …….. 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். 27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்றான். 28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். (யாத்திராகமம் 32:26–28)

முடிவுரை

எனவே ஒரு சமய கட்டமைப்பை ஏற்று அதன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அந்த கட்டமைப்பு தண்டனை வழங்குகிறது. இது வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடு வருபவர்களையும் இந்த கட்டமைப்பை சீகுலைக்கும் எண்ணத்தோடு வருபவர்களையம் எச்சரிக்க இந்த தண்டனைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இது ஏறக்குறைய நம்ம நாட்டில் உள்ள அரசியல் அமைப்பு போல, நம் நாட்டில் இருந்த IPC போல. தேசவிரோத சட்டம் என்று நமது நாட்டு சட்டங்கள் சிலவற்றை சொல்லுகிறதே, இது நியாமா?

இயல்பாக எல்லா கட்டமைப்புக்குள்ளும் இருக்கும் ஒழுங்குகளை அடையாளம் காணாமல் ஒரே ஒரு சமயத்தை மட்டும் குறை கூறுவது என்பது நிச்சயம் அவரது நோக்கம் பிழை என்று உரக்க சொல்கிறது. ஒரு விடயத்தில் விமர்சிக்கும் முன் தனது மதத்தில் இது போன்று விதிமுறைகள் உண்டா என்று சோதித்து அறிவது அவசியம். ஆனால் ஆன்மீகமும், அறநூல் கல்வியும், நேர்மையும் தன்னிடம் உண்டா என்று அவரவர் சொத்து கொள்ளட்டும். அவரவர் கர்மா அவரவர்க்கே.

செய்த உதவியை சொல்லிக்காட்டாதே *

இஸ்லாம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது: ‘மூன்று மனிதர்களிடம் இறைவன் பேசவும் மாட்டான், இன்னும் இறுதிநாளில் அவன் அவர்களை கருணையுடன் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு (திருக்குர்ஆன் 3:77) என்ற வசனத்தை நபி (ஸல்) மூன்று முறை ஓதினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே, நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?’ என அபூதர் (ரலி) கேட்டார்கள். ‘தமது கீழ் ஆடையைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்து விட்டுச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்:முஸ்லிம்)

கிறிஸ்தவம் 

நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். (மத்தேயு 6:1-2)

தமிழர் சமயம்