கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?
"மார்பக வரி" என்பது இப்போது இந்தியாவின் கேரளாவின் ஒரு பகுதியாக இருக்கும் திருவிதாங்கூர் இராச்சியத்தில் நாடார், ஈழவா மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு நம்பூதிரி பிராமணர்களின் வழிகாட்டுதலால் விதிக்கப்பட்ட வரி அல்லது மூலக்கரம் ஆகும்.. உயர்சாதிப் பெண்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 1859 வரை வரி செலுத்தாமல் பொது இடங்களில் தங்கள் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டது
முலக்கரம் என்பது முலைக்கான வரி அல்ல என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க பலர் முயற்சி செய்கிறார்கள். அது உண்மை என்றால் இவர்கள் இவ்வாறு நிற்க வேண்டிய அவசியம் என்ன ?
இந்த வரி "இருந்தது" என்றும் "இருந்ததில்லை" என்றும் கூறும் இரண்டு வகையினர் உண்டு.
மேலே உள்ள படம் 1900 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டு பிட் நதிகள் அருங்காட்சியகம், இங்கிலாந்தில் வைக்கப்பட்டுளள்து. இதன் உண்மைத் தன்மையை கேள்வி கேட்கும் நிலை இருப்பதால், வேறு படங்கள் உண்டா என்று ஆய்வோம்.
இந்த விடயத்தை பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
- இப்படி ஒரு வரி இருந்ததே இல்லை என்கிறது ஒரு தரப்பு.
- இது சாதிய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்தவே உருவாக்கப்பட்டது என்கிறது ஒருதரப்பு. இந்த வரியை நீக்க போராடிய நலங்கிள்ளியின் கதை ஓர் கற்பனை என்கிறது ஒரு தரப்பு.
- எல்லா சாதியினரும் மேலாடையை அணியாமல் இருந்தனர் என்கிறது ஒரு தரப்பு. ஆண்களுக்கு எப்படி மீசைக்கரம் இருந்ததோ அதுபோல முலைக்கரம் இருந்தது. இது பாலின வேறுபாட்டை கூற இவ்வாறு பெயரிடப்பட்டதே தவிர மேலாடை அணிவதற்கான வரி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்கிறது ஒரு தரப்பு.
இந்த கருத்துகளுக்கு எதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடுவோம்.
இந்த விடயத்தில் ஆதாரம் என்றால் என்ன?
- முதலில் இந்த வரி விதித்ததற்கான அல்லது இந்த வரியை நீக்கியதற்கான ஆதாரம் முதல் தரமுடையாது.
- அங்கு அதை எதிர் கொண்ட அல்லது அங்கு வாழ்ந்த பிற மக்கள் எழுதிய நூல்கள் அடுத்த தரமுடையாது.
- அடுத்த தரமுடையது அவர்களின் வழிவந்தவர்கள் கூறும் கருத்து.
கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள்
வரி விதித்ததற்கான ஆதாரம்:
சிலர் 1747 ஆம் ஆண்டு வாக்கில் அன்றைய திருவிதாங்கூர் ராஜாவினால் விதிக்கப்பட்டதாக கூறுகின்றனர் அனால் வரி விதித்ததற்கான ஆவண அல்லது கல்வெட்டு அல்லது பட்டய அல்லது வேறு வகையிலான வலுவான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை.
இப்படி பட்ட வரி ஏற்கப்பட்டு பின்பற்றப் பட்டதென்றால் அக்கால அரசியல் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் முலக்கரத்துடன் தலைக்கரம் மற்றும் மீசைக்கரம் உள்ளிட்டவைகள் இருந்ததால் அன்று அந்த மக்கள் முழு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்தது உணரமுடிகிறது. எனவே மூலக்கர வரி விதித்ததற்கான ஆதாரம் கிடைக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
கிபி 900 ஆண்டுகளில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நம்பூதிரி பிராமணர்களின் ஆணாதிக்க சமூகத்தில் 1200 களில் இருந்து அனைத்து பெண்களும் மேலாடை அணியாத பழக்கம் இருந்து வந்ததால் புதிதாக வரி போடப்படுவது அதன் வீரியத்துக்கு ஏற்ற அளவிலான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கமுடியாது.
வரியை நீக்கியதற்கான ஆதாரம்:
- சிலர், முலகரம் வரியை நீக்கியது திப்பு சுல்த்தான் என்று கூறுவார் -அதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவரின் காலமான 1799 க்கு பிறகும் அது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஒருவேளை அவர் முயற்சித்து இருக்கலாம்.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மற்றும் தெற்கின் முசல்மான் சக்திகளுடனான போராட்டம் (1893) என்ற புத்தகத்தில் இதை எழுதுகிறார்: "... மேற்குக் கடற்கரை, முந்தைய காலங்களில் தங்களை விட உயர்ந்த சாதி மக்கள் முன்னிலையில் கீழ் சாதியைச் சேர்ந்த பெண்கள் உடலின் மேற்பகுதியை மறைக்க தடை விதிக்கப்பட்டது. அத்தங்கடி ராணி இந்த சட்டத்தை மீறிய ஒரு பெண்ணின் மார்பகங்களை துண்டிக்க உத்தரவிட்டார். இந்த நடைமுறையை நிறுத்தும் அரசாணையை திப்பு இயற்றியதாக பௌரிங் கூறுகிறார்.
- சிலர் ஆங்கிலேயர்கள் என்றும் கூறுகின்றனர்
1858 இல், திருவிதாங்கூரில் பல இடங்களில் புதிய வன்முறை வெடித்தது. 1859 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி, சென்னை கவர்னர் சார்லஸ் ட்ரெவல்யனின் அழுத்தத்தின் பேரில், திருவிதாங்கூர் அரசர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார், அனைத்து நாடார் பெண்களும் கிறிஸ்தவ நாடார்களைப் போல ஜாக்கெட் அணிந்து அல்லது கரடுமுரடான துணியால் தங்கள் மார்பகங்களை மறைக்க உரிமை உண்டு. அவர்களின் மேல்-உடல், முக்காவட்டிகள் (மீனவர்-பெண்கள்) போன்றது. ஆயினும்கூட உயர்தர நாயர் பெண்களின் பாணியில் அவர்கள் மார்பகங்களை மறைக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
- இலங்கைக்கு சென்று கிறிஸ்தவத்தை ஏற்றத்தாலும், பொதுவுடைமை தத்துவம் பரவியதாலும் இதற்கு எதிராக பெண்கள் போராட துவங்கினர் என்று சில கருத்துக்களும் உண்டு.
இப்படி 1780, 1813, 1814, 1859, 1891 என பல்வேறு ஆண்டுகளில் இதற்கு எதிரான போராட்டங்களும், இதை தடைசெய்து சட்டங்களும் வந்து கொண்டு இருந்தது அனால் ஆணாதிக்க சமூகமான நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் இருந்த திருவிதாங்கூரில் இதை முற்றிலும் துடைத்தெறிய 1900 களின் தொடக்கத்தில் அவள் அவளின் மார்பை அறுத்து எரிய வேண்டி இருந்தது. அவள் பெயர் நலங்கிள்ளி ஆகும்.
இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் இதை பிபிசி களஆய்வு செய்தது.
BBC இன் கள ஆய்வு
நங்கேலியின் கதை அதிகம் அறியப்படாததால் வருத்தப்படுவதாக அவரது உறவினரின் கொள்ளுப் பேரன் மணியன் வேலு கூறுகிறார்.
"அவரது செயல் தன்னலமற்றது, திருவிதாங்கூர் பெண்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் தியாகம், இறுதியில் ராஜா மார்பக வரியை திரும்பப்பெறும்படி கட்டாயப்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்.
முதியவர், மணியனுக்கு சொந்தமாக நிலம் இல்லை, அவருடைய குழந்தைகள் விவசாயக் கூலிகளாக வேலை செய்கின்றனர். ஆனால் அவர் தொண்டுக்காக அல்ல, சில அங்கீகாரங்களை மட்டுமே தேடுகிறார்.
ஆனால் இவரின் கதையே கற்பனை எனவே வரியும் கற்பனை என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சமீப காலத்தில் தொடந்து பேசி வருகின்றனர்.
வரி இருந்ததற்கான ஆதாரம்:
- Travancore Tribes And Castes Vol. 1 by Iyer, L. A. Krishna 1937
Around 1747, Mulakkaram, or the "breast tax," was a levy imposed on lower-caste women in the Kingdom of Travancore, now part of Kerala, India. Women from the Ezhava, Nadar, and other lower-caste communities had to pay this tax to cover their breasts. The tax was often determined by the size of the woman's breasts, reflecting the caste system's control over social customs and economic obligations. Men faced a similar tax called Thalakkaram, or "head tax." These taxes upheld the caste hierarchy by making clothing a sign of wealth and status. Only upper-caste women could cover their torsos without penalty. Failure to pay the tax resulted in severe punishments, including public beatings. Combined with other taxes, the breast tax left lower-caste people with barely enough food to survive.
One of the most tragic stories related to the breast tax is that of Nangeli, a Dalit woman from the Ezhava community. In defiance of the oppressive tax, Nangeli made a bold protest. When tax collectors came to her door, she cut off her breasts and presented them on a plantain leaf. This act of self-mutilation symbolised her rejection of the caste-based exploitation. Nangeli died from excessive bleeding, and her husband, devastated by her death, performed Sati by jumping into her funeral pyre.
The news of Nangeli’s protest reached the Royal Court, causing an uproar. The king, confronted with the public outrage, was forced to abolish the breast tax. This marked a significant moment in the fight against caste-based oppression in Travancore. The place where Nangeli died is now known as "Mulachiparambu," or "the breast woman’s plot," in honour of her sacrifice. Nangeli’s legacy lives on, symbolising the struggle against caste discrimination and the fight for dignity and equality for all, regardless of caste or gender.
Source : Travancore Tribes & Caste (1937) by LA Krishna Iyer, The Print.
இதில் திரு கிருஷ்ணன் அய்யர் அவரின் கருத்துக்கு மூலமாக காட்டுவது 1883 இல் எழுதப்பட்ட நூல் ஆகும்.
பெண்களுக்கு மட்டும் சில வரிகள் இருந்தன. மிகவும் மோசமான வரிகளில் ஒன்று மூலக்கரம் அல்லது மார்பக வரி, இது பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பதால் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. ஆலப்புழாவேலாயுத பணிக்கர் மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் முக்குத்தி அல்லது மூக்குத்தியை ஆபரணங்களாக அணியும் கீழ் சாதியினரின் உரிமைக்காக கூட பாடுபட்டனர். விஷயம் என்னவென்றால், இது உயர் சாதியினரின் அடையாளமாக கருதப்பட்டது மற்றும் உயர் சாதி பெண்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய உரிமை உண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்லால் செய்யப்பட்ட ஆபரணங்களை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டனர். இது கல்லுமலைப் போராட்டம் அல்லது பெரிநாடு போராட்டம் எனப் பெயரிடப்பட்ட மிக சக்திவாய்ந்த போராட்டங்களில் ஒன்றிற்குக் கூட வழிவகுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரிநாட்டில் நடந்தது.
முடிவுரை:
வெவ்வேறு கருத்துடைய எல்லோரும் ஏதோ ஒரு ஆதாரம் காட்டும் அளவில் இருக்கக்கூடிய இந்த விடயத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு கோணம் உள்ளது. ஆணாதிக்க சமூகமான நம்பூதிரிகள் கிபி 900 ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் ஆதிக்கம் செய்ய தொடங்கினர்.
1287 இல் மார்கோ போலோ வந்த பொழுது மேலாடை அணியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1600 களில் வந்த இந்தாலியா பயனி Pietro della Valle வந்த காலத்திலும் அரச பெண்கள் உட்பட அனைவரும் மேலாடை அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தரவுகளின்படி கேரளாவில் மேலாடை அணியா நிலை ஏறக்குறைய 600 வருடம் இருந்து வந்துள்ளது.
ஆனால் முலக்கர வரி 1747 முதல் 1859 வரை, ஏறக்குறைய 100 வருடங்களுக்கு மேல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அப்பயணிகளின் நூலை முலக்கர வரி இல்லை என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
எனவே பிபிசி இன் கள ஆய்வை கொண்டும், இணைக்க பட்ட படங்களை கொண்டும், மற்ற நூல்களை கொண்டும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக இந்த வரி இருந்தது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன் கேரளாவில் நம்பூதரிகளின் வரலாறு ஏறக்குறைய 1000 ஆண்டுகள், அதில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தது ஏறக்குறைய 600 ஆண்டுகள், அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வரி போடப்பட்டது ஏறக்குறைய 100 ஆண்டுகள், அதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது ஏறக்குறைய 50 ஆண்டுகள்.
இத்தனை தரவுகளை மறைத்து பொய் என்று கூறுவோரின் உள்நோக்கம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று, மேலும் அவர்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.