கடவுளை வாசித்து அறிதல்

 தமிழர் சமயம்

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே (திருமந்திரம் 1:128)

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தோடின. உயிர்த் தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

குறிப்பு: இறைவனை அறிய முயற்சி செய்ய வேண்டும் என்று இந்த பாடல் கூறுகிறது. 

 கிறிஸ்தவம் / யூதம் 

கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும் (நீதிமொழிகள் 9:10

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பதுபெயர்கள் உள்ளன. அவற்றை பொருள் அறிந்து (அந்த பண்புப் பெயர்கள் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். (புகாரீ 2736)

 நபி(ஸல்)அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக இறங்கிய அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய தெய்வம் இல்லை என்பதற்கு அல்லாஹ் (அவனே) சாட்சியாக இருக்கிறான், மேலும் வானவர்களும், கற்றறிந்தவர்களும் சாட்சிகளாக உள்ளனர். இதற்கு). அவனுடைய படைப்பை நியாயமாகப் பராமரித்தால், எல்லாம் வல்ல, ஞானமுள்ள அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. [3:18]

அறிந்தவர்கள் அறியாதவர்களுடன் சமமா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” . [39:9] 

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (35:28)

 மேலும் இந்த உருவகங்களை நாம் மனித குலத்திற்காக உருவாக்குகிறோம், ஆனால் அறிவுடையவர்களைத் தவிர யாரும் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” [29.43]

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தை பற்றிய புரிதலை வழங்குகிறான்." [புகாரி & முஸ்லிம்).

எனவே அல்லாஹ்வை பற்றி அறிவை ஆங்காங்கே குர்ஆன் புகட்டுவதோடு அல்லாஹ்வை அறிந்தவர்களின் பண்புகளையும் எடுத்து கூறுகிறது. 

முடிவுரை

கடவுளை அறியவேண்டும் என்பதை சமயங்கள் வேறுவேறு கோணத்தில் சொல்கிறது தவிர, கடவுளின் பண்புகளை அறிவதை அனைத்து மதங்களும் கட்டயப்படுத்துகிறது.

காரணம், கடவுள் யார்? அவனது பெயர் என்ன? அவனது பண்புகள் என்ன? அவன் எதை செய்கிறான்? எப்படி செய்கிறான்? ஏன் செய்கிறான்? போன்ற அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, கடவுள் அல்லாதவர்களை வணங்கும் மோசமான நிலையிலிருந்து பாதுகாக்கப் படுவோம். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக