வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

தமிழர் சமயம்

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌

காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌

பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌

கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)


விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 

இஸ்லாம் 

“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29

யூதம் / கிறித்தவம் 

இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)

2 கருத்துகள்:

  1. உங்களில் ஒருவனுக்கு ஞானம் இல்லாதிருந்தால், நிந்தனையின்றி எல்லாருக்கும் தாராளமாய்க் கொடுக்கிற தேவனிடத்தில் கேட்கக்கடவன், அது அவனுக்குக் கொடுக்கப்படும். ஜேம்ஸ் 1:15

    “ஞானமுள்ள மகன் தன் தந்தையின் அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறான்; (நீதிமொழிகள் 13:1)

    ஆதலால், உமது மக்களை ஆளவும், நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கவும் உமது அடியேனுக்கு பகுத்தறியும் உள்ளத்தைக் கொடு. உன்னுடைய இந்த மகத்தான மக்களை யார் ஆள முடியும்? 1 இராஜாக்கள் 3:9

    பதிலளிநீக்கு
  2. 12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
    நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
    13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
    பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
    14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
    கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
    15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
    ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
    16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
    நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
    17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
    பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
    18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
    சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
    19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
    தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.

    20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
    எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
    21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
    வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
    22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
    நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.

    23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
    தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
    24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
    வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
    25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
    கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
    26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
    இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
    27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
    ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
    28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
    அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%2028&version=ERV-TA

    பதிலளிநீக்கு