எது உண்மையாக இறைவனின் மதம், சமயம் [அ] மார்க்கம் !


மதங்கள் இரண்டு வகை வகைப்படும் 

  • உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
  • பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது. 
"கறைபடா" என்றால், அது எவ்வாறு வழங்கப் பட்டதோ அவ்வாறே இன்றுவரை மாறாது முதல் நூலுக்கான அல்லது வழிநூலுக்கான இலக்கணத்தோடு இருத்தல் என்று பொருள். 
 
"முடிவுறா" என்றால், இன்றும் அது நடைமுறைப் படுத்த வேண்டிய சட்டமாக இருத்தல் என்று பொருள். அதாவது அதற்குப் பிறகு எந்த வழிநூலும் வழங்கப் படவில்லை என்றும், அந்த சொற்களில் திரிபு ஏதும் ஏற்படுத்தவில்லை என்றும் பொருள். 
 
"கறைபட்ட" என்றால், அதில் புது செய்திகள் உரிமையில்லா ஆசிரியர் மூலம் இணைக்கப்பட்டோ, நீக்கப்பட்டோ இருத்தல் என்று பொருள். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நபர்தான் அந்த குறிப்பிட்ட மறைநூலில் சேர்க்கவோ நீக்கவோ உரிமையுள்ளவர். 
 
"முடிவுற்ற" என்றால், அந்த நூல் பல காரணங்களளால் ஓதி உணர தகுதியற்றதாக மாறியிருப்பதாகும். பொருள் திரிதல், மறுவுதல், பாரம்பரியமாக கற்றுத்தரும் ஆசிரியர் அற்றுப் போதல், அதன் அடுத்த வழி நூல் தோன்றி இருத்தல் போன்றவைகள் சில காரணங்களாம். முடிவுற்ற மறைநூல்களிலேயே மக்களால் கறைபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். 
 
"மனிதன் எழுதிய" மறைநூல் என்றால், பல்வேறு மொழியில் உள்ள வேதங்களை கற்று, தனது மொழி அறிவைக்கொண்டு நூல் ஒன்றை எழுதி அதை இறைவனிடமிருந்து வந்ததாக அல்லது புனிதமானதாக கூறி ஒரு சமயத்தை துவங்குவது. 
 
ஒரு நூலின் தன்மையை மறைநூல்களின் வரையறையினையோடு ஒப்பிட்டு அதன் முழு வடிவமைப்பை ஆய்வு செய்யும் பொழுதும், அந்த நூலை எழுதிய குருவின் தன்மையை ஆய்வு செய்யும் பொழுதும் உண்மை சமயம் எது? பொய் சமயம் எது? என்று கண்டறியலாம்.

இறைவனின் ஒவ்வொரு நூலும் அது பேசும் சமயம் தான் உண்மை மார்க்கம் என்று கூறுவதை பார்க்கலாம். உதாரணங்கள்,

தமிழர் சமயம்


சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

பொருள்: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள். 
 
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (திருமந்திரம்: 38) 
 

இஸ்லாம்


‘….இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (குர்ஆன் 5:3
 
‘...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (குர்ஆன் 3:19) 
 
‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85) 

கிறிஸ்தவம்

அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம். - (யோவான் 17:17)

முடிவுரை

உண்மை மதமும் இறைவனும் உண்மை குரு மூலம் வழங்கப்பட்ட உண்மை மறைநூல் வழியாகவே அறியப் படுகின்றனர். அந்த வழிமுறை வேதங்கள் தலைப்பில் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.  

நம்பிய பின் சந்தேகம்?

தமிழர் சமயம் 


“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”  (குறள் 510)

பொருள்: ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.

இஸ்லாம் 

நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி (நிராகரிப்பாளர்களாகி) விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (குர்ஆன் 3:106)

அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக! சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள். [ஸூரதுத் தவ்பா 65-66] 


கிறிஸ்தவம் 

அவர்கள் கன்மலையின்மேல் இருக்கிறார்கள், அவர்கள் கேட்கும்போது, ​​மகிழ்ச்சியுடன் வார்த்தையைப் பெறுகிறார்கள்; மேலும் இவைகளுக்கு வேர்கள் இல்லை, அவை சில காலம் நம்பி, சோதனையின் போது மறைந்துவிடும். - (லூக்கா 8:13)

இயேசு தம்முடைய சீஷர்களிடம், “மக்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கச் செய்யும் சூழ்நிலைகள் நிச்சயமாக எழும். ஆனால், ஒருவரை தன் நம்பிக்கையை இழக்கச் செய்பவருக்கு அது எவ்வளவு கொடுமையாக இருக்கும்!   இந்தச் சிறியவர்களில் ஒருவன் தன் விசுவாசத்தை இழக்கச் செய்வதைவிட அவன் கழுத்தில் பெரிய கல்லைத் தொங்கவிட்டுக் கடலில் தள்ளப்படுவதே சிறந்தது. எனவே உங்களைக் கவனியுங்கள்! - (லூக்கா 17-1)

கெட்ட வார்த்தை

கிறிஸ்தவம் 

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/1102017571

__________________________________________

இஸ்லாம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ர­)
நூல் : திர்மிதி (1950)

கவலை நீங்க ஒரே வழி

தமிழர் சமயம்


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. (1:1:07)


விளக்கவுரை தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது. 

குர்ஆன்

 யார் என் நினைவூட்டலைப் புறக்கணிப்பாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்வுதான் உண்டு. (அல்குர்ஆன் 20:124) 

 நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க!அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன' - (குர்ஆன் 13:28) 

பைபிள்

 உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து. அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. - (சங்கீதம் 119:111)

உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.  (சங்கீதம் 70:4)

“தன்னைப் பிரியப்படுத்துபவனுக்கு, கடவுள் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் தருகிறார்..." - (பிரசங்கி 2:26) 

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும் பாவிகளைப்போன்று வாழாமலும் தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும் இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். - (சங்கீதம்1)  

பகவத் கீதை


ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)

முடிவுரை

பயபக்தியுடன் படைத்த அந்த ஆதிநாதனை வணங்கி வழிபடுவதால் மட்டும்தான் உலக வாழ்வின் பிரதான நோக்கமான அமைதி கிட்டும். அது அல்லாமல் செல்வம், கேளிக்கை, மது, மாது பிள்ளைச்செல்வம் போன்ற எதுவும் நிம்மதிக்கு வழிவகுக்காது.  



எப்பொழுது பொய் சொல்லலாம்?

தமிழர் சமயம் 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (குறள் - 292)

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும் 

இஸ்லாம் 

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ  அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். நூல்: முஸ்லிம் 5079