ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். (கீதை 2:48)
ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். (கீதை 2:49)
அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. (கீதை 2:50)
செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். (கீதை 2:51)
தமிழர் சமயம்
கருத்துரை: நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.
இஸ்லாம்
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)
கிறிஸ்தவம்
“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. - (மத்தேயு 6:6)
மத்தேயு 16:23
பதிலளிநீக்குஇயேசு அதற்குப் பேதுருவிடம்,, “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.