முதலாவது வாசகம் வேதங்களை முற்றிலுமாக பொய் என்று மறுக்கும் அளவுக்கு வன்மையான வாசகம், ஆனால் இதற்கான வாய்ப்பு மிக குறைவு ஏனெனில் ஒவ்வொரு வேதமும் அதற்கே உரிய சிறப்புகளுடன் அது இறைவேதம்தான் என்று உறுதி படுத்தும் ஆச்சரியங்களை கொண்டு இருக்கும். அறிவியல் தத்துவம், வாழ்கை தத்துவம், பொருளாதாரம், காதல் மற்றும் அந்த அந்த கால, சமுதாய மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற சட்ட திட்டங்காளை கொண்டு இருக்கும். அவற்றில் சில இன்றளவும் அறிவியலாலோ மற்ற சில கோணத்தில் நோக்கும் போது விடை புரியா வினோதங்களாக இருக்கும். இந்த இறை வேதங்கள் மக்களுக்கு தூதர் / ரிஷி / அவதாரம் மூலமாக அளிக்கப் பட்டு வந்து இருக்கிறது.
வேத புத்தகங்களை வெறுமனே பிதற்றலாக எண்ணிவிடாமல், அதை அறியும் ஆவல் கொண்டு அதை படிப்பவர்களுக்கு தெரியும் அது கொண்டுள்ள அறிய மற்றும் ஆச்சரிய தகவல்கள்.
இதில் விஷயம் என்னவென்றால், மனிதனுக்கே உள்ள பெருமை குணம், (அனைத்து வேதங்களும் தத்துவங்களும் கண்டிக்கின்ற குணம்) என் வேதம் தான் பெரிது அதில் இல்லாதாவைகளே இல்லை என்று அது உண்மையில் போதிப்பது என்ன என்று அறியாத நிலையில் பெருமை கொண்டு மற்றவைகளை கீழ்தரமாகவோ அல்லது மருத்து பேச வைக்கிறது.
உண்மையை அறிந்தவர்களாக இருப்போமானால் வேதம் அதற்கு உரிய அனைத்து அத்தாட்சிகளையும் கொண்டுஇருக்குமானால் அது கண்டிப்பாக இறைவனிடத்தில் இருந்து வந்ததுதான் என்று விளங்கும்.
இறைவன் கொடுத்த ஓரு வேதத்தை கொண்டாடுவதும் மற்றொன்றை இழிவு படுத்துவதும் / மறுப்பதும் எந்தவகையில் அறிவுபூர்வமான செயல் என்று எனக்கு தெரிய வில்லை.
சரி ஒன்றுக்கொன்று முரண்பாடுகளை கொண்ட வேதங்களில் எதனை பின்பற்றுவது? அதற்கான பதிலும் இறைவன் வேதங்களில் கொடுத்துள்ளான்.
எப்படி மௌரியர் கால சட்டம் முகலாயர் காலத்திற்கு பொருந்தாதோ, எப்படி முகலாயர்கள் கால சட்டம் ஆங்கிலேய இந்தியாவுக்கு பொருந்தாதோ, எப்படி ஆங்கிலேய இந்திய சட்டம் சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தாதோ அதேபோல் வேத சட்டங்கள் அந்தந்த கால கட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் வழங்கப்பட்டது ஆகும்.
இன்னும் சுதந்திர இந்தியாவில் திருத்தப்பட்ட சட்டங்கள் பல உள்ளன, திருத்தப்பட்ட சட்டத்தை விட முந்தய சட்டம் தான் எனக்கு பிடித்து இருக்கிறது அதனயே நான் பின்பற்றுவேன் என்று நாம் சொல்லலாம், ஆனால் சட்டத்தை வகுத்து பாதுகாப்பவர்கள் பார்வையில் பழய சட்டம், செல்லாக் காசு மேலும் நீதி, திருத்தப் பட்ட சட்டத்தினைக் கொண்டே வழங்கப்படும். அதே போல் காலத்திற்கு ஏற்ப வேத சட்டங்களை கொடுக்கும் இறைவன் பார்வையில் எது திருத்தப் பட்ட அல்லது தற்போதய நடைமுறயில் உள்ள வேதம் என்று சிந்தித்து படித்து இல்லயேல் கேட்டாவது தெரிந்து கொள்வது நாம் கடமை ஆகும்.
எடுத்து காட்டாக முன்பெல்லாம் தங்கம் 5 கிலோ வரை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர சட்டம் அணுமதித்தது, இப்பொழுதோ நிலைமை அப்படி இல்லை. ஒருவேளை 5 கிலோ தங்கத்தை எடுத்து வருவீர்கள் ஆனால் பிடிபடுவீர்கள், அப்பொழுது நான் போன முறை எடுத்து வந்தேன் சட்டத்தில் வழி இருக்கிறது என்று சொல்வோமானால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்? சட்டம் மாட்ட்றப்பட்டுவிட்டது அது செய்தி தாள்களிலும் வெளியிடப் பட்டுவிட்டது, தெரிந்து கொள்வது உமது கடமை என்று சொல்வார்களா இல்லை, ஹோ உங்களுக்கு தெரியாதா, சரி நீங்கள் எடுத்து செல்லுங்கள் உங்கள் தங்கத்தை என்று சொல்வார்களா?
அதே போல் வேதத்தில் இறைவன் தெளிவான சட்டங்களையும் இது அவனது வேதம் தான் என்பதற்கான அறிகுறிகளயும் வைத்து இருக்கின்றான். தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. அனைத்து வேதங்களையும் படித்து எது உண்மை என்று அறிந்து கொள்ள முற்படுவது கொஞ்சம் கடினம்தான், எனவே இறைவன் அதர்கான அறிவையும் வாய்ப்பையும் சிலருக்கு கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக அதற்கென அற்பனித்து தங்கள் ஆராய்ச்சியினை உலகுக்கு தெரிய படுத்துகிறார்கள். அவர்கள் குறைந்தது 2 வேதமாவது முழுவதும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
அந்த அறிஞர்களின் ஆராச்சி படி புனித குர்ஆன் கடைசி வேதம் மேலும் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டி. மரியாதைக்கு உரிய திரு முகம்மது ஸல் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் / ரிஷி / அவதாரம்.
இறைவன் என்பவன் யார் என்பதை நாம் சரியாக விளங்கி இருப்போமானால், அவன் இந்த உலகத்தின் ஆதி மூலம், பர பிரம்மம், கர்த்தர், அல்லாஹ் அனைத்தயும் படைத்தவன் அவனே என்பது புரியும். என்றால் இதில் எங்கிருந்து பிராமினுக்கு ஒரு கடவுளும் தாழ்த்த பட்டவனுக்கு ஒரு கடவுளும் இஸ்ரேலுக்கு ஒரு கடவுளும் சீனர்களுக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும். இறைவன் ஒருவனே அவன் எங்கிருந்து வேண்டுமானாலும் அவனது கட்டளைகளை அனுப்புவான் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்வோம்.
ஒரு இஸ்லாமியனாக இருக்க சில அடிப்பதை தகுதிகள் இருக்கிறது.
- அவன் இறைவன் ஒருவனே என்ற உண்மையை நம்ப வேண்டும், முகம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதை நம்ப வேண்டும். மட்டுமல்ல,
- அனைத்து தூதர் / ரிஷி / அவதாரங்களையும் நம்புவானாக இருக்க வேண்டும்
- அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும்
நாம் அறிந்த மொழி, அறிவியல், தத்துவம், சட்டம் மற்றும் அனைத்தும் உள்பட இறைவன் நமக்கு கற்று கொடுத்ததே அன்றி வேறில்லை என்பவைகள்.