புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? | 147 |
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் | 148 |
புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? | 147 |
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் | 148 |
"ஹிந்து" என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் தான் "இந்து மதத்தில் பசு மாமிசம் உண்ண அனுமதி உண்டா?" என்ற கேள்விக்கான பதில்.
இந்து என்பது சமயத்தின் பெயரா? அல்லது பூகோள பெயரா?
பூகோள பெயரென்றால், நிச்சயமாக மக்களிடையே சமயங்கள் வேறுபடும், எனவே அதன் பண்பாடும் வேறுபடும். எனவே அதில் சிலர் பசு மாமிசம் உண்ணுவதில் ஆச்சரியம் இல்லை. அது அவர்களது பண்பாடு!
மேற்கண்ட தகவலின் படி ஹிந்து என்பது பூகோலப்பெயர். அதாவது சிந்துநதியை சுற்றி இருந்த மக்கள் என்று பெயர். இது பூகோலப் பெயர் என்றால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல.
ஹிந்து என்பது ஒரு சமயத்தின் பெயரென்றால், அது ஒரு பாரம்பரித்துடன் இருக்கவேண்டும். தொல்காப்பிய முதல்நூல் வழிநூல் தத்துவம் உலக சமயம் அனைத்துக்கும் பொருந்தும். இதை உறுதிப்படுத்த, ரிக்வேதம் 350 ரிஷிகளாலாலும், எழுதப்பட்டது, பைபிள் 40 தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளது, தமிழர் நூலான புறநானூறு கிட்டத்தட்ட 150 புலவர்களாலும், அகநானூறு 146 புலவர்களாலும், நற்றிணை 175 புலவர்களாலும், குறுந்தொகை 206 புலவர்களாலும், ஐங்குறுநூறு ஐவராலும், பாத்திற்றுப்பத்து எட்டு பேராலும், கலித்தொகை ஐவராலும் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும். ஒரு நூலை பலர் எழுதுவது எப்படி சாத்தியமானது? யார் வேண்டுமானாலும் இப்படி ஒருநூலில் பாடலை இணைத்துவிட முடியுமா? இல்லை. அதுதான் பாரம்பரியம். பின்னாளில் வரும் ஆசிரியரை பற்றி தீர்க்க தரிசனம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த செய்திகளை ரிக் வேதத்திலும், அவ்வையாரின் நல்வழியிலும், பைபிளிலும் காண முடியும். இது ஒரு நீண்ட தலைப்பு.
எனவே இந்து என்கிற சமயம் எங்கே? யாரால்? பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வந்தது என்கிற தரவுகள் உள்ளது என்று ஆராய்ந்தால் அதன் மொழியும் நமக்கு சொல்வது தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்று. எனவே தமிழர்கள் பசுமாமிசம் உண்ணக் கூடாதென்று இல்லை. தமிழர்களைப் போல இந்து பாரம்பரியத்தை சாராத யாரும் பசுமாமிசம் உண்ணகூடாதென்று இல்லை.
சரி, இப்போ உண்மையில் இந்துக்கள் பசுமாமிசம் சாப்பிடக் கூடாதா? wiki
1) பசுவைக் கொல்லும் போது,”ஹோதா” என்ற புரோகிதர், ‘அத் ரிகோ சமீத்வம் ஸுசமி சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரிகாஉர் இதித்ரிப் ரூயத்’ என்று சொல்ல வேண்டும். - நூல் : ஐதரேய பிராஹ்மனம் - (பஞ்சிகா2, கண்டம் 7)
பொருள் : ‘நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே! என்று கூறியவாறு பசுவைக் கொல்ல வேண்டும்.
2) பசுவைக் கொல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: அதாஸ்யா பிராணன் விஸ்ரம் ஸமானா நனுமந்த்ரயதே ஹே புருஷ்ய்ய ஸயாவரீ ராஜகவீ தவப்ராணம் சிதிலம் க்ருத வானஸ்மி பித்ருன் உபேஹி அஸ்மின் லோககே ப்ரஜா புத்திராதிகயா ஹைஷேமம் பிராய - நூல்: தைத்ரீய ஆரண்யகம் (அத்தியாயம் 6, கல்பசூத்திரம்)
பொருள் : பசுவை கொல்லும் போது சொல்ல வேண்டியது: ‘ஓ புரு ஷனுக்குரிய ஸயாவரியே! பசுமாடு களுக்கு தலைவி (ராஜகவீ)யே நான் உனது உயிரை வாங்குகின்றேன், நீ உனது மூதாதை (பித்ருக்)களை அடையக் கடவாய். இந்த உலகில் உனது சந்ததிகளுக்கு நலத்தைக் கொடுப்பாயாகபசுவும், காளையும் புனித விலங்கு கள். எனவே அவைகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். - நூல் : ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (1:5, 14:29)
3) ‘தேன் வனடு ஹெளபஷ்யம்’
4) சணல் இட மருகு வேதங்கள் ஓர் ஆய்வு (பக்கம்79) வேள்விக்கு படைக்கப்பட்டது. மந்திரப்பூர்வமாய் கொல்லப்பட்டது. விதிப்படி வரிக்கப் பட்டது. ஆசார்யனால் பணிக்கப் பட்டது. ஆகிய புலால் உணவை பிராமணன் உண்ணலாம். அந்த உணவு இல்லையெனில், தன்னுயிர் போகும் என்ற போதும் புலால் உண்ணலாம். ”உண்ணமாட்டேன்!” என்று மறுப்பது தான் பெரும் பாவம்! - நூல் : மனு தர்மம் (பக்கம் 100,101)
5) சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப் பட்டது. விஜனணானவன் தோஷமென்று மாம்ஸத்தைப் புசியாவிட் டால், அவர் 21 பிறவி (ஜென்மம்) பசுவாய் பிறப்பான். - நூல் : மனுஸ் மிருதி (அத்தியாயம் 43 சுலோகம் 35)
6) பசுவைக் கொன்று அந்த கொழுப்பை எடுத்து யாகம் (ஹோமம்) செய்ய வேண்டும். - (அஷ்டகாவிதானம் 1:24,26)
7) எந்தப் பசு கொல்லப்பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிரா மணர்களுக்கு படைக்க வேண்டும். - நூல் : ஆஸ்வலாயண க்ருஷ்ய சூத்ரம் (2,5,27)
8) விருந்தினர் உபசரிப்பில் மது, மாமிசம், இல்லாமல் (பசு அல்லது எருதின் இறைச்சி இன்றி) நடத்தக் கூடாது. - நூல் : மாதவ க்ருஹ்ய சூத்திரம் 1,9,200
9) ‘காளையின் இறைச்சி விருந்தினர் உபசாரத்திற்கு உகந்தது’ என வாஜஸ நேயன் கூறுகின்றார். நூல் : வேதங்கள் ஓர் ஆய்வு பக்கம்90திவோதாசன் என்னும் பாரத மரபின் வேந்தன் பல நூறு காளை களைக் கொன்று விருந்தளித்ததினால் பெருமையுடையவனாய்த் தன்னை அதிதிக்வா எனக் கூறிக் கொண்டான். - அறிவிப்பவர் : சி.ஸா.ஸ்ரீ நிவாசாச்சாரியார். நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம்: பக்கம்43)
10) மாமிசத்தோடு மதுவும் கொடுக்க வேண்டும் என்ற தேவதிதியை அனு சரித்து வேத மறிந்த விருந் தாளிக்கு ஒரு பசுங்கன்றையோ, காளை மாட் டையோ, வெள்ளாட் டையோ வீட்டில் உள்ளவர்கள் பலி கொடுக்கிறார்கள். அதுதான் தர்மம் என்று தர்ம சூத்திரங்கள் கூறுகின்றன. - அறிவிப்பவர் : ராஜாஜி நூல் : உத்தாராம சரிதம்
11) சர்மண்வதி (சம்பல்) நதிக்கரை ஷத்திரிய அரசன் தந்திதேவன் அவ ருடைய விருந்தினர் மாளிகையில் தினசரி 2000 பசுக்கள் கொல்லப்பட் டன. கொல்லப்பட்ட பசுவின் ஈரத் தோல்கள் சமையல் அறைக்கு அரு கிலே குவிக்கப்பட்டிருக்கும். அதிலி ருந்து கசியும் நீர் நதிலாகப் பெருகி ஓடும். (சர்ம தோல்; ணவதி வெளிப் பட்டு ஓடுதல்) சர்மண்வதி என்ற பெயர் தோன்றியது.
12) ரந்தி தேவரு டைய மாளிகையில் விருந்தினர் களுக்காக இந்தப் பசு மாமிசங்களைச் சமைப்பதற்கு 2000 சமையல் காரர்கள்இருந்தார்கள். ஆயினும், பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால், ‘மாமிசம் குறைவாக இருப்பதால் தனய செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை கூட ஏற்பட்டது. - நூல்: வால்காவிலிருந்து கங்கை வரை (பக்கம் 297, 298)
13) சோம்லி’பூஷா’ தேவதைகளின் பொருட்டு பசுவைக் கொல்ல வேண்டும். நூல் : ஸாம வேத தாண்ட மஹாப்பிரஹ்மனன் 23:14:4அஸ்வின, ஸாரஸ்வத, இந்த்ர, இம்மூன்று தேவதைகளின் பொருட்டு பசுவைப் பலியிட வேண்டும். நான்காவதாக பிரகஸ்பதிக்கும் பசு வேண்டும். - நூல் : ஆகஸ்வலாயன கலிப திரௌத சூத்ரம் (அத்தியாயம் 3, கண்டிகை 9)
14) அவர்கள் மயக்கம் தரும் சோம பானத்தையும் தானியங்களையும் இறைச்சியையும் தேவர்களுக்குப் படைத்து வழிபட்டனர். - நூல் : இந்திய வரலாறு பக்கம் 33 ஆசிரியர் : டாக்டர் சுப்பிரமணியன்
15) மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாட்டிறைச்சி கன்று இறைச்சி முதலியன வழங்கப்பட்டிருக்கின்றன. - ஆசிரியர் : ஜவஹர்லால் நேரு, நூல் : டிஸ்கவ்ரி அஃப் இந்தியா
16) அறிவில் மிகுந்த கக்லயஜுர் வேதம் இயற்றிய யாக்ளு வல்கியமுனிவர், காளைகளின் தசையை விரும்பி உண்டார். - ஆசிரியர் : சிவா ஸ்ரீ நிவாசாச்சாரியார், நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம், பக்கம் 43)
17) ‘பிரம்மா மாமிசம் புசிக்கும் படி போதித்தார்! கபில முனி - நூல்: சாதாரண இந்து மார்க்கம் பக்கம் 93
18) இந்திரனே! இதுதான் பலிபீடம், இதுதான் பலியிடக் கொண்டு வந் துள்ள பசு, இதோ சோமபானம் (சாரயம்) இந்திரனே! இங்கே உட் காரவும், சோமபானத்தைக்குடிக்கவும். (நூல் : ரிக்வேதம் 1,77,4)
19) இந்திரனே! இந்த புரோடசத்தை (மாடு அல்லது ஆட்டின் விதை) தின்னவும். எங்களுக்கு நூற்றுக்கணக் கான ஆயிரம் கணக்கான பசுக்களை அளிக்கவும். நூல் : ரிக்வேதம் 8,28,1
20) இந்திரனாகிய என்னை வணங்கு கிறவர்கள் எனக்கு பதினைந்து காளைகளையும் இருபது காளையும் சமைக்கிறார்கள். அதிலுள்ள கொழுப் புக் கறிகளை விரைவாக நான் விழுங்குகிறேன். அவை என் வயிற்றை நிரப்புகின்றன. இந்திரன் எல்லா உலகத்திற்கும் தலைவனாய் இருக்கின்றான். நூல் : ரிக்வேதம் 10,86,14
21) அக்கினியே! உனக்காக பசுவின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட தும், மிக்கச் சத்துள்ள கொழுப்புக்கறி யால் செய்யப்பட்ட உணவுப்படை யலை உனக்கு அளிக்கிறோம். உனக்காக கொழுப்புரசம் சொட்டுகிறது. அவற்றைத் தேவர்களுடன் பங்கிடவும். நூல் : ரிக்வேதம் 3,21,1 முதல் 5 வரை அக்னி ஷோத்திரஹோமம் செய் திடப் பயன்படுத்தும் பத்துப் பொருள் களுள் ஒன்று மாமிசம். நூல் : தேவாரம் தேவாரம் வேதசாரம் பக்கம்38,39
22) பசுவைக் கொல்ல வேண்டும். ஆஸ்வலாயன கல்ப சிரௌ தஸுத்ரம் (நூல் : அத்தியாயம் 3 கண்டிகை 7)
23) மஹாவ் ரத யாகத்திற்கு எருதைக் கொல்ல வேண்டும். ஏகாதசி என்னும் யாகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பசுவீதம் கொல்ல வேண்டும். ‘ஆஸ்வலாயன சிரௌதஸுத்ரம் (நூல் : உத்ரஷ்டகம் 7வது கண்டிகை)
24) பசுவின் மாமிசம் கொடுக்கிறதினால் பதினொரு மாதம் வரை பிதுர்கள் இறந்தவர்கள் திருப்தியாயிருக்கிறார்கள். கௌசிகர் புத்திரர் குருக்குருசி யின் சீடர்கள் பசுவின் மாமிசத்தை சிரார்த்தத்தில் புசித்தார்கள். நூல் : சிவபுராணம் தர்ம அத்தியாயம் 16 : அனுஹ் 3 வாஜ்பேய் என்ற யாகத்தில் பசுக் கள் கொல்லப்பட்டு உப்பு, புளிர் பாடாமல் சாப்பிட்டனர். நூல் : தெய்வத்தின் குரல் தீக்கதிர் 22.09.2003 பக்கம் 3)
25) ‘ஆரபத்வமுத மனுஷ்ய இத்யாஹ அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ரதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூத்ய இதி ஜனித்ரைரேனவனம் தத்ஸமனு மத மால பந்த உதிசீனாம் அஸ்யபதோ நிதத்தாத் ஸுர்யம் சக்ஷுர்கமயதாட் வாந்த ப்ராணமன் வஸ்ருத தாதந் திரி க்ஷமக்ஷும்திச ஸ்ரோத்ரம் ப்ருதிவீ சரீரம் நூல் : ஐதரேய ப்ராஹ்மணம் (பஞ்சகா 2, கண்டம் 6)
பொருள் : இம்மந்திரத்தினால் பசுவின் தாய், தந்தையரைக் கேட்டுக் கொள்வதா வது, இந்த பசுவை எனக்குக் கொடுங் கள். இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர், ‘அத்வர்யூ’ என்னும் தலை மைப் புரோகிதருடைய கட்டளை யைப் பெற்றுக் கொண்டு, பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து ‘கமிதா’ என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் ‘முஷ்டி’ என்னும் குறுந்தடி யால் பசுவினுடைய கழுத்தில் அடித் துக் கொலை செய்வார். அதன் பின் ‘கரா’ ‘இடா’ ‘ஸுனு’ ‘ஸ்வதீத்’ என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவைக் கிடத்தி, தோல் உரித்து, சதையை அறுத்தெடுத்து, சிறிது நெருப்பிலிட்டு, மீதியுள்ள மாமிசத் தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்வார்கள். - அறிவிப்பவர் : ங.ஃ.கேலுண்ணி நாயர் என்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மதவிசாரணை, பக்கம் 67:69
26) உலகத்தில் மாமிசத்தின் ருசியைப் போல் வேறொரு வஸ்துவுமில்லை. மாமிசத்தினால் தேகபலம் வளர்கிறது. இரத்தம் உற்பத்தியாகிறது. மாமிசத்தை விட நேர்த்தியான வேறொரு ஆகார மில்லை என்று ராஜா ஜதேஷ்டர் அவர்கள், பஷீம்ஜீ என்பவரை நோக்கி மொழிந்தார். நூல் : மகாபாரதம், சாந்தி பர்வம், அத்தியாயம் 8 பக்கம் 1543
27) வடை முக்கிய பலகாரங்கள், பாயாசம் , கிழங்கு, ருசியுள்ள இறைச்சி, நறுமணமுள்ள நீர் இவைகள் பிராமணர்களுக்கு உரியன. (மனு .அத்.3சு227)ஒரு பிராமணன் மந்திரத்தினாற் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாமிசத்தைப் புசிக்கலாம். (மனு அத் 5. சு.27)
28) உயிருக்கு ஆபத்து நேருங்கால் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் புசித்த போதிலும் தோஷத்தை அடையமாட்டான். (மனு அத் 3. சு.10) இன்ன இன்ன மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் இவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்ற விவரம் எள், செந்நெல், அரிசி, உளுந்து, நீர், கிழங்கு , கனி இவற்றால் மனித பிதுர்க்கள் ஒரு மாதம் திருப்தியடைவர். மீனுணவால் இரு மாதங்கள் மான் மாமிசத்தால் மூன்று மாதங்கள் - செம்மறியாட்டுப் புலாலால் நான்கு மாதங்கள், பட்சி மாமிசத்தால் அய்ந்து மாதங்கள் பிதுர்த்திருப்தியாகும்.
29) வெள்ளாட்டின் மாமிசம் ஆறு மாதம்- புள்ளிமான் புலால் ஏழுமாதம், கருப்பு மான் மாமிசம் எட்டுமாதம், கலைமான் மாமிசம் ஒன்பது மாதம். முள்ளம்பன்றி, காட்டெருமைக் கடா இவற்றின் மாமிசத்தால் பத்து மாதங்கள், முயல், ஆமை, இவற்றால் பதினோரு மாதங்கள்.பசுவின் பால், தயிர், நெய், இவற்றால் ஒரு வருடம். இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கிக் குடிக்கின்ற கிழ வெள்ளாட்டுக் கடா மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகள்.
30) அந்தந்தத் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசத்தாலும் காட்டில் முளைக்கின்ற செந்நெல் அரிசியினாலும் செய்தால் எல்லையற்ற காலமும் பிதுர்க்கள் சிரார்த்தத்தால் திருப்தியுறுகின்றனர். மழைக் காலத்து புரட்டாசி தேய்பிறை பதின்மூன்றாம் நாளில் தேனாலும் பாயசத்தாலும் சிரார்த்தம் செய்தால் குறைவறத் திருப்தியடைவர். (மனு. அத் 2. சு 267 முதல் 273 வரை) சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு. அத்.5.சு 35)
1) நாம் (தமிழர்கள்) யார்?2) நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ன?3) பசுவதை தடை அரசியலா? இல்லை உணமை புனிதமா? இதை அறிய எதை படிக்க வேண்டும்?4) இந்து மத வேதங்கள் பசு இறைச்சி பற்றி என்ன சொல்லுகிறது?5) தமிழருக்கும் இந்து மத வேதத்திற்கும் தொடர்பு ஏதும் உண்டா?6) நம்மை அறிய படிக்க வேண்டிய நூல்கள் வேத இதிகாச புராணங்களா? தமிழ் நன்னெறி நூல்காளா?7) இதை அரசியல் என்றால் மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது?
and etc etc ...