கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.
நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.
அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.
உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.
உதாரணமாக,
- நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற இரண்டு வேதங்களும் உள்ளன.
- நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், சுமார் 40 பேர் பைபிளை எழுதியிருப்பதைக் காணலாம்.
- நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும் என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம், அதற்க்கான ஆதாரங்கள் நான்மறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது என்று குர்ஆன் கூறுகிறது.
- நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள்.
எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்கவில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டுநால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக எனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.
என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம்.திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம்.இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)
எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.
முடிவுரை
இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.
- ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
- ஒரு சமயம் ஒன்று அல்லது பல அந்நாள் ஒன்றுக்கொன்று முரண்படாத வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
- ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும், பின்வரும் வேதத்தில் சான்று அளிக்கப்பட்டு இருக்கும்.
- அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
- அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
- இந்த அமைப்பில் உள்ள சமயங்கள்தான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
- சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
- அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே "அரியும் சிவனும் ஒன்னு" என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.
மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை மறுக்கமுடியாது ஆனால் அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் அவைகள் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.
கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்தி இருப்பது போல நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை ஒருக்காலமும் மறுக்க முடியாது.
இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.
பதிலளிநீக்குஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
ஒரு சமயம் ஒரு வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும்.
அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
இதுதான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே அறியும் சிவனும் ஒன்னு என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.
எனவே ராஜ ராஜ சோழன் சைவன், இந்து அல்ல.
https://ta.quora.com/profile/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B1
கடவுள், சமயம், அரசியல் ஆகியவைகள் இன்று பலவேறு விதமாக வகைப்படுத்த படுகிறது.
பதிலளிநீக்குஒரே கடவுளுக்கு பல பெயர் சூட்ட காரணம், மொழிவாரியன வேத பாரம்பரியம்.
பல சமயம் ஏற்ப்பட காரணம் முன்னிருந்த சமயத்தில் ஏற்ப்பட்ட புதுமைகளும் இடை சொருகள்களும்.
ஆனால் அரசியலில் பப் எரு தத்துவம் ஏற்ப்பட காரணம் இருநூற்றாண்டுகளாக யூதர்கள் அவர்கள் சாதியில் வெற்றி பெற துவங்கியதும் காரணம்.
உற்று கவனித்தால் கடவுளுக்கும், தேவர்களுக்கும், சமைங்களுகும், அரசியலுக்கும் வேதங்கள் கூறும் ஒரே இலக்கணமும் பண்புகளும் தான் இருக்கிறது. அதன் கூறுகளை கூறு கூறாய் பிரித்துதான் இத்தனை வகைகளை அவர்களாழ் யேர்ப்படுத்த முடிந்தது.
பொதுவுடமை, ஜனநாயகம், சோசலிசம், சர்வாதிகாரம் உள்ளிட்ட எல்லா அரசியலமைப்பின் கூறுகளும் சமய araneri நூல்கள் கூறும் அரசியல் அமைப்பில் உண்டு.. ஆனால் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த இது தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
அதே போல, சமய தத்துவங்கள் கடவுளின் பண்புகள் எல்லாம் திரித்து கூறப்பட்டு ஒரெங்கடவுளை பல கடவுளாகிய துயரம் இங்கே நடைபெறுகிறது.
நெறியைப் படைத்தான்;
பதிலளிநீக்குநெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
பதிலளிநீக்குபாடல் #1733: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
பதிலளிநீக்குஅத்திசைக் குள்ளே யமர்ந்தன வாறங்க
மத்திசைக் குள்ளே யமர்ந்தன நால்வேத
மத்திசைக் குள்ளே யமர்ந்த சரிதையோ
டத்திசைக் குள்ளே யமைந்த சமையமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அததிசைக குளளெ யமரநதன வாறஙக
மததிசைக குளளெ யமரநதன நாலவெத
மததிசைக குளளெ யமரநத சரிதையொ
டததிசைக குளளெ யமைநத சமையமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன நால் வேதம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்த சரிதையோடு
அத் திசைக்கு உள்ளே அமைந்த சமையமே.
பதப்பொருள்:
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமர்ந்து இருக்கின்றது) ஆறு (வேதத்தின் ஆறு) அங்கம் (அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவை)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமரந்து இருக்கின்றது) நால் (ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகிய நான்கு) வேதம் (வேதங்களும்)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்த சரிதையோடு
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமைந்த சமையமே.
விளக்கம்:
அண்ட சராசரங்களில் உள்ள பத்து திசைகளுக்கு உள்ளே பாடல் #55 இல் உள்ளபடி வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவையும், நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும், இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும், பாடல் #994 இல் உள்ளபடி இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.
வேதத்தின் ஆறு அங்கங்கள்:
சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.
நான்கு வேதங்கள்:
ரிக்கு – தெய்வங்களை போற்றி வணங்குகின்ற மந்திரங்களைக் கொண்டது.
யஜூர் – தெய்வங்களை யாகம் செய்து வழிபடும் முறைகளைக் கொண்டது.
சாமம் – இசை மூலம் இறைவனை போற்றும் பாடல்களைக் கொண்டது.
அதர்வணம் – தெய்வ சக்திகளை உபயோகித்து பாதுகாத்துக் கொள்கின்ற மந்திரங்களைக் கொண்டது.
இறைவனை அடையும் நான்கு வித வழிகள்:
சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது. (பக்தி யோகம்)
கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது. (கர்ம யோகம்)
யோகம் – தியானம், தவம் செய்வது. (இராஜ யோகம்)
ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது. (ஞான யோகம்)
இறைவனை அடையும் ஆறு வித சமயங்கள்:
தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்.
செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்.
பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்.
சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்.
ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.
புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.
https://kvnthirumoolar.com/song-1733/
பாடல் #55: பாயிரம் – 2. வேதச் சிறப்பு
பதிலளிநீக்குஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
விளக்கம்:
ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை (சிட்சை, கற்பம், வியாபகரணம், சந்தோபிசிதம், சோதிடம், நிருத்தம்) ஓதி அருளிய இறைவனை தனது உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனின் தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக் கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.
வேதத்தின் ஆறு அங்கங்கள்:
சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.
https://kvnthirumoolar.com/song-55/
ஆறு அங்கம் என்று இவர்கள் கூறும் விளக்கத்துக்கு ஆதாரம் இல்லை. சோதிடம் கூடாது என்று நாலடியார் கூற சோதிடம் மறையின் ஒரு அங்கம் என்று திருமூலர் கூற வாய்ப்பில்லை
பதிலளிநீக்குஆறு அங்கம் என்பது ஒரு சமய பாரம்பரியம் - ஆறு வெவ்வேறு அங்கமாக, அதாவது சமயமாக வெளிப்பட்டு உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.
பதிலளிநீக்குஅதாவது ஆப்ரஹாமிய மதங்களுக்கு யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்று இருப்பது போல, தமிழர் சமயத்தின் அங்கங்கள் இவைகள். அநேகமாக 1) சைவம், 2) வைணவம், 3) சமணம், 4) ஆசீவகம், 5) சாங்கியம் 6) கௌமாரம் ஆகியவைகளாக இருக்கலாம்.
இதில் பௌத்தமும், வைதீகமும் சேர வாய்ப்பில்லை. காரணம் வைதீகம் என்பது சனாதன மாதமாகும்.
https://tamilnenjam.com/wp-content/uploads/2019/03/vaithiigam_thamizhmozicover.pdf
பௌத்தம் என்பது வைதீக மதத்தை எதிர்த்து வந்தது. எனவே நான்மறைகளில் வட மொழி பாரம்பரியத்தை சேர்ந்த மதங்கள் இவைகள்
சமய முடிவு
பதிலளிநீக்குஇறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதே சென்று ஆற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். பாடல் - 39
விளக்கவுரை இல்லறத்தை விட்டு நீங்கி அகப்பற்று, புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடமிருந்தே பெற்றுக் கூறியதால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே; அறமும் இதுவே ஆகும். நன்றாக ஆராய்ந்து சிறந்த அறமான இதை நம்பி மேற்கொள்வீராக!
https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html