தி.மு.க ஏன் குடும்ப கட்சியாக மாறியது? அந்த அரசியல் கட்சியில் இருக்கும் மற்ற மூத்த அரசியல்வாதிகள் அல்லது தொண்டர்களின் எதிர்காலம் என்ன?

குலத்தொழிலை ஆதரிக்கும் பிஜேபி காரர்களுக்கு இதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

  • Dr மகன் Dr
  • வக்கீல் மகன் வக்கீல்
  • கோயிலில் மந்திரம் சொல்பவர் மகன் மந்திரம் சொல்பவர்
  • அரசியல்வாதி மகன் அரசியல்வாதி

Bjp, பிரமானர்களின் கொள்கைப்படி இதில் பிழை ஏதும் இல்லையே!

உண்மையில் இவர்களின் கொள்கைப்படி

  • துவைப்பவன் மகன் துவைக்கணும்
  • முடி வெடுபவன் மகன் முடி வெட்டனும்
  • வெட்டியான் மகன் வெட்டியான் ஆகணும்
  • மலம் அல்லுபவன் மகன் மலம் அல்லனும்

அவ்வளவுதான். கீழுள்ள வேலைக்கெல்லாம் குலத்தொழில் okay. ஆனால் அதிகாரம் செல்வாக்கு நிறைந்த தொழில்கள் பிராமனாலுக்கு அல்லது அவர்களை அண்டி பிழைப்போருக்கு. அதில் குறை ஏற்படும் பொழுது இப்படி ஏதாவது கொளுத்தி போடுவது.

வாரிசு அரசியல் சரி என்று நாமும் சொல்லவில்லை, என்றாலும் knowledge inheritance-ஐ தவிர்க்க முடியாது. ஒரு அரசியல்வாதியின் அனைத்து பிள்ளைகளும் அரசியலில் ஜொலித்துவிட முடியாது. யார் அந்த அறிவையும் திறமையையும் தத்துவத்தையும் உள்வாங்கி கொண்டாரா அவரால் தான் நிலைக்க முடியும். இது அனைத்து துறைக்கும் பொருந்தும்.

ஆனால் அதிகாரம் மிக்க தொழிலை செய்பவரின் மகன் கீழுள்ள தொழிலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும். கீழுள்ள தொழிலை செய்பவரின் மகனுக்கு அரசியலில் அல்லது மந்திரம் சொல்வதில் அதீத அறிவு இருந்தால் அவர் அந்த தொழிலில் அனுமதிக்கப் பட வேண்டும். கொலை, கொள்ளை, திருட்டு & வட்டி தொழில் இவைகளை தவிர இழிந்த தொழில் ஏதும் இல்லை என்பதை நம்மில் உணர்ந்தவர் எத்தனை பேர்?

இன்று திமுக குடும்ப கட்சி என்று கூவும் ஒருவர் CM ஆனால், நாளை அவரின் கட்சியும் குடும்பமும் திமுக போலத்தான் மாறி நிற்கும். இதுதான் எதார்த்தம். எனவே மக்களுக்கு நன்மை நடக்கிறதா என்று பார்த்தால் போதும்.

பிஜேபி, பாமக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இன்னும் விடுபட்ட அனைத்து கட்சியையும் எடுத்து கொள்ளுங்கள். இவைகளில் எது வாரிசு அரசியல் இல்லாத கட்சி? நாம் தமிழர் போன்ற அதிகாரத்தை சுவைக்காத கட்சியை சொல்ல வேண்டாம், கட்சியின் அதிகார பங்கீட்டில் வளரும் முன்னேயே அடிக்கடி உடைந்த கட்சி நாம் தமிழர். ஒருவேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவர்களின் நேர்மை வெளிப்படும்.

சரி நான் ஒருமுறை CM ஆக இருந்துவிட்டேன், போதும். உங்களில் சிறந்தவர் யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு தலைவர் சொல்வதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் CM-ஆக இருந்துவிட்டேன் என்பதற்காக என் மகனுக்கு யாரும் அந்த பதவியை கொடுக்க வேண்டாம் என்று கூறும் தலைவரை கற்பனை செய்து பாருங்கள். பதவிக்காக ஆண்டாண்டு காலமாக காத்திருந்து போராடி இழந்து அவமானப்பட்டு பிடித்த இடத்தை இன்னொருவருக்கு இலவசமாக கொடுக்க எவர் முன்வருவர்.

எனக்கு பதிவி வேண்டாம் என்று ஒதுங்கி செல்லும் நபரை கட்டாயப்படுத்தி காமராஜருக்கு கொடுத்தது போல பதவி கொடுத்தால் அவர் இதை சொல்ல சாத்திய முண்டு.

"பதவியை கேட்பவருக்கு நாம் அதை வழங்க மாட்டோம்" என்று நபிகள் நாயகம் சொன்னதாக நாம் படித்து உள்ளோம். அதில் உள்ள ஞானம் குடியாட்சி தத்துவத்தில் புரிகிறது.

முடிவுரை:

மக்களின், மக்களாட்சி தத்துவத்தின் பண்பு இதுதான். வாரிசு அரசியலை தவிர்க்க முடியாது. வாரிசு அரசியலுக்கு எதிராக நம்மை தூண்டி விடுபவன் நாளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவன் முதலில் ஒடுக்குவது வாரிசு அரசியலுக்கு எதிராக பேசும் நம்மைதான். அவனும் வாரிசு அரசியல் தான் செய்வான்.

தொண்டர்கள் இலட்ச கணக்கில் இருந்தால் தான் ஒரு கட்சி நிலைபெறும். அதற்காக தொண்டர்கள் எல்லோருக்கும் பெரும் பதவிகள் வழங்க முடியாது ஏனென்றால் பெரும் பதவிகளில் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு அவரவர் தகுத்திக்கு ஏற்ப வாய்ப்புகளும் பதவிகளும் வழங்க முடியும். இது திமுக-வில் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியிலும் இதுதான் நிதர்சனம்.

சுருக்கமாக சொன்னால் நமது விருப்பம் வேறு அதன் பண்பு வேறு. நெருப்பு குளிர வேண்டும் என்று நாம் விரும்பலாம் ஆனால் சுடுவதும் எரிப்பதும் தான் அதன் பண்பு.

குடியாட்சியில் வெறிகொண்டு ஓடி ஒவ்வொருவரையும் எரிமிதித்து ஒழித்து துரோகம் செய்து கொலை செய்து மிரட்டி அநியாயம் செய்து ஒருவன் பதவியில் அமர்கிறான் அவனை நேர்மையாக ஒழுக்கமாக இல்லை என்று கூறுவது நகைப்புக்குறியது. இதுதான் குடியாட்சியின் பண்பு. 

https://ta.quora.com/குடும்ப-கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக