தெய்வம் உண்டா?

எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இக்கேள்விக்கு "ஆம்" அல்லது "இல்லை" என்று ஒரு வரியில் பதில் அளித்துவிட முடியும். ஆனால் அந்த ஒற்றை வரி பதில் சுய கருத்தாக அமைந்துவிடும். எனவே இந்த கேள்விக்கான விரிவான பதிலும் அதற்கான காரணங்களும் அதற்கான ஆதாரங்களும் முறையான அணுகுமுறையுடன் இந்த நூல் முழுவதும் விவரிக்கப் பட்டுள்ளது. 

இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களை வகைப்படுத்த முயன்றால் கீழ்கண்டவாறு வகைப் படுத்தலாம். 

  1. நாத்தீகம் - இறைவனென்று எதுவுமில்லை (Atheism)
    • கடவுள் உண்டா இல்லையா என்று குழப்பமாக உள்ளது (Agnosticism)
    • கடவுள் உண்டா இல்லையா என்ற கவலை இல்லை (Apatheist)
    • அரசியல் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட தத்துவங்களை பின்பற்றுவது (Capitalism, Socialism, Communism, Liberalism, Populism, & Nationalism)
    • இயற்கைதான் வணக்கத்துக்கு உரியது, கடவுள் என்று வேறேதும் இல்லை (Pantheism)
    • அறிவியல்தான் எல்லாம், கடவுள் என்று ஏதும் இல்லை (Scientism)
  2. ஆத்தீகம் (Theism)
    • உண்மை தெய்வத்தை வணங்கி வழிபடுவது  
      • படைத்து, பாதுகாத்து, உணவளித்து, அழித்து, இறுதியில் செய்த வினைகளுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கும் தெய்வத்தை அது சொன்னபடி அதை வணங்கி அது கூறும் அறத்த்துக்கு வழிப்பட்டு வாழ்ந்து மறிப்பது.
      • உண்மை தெய்வத்தை வணங்குவது அல்லது வழிபடுவது (ஏதாவது ஒன்றை மட்டும்)
      • உண்மை தெய்வத்தை வணங்கி வழிபடுவது ஆனால் ஒரே இடத்தில் தேங்கி அவனது அடுத்தடுத்த வழிகாட்டுதல்களான வேதங்களை (வழி நூலகளை) மறுப்பது, அதாவது வழக்கொழிந்த வேதத்தையும் சமயத்தையும் பின்பற்றுவது. (வழக்கொழிந்த சமயமும் வேதமும் பின்பற்றுதலுக்கு ஏதுவாதனதல்ல, அவற்றின் எச்சங்கள் மட்டுமே மிச்சமிருக்கும் - அதை முறையாக போதிக்கும் குருவும் இருப்பதில்லை, அதன் பண்பாடுகளும் வெறும் குறியீடாக மாறிப் போய் இருக்கும் அதாவது அது பின்பற்றும் வகையில் முழுவடிவில் கிடைக்கப்பெறாது.)
    • பொய் தெய்வத்தை வணங்கி, பொய் குருவின் உபதேசம் கேட்டு, பொய் வேதத்துக்கு வழிபட்டு, பொய் சமயத்தில் தன்னை இணைத்து கொள்வது.  
      • உருவ வணக்கம் - சிலை, படம் போன்றவற்றை வணங்குவது (Idolatry)
      • மனிதர்களை வணங்குதல் - சாமியார், சித்தர், நபிகள், குரு, தாய் தந்தை போன்றவற்றை வாங்குதல் (Anthropolatry)
      • தேவர்களை வணங்குதல் - மலக்குகள், ஏன்ஜல்ஸ், நந்தி, முப்பத்து முக்கோடி தேவர்கள் (Angel Worship)
      • இறந்தவர்களை வண்ங்குதல் - முன்னோர்கள், குலதெய்வம், தர்கா, சுடுகாடு, கல்லறைகளை வணங்குதல் (Animism)
      • இயற்கையை வணங்குதல் - சூரியன், காற்று, மழை, மரம் போன்றவற்றை வணங்குதல் (Nature worship)
      • மிருகங்களை வணங்குவது - மாடு, பாம்பு, பன்றி, கோழி, எலி, யானை போன்றவற்றை வணங்குதல் (Animal worship)
      • தீய சக்தியை வணங்குதல் - சதானிக் சர்ச், ஜின், பேய், பூத வழிபாடு, மாந்த்ரீகம் போன்ற வணக்க முறைகள். (Aatanism)
      • குரு மற்றும் வேதம் என்பதற்கான இலக்கணம் இல்லாமல் இருப்பவைகளை பின்பற்றுவது. 
நாத்தீகரும் ஆத்தீகரும் வெவ்வேறு காரணங்களினால், வெவ்வேறு அனுபவத்தால், வெவ்வேறு கல்வியினால் அந்த நிலையை அடைகின்றனர்.

"கடவுள் இல்லை" என்ற முடிவுக்கு சென்ற 

  • "தி எசென்ஸ் ஆஃப் கிறிஸ்டியானிட்டி" எழுதி அதன் மூலம் நாத்தீகத்தை வாதாடிய ஃபியூர்பாக்
  • ஃபியூர்பாக், சார்லஸ் டார்வின், மாறும் ஜியோனிஸ தூதர் என்று அழைக்கப்படும் மோசஸ் ஹெஸ் போன்றவர்களின் மூலம் தாக்கம் பெற்று நாத்தீகத்தை அடிப்படையாக கொண்ட பொதுவுடைமை தத்துவம் இயற்றிய கார்ல் மார்க்ஸ்
  • பொதுவுடைமை தத்துவம் ஆட்சி செய்த ரஷ்யா-விடமிருந்து தாக்கம் பெற்று நாத்தீகத்தை வாதாடி பல நூல்கள் எழுதிய பெரியார் 
  • "எஸ்ஸென்சியல் ஆப் ஹிந்துத்துவா" எழுதி இந்துத்துவாவின் இன்றைய இலக்கை வடித்து தந்த, RSS-இன் இரண்டாம் தலைவரான, நாத்தீகரான வீர சாவர்க்கர் மற்றும்
  • "சதானிக் வெர்ஸ்" எழுதி  மூலம் மதத்தையும் கடவுளையும் மறுத்த சல்மான் ருஷ்டி

போன்ற சமூகத்தில் பெருமளவில் தாக்கம் செலுத்திய முக்கிய நபர்களை ஆய்வு செய்தால், பொதுமக்கள் மத்தியிலும் ஏன் கடவுள் இல்லை என்கிற கருத்து நிலவுகிறது என்று உணர முடியும். 

காரணங்கள் சுருக்கமாக, 

  • தனது கிறிஸ்தவ மதத்தில் நிலவிய மூட நம்பிக்கையால் நாத்தீகர் ஆனார் ஃபியூர்பாக். அதற்கு காரணம் அவர் வாசித்த பைபிள் ஜேர்மன் மொழியில் இருந்தது. ஹீப்ரு மற்றும் அராமிக் மொழியில் எழுதப்பட்டது. அது பின் ஓரிரு நூற்றாண்டில் கிரேக்கத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பின்பு அதிலிருந்து ஜெர்மனி மொழிக்கு மொழிபெயர்க்க பட்டது. ஒரு மறைநூல் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்படவேண்டும் அதன் உண்மை பொருளை அறிய. அவ்வாறு இல்லை என்றால் அது அந்த மொழிபெயர்ப்பாளரின் அறிவுக்கு ஏற்றார் போல பொருள் குற்றம் சேர்க்கப்பட்டு இருக்கும் எனபது நிதர்சனம். இந்த நூலை ஆய்வு  செய்துதான் சித்தித்துதான் ஃபியூர்பாக் நாத்திகரானார். அடிப்படையே பிழை என்கிற பொழுது ஆய்வு முடிவு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.`
  • தொழிலாளர்களுக்கு சம உரிமை பெற விரும்பிய, ஃபியூர்பாக் போன்ற நாத்தீகர்களாலும், மோசஸ் ஹெஸ் போன்ற ஆரம்பகால சியோனிச தலைவர்களாலும் தாக்கம் செலுத்தப்பட்ட, சிறுவயதிலிருந்தே நாத்தீகராக இருந்த, யூதரான மார்க்ஸ் மேலும் நாத்தீக கொள்கையில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு அதை ஒரு தத்துவமாக வடிவமைத்தார். 
  • பெரியார் சாதியால், தீண்டாமையினால், சமூக ஏற்ற தாழ்வுகளை சகிக்க முடியாமல் ஹிந்து கடவுள்களை கடுமையாக விமர்சித்து நாத்தீகர் ஆனார் 
  • சாவர்க்கர் இன வெறியராக இருந்தாரே தீவிர, மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தது இல்லை.
  • சல்மான் ருஷ்டி & தாஸ்லிமா நஸிரீன் போன்றோர்கள் கட்டுப்பாடுகள் இன்றி சுய விருப்பத்தின் படி வாழ விரும்பும் நபர்கள் எனவே சமயங்களை அது கூறும் ஒழுக்கத்தை அதை கூறிய இறைவனை சாட துவங்கினர். 
சுருக்கமாக சொன்னால், சமூகத்தில் மதத்தின் பெயரில் நடைபெற்ற ஒடுக்கு முறையினாலும், மூட நம்பிக்கையினாலும் நாத்திகத்துக்கு சார்பாக பேச துவங்கியவர்கள் தான் அதிகம். ஒரு சிலர் மட்டும் சமயங்களின் கூறும் வாழ்கையின் ஒழுக்கங்களை பின்பற்ற முடியாமையினால் நாத்தீகர்களாக உருவெடுத்தனர். மட்டுமன்றி பொது மக்களில் பலர் கல்வியறிவு மறுக்கப் பட்டவர்களாகவும், ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்டு இருப்பதாலும், பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தத்துவங்களால் ஈர்க்கப்படடு நாத்தீகர்களாக உருவெடுத்தனர்.

"கடவுள் இருக்கிறார்" என்று கூறும் மக்களின் காரணங்கள் அனைத்தையும் பட்டியலிட முடியாது என்றாலும் வகைப்படுத்த முயன்றால் அவர்களின் வாக்காக இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கும். 
  • எமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இந்த சமயத்தை நம்பினார்கள், நாங்களும் நம்புகிறோம்.
  • உள்ளுணர்வு சொல்வதால் அனைத்தையும் மீறிய சக்தி உண்டென்றும் அது கடவுள் என்றும் நப்புகிறோம்.
  • ஒரு குறிப்பிட்ட சம்பவம் இறைவன் இருப்பதை எங்களுக்கு உணர்த்தியது.
  • மறைநூல்களை வாசித்தோம், அதன் அழகும், பிரமாண்டமும், அது உள்ளடக்கிய உன்னதமான  கருத்துக்களும், உண்மைகளும் நாங்கள் இறைவனை அல்லது ஒரு குறிப்பிட்ட சமயத்தை நம்ப காரணம்.
இதில் முதல் மூன்றுக்கும் கல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கல்விதான் ஒரு மனிதனின் அறிவுக்கும் அதை ஆழ்ந்து நம்புவதற்கு அடித்தளமாக அமையும். உலகில் மிகப் பெரும் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் "கடவுள்" என்ற கருப்பொருளை வாசிப்பதும் புரிந்து கொள்வதும் முதன்மையானது என்கிற சிந்தனை நமக்கு ஏற்படுவது உண்மையிலேயே மிக மிக நல்லது. ஏனென்றால் கடவுள் இல்லை என்போருக்கும், கடவுள் உண்டு என்போருக்கும் அவரவர் பார்வையில் நியாயம் என தோன்றும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. அதில் உண்மையிலேயே நியாயமான கருத்து எது என்பதையும், அது ஏன் நியாயம் என்பதையும் ஆய்ந்து அறிய வாய்மை எனும் இந்த நூல் உங்களுக்கு உதவலாம்.  

"தெய்வம் உண்டா?" என்ற இந்த கேள்விக்கு நாம் பல்வேறு தரவுகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு தொடர்புடைய சில கேள்விகளை கேட்பதன் மூலம் அதை தொடங்கலாம்.

  • உலகம் தானாக உண்டானதா அல்லது உருவாக்கப் பட்டதா?
  • கடவுள் என்கிற கருப்பொருள் துவக்கத்தில் இருந்தே உள்ளதா? அல்லது இடையில் உருவானதா?
  • பண்டைய காலத்தில் நாத்தீக சிந்தனை கொண்ட சமூகம் இருந்ததா? அவர்களின் வாதம் என்ன?
  • வெவ்வேறு மொழியை, நிலத்தை சேர்ந்த சங்கநூல்கள் கடவுள் பற்றி என்ன சொல்கிறது?
  • வரலாற்றில் மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தங்கள் எத்தனை நடந்தது? ஏன் நடந்தது?
  • நவீன காலத்தில் நாத்தீக சிந்தனை எங்கிருந்து துவங்கியது? ஏன்?
  • கடவுள் நம்பிக்கை இல்லமால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பொழுது நமக்கு ஏதேனும் எப்பொழுதேனும் பாதிப்பு உள்ளதா?

இதனுடன் பல துணை கேள்விகளுக்கும் பதில் தேடினால் நமக்கு தேவையான பதில் நிச்சயமாக கிடைக்கும். "நல்ல செயலை கடவுளின் பெயரால் சொன்னால் மக்கள் கட்டுப்படுவார்கள். எனவே தெய்வம் என்ற பெயரில் சில ஒழுக்கங்களை நல்லோர் சிலர் மக்களுக்கு வகுத்து தந்துள்ளனர், ஆனால் உண்மையில் கடவுள் என்று ஏதுமில்லை" என்ற சிலரின் கருத்தாக்கம் உண்மையா? இல்லையா? என்பது இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படும். 

இன்று, நம்பிக்கை என்கிற வார்த்தை மிக மலிவாக பயன்படுத்தப் படுகிறது, ஏறக்குறைய "நம்பிக்கை" என்பது "மூடநம்பிக்கை"க்கு இணையாக பயன்படுத்தப் படுகிறது. ஆனால் ஆத்திகம், நாத்தீகம், அதன் உட்பிரிவுகள், அறிவியல் அனைத்துமே நம்பிக்கைதான். ஏனென்றால் அறிவியலை நம்பிக்கை கொள்பவர்கள், நேரடியாக ஒவ்வொரு அறிவியல் விதியையும் ஆய்ந்து ஏற்பதில்லை. அவ்வாறு செய்ய வாழ் நாட்கள் போதுமானதாக இருக்கமுடியாது. அறிவியலில் ஆய்வு முறையையும், அந்த ஆய்வு முடிவை அங்கீகரிக்கும் பல்கலைகழகத்தையும் நாம் நம்புவதால் அந்த ஆய்வு முடிவு அறிவியல் உண்மை ஆகிறது. ஒருவேளை இந்த ஆய்வு முறையும் பல்கலைக்கழகமும் நம்பிக்கைக்கு உரியதா என்று சந்தேகிக்க துவங்கினால் அந்த அறிவியல் ஆய்வின் முடிவு அதாவது அந்த அறிவியல் செய்தி சந்தேகத்துக்கு இடமாக மாறுகிறது. அதன் உண்மை நிலையை அறிய வேறு ஒரு நம்பத்தகுந்த ஆய்வு முறையினையோ அல்லது பல்கலைகழகத்தையோ நாம் அணுகுவோம். அது போல்தான் கடவுளும். ஆனால் கடவுள் என்ற தலைப்பு மேலும் எளிமையாக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த கல்வி முறையினை கைவிட்டதற்கும், மீண்டும் கண்டறியாமல் இருப்பதற்கும் நடப்பு உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார போட்டி வாழ்க்கை முறை முக்கிய கரணங்கள்ஆகும். அந்த எளிமையான முறையினை கண்டறிய வழிகாட்டுவதும் இந்த நூலின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும்.  

உண்மையையும் பொய்யையும் பகுத்து பிரித்து அறிவதுதான் பகுத்தறிவு என்றால், கடவுள் என்கிற கருப்பொருளை மறைநூல்களின் வரையறைக்கு முரணாக உருவகப் படுத்தும் மக்களின் செயல்பாட்டை வெறுத்து, பொய் குரு, பொய் வேதம், பொய் தெய்வம், பொய் மதம் இவற்றுக்கும் சத்தியத்துக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பகுத்து அறிபவர்கள் தான் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியும். அவ்வாறு எவ்வித முயற்சியும் இன்றி நாத்தீக சார்புடைய நூல்களை மட்டும் வாசித்து நேரடியாக நாத்தீகத்தை ஆதரிப்பதும் ஆன்மீகத்தின் மீது தவறான புரிதல் கொள்வதும் பகுத்தறிவு ஆகாது. பகுத்தறிவு என்பது நம் தாய்மொழியில் உள்ள நூற்களை விட மேற்கிலும், வடக்கிலும் உள்ள நூல்களில் உள்ளது என்று நம்புகிறவர்கள் தங்களின் கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.. 

நாத்தீகத்துக்கு உலகை திசைத் திருப்ப திட்டமிட்ட சதி நடைபெற்று வருகிறது. மதம் அல்லது சமையம் என்றாலே ஒரு மோசமான சிந்தனையை மக்களின் மனதில் அது விதைக்கிறது. அது மறைநூல்கள் அல்லது வேதங்களை வாசிப்பதிலிருந்து மக்களை திசை திருப்புகிறது. கடவுளுக்கு ஆதரவாக பேசினால், "கடவுள் உங்களை காப்பாற்றவில்லை நீங்கள்தான் கடவுளை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் காப்பாற்றித்தான் கடவுள் வாழ்கிறதென்றால், கடவுள் இல்லை என்று பொருள்" என்றும், சமயங்களுக்கு ஆதரவாக பேசினால் "மத வெறியன் அல்லது பயங்கரவாதி" என்றும் சித்தரிக்கும் வழக்கம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக நிலவி வருகிறது. இவ்வாறு உலக மக்களின் உள்ளங்களில் நயவஞ்சகமாக திட்டமிட்டுப் பல்வேறு வகையில் முடுக்கிவிடப்படும் செயல்பாட்டின் மூலமும், ஊடகங்கள் மூலமும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டம் யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையிலிருந்து உங்களுக்காக,


நாத்தீக சிந்தனை ஆங்காங்கே பல்வேறு காலத்தில் அவ்வப்பொழுது தோன்றி உள்ளது. ஆனால் சமகாலத்தில் மிகத் தீவிரமாக நிறுவனமயப் படுத்தப்பட்டு பல்வேறு "போகாத ஊருக்கு வழி சொல்லும்" தத்துவங்களை திட்டமிட்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து அதன் மூலம் மக்கள் நாத்தீகத்தை தழுவ வைக்கப் படுகிறார்கள். ஆன்மீகத்தை ஏற்பதே சவாலாக உள்ள காலத்தில் அதில் சரியானதை பகுத்து அறிந்து தேர்ந்தெடுப்பது ஆகக்கடினம் என்றாலும் அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய மனித பிறப்பின் நோக்கம் ஆகும். இந்த நூல் முழுவதும் தெய்வம் இருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை தொகுத்து உங்களுக்கு தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

விரும்புவோர் தீர்க்கதரிசியாக மாறமுடியுமா?

இல்லை, இறைவன் மட்டுமே அவர்களை தேர்ந்தெடுக்கிறான்

இந்து மதம்


அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான தூதர், அக்னியை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். இந்த எங்கள் தியாகத்தில் திறமையானவர். (RIG 1.1.12 மந்திரம் 12:1)

தமிழர் சமயம்


நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம் - திருமந்திரம் 130

பொருள்: திருமூலர் ஆசிரியராக நந்தியின் மூலம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்

இஸ்லாம்

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். 4:79

 முகமது நபி ஸல் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட நிகழ்வு: நபி(ஸல்)அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தனர், தமது குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கி இருந்து) வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்களுக்கான உணவை தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தமது துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வருவார்கள். அதேப் போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.

(ஒருநாள்) ஒரு வானவர் ஓதுவீராக என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை பின்வருமாறு விளக்கினார்கள்: ‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு மீண்டும், ஓதுவீராக என்றார். (அப்போது) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுக கட்டியணைத்து என்னை விட்டு விட்டு மீண்டும் ஓதுவீராக, என்றார் (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு, படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை அலக்கில் (கருவளர்ச்சியின் ஆரம்ப நிலை) இருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார்; மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது, பிறகு இதயம் படபடத்தவர்களாக- அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)விடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்றார்கள். கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)விடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள்; அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவிபுரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் வராகாவிடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல் அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். வராகா அறியாமைக் காலத்திலேயே கிருஸ்தவ சமயத்தை தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹிப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும். இன்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா (ரலி), என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வராகா நபி (ஸல்) அவர்களிடம் , என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக்கேட்டார். நபி (ஸல்) அவர்கள்; தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். (அதைக் கேட்டதும்) வராகா (நபி (ஸல்) அவர்களிடம்) இவர் தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள், மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமாக உதவி செய்வேன் என்று கூறினார். அதன் பிறகு வராகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதற்செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. - புகாரி-3: ஆயிஷா (ரலி)

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் நம்முடன் வாழும் சிலர் தன்னை சித்தராக, நபியாக, ரிஷியாக பிரகடனப்படுத்துகின்றனர். ஆனால் அவரை ஏற்கும் முன் அவரைப் பற்றிய வேத முன்னறிவுப்புகளை ஆய்ந்து அறிவது அவசியம். ஏனென்றால் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் அவரைப்பற்றிய பல செய்திகள் முன்னரே அறிவிக்கப் பட்டு இருக்கும். அவ்வாறு நாம் அதை ஆய்ந்து அறிரும் பொழுது பொய்குருக்களிடம் தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும். குர்ஆனின் வாக்குறுதி படி முகமது நபி-தான் கடைசி தீர்க்கதரிசி குர்ஆன்-தான் கடைசி மறை நூல். எனவே இதன் அடிப்படையில் கிபி 650-க்கு பிறகு எழுதப்பட்ட வேத நூல்களையும் தீர்க்கதரிசிகளையும் எளிதாக நிராகரிக்கலாம். ஆனால் நூல்களின் காலம் சரியாக கண்டறியப் பட்டுள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேத ஆய்வு நடைமுறை

பொய் வேதங்கள் மூன்று முறைகளில் தோன்றி இருக்க வாய்ப்பு உண்டு 
  • இறைவாக்கில்லாமல் மனிதர்கள் எழுதிய நூல்கள் 
  • இறைவாக்கில் சிலவற்றை சேர்த்தும் சிலவற்றை நீக்கியும் மனிதர்கள் திரிபு செய்த நூல்கள்
  • எழுதப்படாமல் மனனமாக தலைமுறை தலைமுறையாக சொல்வழி கடத்தப் பட்டு மறதியினால் மாற்றப்பட்ட நூல்கள்

யூதர்களின் பொய் வேதம் பற்றி குர்ஆன்


அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தாலமுத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (குர்ஆன் 2:79)

 மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. (குர்ஆன் 2:78)

தமிழ் மரபு


வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். - 640

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - 641

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் - 642
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. (தொல்காப்பியம 3:643)

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது

இதன் சுருக்கமான கருத்தானது, ஒரு செயலை செய்து பெரும் அனுபவ அறிவு அல்லாமல், கிடைக்கப் பெரும் அறிவு கொண்டு அறிவில் முந்தியவனால் எழுதப்படும் நூல் முதல் நூலாகும். வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். அதாவது வழிநூலை எழுதும் முனைவன் பிற்காலத்தை சார்ந்தவனாகவும், அக்காலத்தில்புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவர். 

இந்த அடிப்படையை கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது மெய்யிலிருந்து பொய்யை பிரித்து எடுக்க இயலும். ஆனால் இதற்கு மொழிப் புலமையும், வரலாற்று புலமையும், தத்துவ புலமையும் மிக மிக  அவசியம். மேலும் திருமந்திரம் உட்பட பலநூல்கள் மேலும் நுணுக்கமாக இந்தவரையரையும் அது அவ்வாறு பிரயோகப்படுத்துள்ளது என்பதை விளக்கமாகவும் நமக்கு தகவல்களாக தருகிறது. அதை மறைநூலின் வரையறையில் தெளிவாக விளக்கியுள்ளோம். 
 

தமிழர் சமயம் கூறும் எழுதா கற்பு


பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்
சொல் உள்ளும்
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.  - (குறுந்தொகை 156 - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.)

குறுந்தொகை பார்ப்பனர் ஓதுவதை 'எழுதாக் கற்பு' என்றே கூறுகிறது  

பொய்யிலிருந்து மெய்யை பிரிப்பதற்கு ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு நடைமுறை உள்ளது. ஆனால் வேதத்திற்க்கான வரையறையை அறிந்து கொள்வதன் மூலம் பொய்யை வடிகட்டுவது மிக எளிது. வெவ்வேறு மரபுகள் என்னென்ன வழிமுறைகளை கையாளுகிறது என்று பார்ப்போம். பிறகு சரியான முறை எதுவென்று பார்ப்போம். 

கிறிஸ்தவ வேத ஆய்வு நடைமுறைகள்

அடிப்படை விதிகள்

    1. வசனம் வசனத்தை விளக்கும்.(அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20)
    2. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.(2கொரிந்தியர் 13:1, வெளி 11:3)
    3. பூரண வேத ஒத்திசைவு தேடு. கண்டடைவாய். (மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17)
    4. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே. (1கொரிந்தியர் 4:6, வெளி 22:18)

விரிவான விதிகள்

    • மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்: எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப் பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
        • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
        • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
        • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
    • முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
    • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
    • எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
    • வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். 
    • எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
    • வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது.
    • வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
    • புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும்.
    • எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்."
குறிப்பு: இந்த கிறிஸ்தவஆய்வு நடைமுறை பைபிளுக்குள்ளேயே ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுகிறதே தவிர உலக வேதங்களோடு ஒப்பீட்டாய்வு செய்ய பயன்படாது.அதிலும் கூட இந்த வழிமுறை முற்றிலும் பிழையானது ஏனென்றால் அடிப்படையிலேயே சில பிழை உள்ளது.
    • இயேசு பேசிய மொழி அராமிக், கிரேக்கம் அல்ல. 
        1. வீட்டஸ் சைரா (பழைய சிரியாக்) , கிரேக்க மொழியிலிருந்து ஆரம்பகால கிளாசிக்கல் சிரியாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதில் 4 சுவிசேஷங்களின் பெரும்பாலான-ஆனால் அனைத்துமே இல்லை— குரேடோனியன் சுவிசேஷங்கள் மற்றும் சைனாய்டிக் பாலிம்ப்செஸ்ட் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        2. கோடெக்ஸ் கிளைமாசி ரெஸ்கிரிப்டஸ் , கோடெக்ஸ் சினைட்டிகஸ் ரெஸ்கிரிப்டஸ் மற்றும் பிற்கால சொற்பொழிவுக் குறியீடுகள் (வாடிகன் சர். 19 [A]; செயின்ட் கேத்தரின் மடாலயம் பி, சி, டி) போன்ற கையெழுத்துப் பிரதிகளில் கிறிஸ்தவ பாலஸ்தீனிய அராமிக் லெக்ஷனரி துண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
        3. கிளாசிக்கல் சிரியாக் பெஷிட்டா , ஹீப்ருவின் (மற்றும் சில அராமிக், எ.கா. டேனியல் மற்றும் எஸ்ராவில்) பழைய ஏற்பாட்டின் அராமைக் [ மேற்கோள் தேவை ] ஒரு ரெண்டரிங், மேலும் புதிய ஏற்பாடு அதன் அசல் அராமிக் மொழியில், இன்னும் பெரும்பாலான சிரியாக் தேவாலயங்களில் தரமாக உள்ளது.
        4. தி ஹர்க்லீன் , கிரேக்க மொழியில் இருந்து கிளாசிக்கல் சிரியாக் மொழியில் ஹர்கெலின் தாமஸ் எழுதிய கடுமையான நேரடி மொழிபெயர்ப்பு
        5. அசிரியன் மாடர்ன் பதிப்பு , 1997 இல் வெளியிடப்பட்ட கிரேக்கத்திலிருந்து அசிரியன் நியோ-அராமிக் மொழிக்கு புதிய மொழிபெயர்ப்பு மற்றும் முக்கியமாக புராட்டஸ்டன்ட்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது
        6. மற்றும் பல்வேறு பேச்சுவழக்குகளில் பல சிதறிய பதிப்புகள்
      • எனவே ஒரு மொழியில் உள்ள நூலை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு விதிகள் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை எந்த பதிப்போடு நாம் சரி காண்பது?. விதிகள் பின்பற்றப்படாத மொழிபெயர்ப்பில் கருத்துக் பிழைகள் நிச்சயம் நிகழும். ஆனால் மூலமே ஆறு வகை என்றால் எப்படி இதை நாம் கையாள்வது?
      • மூலமொழியில் உள்ள அத்தியாயங்களும் வசனங்களும் மொழிபெயர்ப்பு நூலில் உள்ளதா அல்லது சிலவைகள் நீக்கப் பட்டுள்ளதா என்றும் சரிக்கான முடியாது. 
      • மூலமொழியில் உள்ள செய்திகளோடு கூடுதலான வசனங்கள் அல்லது அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டுள்ளதா என்றும் சரிகாண முடியாது. ஏனென்றால் மூலமே இது போன்ற பிரச்சனைகளோடு உள்ளது.
      • உள்ளவைகளை ஆய்வு செய்தால் பெஷிட்டாவின் புதிய ஏற்பாட்டில் 22 புத்தகங்கள் உள்ளன, அவற்றில் யோவானின் இரண்டாவது நிருபம், யோவானின் மூன்றாவது நிருபம், பீட்டரின் இரண்டாவது நிருபம், யூதாவின் கடிதம் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை இல்லை, அவை ஆன்டிலிகோமெனாவின் புத்தகங்கள். 'மேற்கத்திய ஐந்து' புத்தகங்கள் இணைக்கப்படுவதற்கு முன், கிழக்கு தேவாலயத்தின் புதிய ஏற்பாட்டின் நியதி மூடல் ஏற்பட்டது. அதன் நற்செய்தி உரையில் இயேசு மற்றும் விபச்சாரத்தில் எடுக்கப்பட்ட பெண் (யோவான் 7:53-8:11) மற்றும் லூக்கா 22:17-18 என அறியப்படும் வசனங்களும் இல்லை, ஆனால் 'மார்க்கின் நீண்ட முடிவு' உள்ளது. 
      • இயேசு காலத்தில் பைபிள் நிறைவு செய்யப் படாமல், வெவ்வேறு காலங்களில் அது மாற்றப் பட்டு கொண்டே வந்துள்ளது. ஆனால் அவ்வாறு மாற்றுவதற்க்கு அனுமதி இல்லை என்பதை பைபிளே கூறுகிறது. "எது உண்மையான பைபிள்?" எகின்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம்

 அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

 மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (குர்ஆன் 16:44)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன். அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) நூல்: அஹ்மத் 15478

 (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கடுபட்டவன்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

    1. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)
    2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
    3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
    4. ளயீப் (பலவீனமானது)
இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,
நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.

ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,

    1. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
    2. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.
    3. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    4. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.
இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது. 
 

சனாதனம்


முடிவுரை

இதற்கு முன் கிறிஸ்தவமமும் திருக்குறளோடு ஒப்பிட்ட வரலாறும் அதன் மூலம் பிறந்த நூல்களும் இன்றுவரை உண்டு. இதனை ஏற்காத தமிழ் பற்றாளர்கள் சாடி பேசியும் எழுதியும் வருகிறார்கள்

அதேபோல இஸ்லாமியர்களும் உலக வேதங்களோடு தனது வேதத்தை ஒப்புநோக்கி பல நூல்கள் எழுதி வந்துள்ளனர். அவைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகாமல் இல்லை. 

மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து சமயங்களும்  ஒன்று மற்றொன்றோடு ஒப்பிடப்பட்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, 

சில ஒப்பாய்வுகள்:
    1. இஸ்லாம் Vs சைவம்  
    2. குறளும் குர்ஆனும்
    3. சைவமும் குறளும்  
    4. எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்
    5. இசுலாம் தமிழர் சமயம்
    6. கீதையும் குறளும் 
    7. பகவத்கீதையும் திருக்குர்ஆனும்
    8. திருக்குறள் & பைபிள் - கடவுள் வாழ்த்து
    9. கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளும்
    10. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
    11. விஞ்ஞானத்தின் ஒளியில் திரு குர்ஆனும் பைபிளும்
    12. இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்
    13. குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
    14. இஸ்லாமும் இந்துமதமும் 
    15. இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்
    16. இந்து வேதங்களில் இஸ்லாம்
    17. தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு
இதுபோல ஒன்றுக்கொன்று முரணாக அறியப்படும் சமயங்கள் சமய நூல்கள் அவ்வப்போது ஒப்பிடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்பிட முடிந்த காரணம் இவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்தது என்பதாலேயே, இதற்க்கு வேறு ஒரு தர்க்க ரீதியான பதில் இருக்க முடியாது. எனவே வேதங்களுக்கான வரையறை அறிவதன் மூலமும் மற்றும் அவைகளில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை  கொண்டு ஒப்பு நோக்குவதன் மூலமும்  உலக வேதங்களில் உள்ள மெய்யையும் பொய்யையும் தனித்தனியாக தரம் பிரிக்கலாம். அதைத்தான் இந்த நூல் முழு முதற் பொருளாக கொண்டுள்ளது. அதோடு கடவுள் என்கிற கருப்பொருள்  நிலம் சார்ந்த, மொழி சார்ந்த அல்லது காலம் சார்ந்த ஒன்று அல்ல என்பதையம் நாம் உணரவேண்டும்.

யூதர்கள் அவர்களின் வேதத்தை பின்பற்றவில்லை

இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்

1 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 

,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 

ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை.  

மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை (மத்தேயு 23:1-4)

இஸ்லாம்

எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான் (குர்ஆன்: 62:5)

நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா - (குர்ஆன் 2:44)

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை (தல்மூத்) எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! - (குர்ஆன் 2:79)

யூதர்களின் வாக்குமூலம் 

யூதபயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலில் யூதரல்லாதவர்களை கால்நடைகள் என்று அழைப்பதுடன் அவர்களை கட்டுப்படுத்த (யூத நூல்கள் கூறும்) அறநெறிகளை பின்பற்ற தேவை இல்லை பாப்பது அவர்களின் வாதங்களில் பிரதானமானதாகும்.


 உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே

“உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது. - (லேவியராகமம் 19:29

தி.மு.க ஏன் குடும்ப கட்சியாக மாறியது? அந்த அரசியல் கட்சியில் இருக்கும் மற்ற மூத்த அரசியல்வாதிகள் அல்லது தொண்டர்களின் எதிர்காலம் என்ன?

குலத்தொழிலை ஆதரிக்கும் பிஜேபி காரர்களுக்கு இதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

  • Dr மகன் Dr
  • வக்கீல் மகன் வக்கீல்
  • கோயிலில் மந்திரம் சொல்பவர் மகன் மந்திரம் சொல்பவர்
  • அரசியல்வாதி மகன் அரசியல்வாதி

Bjp, பிரமானர்களின் கொள்கைப்படி இதில் பிழை ஏதும் இல்லையே!

உண்மையில் இவர்களின் கொள்கைப்படி

  • துவைப்பவன் மகன் துவைக்கணும்
  • முடி வெடுபவன் மகன் முடி வெட்டனும்
  • வெட்டியான் மகன் வெட்டியான் ஆகணும்
  • மலம் அல்லுபவன் மகன் மலம் அல்லனும்

அவ்வளவுதான். கீழுள்ள வேலைக்கெல்லாம் குலத்தொழில் okay. ஆனால் அதிகாரம் செல்வாக்கு நிறைந்த தொழில்கள் பிராமனாலுக்கு அல்லது அவர்களை அண்டி பிழைப்போருக்கு. அதில் குறை ஏற்படும் பொழுது இப்படி ஏதாவது கொளுத்தி போடுவது.

வாரிசு அரசியல் சரி என்று நாமும் சொல்லவில்லை, என்றாலும் knowledge inheritance-ஐ தவிர்க்க முடியாது. ஒரு அரசியல்வாதியின் அனைத்து பிள்ளைகளும் அரசியலில் ஜொலித்துவிட முடியாது. யார் அந்த அறிவையும் திறமையையும் தத்துவத்தையும் உள்வாங்கி கொண்டாரா அவரால் தான் நிலைக்க முடியும். இது அனைத்து துறைக்கும் பொருந்தும்.

ஆனால் அதிகாரம் மிக்க தொழிலை செய்பவரின் மகன் கீழுள்ள தொழிலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும். கீழுள்ள தொழிலை செய்பவரின் மகனுக்கு அரசியலில் அல்லது மந்திரம் சொல்வதில் அதீத அறிவு இருந்தால் அவர் அந்த தொழிலில் அனுமதிக்கப் பட வேண்டும். கொலை, கொள்ளை, திருட்டு & வட்டி தொழில் இவைகளை தவிர இழிந்த தொழில் ஏதும் இல்லை என்பதை நம்மில் உணர்ந்தவர் எத்தனை பேர்?

இன்று திமுக குடும்ப கட்சி என்று கூவும் ஒருவர் CM ஆனால், நாளை அவரின் கட்சியும் குடும்பமும் திமுக போலத்தான் மாறி நிற்கும். இதுதான் எதார்த்தம். எனவே மக்களுக்கு நன்மை நடக்கிறதா என்று பார்த்தால் போதும்.

பிஜேபி, பாமக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இன்னும் விடுபட்ட அனைத்து கட்சியையும் எடுத்து கொள்ளுங்கள். இவைகளில் எது வாரிசு அரசியல் இல்லாத கட்சி? நாம் தமிழர் போன்ற அதிகாரத்தை சுவைக்காத கட்சியை சொல்ல வேண்டாம், கட்சியின் அதிகார பங்கீட்டில் வளரும் முன்னேயே அடிக்கடி உடைந்த கட்சி நாம் தமிழர். ஒருவேளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவர்களின் நேர்மை வெளிப்படும்.

சரி நான் ஒருமுறை CM ஆக இருந்துவிட்டேன், போதும். உங்களில் சிறந்தவர் யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு தலைவர் சொல்வதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் CM-ஆக இருந்துவிட்டேன் என்பதற்காக என் மகனுக்கு யாரும் அந்த பதவியை கொடுக்க வேண்டாம் என்று கூறும் தலைவரை கற்பனை செய்து பாருங்கள். பதவிக்காக ஆண்டாண்டு காலமாக காத்திருந்து போராடி இழந்து அவமானப்பட்டு பிடித்த இடத்தை இன்னொருவருக்கு இலவசமாக கொடுக்க எவர் முன்வருவர்.

எனக்கு பதிவி வேண்டாம் என்று ஒதுங்கி செல்லும் நபரை கட்டாயப்படுத்தி காமராஜருக்கு கொடுத்தது போல பதவி கொடுத்தால் அவர் இதை சொல்ல சாத்திய முண்டு.

"பதவியை கேட்பவருக்கு நாம் அதை வழங்க மாட்டோம்" என்று நபிகள் நாயகம் சொன்னதாக நாம் படித்து உள்ளோம். அதில் உள்ள ஞானம் குடியாட்சி தத்துவத்தில் புரிகிறது.

முடிவுரை:

மக்களின், மக்களாட்சி தத்துவத்தின் பண்பு இதுதான். வாரிசு அரசியலை தவிர்க்க முடியாது. வாரிசு அரசியலுக்கு எதிராக நம்மை தூண்டி விடுபவன் நாளை ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் அவன் முதலில் ஒடுக்குவது வாரிசு அரசியலுக்கு எதிராக பேசும் நம்மைதான். அவனும் வாரிசு அரசியல் தான் செய்வான்.

தொண்டர்கள் இலட்ச கணக்கில் இருந்தால் தான் ஒரு கட்சி நிலைபெறும். அதற்காக தொண்டர்கள் எல்லோருக்கும் பெரும் பதவிகள் வழங்க முடியாது ஏனென்றால் பெரும் பதவிகளில் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு அவரவர் தகுத்திக்கு ஏற்ப வாய்ப்புகளும் பதவிகளும் வழங்க முடியும். இது திமுக-வில் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியிலும் இதுதான் நிதர்சனம்.

சுருக்கமாக சொன்னால் நமது விருப்பம் வேறு அதன் பண்பு வேறு. நெருப்பு குளிர வேண்டும் என்று நாம் விரும்பலாம் ஆனால் சுடுவதும் எரிப்பதும் தான் அதன் பண்பு.

குடியாட்சியில் வெறிகொண்டு ஓடி ஒவ்வொருவரையும் எரிமிதித்து ஒழித்து துரோகம் செய்து கொலை செய்து மிரட்டி அநியாயம் செய்து ஒருவன் பதவியில் அமர்கிறான் அவனை நேர்மையாக ஒழுக்கமாக இல்லை என்று கூறுவது நகைப்புக்குறியது. இதுதான் குடியாட்சியின் பண்பு. 

https://ta.quora.com/குடும்ப-கட்சி

மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து..!

தமிழர் சமயம்


துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே - புறநானூறு 287

சொற்பொருள்:

துடி = ஒருவகைப் பறை
எறிதல் = அடித்தல்
புலையன் = பறை அடிப்பவன்
எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
இழிசினன் = பறையடிப்பவன்
மாரி = மழை
பிறழ்தல் = துள்ளுதல்
பொலம் = பொன்
புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
அண்ணல் = தலைமை
இலங்குதல் = விளங்குதல்
வால் = வெண்மை
மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
நுதி = நுனி
மடுத்தல் = குத்துதல்
பீடு = பெருமை
வியன் = மிகுதி
கூடு = நெற்கூடு
தண்ணடை = மருத நிலத்தூர்
யாவது = எது (என்ன பயன்?)
படுதல் = இறத்தல்
மாசு = குற்றம்
மன்றல் = திருமணம்
நுகர்தல் = அனுபவித்தல்
வம்பு = குறும்பு
இம்பர் = இவ்விடம்
காண்டீரோ = காண்பீராக 
மகளிர் - பெண்கள் (பன்மையில்) 
துடி - யானை 
இலங்குவால் - படினே 
மாசில் - வரவே

பொருள்:

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: போரில் இறந்தவர்கள் மேலுலகத்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

இந்து மதம் 


Agni, may we, beyond decay, invited, in the third heaven, feast and enjoy the banquet. These women here, cleansed, purified, and holy, I place at rest singly - [Atharva VedaHYMN CXXII:5]

அக்னிசொர்க்கவாசிகளை விருந்துக்கு அழைஅவர்களுக்கு தேவையானதை சாப்பிட கொடுஅவர்கள் பெண்களோடு சந்தோஷமாக இருக்கட்டும்நல்லவிதமாக உறங்கட்டும். மேலும் அந்த பெண்கள் தூய்மையானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சொற்பொருள்: Women  - பெண்கள் (பன்மையில்)


இஸ்லாம்

"பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்" - [திருக்குர்ஆன் 44:51-54]

"மேலும், உன்னதமான விரிப்புகளில் அமர்ந்திருப்பர். நிச்சயமாக ஹூருல் ஈன் என்னும் பெண்களைப் புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி; அப்பெண்களைக் கன்னிகளாகவும்; தம் துணைவர் மீது பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புறத்தோருக்காக ஆக்கி வைத்துள்ளோம்" - [திருக்குர்ஆன் 56:34-38]

"அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் இரு சாராருடைய இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்" - [திருக்குர்ஆன் 55:56-58]

கிறிஸ்தவம்

 அப்பொழுது பேதுரு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோம்; அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னைப் பின்பற்றிய நீங்கள் மறுபிறப்பில் மனுஷகுமாரன் தம்முடைய மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது, ​​நீங்களும் பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். . என் பெயருக்காக வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, நிலங்களையோ கைவிட்ட எவனும் நூற்றுக்கு மடங்காகப் பெற்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வான். ஆனால் முதலில் இருப்பவர்களில் பலர் கடைசியாக இருப்பார்கள்; மற்றும் கடைசியாக முதலில் இருக்கும். (மத்தேயு 19:27 – 29)

குறிப்பு: இது இம்மையை குறிக்கிறது என்று சிலர் வேறு சில வசனங்களை ஆதாரமாக காட்டுவர். ஒரு மனைவியை கர்த்தருக்காக கைவிட்டு நூறு மனைவியைப் பெற்ற நபரை சம காலத்திலோ, வரலாற்றிலோ அல்லது பைபிலிலோ யாரேனும் உண்டோ? மனைவியை விடுங்கள், அவ்வாறு நிலத்தை பெற்றவர் உண்டோ?  மேலும் நித்திய ஜீவன் என்றால் மரணமில்லா வாழ்வு என்று பொருள். எனவே இவையனைத்தும் இம்மையில் அல்ல, மறுமையில் என்று தெளிவாகிறது.

சொற்பொருள்: நூறு மனைவி - மணமுடிக்கும் பெண்கள் பன்மையில் 

முடிவுரை

இஸ்லாத்தில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் "ஹூருல் ஈன்". 

    • திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பதை புனிதமாக அருளாக வரமாக ஏற்கும் நாம், சுவர்க்கத்தில் அவரவர் தியாகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ப அழகிய பெண்களை மணமுடித்து வைப்பதாக இறைவன் வாக்களிப்பதை ஏன் இழிவாக பேசுகிறோம்
    • இவ்வுலகில் தான் மணமுடிக்கும் பெண் ஒழுக்கமாக இருக்க விரும்புவோர் அதன் காரணமாக தானும் ஒழுக்கத்தை பேன கருதி (கண், கை, மனம் உட்பட அனைத்து உறுப்புகளும் செய்யும்) விபச்சாரத்தை விட்டு விலகி நிற்கின்றனர். அதே போல மறுமையில் தூய பெண்களை அடைய ஒருவர் இவ்வுலகில் தூய்மையாக இருப்பது அடிபப்டை. அவ்வாறு ஒழுக்கத்தை பேணுவோருக்கு இவ்வாறு பரிசு இறைவனால் கொடுக்கப்படுத்தல் எந்த விதத்தில் பிழை. 
    • அவ்வாறு இவ்வுலகில் ஒழுக்கத்தை பேணுபவர்களுக்கு மறுமையிலும் குற்றமற்ற பாசமுள்ள யாரும் அறிந்திராத யாரும் தீண்டாத அழகுள்ள பெண்களை இறைவன் மனம் முடித்து தருவதாக சொல்வது எப்படி கேவலத்துக்கு உரியதாகும்? 

ஆனால் இது இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மறைநூல்களிலும், அனைத்து சமயங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. 

தமிழர்களோ அல்லது இந்துக்களோ அவரவர் மறைநூல் என்ன வென்று ஆய்ந்து அறியாதிருப்பதும், அறிந்தவர்கள் முயன்று கற்காதிருப்பதும் மறை நூல்களை இழித்து பேச வசதி ஏற்படுத்தி தருகிறது. 

பலதாரமணம் பிழையாகவும் ஆபாசமாகவும் இன்று சொல்லப்படுவதால் இந்த நிலை இருக்கலாம். ஆனால் இந்த கருத்து சமீப காலத்தில் ஏற்படுத்தப் பட்டது. 

மேலும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக தங்களை கருதும் சில தத்துவ பின்புலத்தோரும், தனி நபர்களும் அருவருக்கும் வகையில் இதை விமர்சிப்பதற்கான காரணம் அவர்களின் உள்ளத்தில் உள்ள அருவருப்புகளே. இவ்வாறு முற்போக்கு பேசும் நபர்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் போற்றும் சேகுவேரா, மார்க்ஸ், பெரியார் போன்றோர்கள் சில உதாரணங்கள். 

காசா? கடவுளா?

தமிழர் சமயம்


செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. - (திருமந்திரம் 126)

பொருள்: நிலையா இவ்வுலக வாழ்வின் உண்மையை அறியாமை மட்டுமல்லாமல் நிலைக்குமென்று மாறுபடக் கொள்வோர் புல்லறிவாளராவர். அத்தகையோர் சிலரையேனும் பலரையேனும் கேடுறு செல்வங் கருதிப் பாடிப் பரவிப் பணிந்து போற்றி வாடுறுதல் வேண்டா. புக்கில்லாகிய வீடுபேற்றினைக் கருதி முழுமுதல் இறைவனை தொழுங்கள். தொழுதால் இம்மை, உம்மை, அம்மை என்னும் முத்திறச் செல்வமும் முறையாகக் கைகூடும். அதற்கு ஒப்பு சிறந்த வில்லேருழவனாகிய வில்லி (வேடன்) எய்த விற்குறி தப்பாமல் கைகூடியதென்ப.

இஸ்லாம்

...அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்.... - (குர்ஆன் 104)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. - (குர்ஆன் 102:1)

பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. - (குர்ஆன் 3:14)


கிறிஸ்தவம்

ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார். - (லூக்கா 16:13)

அகண்ட பாரதத்திற்கான தருணம் வந்துவிட்டதா? இலங்கை, நேபாளம் மாற்றங்கள் திவால்கள் இதனை உணர்த்துகின்றனவா?

RSS இன் அகண்ட பாரத கனவு Zionist-இன் Greater Isreal-லிருந்து உருவானது.

Zionism இறை நம்பிக்கை அற்ற தங்களை உலகின் மிக உயர்ந்த இனமாக கருதிய மெத்தப் படித்த யூத இன வாதிகளால் உருவாக்கப்பட்டது. அவர்கள் Greater Isreal இலக்கை அடைய எந்த அறத்தையும் பின்பற்ற தேவையில்லை ஏனென்றால் யூதர்களை தவிர அனைவரும் கோயிம்கள் - அதாவது கால்நடைகள் என்று நம்புபவர்கள். (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலிலிருந்து)

RSS உம் இறைநம்பிக்கையற்ற இனவாதம் பேசும் ஓரளவு படித்த பார்ப்பன கூட்டத்தால் விதையிடப்பட்டது. சாவர்க்கர் zionist-ஐ ஆதரித்தவர் அவர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பது வரலாற்று உண்மை. பிராமணர்களை விட மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பது அவர்கள் கோட்பாடு.

இப்படி இரு குழுவினருக்கும் ஒற்றுமைகள் பல. ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவென்றால், பிராமணர்களுக்கு எப்படி அவர்களை தவிர இந்த தேசத்தில் உள்ள அனைவரும் தாழ்ந்தவர்களோ அதேபோல யூதர்களுக்கு அவர்களை தவிர உலகில் உள்ள, பிராமணர்கள் உட்பட அனைவரும் கோயிம்களே.

RSS அகண்ட பாரத கனவை நனவாக்கினால் உலகை ஆளும் கனவுடன் நடைபோடும் யூதர்களளின் திட்டத்துக்கு உதவுமே தவிர இவர்களுக்கு உதவாது. இந்த பிராமணர்கள் அந்த சமயத்தில் யூதர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாவர்.

யூதர்கள் நேரடியாக உலகனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இது போல ஓர் குழுவினரை முடக்கிவிட்டுள்ளனர். வல்லவனுக்கு வல்லவனாக தான் யூதன் செயல்படுவான். பல கோடி மக்களை கட்டுப்படுத்துவதை விட, பல சிறு குழுக்களை கொண்டு பல கோடி மக்களை கொன்று கட்டுப்படுத்தி, அவர்களை இந்த சியோனிச குழு கட்டுபடுத்தும் படி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இன்று உள்ள அனைத்து வகையான முரணான அரசியல் தத்துவங்களும் பெரும்பாலான நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலமும் அவர்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.

அம்பேத்கார் 60-க்கும் மேற்பட்ட நாட்டின் அரசியலமைப்பை படித்து அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்ததாக நாம் அறிவோம். அவற்றில் பெரும்பாலானவை யூதர்களால் வடிக்கப்பட்டது. அம்பேத்காரின் இந்த பணியில் அவருடன் உடன் இருந்த உதவியாளர் ஒரு யூத பெண்மணி. இது தற்செயலானது அல்ல.

நவீன கால நாத்தீகத்துக்கு காரணமாக இருக்கும் பொதுவுடமை தத்துவத்தை வடிவமைத்த மார்க்ஸ் ஒரு யூதர் - இப்படி இனத்தை காரணமாக சொல்வது சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதனை இங்கே குறிப்பிட காரணம் கார்ல் மார்க்ஸ் மீது தத்துவ ஆதிக்கம் செலுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மோசஸ் ஹெஸ் என்கிற ஆரம்ப கால ஜியோனிச வடிவமைப்பாளர். நான் வாசித்தவரை மார்க்ஸ் தனது வர்த்தைகளுக்கு நேர்மையாக நடந்து கொண்டவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் ஒருவரின் உள்ளத்தை யாராலும் அறிய முடியாது. மேலும் யூதர்களிலும் நல்லோரும் உள்ளனர் என்பது என் கருத்து. ஆனால் நஞ்சு எண்ணம் கொண்ட ஹெஸ் போன்றவர்களால் தூண்டிவிடப்பட்ட நெருப்பு மார்க்ஸ் என்று கருதாமல் இருக்க முடியவில்லை.


போதுவுடமைக்கு எதிராக தமிழ் சமூகத்தில் இருந்து சங்கி அல்லாத ஒரு குரல் வருவது ஆச்சரியமாக இருக்கலாம். அது ஆண்ட (சீனா, ரஷ்யா, கொரியா) நாடுகளின் வரலாற்றையும் சமகால செய்திகளையும் வாசித்து இருக்கிறோமே.



மக்களாட்சியும் குறையுள்ளதுதான், இன்றுவரை காமராசரைத்தான் உதாரணத்துக்கு அழைக்கிறோம். ஆனால் அவர் ஒரு விதிவிலக்கு. மக்களாட்சியின் பண்பு இன்று உள்ளது போலத்தான் என்றும் இருக்கும்.

இவர்கள் சில நியதிகளை நாம் அறிவது அவசியம்.

    • உலகில் ஆதிக்க பீடத்தில் ஒருசில நூறாண்டுகளை தாண்டி எவரும் இருந்ததில்லை
    • இன்றைய அடிமை நாளைய அரசன்
    • இன்றைய அரசன் நாளைய அடிமை
    • வரலாற்று காலம் மிகச் சிறியது, நம் காலமும் பிற்காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலமாக கருதப்பட வாய்ப்புள்ளது - மாயன் கல்வெட்டுகளும், அரேபிய பள்ளத்தாக்குகளும், மெசப்பட்டோமியாவும், சிந்து சமவெளியும், கீழடியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.
    • நமது ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு கூலி வழங்கப்படும்
    • மீளா நரகமும் சொர்கமும் அனைத்து சமயங்களும் சொல்லும் உண்மை.

எனவே அந்த நியதிகளை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

முடிவுரை:

RSS-இன் திட்டமும் வழிமுறையும் ஒன்று zionism-மிடமிருந்து காப்பியடித்தது அல்லது அவர்களால் வடித்து தரப்பட்டது. அகண்ட பாரத்துக்கு நேரம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உயரம் செல்ல செல்ல வீழும் நேரம் அருகில் உள்ளது. அழிவதுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?

source : https://ta.quora.com/அகண்ட பாரத கனவு