வெட்கம் (அ) நாணம்

தமிழர் சமையம்


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. - குறள் 1012

உரை: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; மாந்தருக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று. - முதுமொழிக் காஞ்சி 1:6

நலன் உடமையின் - அழகுடைமையை விட
நாணு - நாணமுடைமை

பொருள்: அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது. - முதுமொழிக் காஞ்சி 4:3

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

பொருள்: வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்

இஸ்லாம் 


அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 2 புகாரி பாடம் : 16 24.

“மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், ‘உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்’ என்பது” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். (நூல்; புஹாரி, 6120)


3 கருத்துகள்:

  1. குறள் 951:
    இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.

    மு.வரதராசனார் உரை:
    நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

    http://www.thirukkural.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%200951-0960

    பதிலளிநீக்கு
  2. குறள் 952:
    ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்.
    கலைஞர் மு.கருணாநிதி உரை:
    ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
    மு.வரதராசனார் உரை:
    உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

    பதிலளிநீக்கு
  3. “ஒருவன் அவனது மனைவியை விவாகரத்து செய்கிறான்.
    அவள் அவனை விட்டு விலகுகிறாள்.
    அவள் இன்னொருவனை மணந்துகொள்கிறாள்.
    அவனால் அவனது மனைவியிடம் மீண்டும் வர முடியுமா? இல்லை!
    அவன் அந்தப் பெண்ணிடம் மீண்டும் போனால் பிறகு அந்நாடு ‘அழுக்காகி’ விடும்.
    யூதாவே, பல நேசரோடே (பொய்த் தெய்வங்களோடு) நீ ஒரு வேசியைப்போன்று நடந்தாய்.
    இப்போது நீ என்னிடம் திரும்பி வா!”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    2 “யூதாவே, மலை உச்சிமீது கண்களை ஏறெடுத்துப் பார்.
    உன் நேசர்களோடு (பொய்த் தெய்வங்கள்) பாலின உறவுகொள்ளாத இடம் ஏதாவது இருக்கிறதா?
    ஒரு அரபியன் பாலைவனத்தில் காத்திருப்பதுபோன்று நீ சாலை ஓரத்தில்,
    உன் நேசர்களுக்காகக் காத்திருந்தாய்.
    நீ இந்த நாட்டை ‘அசுத்தம்’ பண்ணிவிட்டாய்! இது எப்படி?
    நீ பல தீயச் செயல்களைச் செய்தாய்.
    எனக்கு விசுவாசமற்றவளாக இருந்தாய்.
    3 நீ பாவம் செய்தாய்.
    எனவே மழை பெய்யவில்லை.
    மழைகாலத்திலும் மழை பெய்யவில்லை.
    ஆனால் இன்னும் நீ வெட்கப்பட மறுக்கிறாய்.
    ஒரு வேசி வெட்கப்பட மறுக்கும்போது அவளின் முகம்போன்று,
    உன் முகத்தின் தோற்றம் இருக்கிறது.
    நீ செய்தவற்றுக்காக, வெட்கப்பட மறுக்கிறாய்.
    4 ஆனால் இப்போது என்னை நீ ‘தந்தையே’ என்றழைக்கிறாய்.
    ‘நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நீர் எனது நண்பனாக இருந்தீர்’ என்று கூறுகிறாய்.
    5 ‘தேவன் எப்பொழுதும் என்மீது கோபங்கொள்வதில்லை.
    தேவனுடைய கோபம் எப்பொழுதும் தொடராது’
    என்றும் கூறுகிறாய்.
    https://www.biblegateway.com/passage/?search=Jeremiah+3%3A1-25&version=ERV-TA

    பதிலளிநீக்கு