தமிழர் சமயம்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:339)
பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
இஸ்லாம்
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை {தன்னிடத்தில் } நிறுத்திக் கொள்கிறான். மீதிள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை {வாழ}அனுப்பி விடுகிறான். - (திருக்குர்ஆன் 39:42)
கிறிஸ்தவம்
இவைகளைச் சொன்னபின், அவர் அவர்களிடம், "நம்முடைய நண்பன் லாசரு தூங்கிவிட்டான், ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்றார். சீடர்கள் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கிவிட்டால், அவர் குணமடைவார்" என்றார்கள். இப்போது இயேசு அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் அவர் தூக்கத்தில் ஓய்வெடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம் தெளிவாக, “லாசரு இறந்துவிட்டார். (ஜான் 11:11-14 )
11 - இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
பதிலளிநீக்கு12 - அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
13 - இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
14 - அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;
https://www.tamil.biblewordings.com/john-11/
3:145. யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.
பதிலளிநீக்கு39:42. மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும்பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம் வரையில் வாழ அவன் அவர்களிடமே அனுப்பி விடுகின்றான். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன
பதிலளிநீக்கு