தூக்கமும் இறப்பும்

தமிழர் சமயம் 


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்: நிலையாமை குறள் எண்:339)

பரிமேலழகர் உரை: சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும்(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)

இஸ்லாம் 


அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை {தன்னிடத்தில் } நிறுத்திக்  கொள்கிறான். மீதிள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை {வாழ}அனுப்பி விடுகிறான். - (திருக்குர்ஆன் 39:42)

 

கிறிஸ்தவம்  


இவைகளைச் சொன்னபின், அவர் அவர்களிடம், "நம்முடைய நண்பன் லாசரு தூங்கிவிட்டான், ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்" என்றார். சீடர்கள் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கிவிட்டால், அவர் குணமடைவார்" என்றார்கள். இப்போது இயேசு அவருடைய மரணத்தைப் பற்றிப் பேசினார், ஆனால் அவர் தூக்கத்தில் ஓய்வெடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம் தெளிவாக, “லாசரு இறந்துவிட்டார். (ஜான் 11:11-14 )

கடவுள்களில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா?

கடவுள்கள் பல இருந்தால் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன். - (குர்ஆன் 21:22)

ஆனால் அதிஷ்டவசமாக ஒரே தெய்வம் தான் உள்ளது.


தமிழர் சமயம் 

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்

சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;

புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்

பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு - (அகத்தியர் ஞானம் 1:1)

 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (ஞானம் - 1:4)

கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - (திருமந்திரம்)

பதவுரை: ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்


எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்

பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்

எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ

உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (சிவவாக்கியர் 224)

 

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ

இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ

அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ

வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே - சிவவாக்கியம் 133

கருத்து: உங்களின் இறைவன் இவன், எண்களின் இறைவன் இவன் என்று வேறு வேறு கிடையாது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே.


இஸ்லாம் 

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. இறைவன் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - (அல்குர்ஆன் 112:4)

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

கிறிஸ்தவம் 

இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கர்த்தர் ஒருவரே - (மாற்கு 12:29)

இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! - (உபாகமம் 6:4)

கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் அரசன். நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். - (2 இராஜாக்கள் 19)

நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்! நீர் வானத்தை உண்டாக்கினீர்! நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்! நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்! நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்! தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்! - (நெகேமியா 9:6)

அந்த சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்திற்கும் பூமியிற்கும் ஆண்டவரே! இவைகளைஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து , பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோதிக்கிறேன். [மத்தேயு 11:25]

முடிவுரை

சிவனைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று தமிழர் அறமும்,

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று இஸ்லாமும்,

கர்த்தரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கிறிஸ்தவமும்

கூறுவதை எப்படி புரிந்து கொள்வது?

  • வெவ்வேறு கடவுள்கள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களை பின்பற்றுபவர்களை அதிகரிக்க போட்டி போடுகின்றன என்று புரிந்து கொள்வதா?
  • அல்லது ஒரே இறைவன் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயருடன் அறியப்படுகிறான் என்று புரிந்து கொள்வதா?

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்லும் பொழுது கோபத்தின் உச்சத்தை அடையும் சகோதரர்கள், அவரவர் குருமார்களான சித்தர்களால், மெசாயாக்களால், ரிஷிகளால் படத்த இறைவனை மட்டுமே வணங்குமாரு போதிக்க பட்டுள்ளனர்.

உலகின் இறுதி தூதர் (நபி, ரசூல், மெசாயா, சித்தர், நாதன், குரு, ரிஷி) மூலம் மற்றும் இறுதி வேதம் இதை பற்றி தெளிவாக கூறுகிறது.

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளிக்கும்ஏக இறைவனை தவிர மற்ற வாங்கப் படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (திருக்குர்ஆன் 16:36)

தீர்க்கதரிசிகளை வணங்கலாமா?

தமிழர் சமயம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - திருமந்திரம் 2104

ஒரே ஒரு தெய்வம்தான் அவனை விட்டால் புகும் கத்தி வேறு இல்லை என்று பாடிய திருமூலருக்கு கோவில் அமைத்து தெய்வமாக வணங்கப் படுகிறது. 
 
 

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - அகத்தியர் ஞானம் - 1:4

தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும் என்று பாடிய அகத்தியருக்கு கோவில் அமைத்து தெய்வமாக வணங்கப்படுகிறது. 


கிறிஸ்தவம்

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.”— (மத்தேயு 23:9) என்றும் 

 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவருக்கு மட்டுமே பணி செய்’ என்று எழுதியிருக்கிறது” என்றார். (லூக்கா 4:8என்றும் 

சொன்ன தீர்க்கதரிசி இயேசுவிற்கு உருவம் கொடுக்கப்பட்டு ஏசப்பா என்று அழைக்கப்பட்டு உலகம் முழுதும் வணங்கப்பட்டு வருகிறது. 
 

 இஸ்லாம் 

மேலும், “தேவர்களையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா? - (குர்ஆன் 3:80) 

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்:9:31

அளவுக்கு அதிகமாக தூதர்களை புகழும் சமீபத்திய உதாரணம்.



படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17)

இஸ்லாம் 

"அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது" - (மெயில் ஆப் இஸ்லாம்)

முடிவுரை 


உருவவழிபாடு கூடாது அது மாபாதக செயல் என்று இந்து, இஸ்லாம் கிறிஸ்தவம், தமிழர் சமயங்கள் உள்ளிட்ட அனைத்து உலக வேதங்களை வாசித்தால் ஒரு லட்சம் தடவைக்கு குறையாமல் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதை போதித்த மகான்களையே வணங்குவதென்பது பரிதாபத்துக்கு உரியது. 

இறைவனின் சவால் : உங்கள் தெய்வங்களை பேச சொல்லுங்கள் பார்ப்போம்

கிறிஸ்தவம்


“நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்!  என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். (ஏசாயா 44:8)

கர்த்தரும், விக்கிரகங்களும்
1 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்லாம் 


இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ளமாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப்பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.  அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரைஅழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும்கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்குஉதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (அல்குர்ஆன் 7:192-197)

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். - (அல்குர்ஆன் 21:92)

தமிழர் மதம்


“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ - சிவவாக்கியர் பாடல்-520


பெருமை

தமிழர் மதம்


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

பொருள்: யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும். தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது. 
 
அறிவுடைமை மீக்கூற்றம் ஆனகுலனே
உறுவலி நற்றவம் ஓங்கியசெல்வம்
பொறிவனப்பின் எம்போல் வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்பு இல. - (அறநெறிச்சாரம் எட்டுவகையான செருக்கு பாடல் - 65)

விளக்கவுரை அறிவு உடைமையாலும், புகழாலும், உயர்ந்த பிறவியாலும், மிக்க வலிமையாலும், நல்ல தவத்தினாலும், உயர்வான செல்வத்தாலும், நல் ஊழாலும், உடல் அழகாலும் எம்மைப் போன்றவர் இல்லை எனச் சொல்லி மகிழ்ச்சி அடையும் எட்டு வகையான செருக்கும் இறுதியில் இன்பம் செய்யா. 

பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.  (முதுமொழிக் காஞ்சி 7:8)
 
பதவுரை: நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல் - 

பொருள்பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.

பலகற்றோம் யாம்என்று தற்புகழ வேண்டர்
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல். - (அறநெறிச்சாரம் தற்புகழ்ச்சி கூடாது பாடல் - 79)

விளக்கவுரை பரந்த கதிர்களையுடைய கதிரவனைக் கையில் உள்ள சிறிய குடையும் மறைக்கும். (ஆகவே) யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. (ஏனென்றால்) பல நூல்களையும் ஆராய்ந்து கற்றவர் கட்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களையே கற்றவரிடத்தும் இருக்கும்.

 

இஸ்லாம் 


இப்னு மஸ்ஊத்  رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : முஸ்லிம்) 
 

கிறிஸ்தவம் 


அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (1 பேதுரு 5:5)

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] அறுத்துப்போடுவார்.”—(சங்கீதம் 12:2-4)

கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன. - (நீதிமொழிகள் 214)

உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.  - (நீதிமொழிகள் 30:32)

ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும். (நீதிமொழிகள் 22.10)

தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்

தமிழர் சமயம்

 

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை. (குறள்: 439


பதவுரை:
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல். வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை.
நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்
நன்றி - நன்மை; உதவி; அறம்.
பயவா - பயக்காத, தாராத, பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
வினை- செயல் 
 
உரை: எந்தக் காலத்திலும் தன்னை வியந்து பாராட்டி நலலவனாகக்கருதி உயர்வாக நினைக்கும் நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
- [பொருட்பால், அரசியல், வலியறிதல்குறள் 474]

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்

“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)

உரை:  எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிக்கும் பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)

உரை: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).  

இஸ்லாம் 

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்) பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப் படமாட்டார்கள். (குர்ஆன் 4:49) 

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

கிறிஸ்தவம்

ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறவனே நல்லவன். (2 கொரி 10:17-18

இயேசு கூறினார் "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே" (மத்தேயு 19:17, மாற்கு 10:18

கடவுள் பாவிகளின் ஜெபங்களுக்கு அவர்கள் நின்று, ஜெபித்து, தங்களைத் தாழ்த்தும்போது அவர்களுக்குப் பதிலளித்தார். “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ண கோவிலுக்குள் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். "பரிசேயன் நின்று தனக்குத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தான்: 'கடவுளே, நான் மற்றவர்களைப் போல அல்ல: மோசடி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது இந்த வரி வசூலிப்பவர்களைப் போல இல்லை. 'வாரத்தில் இருமுறை நோன்பு நோற்பேன்; எனக்குக் கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கிறேன்.' "ஆனால் வரி வசூலிப்பவர், சிறிது தூரத்தில் நின்று, வானத்தை நோக்கி தனது கண்களை உயர்த்தக்கூட விரும்பவில்லை, ஆனால் கடவுளே, பாவியான என்மீது கருணை காட்டுங்கள்!" என்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தார். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் மற்றவனை விட நியாயமானவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் தாழ்த்தப்படுவார்கள், ஆனால் தன்னைத் தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார். - (லூக்கா 18:10-14)

 54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். (யோவான் 8)

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. (1 கொரி 13:4)

இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.  (1 சாமுவேல் 2:3

அனைத்து வேதங்களும் சொல்வது என்ன?

இந்துமதம் 

‘எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்லுகின்றன’ என்று உபநிஷத் சொல்கிறது (கடோபநிஷத் II.15).  


இஸ்லாம்

அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் தாகூத்தை  விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (குர்ஆன் 16:36)


கிறிஸ்தவம்

இயேசுவிடம் ஒருமுறை ஒரு வேதபாரகன் கேட்டான். “கற்பனைகளில் பிரதானமான கட்டளை எது?” இயேசு உபாகமம் 6:5 மற்றும் லேவியராகமம் 19:18 லிருந்து இரண்டு வசனங்களில் பதிலளித்தார்.

"இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே ..."


தமிழர் மதம்

 


கே.ஜி.எப் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

திரைப்படத்தில் கெட்ட குணமுடைய, செயலுடைய ஒருவரை மக்கள் திட்டி தீர்த்த ஒரு காலமுண்டு.

பணத்துக்காக ஒருவன் ஒரு கொலையோ திருட்டோ செய்தால் அந்த கதாபாத்திரம் இழிவாக பார்க்கப் பட்டது.

ராதா ரவி ஒரு நேர்காணலில் சொன்னார் "மக்கள் காரி துப்பனும், அப்பத்தான் நான் என் வில்லன் பாத்திரத்தை சரியாக செய்ததாக நான் நம்புவேன்" என்றார். ஏனென்றால் பொது மக்களின் மன நிலை அப்படி இருந்தது. சாதாரணமான மக்களில் பெரும்பாலானோர் கெட்டதை வெறுத்தார்கள், அதை அவமானமாக கருதினார்கள்.

KGF-இன் வெற்றி மட்டுமல்ல இது போன்ற ஒவ்வொரு படத்தின் வெற்றியும் மக்களின் மனநிலையை பிரதி பலிக்கிறது. அதன் காட்சி அமைப்பு, பிரமாண்டம் மட்டும் வெற்றிக்கான காரணமல்ல, அதன் என்ன ஓட்டமும் மிகப் பிரதானமானது. கொலையும் கொள்ளையும் தற்ப்பெருமையும் குடியும் கூத்தும் தானே இந்த திரைப்படத்தில் பிரதான இடத்தை பிடித்து இருந்தது. மக்களின் மனநிலையை யூகித்து படங்கள் எடுக்கப்படுகின்றன, சரியான யூகங்கள் வெற்றி பெறுகின்றன. பலப்படங்கள் மக்களை வழிநடத்த எடுக்கப் படுகின்றன, சில சரியான வழிகளில், பல தவறான வழிகளில்.

இது ஒரு cyclic effect - மக்களால் திரைப்படமும், திரைப்படத்தால் மக்களும் மோசமாகி கொண்டே போகிறனர். பகவாதர் தூரத்தில் இருந்து "மேயாத மான்" என்று பாடியதில் துவங்கி இன்று எப்படிப்பட்ட வக்கிரத்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் அறிவோம். நாளை எங்கே செல்லும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இது போல ஒவ்வொரு ஒழுக்கநெறியையும் அறநெறியையும் உடைத்துக்கொண்டே வருகின்றன திரைப்படங்களும் அது போன்றவைகளும்.

மக்களின் மனங்களில் ஏற்படும் தவறுகளை போக்க நெறிநூல்கள் முயல்கிறது, மக்களின் தவறான மனஓட்டத்தை ஊக்குவிக்கிறது திரைப்படங்கள். நல்லதை சொல்லும் திரைப்படங்கள் வெறும் 1% தான், அதிலும் 1% தான் வெற்றி பெறுகிறது. எனவே திரைப்படத்தின் தன்மையே இதுதான். இன்னும் சொல்லப்போனால் இன்றைய வியாபாரத்தின் தன்மையே இதுதான். இலாபம் மட்டுமே நோக்கு, நல்லது கெட்டது பற்றி கவலை இல்லை.

உண்மையான இன்பம் இது போன்ற திரைப்படங்களில் அல்லது அது அழைத்துச் செல்லும் அசிங்கங்களில் இல்லை. உண்மையான இன்பம் என்பது

  • சக மனிதனை மதிப்பதில் உள்ளது
  • ஒருவன் ஏமாற்றினாலும் அவனை மன்னிப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உழைப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு தர்மம் செய்வதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உதவி செய்வதில் உள்ளது
  • ஒழுக்கமாக வாழ்வதில் உள்ளது
  • நேர்மையாக வாழ்வதில் உள்ளது
  • விட்டுக்கொடுப்பதில் உள்ளது
  • இறை நேசத்துடன் வாழ்வதில் உள்ளது
  • அறநெறிகளுடன் வாழ்வதில் உள்ளது
  • செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உயர்ந்த கூலி உண்டு என்று அறிவதில் உள்ளது

தனி மனிதனும் சமுதாயமும் தன்னை சீர்படுத்த தவறினால்..! பேரழிவு நிச்சயம்.

விண்ணுலகப் பயணம் : மிஃஹ்ராஜ்

இஸ்லாம் :

தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை 'புராக்' என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். 'புராக்' எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ''நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு 'ஸித்ரதுல் முன்தஹ்ா'விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்.
மூஸா (அலை) ''தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்'' என்று கேட்க நபி (ஸல்) ''ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்'' என்று கூறினார்கள். மூஸா (அலை) ''நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ''நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ''நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ''நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்'' என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

''நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை'' என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் 'இறங்கினார், பின்னர் நெருங்கினார்' என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. 'மிஃராஜ்' தொடர்பான ஹதீஸில் வந்துள்ள 'தனா ஃபததல்லா' என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி 'நஜ்ம்' அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று 'நஜ்ம்' அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ''நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்'' என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, 'இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்' என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை 'பெரும் பொய்யர்' என்று வருணித்தனர். ''உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை 'சித்தீக்' (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ''நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.


சான்றுகள் : 

http://tntjrahmathnagar.blogspot.com/2009/07/blog-post_8297.html
_____________________________________

சித்தர் திருமூலர் பிரபஞ்ச பயணம் 
******************************

இந்தியா PSLபி எஸ் எல் வி சி 23 என்ற
ராக்கெட்டை ஏவி 5 செயற்கை கோல்களை
ஜூன் 30 இல் விண்ணில் வெற்றிகரமாக
நிறுவியது . இந்த வெற்றியை பற்றி பாரத
பிரதமர் “பாஸ்காரரும் ஆரிய பட்டரும் செய்த
விண்வெளி ஆராய்ச்சியின் தொடர்ச்சி” என்று
புகழ்ந்துகூறினார் . நமக்கு மகிழ்ச்சிகும்
பெருமைக்கும் உரிய சாதனை .

இன்றைய வின் வெளி பயணத்தில் முக்கியம்
மானது பயண சாதனம் , வேகமும் காலமும்.
மற்ற ஒன்று திரும்பிவருவது ..

ஆனால் 4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர்
திருமூலர் இந்த பிரபஞ்சத்தை சுததிவந்த்தார் .

இப்பிரபஞ்சம் 1008 அண்டம் கொண்டது என்று
சொல்லியதுடன் அவரின் பிரபஞ்ச பயணத்தை
பதிவு செய்துள்ளார் .

உலகில் பிரபஞ்ச
பயணத்தை பதிவு செய்த முதல்
வின்வெளிபயணி திரு மூலர் . அவரின்
அனுபவம் இன்றைய விண்வெளி பயணத்திற்கு
உதவலாம் . பல சித்தர்கள் வின்வெளிபயணம்
செய்துள்ளார்கள் ஆனால் அவர்களின்
பயணபதிவுகள் நமக்கு கிடைக்கவில்லை.

இன்று வின் உலக மனிதர்கள் உள்ளர்களா
அல்லது இல்லையா எண்று விவாதிக்கிறோம் .

திரு மூலரின் வின் வெளி பயணத்தில் அவர் சந்தித்த வின் உகலக மனிதர்களையும்
பார்ப்போம் .

பிரபஞ்ச பயண தயாரிப்பு .

சித்தர்களின் உச்ச பச்ச சித்தி கெவுணம்
பாய்தல் என்ற பிரபஞ்சபயணம் .

அதற்க்கு தயாரிப்பாக . சிவயோகம் செய்து
காய சித்தி செய்து உடலை ஒளி உடலாக
மாற்றவேண்டும் இதனால் காலத்தை
வெல்லலாம் மற்றும் கன்னக்கில்லா வேகத்தில்
பயணிக்க முடியும் .

வின்வெளி பயணம்
செய்ய குளிகை என்ற சாதனம் செய்தனர் . .

குளிகை என்பது பாத ரசத்தை
மூலப்பொருளாக கொண்டது .. திரவ
பாதரசத்தை அனுமாற்றம் செய்து
திடப்பொருளாக மாற்ற வேண்டும் அதன் பின்
உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120)
பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை
(சதது) திடரூப பாதரசத்துக்கு கொடுத்து
(சாரணை ) பாதரசத்தின் நிறையை தங்கத்தின்
நிறைக்கு சமமாக கொண்டு வரவேண்டும் ..

இவ்விதம் ஒருமுறை சாரணை செய்தால்
அந்த்த குளிகைக்கு சகம் என்று பெயர் .

பதினான்குமுறை சாரணை செய்தால் “கமலினி
“என்ற குளிகை ஆகும !7 முறை சாரணை
செய்தால் “சொரூபம்” என்ற குளிகை ..

கமலினியும் சொருபமும் விண்வெளி
பயணத்திற்கு பயன்படுத்தினார்கள் . .
.
அண்டம் இருந்த்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .

ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே
சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம்
நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே
சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே.

திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353,
354

நந்தி என்ற அம்மையாப்பனாகிய சிவன்
பிரபஞ்சத்தை பற்றி விளக்கி சொன்னார் .

இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு
கொண்டது ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது ..

கமலினி என்ற குளிகையை உடலில்
அணிந்தேன் .

சொரூபம் என்ற குளிகையை
வாயில் அடக்கினேன் .,

அண்டவெளி உள்லேநுழைய அண்டத்தின்
வேகம் எனது வேகமும் ஒத்து போகவேண்டும்
. எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை
என்று நந்தி சொன்னார் .

நான் ஒளி உடம்புக்கு மாறினேன் வேகமாக
ஓடிவந்து அண்டத்துள் நுழைந்து விட்டேன்..

நான் நுழைந்த அண்டத்தில் கற்பம் உண்டு
ஞானத்தில் முதிர்ந்தத கோடிகணக்கான
சித்தர்கள்(அறிவியலார்) இருந்ததனர் .

சித்தர ஒருவரைகண்டு அவருக்கு பணிவான
வணக்கம் செய்தேன் அந்த விண்வெளி சித்தர்.என்னிடம்
“எத்தனை வகை சித்தி செய்து உள்ளீர்கள்
“என்றார் .

நான் .” அறுபது கோடி சித்திகள் அடைந்து
உள்ளேன் “. என்றேன்
அதற்கு அவர் “. இன்னும் நீங்கள் இளமையான
சித்தர். மேலும் பல சித்திகள் செய்து
பாருங்கள்” என்றார் ..

எனவே நான் அங்கிருந்து
வெளியேறினேன்
என்றே நுழைந்தேன் அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .

தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட நிராகாரத்து அடைந்த பெரியோரை
பாடல் 356

பெரியோர் தனைகண்டேன் பேராய் வலம்
வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால்
நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே.
பாடல் 357

அதன்பின் வேறு ஒரு அண்டத்துள்
நுழைந்திட்டேன்..

அங்கு சித்தர்களை
கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல்
இருந்தார்கள். .

அவர்களை கைகூப்பி
வணங்கினேன்..

தடவிப்பர்த்தேன் . அவர்கள்
தட்டுப்படவில்லை.

அவர்கள் நிராகாரன் என்ற கடவுள்நிலை
அடைந்தத பெரியவர்கள் என்று அறிந்த்தேன்
.அவர்களை வலம் வந்தேன் . அவர்கள் மௌன
யோகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்தேன்
அந்த அண்டத்து உச்சிக்கு சென்றேன்.

அதில் இருருந்த்து அடுத்த அடுக்குக்குள் விரைவாய்
நுழைந்திட்டேன்..

நுழைந்திடில் அண்டத்தில் நூல்பார்த்த
சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது ஆர்தான்
எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம் கரைகண்டு பார்த்தோமே
பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே
பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
க்லலுயிர் வெட்டுபோல் காட்டினார் பார்த்திடே
பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள்
நூல்களை பார்த்து கொண்டு இருந்தார்கள் ..

அவர்களிடம் “ இந்த்த நூல்களை எழுதியது
யார்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “ஈசன் பார்வதியிடம் சொன்ன
எழு லட்சம் பாடல்கள் . இவற்றை
ஆராய்ந்துபார்த்துவிட்டோம் “ என்றனர் .

அதற்கு நான் “ இறைவனுக்கு ஒப்பான
சித்தர்களே !! ஆராய்ந்து பார்த்தோம் என்றீர்கள்.

அதை சுருக்காத்து யேண்? “என்றேன்
அவர்கள் “ இவற்றை சுருக்க ஈசனாழும ஆகாது
. அப்படி யாராகிழும் சுருக்கியிருந்ததால் ,
அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள்
“ என்றனர்.

நான் ‘நந்தி என்பவர் உலகில் பலஉயிர்கள்
பார்த்து பயன் பெற எழுலட்சம் பாடல்களை
சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார் .

இது கல்வெட்டில் எழுதியது போன்ற
தெளிவானது . அதை படித்து பாருங்கள் “
என்றேன்.

இந்தபிரபன்ச்ம ஐந்து
மடக்குடன் 1008 அண்டம் கொண்டது என்று
சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர் இன்றைய
பிரபஞ்ச அறிவியல் காணாதது , மேலும் நமது பூமி பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் உள்ளது
என்பதை சொல்லி உள்ளார் திடுமூலர் .
அவற்றை பார்ப்போம் .

. பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல்
எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 361

படிக்கின்ற நூலில் பயனெல்லாம் சொல்லுமோ
படிக்கின்ற நூலில் பாய்சுமோ சாரணை
படிக்கின்ற நூலில் பறித்தான் குருவாமோ
படிக்கும் பதினாறும் பாங்காமோ சித்தரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 362

பாங்காமோ எட்டெட்டும் பலபல சித்தொடு
வாங்காமல் ஆடலாம் மற்றோர்க்கு கிட்டாது
தேங்காமல் தேங்கும் சிவயோக பூரணம்
தூங்காமல் தூங்கும் சொருபத்தை காட்டுமே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 363

பொருள் பாடல் 3 61
வேற்று கிரக (சித்தர்கள் ) மனிதர்கள் என்னிடம்
(திரு மூலரிடம் ) “ சிவன் எழுதிய எழு லட்சம்
பாடல்களை சுருக்கி ஆயிரம் பாடல்களாக
பாடப்பட்ட நூலை படிக்க சொன்னிரே .

அந்த
நூல் எங்கு உள்ளது:? “
என்றனர் .

நான் (திருமூலர்) “” இந்த அண்டம் உள்ள
மடக்கிற்கு( அடுக்கு ) முன்பு உள்ள அடுக்கில்
160 ௦ வது அண்டத்தில் பூமியில் சித்தர்கள்
குழுவாக விரும்பிப்படிக்கும் நூல் ( திருமூலர் ) நந்தி நூல் 1000 “
பொருள் பாடல் 3 6 2 .
மேல் உலகத்தோர் “இந்தநூல் சிவன் சொன்ன
எல்லா பயன் பாடுகளை சொல்லுமா ?
பாதரசத்திர்க்கு சாரணை செய்து குளிகை
ஆக்கும் முறை சொல்லுமா ?

தங்கத்தை குரு
மருந்தாக மாற்றும் முறை சொல்லப்பட்டு
இருக்கிறதா ? சிவன் சொன்ன பதினாறு
அத்தியாயங்கள் அதில் உண்ட ?” என்றனர்
பொருள் பாடல் 3 6 3

நான் “ இவை அனைத்தும் உள்ளது . மேலும்
64 சித்திகள் பெறும்முறை ,. பல சித்து
என்னும் அபூர்வ செயல் முறைகள்.

சொல்லப்பட்டு உள்ளது செய்து பயன்
பெறலாம் சிவயோகம் செய்முறை
முழுமையாக சொல்லப்பட்டது .

துங்காமல்
தூங்கி என்ற சொரூப சித்தி என்ற முக்தி நிலை
பெறலாம் . . இது சிவ யோகிக்கு கிடைக்கும்
பிறருக்கு கிடைக்காது .” என்றேன்
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல்

காட்டும் மென்றீர் நூலை கைக்குள்ளாறீபேர
்சொல்லும்
நாட்டிய வாசிக்கு குருநாத நந்தி தான்
கூட்டினார் சித்தர்க்குக்கொடுத்தார் தான்
இந்நூலை
ஆட்டிய மூலர் தான் அறைநத நூல் என்பரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 364

அறைநதுநீர் சொல்லவோ என்ற திருமூலர்
மறைத்தே மயங்கியே வார்த்தையால்
நீர்சொன்னீர்
குறைந்திடுமோ நூலை கொடுத்தாக்கால்
பூரணம்
உரைதேழு லட்சமும் ஒண்ணாக் கரிதென்னே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 365

அரிதல்ல காணும் அகப்பட்டால் வாசிதான்
புரிதல்ல மூலத்தில் புகட்டினால் வாசியை
எருதல்ல நந்தி எழுநூறும் ஒணறாகப
பெரிதல்லோ நூலை பேசவறி நீரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 366
பொருள் பாடல் 364

“சொருப சித்தியை காட்டும் நூல் எழுதியவர்
பெயர் சொல்லுங்கள்”
என்றனர் ( வேறு உலகத்தார் )
நான் “ எனக்கு வாசி யோகம் சொல்லிக்
கொடுத்து இந்த நூல் எழுத குருவானவர்
நந்தி என்ற சிவன் .

அதை சுருக்கி எழுதி
சித்தர்களுக்கு கொடுத்தவர் திரு மூலர் என்று
சொல்லு வார்கள் “ என்றேன் .

பொருள் பாடல் 365

“சிவன் சொன்ன ஏழுலட்சம் பாடலை சுருக்கி
எழுதுவது அரிதான செயல் . அத்தகைய
அருமையான நூலை திரு மூலனாகிய நான்
எழுதினேன் என்றால் நூலின் பெருமை
குறைந்து விடும் என்று கருதினீர்கள் .

ஆகையால் நூல் எழுதியவர் பெயரை
மறைத்தும் தெளிவாக சொல்லாமல்
மயக்கியும் நீர் சொன்னீர் “ என்று
சொன்னார்கள் வேறு உலக வாசிகள்
பொருள் பாடல் 366

பேசுவதற்கு அரிதான நந்தி எழுதிய
எழுலட்சம் பாடல்களை அவரே சுருக்கி 7 0 0
பாடல்களாக எழுதி உள்ளார் .

மூலாதாரத்தில்
இருந்து வாசி யோகம் செய்து வாசி யோகம்
சித்தி பெற்றவருக்கு .

இவ்விதம் சுருக்கி
எழுதுவது அரிதான செயல் இல்லை . வாசி
யோகா சித்தர்கள் பெற்ற உயர்ந்த அறிவால்
சிவனின் பாடல்களை.. புரிந்து அதன் சாரத்தை
சுருக்கி விடுவார்கள் .

இந்த பாடல்களில் ஒரு பெரிய உணமை
உள்ளது . சிவன்இந்த பூமியிலுள்ளவர்களுக்கு.அறிவியல் போதித்து உள்ளார் .

மேலும்
வேற்று உலக மக்களுக்கும் அதே அறிவியல்
சொல்லி உள்ளார் . .
  

melum vaasikka :' https://araneriislam.blogspot.com/2019/10/blog-post_78.html

அநீதி செய்பவனின் நிலை

தமிழர் சமயம் 

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (குறள் 116)

உரை: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

இஸ்லாம் 

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர். (குர்ஆன் 6:45)

கிறிஸ்தவம் 

ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. (யோபு 34:10)



தீதும் நன்றும் பிறர்தர வாரா

தமிழர் மதம்


தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறநானூறு:192

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - குறள் 505

 பொருள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் செயலே.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். - குறள் 319

பொருள் முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே (திருமந்திரம் - 1647)

விளக்கம்புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!

கிறிஸ்தவம்


இறந்து போனவர்கள் அவர்களது செயல்களால் நியாயம் தீர்க்கப்பட்டனர். - வெளி 20:12

தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுவார்கள். நீதிமொழிகள் 14:14

“ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

இஸ்லாம்


ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். திருக்குரான் - 45:22.

நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும் - 17.7. 

(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான். - 4:123. 

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். - 4:124. 

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. 2:281.