கடவுளை வாசித்து அறிதல்

 தமிழர் சமயம்

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளங்கின் சுடர்அறி யாரே (திருமந்திரம் 1:128)

பொருள் : பல ஆண்டுகள் கழிந்தோடின. உயிர்த் தந்தையாகிய இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலைபெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை; நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் தூண்டுகின்ற விளக்கின் சுடர்போன்ற இறைவனை உலகவர் அறியாதவர்களாக உள்ளனர்.

குறிப்பு: இறைவனை அறிய முயற்சி செய்ய வேண்டும் என்று இந்த பாடல் கூறுகிறது. 

 கிறிஸ்தவம் / யூதம் 

கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும் (நீதிமொழிகள் 9:10

இஸ்லாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பதுபெயர்கள் உள்ளன. அவற்றை பொருள் அறிந்து (அந்த பண்புப் பெயர்கள் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். (புகாரீ 2736)

 நபி(ஸல்)அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக இறங்கிய அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

அவனைத் தவிர வணக்கத்திற்குரிய தெய்வம் இல்லை என்பதற்கு அல்லாஹ் (அவனே) சாட்சியாக இருக்கிறான், மேலும் வானவர்களும், கற்றறிந்தவர்களும் சாட்சிகளாக உள்ளனர். இதற்கு). அவனுடைய படைப்பை நியாயமாகப் பராமரித்தால், எல்லாம் வல்ல, ஞானமுள்ள அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. [3:18]

அறிந்தவர்கள் அறியாதவர்களுடன் சமமா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” . [39:9] 

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (35:28)

 மேலும் இந்த உருவகங்களை நாம் மனித குலத்திற்காக உருவாக்குகிறோம், ஆனால் அறிவுடையவர்களைத் தவிர யாரும் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.” [29.43]

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தை பற்றிய புரிதலை வழங்குகிறான்." [புகாரி & முஸ்லிம்).

எனவே அல்லாஹ்வை பற்றி அறிவை ஆங்காங்கே குர்ஆன் புகட்டுவதோடு அல்லாஹ்வை அறிந்தவர்களின் பண்புகளையும் எடுத்து கூறுகிறது. 

முடிவுரை

கடவுளை அறியவேண்டும் என்பதை சமயங்கள் வேறுவேறு கோணத்தில் சொல்கிறது தவிர, கடவுளின் பண்புகளை அறிவதை அனைத்து மதங்களும் கட்டயப்படுத்துகிறது.

காரணம், கடவுள் யார்? அவனது பெயர் என்ன? அவனது பண்புகள் என்ன? அவன் எதை செய்கிறான்? எப்படி செய்கிறான்? ஏன் செய்கிறான்? போன்ற அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, கடவுள் அல்லாதவர்களை வணங்கும் மோசமான நிலையிலிருந்து பாதுகாக்கப் படுவோம். 

 

வானமும் பூமியம் இறைவனுடையது *

கிறிஸ்தவம் / யூதம் 

வானம் உங்களுடையது, பூமியும் உங்களுடையது; உலகத்தையும் அதன் முழுமையையும் நீயே நிறுவினாய்” - (சங்கீதம் 89:11)

 இஸ்லாம் 

அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; (குர்ஆன் 48:7)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (குர்ஆன்  2:107)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். (குர்ஆன்  2:284)

3:129. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.

3:109. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.

3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

4:126. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

4:131. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.

4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.

6:12. “வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

9:116. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.

10:55. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.

34:1. அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.

34:22. “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை. 
 
தமிழர் சமயம் 

 

குழந்தைகள் கடவுளின் வரம்

தமிழர் சமயம்    


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

விளக்கம்: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

 குறிப்பு: குழந்தைகள் கடவுளின் வரம் என்பதால் அவன் என்ன தவம் செய்தானோ என்று கருத வேண்டி இருந்தது.  

கிறிஸ்தவம் 

"குழந்தைகள் ஆண்டவரிடமிருந்து பெற்ற சொத்து, சந்ததி அவரிடமிருந்து வெகுமதி."  - (சங்கீதம் 127:3)

“தந்தையர்களே, உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்; மாறாக, அவர்களை இறைவனின் பயிற்சியிலும் போதனையிலும் வளர்த்து விடுங்கள்.” - (எபேசியர் 6:4)

இஸ்லாம்

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

"ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்." (ஸூரதுல் இஸ்ரா: 06) 

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)

உறவை பேணுதல்

உறவுகளை இழிவாக பேசும் இந்த இக்காலத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் உறவுகளை சார்ந்து நடத்தல் நமது நல்வாழ்வுக்கு மிக இன்றி அமையாதது. இரத்த உறவுகளை அனுசரித்து இணக்கமாக நடப்பதில் உள்ள நன்மைகளாக உலக வேதங்கள் சொல்வதை வாசிப்போம் வாருங்கள்.

தமிழர் சமயம் 


மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)
 
கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது. 
 

இஸ்லாம் 


யார் தனக்கு செல்வம் பெருகுவதையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள். அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) (ஆதாரம் : புகாரி)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

கிறிஸ்தவம் 

“தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

 

வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

தமிழர் சமயம்

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌

காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌

பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌

கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)


விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 

இஸ்லாம் 

“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29

யூதம் / கிறித்தவம் 

இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)