தமிழர் சமயம்
கிடைக்கப்பெற்ற எந்த தமிழ் மறை நூலிலும் பன்றி இறைச்சியை தமிழ் கூறும் நல்லுலகம் உண்டதற்க்கான சான்றுகள் இல்லை. முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி உணவாக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட எல்லாப்பாடலும் முள்ளம்பன்றியை குறிக்கிறது.
முளவுமா - முள்ளம்பன்றி.
கேழல் - காட்டுப்பன்றி. ஆனால் இந்த பாடல் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்வதைப்பற்றி பேசுகிறது. உணவு பற்றி அல்ல.
வளைமருப்பு ஏனம் - வளைந்த கொம்பினையுடைய காட்டுப் பன்றியை கூறுகிறது
கிறிஸ்தவம்
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். - (லோவியராகமம் 11-7)
பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. - (உபாகமம் அதிகாரம் 14:8)
இஸ்லாம்
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)
இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.