நமது விருப்பமும் இறைவனின் நாட்டமும்

தமிழர் சமயம் 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல் - (நல்வழி 27)

விளக்கம்: ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். 
 
இஸ்லாம் 

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்;
நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்;
நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் - (அல்-குர்ஆன் 2:216)

கிறிஸ்தவம் 

"ஏனெனில், உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக நலனுக்காகத் திட்டமிடுகிறேன், தீமைக்காக அல்ல என்று கர்த்தர் கூறுகிறார். அப்போது நீங்கள் என்னைக் கூப்பிட்டு, என்னிடம் வந்து ஜெபிப்பீர்கள், நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்போது நீங்கள் என்னைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். - (எரேமியா 29: 11-13) 

உன் சுயபுத்தியில் சாயாதே, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு; உன் வழிகளிலெல்லாம் அவரை ஏற்றுக்கொள், அவன் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவான். - (நீதிமொழிகள் 3:5-6)

11 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. "ஏனெனில், உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருவதற்காக நலனுக்காகத் திட்டமிடுகிறேன், தீமைக்காக அல்ல என்று கர்த்தர் கூறுகிறார். அப்போது நீங்கள் என்னைக் கூப்பிட்டு, என்னிடம் வந்து ஜெபிப்பீர்கள், நான் உங்களுக்குச் செவிசாய்ப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்போது நீங்கள் என்னைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.
    - எரேமியா 29: 11-13

    பதிலளிநீக்கு
  3. நீதிமொழிகள் 21
    30 கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை.

    31 ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.

    பதிலளிநீக்கு
  4. நீதிமொழிகள் 28
    26 ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.

    பதிலளிநீக்கு
  5. “நாம் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்: 11:34)

    பதிலளிநீக்கு
  6. நீதிமொழிகள் 16:9
    9 மனிதர்கள் தங்கள் இருதயங்களில் தங்கள் பாதையைத் திட்டமிடுகிறார்கள், ஆனால் கர்த்தர் அவர்களுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறார்.

    பதிலளிநீக்கு
  7. 1 கொரிந்தியர் 10:31
    "ஆகவே, நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், அனைத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்

    நீதிமொழிகள் 16:3
    "உன் வேலையை கர்த்தருக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது உன் திட்டங்கள் நிறைவேறும்."

    நீதிமொழிகள் 21:25
    "சோம்பேறியின் ஆசை அவனைக் கொன்றுவிடும், அவன் கைகள் உழைப்பதற்கு மறுக்கிறது."
    நீதிமொழிகள் 14:23
    "அனைத்து உழைப்பிலும் லாபம் உண்டு, ஆனால் வெறும் பேச்சு வறுமையை மட்டுமே போக்கும்."

    2 தீமோத்தேயு 2:6
    "கடின உழைப்பாளி விவசாயி தான் பயிர்களில் முதல் பங்கைப் பெற வேண்டும்."


    பதிலளிநீக்கு
  8. வெண்பா : 5
    வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
    பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
    நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
    துஞ்சுவதே மாந்தர் தொழில்
    விளக்கம்:
    நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.
    https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_9162.html?m=1

    பதிலளிநீக்கு
  9. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
    நாழி முகவாது நானாழி-தோழி
    நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
    விதியின் பயனே பயன்.

    பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
    முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
    முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
    கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் விதியின் அளவைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
  10. நீதிமொழிகள் 3:5 கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. 6 நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். 7 உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. 8 நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%203&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு