ISISI : பரப்புரையும் உண்மையும்


ISIS அமைப்பு இஸ்லாமிய அமைப்பா..???


ஈராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உண்மையில் யாருடையது..?

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும் பச்சை குத்திக்கொள்வது தடுக்கப்பட்ட செயல் என்று.





அதன் நிறுவனரும் தலைவரும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்.....?




இஸ்லாம் கூறும் அமைதி மார்க்கத்திற்கு நேர் எதிரான நடவடிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றிவரும் இந்த காட்டுமிராண்டிகள் யார் என்ற குழப்பம் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியது. இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம். இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோபர் (2014)  பிரதியில் ஓர் ஆய்வுக் கட்டுரை. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர் ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப்படுகொலை பற்றிய ஊகங்களும்’. கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கம் அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.. நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா ’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.

இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது
    • பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.
    • அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை இஸ்ரேலின் பயங்கரவாத அமைப்பான மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர்.கடந்துவந்துள்ளார்.

இதுவெல்லாம் எதற்காக?

அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும். அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா?
    • ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும்.
    • 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.
    • இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
    • அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும். உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும்படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு  அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.
    • இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப்பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும். யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும்.
    • இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்து வருகிறது. சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.
 ஆனால் இறைவனின் மார்க்கம் அனைத்து சதிகளையும் வென்றே வந்துள்ளது என்பது வரலாறு நமக்கு தரும் பாடமாகும்.  இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:

'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32) சான்று

மார்க்க அறிஞர்கள் இவர்களைவழிகேடாக அறிவிக்கும் காணொளிகள்  


யூதர்களின் ஒப்புதல் வாக்குமூலம்: யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையில்

  






போர் நெறி


ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.

போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

போருக்கு வருவோருடன் மட்டுமே போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
(திருக்குர்ஆன் 9:13)

பாதிக்கப்படும் போது போர்

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன் 4:75)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன் (திருக்குர்ஆன் 22:39, 40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும் உழைத்தார்கள்.
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை ம
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமாதானத்தை ஏற்க வேண்டும்

(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது. (திருக்குர்ஆன் 2:192, 193)

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 8:61)

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? (திருக்குர்ஆன் 10:99)

"(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 109; 1-6)

போரில் வரம்பு மீறக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: புரைதா (ரலி), (நூல்: முஸ்லிம்.)

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள். (நூல்: புஹாரி 2474)

இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள். (நூல்: முஸ்லிம் 3566)

போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். (நூல்: முஸ்லிம் 3700)

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர். 

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார். "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர். (நூல்: முஸ்னத் அஹ்மத் 18152)

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

கிறிஸ்தவம் 


நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும். (சங்கீதம் 45:4)

இராமலிங்க அடிகள் கொள்கைகள்


- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
- புலால் உணவு உண்ணக்கூடாது.
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
- மத வெறி கூடாது .

இவரது கொள்கை வேத மற்றும் நெறி நூல்களை கற்று அதன் வாயிலாக பிறந்தது.. நெறி நூல்களில் இருந்து வேறுபட்ட நடைமுறை குழப்பங்களை பிரித்து கட்டி உருவாக்க பட்ட இவரது போதனைகளில் மாமிசம் உண்ணகூடாது என்பதை தவிர அனைத்தும் இஸ்லாதின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிப்பவைகள். மாமிசம் உண்ணுவதும் இஸ்லாத்தில் காட்டாயம் இல்லை.

இறைவன் இஸ்லாத்தை புணர் நிமானம் செய்தது பாலைவன பகுதியில் இருந்து என்பதால் மாமிச உணவுக்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது மேலும் இன்றைய மக்கள் வளத்திலும் உலகமயமாதளிலும் பஞ்சத்திலும் சமூகத்தில் அனைவரும்  மாமிசம் தவிர்த்தல் என்பது உணவு பற்றகுறையை எற்படுத்தும். மேலும் மனித பற்கள் மற்றும் செரிமான அமைப்பு இரண்டு வகையான உணவையும் சமன் செய்யும் வகையில் இறைவன் அமைதிருப்பது மாமிச உணவுக்கான அவனது அனுமதியின் சான்று..

வள்ளலாரையே இறைவனாக வணங்கும் நடைமுறை அவரது சித்தாந்தத்தை இந்த மக்கள் தொலைத்து விட்டனர் என்பதற்க்கான சான்று.. எனவே இஸ்லாம் ஒன்றே தீர்வு.. சான்று 

திருமந்திரம் & திருக்குர்ஆன் கூறும் இறைவன் யார்?

ஒன்றவன் தானே
இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள்
நான்குணர்ந் தான்
ஐந்து வென்றனன்
ஆறு விரிந்தனன்
எழும்பர்ச் சென்றனன்
தானிருந் தானுணர்ந் தெட்டே.

(திருமந்திரம் கடவுள் வாழ்த்து)



















2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான அதாவது கி.மு.-வை சேர்ந்த திருமந்திரத்துக்கு கி.பி. 1900 களின் நடுவில் பொழிப்புரை எழுதிய பொழிப்புரையாளர்களின் விளக்கத்தை ஓரம் வைத்துவிட்டு  இந்த பாடலுக்கான விளக்கத்தை திருமந்திரத்தில் இருந்தே எடுப்பதுதான் சரியான வழிமுறை. பிறகு அதனோடு இஸ்லாமிய போதனைகளை ஒப்பிடுவோம்.

மேலும் திருமந்திரத்தில் இடைச்சொருகள் இருப்பதையும் நாம் கருத்திக்கொண்டு இந்த ஒப்பீட்டை ஆய்வு செய்ய வேண்டும். இந்த திருமந்திர கடவுள் வாழ்த்துப் பாடலானது இறைவனின் பண்புகளை பட்டியலிடக் கூடியதாக இருக்கிறது. இந்த பட்டியலின் விளக்கமாகவும் இந்த பண்புகளை உடைய இறைவன் தான் இதில் உள்ள அறங்களை மக்கள் பின்பற்ற வகுத்து கொடுத்துள்ளான் என உணரும் முகமாக இந்த நூல் அமைந்துள்ளது. எனவேதான் இப்பாடலுக்கான விளக்கத்தை இதற்க்கு தொடர்பில்லாத வேறு நூல்களில் இருந்து எடுப்பது தவறான வழிமுறை ஆகும் குறிப்பாக மாற்று மொழி நூலிலிருந்து முதல் பொழிப்புரை வழங்குவது பிழை. இப்பாடல்கள் உண்மையான விளக்கத்தை திருமந்திரத்தை கொண்டு விளக்கிய பிறகு மாற்று வேதநூல்களோடு ஒப்பிடுவதன் மூலம் அது நமது தத்துவத்தோடு ஒத்துபோகிறதா இல்லையா என்று வேண்டுமானால் கண்டறியலாம். இந்த அணுகுமுறையை கொண்டே இந்த ஒப்பீடு செய்யபப்டுகிறது.

திருமந்திரம் & திருக்குர்ஆன் ஒப்பீட்டாய்வு:


1) ஒன்றவன் தானே (
ஒன்று அவன் தானே): ஒரே ஒருவனாய் தானே உருவானவன்: ஒரே இறைவன் என்பது வேறு இணை துணைகள் இல்லை என்பதன் நேரடி கூற்று. அவன் யாரோடும் எதனோடும் உருவிலும் குணத்திலும் அருளிலும் ஆற்றலிலும் ஒப்பிட முடியாதவன் எனபதுதான் ஒன்று என்பதன் விளக்கம். மிக முக்கிய தகவல் "தானே", அதாவது அவன் அவனாகவே உண்டானவன், எவனாலும் எதனாலும் படைக்க படாதவன். எனவே மனிதன் செய்யும் லிங்கமும் சிலையும் படமும் புராணமும் அவனை குறிக்கும் குறியீடு அல்ல எனபதை இது உணர்த்துகிறது.

திருமந்திரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே  - (திருமந்திரம்)

திருக்குர்ஆன்  

அல்லாஹ் ஒருவனே! அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. (குர்ஆன் 112:1&3)

2) இரண்டவன் இன்னருள் (
இரண்டு அவன் இன் அருள் நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்க் கொள்வது அறக்கருணை. தீயநெறி நடக்கும் அசுர குணத்தவர்களை அழித்து ஆட்க் கொள்வது மறக்கருணை என இரண்டு வகையான அருளை கொடுப்பவன். எனவே இறைவன் அவரவர் செயலுக்கு ஏற்றார் போல் அருளை வழங்குபவனாக இருக்கிறான்.

திருமந்திரம் 

செற்றிலென்? சீவிலென்? செஞ்சாந்து அணியிலென்?
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்?
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. (திருமந்திரம் ஊழ் 2848)

பொழிப்புரை: கூரியவாள் கொண்டு உடலைத் துணித்தால் தான் என்ன? நறுமணம் கமழும் செஞ்சாந்து கொணர்ந்து பூசினால் தான் என்ன? தலையில் உளியால் அடித்து மரிக்கச் செய்தால் என்ன? தத்துவ ஞானிகள் இவைகள் எல்லாம் வித்தகன் விகிர்தன் (நன்மை தீமை எல்லாம்) சிவன் இச்சைப்படியே நிகழ்கின்றன என்று எண்ணி தம் பொறுமையை இழக்காமல் இருப்பார்கள்

திருக்குர்ஆன்   

அவர்களுக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் தீமை நேர்ந்தால், “இது உம்மிடமிருந்து வந்தது” (நபியே!) என்கிறார்கள். நீர் கூறுவீராக: “எல்லாமே அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன.” ஆனால், இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது, ஒரு உண்மையைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும் அளவிற்கு? உனக்கு நேர்வது எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது; உனக்கு நேரிடுவது எல்லாம் உன்னிடமிருந்தே வருகிறது… (குர்ஆன்  4:78-79)

3) நின்றனன் மூன்றினுள் (
நின்றனன் மூன்றினுள்நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு,  இறைவன் ஏற்பாடு அல்ல.

திருமந்திரம் 

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (திருமந்திரம் 404)

பொழிப்புரை: உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் சிவன் ஒருவன் தானே. அவன் அளிக்கும் கடவுள் எனும் கருத்து பிழை.

திருக்குர்ஆன்   

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40)  
 
இந்த முத்தொழிலில் இறைவன் தன்னுடன் யாரையாவது கூட்டாக அல்லது தனக்கு இணையாக வைத்துள்ளானா? அதாவது முத்தொழில் அழிக்கும் தொழிலை மட்டும் தான் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு மற்ற தொழிலை பொறுப்பு கொடுக்கும் வேலை நடைபெற்றதா? இல்லை என கீழ்வரும் பாடல் சொல்லுகிறது.

திருமந்திரம்  

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. (திருமந்திரம் 110)
 
பொழிப்புரை: இறைவனை மூன்று ஐந்து என கருதுபவர்கள் ஆதியானவனை அறியாத அறிவில்லாத குருடர்கள் ஆவர். நீதி செலுத்துவது சிவன் விஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் மூவர் என்று பிரித்து கூறுகிறவர்கள் உளறுகிறாரே தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன்   

(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை. (குர்ஆன் 18:26)
 
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர (படைத்தது காத்து அழிக்க) வேறு நாயன் இல்லை  (குர்ஆன் 5:73)

4) நான்கு உணர்ந்தான் (நான்கு உணர்ந்தான் நான் மறைகளையும் உணர்ந்தவன். 

திருமந்திரம் 

நான்மறை என்பது என்ன? அது உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் குறிக்கிறது. அவை அனைத்தையும் உணர்ந்தவன் சிவன்.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. (திருமந்திரம்)

திருக்குர்ஆன்   

நிச்சயமாக இது (குர்ஆன்) நம்மிடத்திலுள்ள ‘உம்முல் கிதாபில் (தாய் நூலில் - லவ்ஹுல் மஹ்ஃபூளில்) இருக்கிறது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (குர்ஆன் 43:4)

 ''(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷு (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் - நபிமொழிச் சுருக்கம்: புகாரி 3191)

குறிப்பு: உலக நான்மறைகள் அனைத்தும் இந்த  லவ்ஹுல் மஹ்ஃபூளின் ஒரு பகுதியாகும்.

5) ஐந்து வென்றனன் (ஐந்து வென்றனன்)  இதற்கு நான்கு வகையான விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது.

முதல் விளக்கம்: மனிதனுக்கு நிகழும் ஐந்து நிலைகளை வென்றவன் 
    1. பிறப்பு, 
    2. பசி, 
    3. காமம், 
    4. தூக்கம், 
    5. இறப்பு 
எனும் ஐந்தை வென்றவன் என்று கூறுவது மற்ற விளக்கங்களை விட பொருத்தமான விளக்கமாக இருக்கலாம்.  

இரண்டாவது விளக்கம்: ஐம்புலன்களை வென்றவன் 

இது ஐம்புலன்களாகிய 
    1. மெய், 
    2. வாய், 
    3. கண், 
    4. மூக்கு, 
    5. செவி
ஆகிய ஐந்து புலன்களை வென்றவன் என்று பொருள் கொள்ளலாம்.  இறைவனுக்கு உருவம் உண்டு, இந்த ஐந்து புலன்களும் ஆனால் மனிதர்களை போல அல்ல. எனவே இந்த புளகிலையும் அவனது கட்டுப்பாட்டில் வைத்து இருபப்வன் என்று பொருள் கொள்வதும் சிறந்த விளக்கமே.

மூன்றாவது விளக்கம்: ஐம்பெரும் பூதங்களை வென்றவன் 

ஐம்பெரும் பூதங்களான 
  1. புவி, 
  2. ஆகாயம், 
  3. காற்று, 
  4. நீர் 
  5. நெருப்பு 
ஆகியவற்றை வென்றவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளின் தேவை இல்லாதவன் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆனால் அண்டங்களுக்கு அப்பால் உள்ளவனுக்கு இந்த புவியில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

நான்காவது விளக்கம்: பஞ்சகீர்த்தியம் 

    1. படைத்தல், 
    2. காத்தல், 
    3. அழித்தல், 
    4. மறைத்தல், 
    5. அருளல் 

என்ற ஐந்து தொழில்களை (பஞ்சகீர்த்தியம்) புரிபவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவும் சரியான விளக்கம் அல்ல. ஏனெனில் "நின்றனன் மூன்றினுள்" எனபதால் ஏற்கவே இதில் மூன்று அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.

இறுதியாக இந்த நான்கு விளக்கங்களும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடிய தேவைகள் மற்றும் குணங்கள் எதுவும் இல்லாதவன் இறைவன் என்ற பொருளை தருகிறது. இருப்பினும் முதல் இரண்டு விளக்கமே இறைவனுக்கு மிக நெருக்கமாக உள்ளது. இதற்ககான திருமந்திர ஆதாரங்களை இப்பொழுது காண்போம்.

திருமந்திரம் 

சிவன் பிறப்பு இறப்பற்றவன்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25

 சிவ பெருமான் பசியற்றவன் 

ஒடுங்கி நிலைபெற்ற உத்தம ரானால்
கடும் பசி யில்லை கற்று விட்டோர்க்கே
படும் பசி யில்லை பரனை நினையிற்
கடும் பசி யில்லை கழலடி யோர்க்கே.

விளக்கம்: சிவபெருமான் என்றும் பசியற்றவன்; அவனை உணர்ந்தவர்களுக்கும், அவனுடன் கலந்தவர்களுக்கும் (திருமூலர் குறிப்பிடும் 'கற்றுவிட்டோர்') உலகியல் பசியும், பற்றுதலும் நீங்கிவிடும் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

சிவபெருமான் காமம் அற்றவன் 

காமனைக் காய்ந்தவன் காமத்தை வென்றவன்
ஆமள வாலுமக் காமமும் இல்லவன்
தீமைகொள் காமம் தீர்த்தருள் செய்தவன்
சேமமென் ஆவிச் சிவனவன் ஆமே.

சிவன் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

 

திருக்குர்ஆன்   

அல்லாஹ் எப்படிப்பட்டவன்? 

பிறப்பற்றவன்: அவர் (அல்லாஹ்) யாரையும் பெறவில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

பசியற்றவன்: அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை (குர்ஆன் 6:14)

காமமற்றவன்: மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (குர்ஆன் 35:15)

தூக்கமற்றவன்: அவனைத் சிறு தூக்கமோ, உறக்கமோ பீடிப்பதில்லை (குர்ஆன் 2:255)

இறப்பற்றவன்அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; (குர்ஆன் 2:255)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் (குர்ஆன் 112:2.) 

அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் 

நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன் 2:20, 41:39)

6) ஆறு விரிந்தனன் (ஆறு விரிந்தனன் மந்திரம்: மறை, பதம்: உணவு, வன்னம்: எழுத்து, புவனம்: உலகம், தத்துவம்: உண்மை, கலை: மொழி என்னும் ஆறாக விரிந்தனன் என்று 19 ஆம் நூற்றாண்டில் விளக்கம் கொடுக்கப்பட்ட்டது. ஆனால் ஆறு நாட்களில் உலகை படைத்தான் என்பதுதான் உண்மைக்கு நெருக்கமான விளக்கம் ஆகும்.   

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்   

“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் ; மேலும், அவன் அர்ஷில் உறுதியாக நிலைபெற்று, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆளுகிறான். அவனது அனுமதியைப் பெற்றாலன்றி, எந்தப் பரிந்துரைப்பவரும் அவனிடம் முறையிட முடியாது. இவனே உங்கள் இறைவன் அல்லாஹ்; எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்: நீங்கள் அறிவுரை பெற மாட்டீர்களா?” (ஸூரா யூனுஸ் 10.3)

7) எழு உம்பர் சென்றனன் (
ஏழ் உம்பர்ச் சென்றனன்பின் ஏழாவது சொர்க்கம் சென்றான்.

திருமந்திரம் 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே. - (திருமந்திரம் 1551)

(ப. இ.)  ஏழு உலகங்கள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவன், அவன் நல்லார்  உள்ளத்து மிக்க அருள் செய்தல்போல்....

திருக்குர்ஆன்   

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும்.

8) இருந்தான் உணர்ந்து எட்டே (
தான் இருந்தான் உணர்ந்து எட்டே தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.

திருக்குறள் & திருக்குர்ஆன்  

தன் எண் குணங்களையும் உணர்ந்து இருந்தான்.
    1. இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்) - ஆதிபகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
    2. இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்) - வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
    3. இறைவன் அந்தரங்கமானவன் (பெருமைக் குணம்) - மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
    4. இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்) வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
    5. இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்) இறைவன் (Almighty) (அல்லாஹ்).
    6. இறைவன் ஐம்பொறிகளையும் அடக்குபவன் (வலிமைக் குணம்) -பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
    7. இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்) - தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
    8. இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்) - அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
திருமூலரின் திருமந்திரம் குறிப்பிட்ட இறைவனது எட்டு குணங்களை திருக்குறளிலிருந்து விளக்கியதன் காரணம் ஓளவையார்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர் - (நல்வழி 40)

மனிதன் அழைத்தால் எட்டும் தூரத்தில் சிவன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

திருமந்திரம் 

 

திருக்குர்ஆன்    

நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் பிடரிநரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம் (குர்ஆன் 50:16) 
 
முடிவுரை :

உலகம் முழுவதும் ஒரே குலம் உலகம் முழுமைக்குக்கும் ஒருவனே தேவன்.

சான்று :
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa104.htm
http://yozenbalki.blogspot.in/2010/03/blog-post_07.html
https://www.facebook.com/aranerivilakkam/posts/152130261914893
http://www.ssivf.com/ssivf_cms.php?page=262
http://blogtomuslims.blogspot.in/2010/06/blog-post.html

http://www.ottrumai.net/TArticles/48-WhereIsAllah.htm


சிவவாக்கியருடன் சில நிமிடங்கள்..!

 

இந்து சாமானியன்: ஐயா சித்தரே, சாமி, சிலை, வழிபாட்டு தளங்கள் பெயரால் சண்டை சச்சரவு நாளுக்கு நாள் அதிகமாக பெருகி கொண்டே போகிறதே.. பூ போன்ற காணிக்கைகளை செய்து மந்திரங்கள் சொல்லி தெய்வத்தை குளிர செய்தால் நிலைமை சீரடையுமா?

சிவவாக்கியர்:
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - 494

இந்து சாமானியன்: ஐயா, லிங்கம், சிவன் சிலை போன்றவைகள் ஈசன் இல்லையா? வெறும் கல்லா? அப்போ ஈசன் யாருங்க? எத்தன இறைவன் தான் இருக்குங்க ஐயா?

சிவவாக்கியர்: 
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மை இரண்டு இல்லையே? - 22

உம்பர்(சொர்க்கம்) வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. - 308

இந்து சாமானியன்: ஐயா சித்தரே தெய்வம் ஒன்றுதான், அவன் ஏழாம் சொர்க்கத்தில் உள்ளான் என்கிற உண்மை ஆச்சரியமாக உள்ளது. எனவே இங்கு உள்ள சிலைகள், மிருகங்கள், படங்கள் எல்லாம் வழிபட தகுதி அற்றவைகள் என தங்கள் வாயிலாக அறிகிறேன்..

சாதி சண்டை தீர வழி சொல்லுங்க..!

சிவவாக்கியர்:
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே. - 39

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?  - 46

சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. -  44

சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. - 45

இந்து சாமானியன்: சாதியே இல்லையா? அப்போ தாழ்ந்த சாதியில் பிறந்வர்கள் மீண்டும் பிறப்பெடுத்து பிராமணர்களானால் தான் பிறப்பு முடியும் என்கிறார்களே..! 

சிவவாக்கியர்:
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - 47

இந்து சாமானியன்: செத்தவன் பிறப்பதே இல்லையா? அப்போ முன்பிறவி, அடுத்தபிறவி, ஏழுபிறவி--னுல்லாம் சொல்லி குறி, சோதிடம் சொல்லுவதெல்லாம் பொய்யா? பேய் பிசாசு பற்றி ? 

சிவவாக்கியர்:
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. - 252

இந்து சாமானியன்: ஐயா சித்தரே உங்கள் கொள்கை விளக்கப்படி ஒருவன் இந்துவாக இருத்தல் இயலாது. உங்கள் கொள்கைகளை ஆப்படியே அச்சு பிசகாமல் சொல்வதோடு அதை அப்படியே பின்பற்றச் செய்யும் இஸ்லாம் தான் ஒரே வழி..! 

குறிப்பு  : மற்ற வேதங்களை போலவே  சிவவாகியர் பாடல்களிலும் இதற்கு முரணான கருத்துக்கள்  திணிக்க பட்டும் இருக்கிறது.. ஒரே நபர் இருவேறு முரண்பட்ட கருத்துகளை ஒரே நூலில் சொல்ல இயலாது என்பது எதார்த்தம். எனவே கருத்து  முரண்  இல்லாத  வேதமான திருக்குர்ஆனே  பின்பற்ற தகுதியானது. சகோதரர்கள் இறைவனை மத ரீதியாக அணுகுவதை விடுத்தது கொள்கை ரீதியாக அதாவது இறைவனுக்கான வரையறை மற்றும் இலக்கண அடிப்படையிலும் வேதாந்த அடிப்படையில் அணுகுவதே உண்மை அறிய உதவும்.

மேலும் ஆழமான ஆய்வுக்கு வாசிக்க வாய்மை