கொள்கைதான் ஒரு மனிதனின் அடையாளம். அது சமயம் சார்ந்தோ அல்லது சமயம் சாரமலோ இருக்கலாம். ஏனென்றால் அதுதான் அவன் எப்படி பட்டவன்? அவன் என்ன செய்வான்? என்ன செய்ய மாட்டான்? என்று தீர்மானிக்கிறது. அவ்வாறு ஒருவன் செய்யும் செயலே சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறது.
ஆனால் ஒரு மனிதனுக்கு மொழியும் இனமும் அடையாளம் என்றும் சொல்லபப்டுகிறதே. அது எப்படி?
ஒருவனது மொழி எந்த அறத்தை அல்லது கொள்கையை சொல்கிறதோ, அதையே அவன் நம்புபவனாகவும் செயல்படுத்துபவனாகவும் இருப்பான். வேறு வார்த்தையில் சொல்வதென்றால் எந்த மொழியில் உள்ள வழிகாட்டுதல்கள் அவனுக்கு புரிகிறதோ எதை அவன் தொடர்ந்து கேட்டும் படித்தும் வருகிறானோ அதுதான் அந்த மனிதனின் அடையாளம்.
சரி இந்த விளக்கத்துக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு?
தொடர்பு உண்டு.
தமிழன் என்று தன்னை கருதுபவன் தமிழ் கூறும் அறங்களை கொண்டு தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது இன்று நடைமுறையில் உள்ளதா என்று சிந்தித்து பார்த்தல் இல்லை என்ற பதில் தான் நமக்கு கிடைக்கும்.
உதாரணமாக, எந்த ஒரு தமிழ் ஆட்சியாளரும் குறள் அல்லது திருமந்திரம் கூறும் அரசியல் அறங்களை பின்பற்றுகிறார்களா? குறைந்தபட்சம் அவைகளை அறிந்து வைத்து உள்ளனரா? அந்த நூல்கள் கூறும் கருத்துக்களை திரிபு இல்லாமல் வாசிக்கவோ அல்லது புரிந்து வைத்து இருக்க அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லை.
இதே போல ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் குடும்பவியல் உட்பட இந்த அறநூல்கள் கூறும் எதையும் தமிழ் மக்கள் அறிந்து வைத்து இருப்பதும் செயல்படுத்துவதும் இல்லை. எனவே தமிழ் அதன் அறத்திலிருந்து பிரிந்து ஜீவன் இல்லாத மொழியாக உள்ளது. இந்த தமிழ் இனம் அதன் பண்புகளை இழந்து இருக்கிறது.
இன்றைய தமிழ் சமுதாயம் மூன்று நிலைகளில் உள்ளது.
- வடமொழி ஆதிக்கத்துக்கு பலியாகி உள்ளது, அல்லது
- நமது மறை நூலை வழிகாட்டுதலை புறக்கணிக்கும் நாட்டுப்புற சமயங்களை பின்பற்றுகிறது, அல்லது
- திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இறைமறுப்பு கொள்கையில் இருக்கிறது.
இதற்கான காரணங்கள் என்ன?
- தமிழ் மொழியில் வேதம் இருப்பதை மக்கள் அறியாமல் இருப்பது
- அறிந்தவர்களும் அதை கற்று பின்பற்றாமல் இருப்பது
- எவர் கற்க விரும்பி துவங்கினாலும் 2000 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட நூல்களுக்கு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட, ஒன்றுக்கொன்று முரணான, தவறான பொழிப்புரைகளால் அதன் உண்மை கருத்தை விளங்க முடியாமல் இருப்பது
- பண்பாட்டு புரட்சி ஏற்பட தடையாக உலகமயமாதலும் பொருளாதாரமும் இருப்பது
- தமிழர் மதம் என்பது சனாதனமோ அல்லது இந்து மதமோ அல்ல என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பது
- தமிழை, அதன் அறத்தை, அதன் சமயத்தை இதுவரை முழுமையாக மீட்டெடுக்கவில்லை, அது தமிழுக்கு முரணான வடமொழி சமய ஆதிக்கத்தில் பிணைந்து உள்ளது என்கிற புரிதல் இல்லாமல் இருப்பது
- தமிழர் ஆன்மீகத்தை வடமொழி உண்டு செரித்துவிடும் என்று கருதியதால் தமிழர் சமயத்தை சரிவர விளங்காததால் நாத்திகத்தை நோக்கி நகர்ந்தது.
ஆனால் இதை எல்லாம் விடுத்து தமிழ் இனத்தில் ஒரு சிறு கூட்டம் கடந்த 1400 வருடங்களாக தமிழர் சமயம் கூறும் அதே அறத்தை அதாவது இஸ்லாத்தை பின்பற்றி வருகிறது. தமிழ் சமயம் கூறும் அதே அறத்தை குர்ஆன் கூறுகிறது: ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், இம்மை மறுமை போன்றவற்றை வடமொழி சமயங்கள் தத்துவமாகவும் பயன்பாட்டிலும் மறுக்கிறது ஆனால் இஸ்லாம் இவைகளை அப்படியே வலியுறுத்தி அதன் மேல் இந்த சமயத்தை கட்டி எழுப்பி உள்ளது. இதன் மூலம் தமிழர் அறத்தை படிக்கவும் பின்பற்றவும் இஸ்லாத்தை இவர்கள் பின்பற்றுகின்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இஸ்லாமிய நூல்கள் இருந்தும், அவர்களின் வேதத்தை தமிழில் வாசிக்காமல் அதன் மூல மொழியான அரபியில் மட்டுமே ஏன் ஓதி வருகின்றனர் என்பது உங்கள் கேள்வி.
தமிழில் குர்ஆனை அவர்கள் ஒதுவது இல்லை என்பது பிழை, புரிந்துகொள்ள தமிழில் தான் வாசிக்கின்றனர். ஆனால் அரபியில் அதை ஓத பழகுவதற்கு சில ஆழமான வலுவான காரணங்கள் உண்டு.
- அரபியில் ஓதப்பட்டால்தான் அது வேத நூல், தமிழில் வாசித்தால் அது மொழிபெயர்ப்பு நூல். வேதம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது, அதை அந்த மொழியில் வாசிப்பதுதான் அறம். அதை மொழிபெயர்த்து பொருளை மாற்றி அதை வேதம் என்று அழைக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை.
- ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ப அவரின் விளக்க உரையில் ஒரு வசனத்தின் சொல்லும் பொருளும் மாறுபடும். எனவே ஒரு வேதம் அதன் தூயவடிவில் பாதுகாக்கப்பட அது அருளப்பட்ட மொழியில் பாதுகாப்பது அவசியம். தமிழில் உள்ள குறளை மறந்துவிட்டு, இன்று ஆங்கிலம் பேசுகிறோம் என்பதற்க்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குறளை ஒருவர் வாசிப்பது பொருத்தமாகுமா? அது குறளை வாசிப்பது ஆகுமா? இல்லை.
- தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது, ஆனால் அரபி கற்று கொடுக்க படுவது இல்லை. எனவே இந்த ஊர்களில் அரபி மொழி தனியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. எப்படி தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், மயிலை போன்ற இடங்களில் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கபப்டுகிறதோ அதே போல.
- 5000 ஆண்டு பழமையான திருமந்திரம் திருக்குறளுக்கு கிபி 1400 முதல் 1900 ஆண்டுகளில் தான் விளக்கவுரை எழுதப்பட்டு உள்ளது. அந்த பொழிப்புரைகளை நீங்கள் வாசித்தால் ஒன்றுக்கொன்று முரண் படுவதை பார்க்கலாம். இதற்கான காரணம் ஒரு மொழியின் அழிவு அந்த வேதத்தின் பொருளை திரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது. பொருள் திரிபு அந்த நூல் கூறும் அறத்தை தவறாக மறுவரையறை செய்கிறது. இவ்வாறு தமிழ் அதன் அறத்தையும் தமிழ் இனம் அதன் குணத்தையும் இழந்துவிட்டது.
- குரானுக்கு விளக்கவுரை முகமது நபி காலத்தில் இருந்தே எழுதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஆரமப கால அரபி நூல்களை வாசித்ததால் தான் தமிழில் குர்ஆனை அதன் பொருள் மாறாமல் மொழிபெயர்க்கும் வாய்ப்பு 100 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.
- மேலும் திருமந்திரம் முகமது நபி பற்றி முன்னறிவிப்பு செய்து உள்ளது, எனவே ஒரு தமிழனாக அவரை பின்பற்றுவது கடமையாகிறது .
சுருக்கமாக சொன்னால், தமிழர் அறத்தை போதிக்கும் இஸ்லாமிய வேதமும் அதற்கான ஆரம்பகால விளக்க உறையும் அரபியில் தான் உள்ளது. எனவே உண்மை தமிழனின் அறத்தை உள்வாங்க வேண்டும் என்றல் அரபி படிப்பது அவசியம்.