தமிழர் சமயம்
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்” (குறள் 510)
பொருள்: ஒருவனைத் தெளிவில்லாமல், ஆராயாமல் தேர்ந்தெடுத்தாலும் துன்பம். ஆராய்ந்து தெளிந்த ஒருவரிடம் ஐயப்படுதலும் நீங்காத துன்பம். இத்துன்பம் நீக்கி இன்பம் பெற்று வாழ்வோமாக.
இஸ்லாம்
நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி (நிராகரிப்பாளர்களாகி) விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). (குர்ஆன் 3:106)
அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் "வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்'' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பீராக! சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள். [ஸூரதுத் தவ்பா 65-66]
கிறிஸ்தவம்
அவர்கள் கன்மலையின்மேல் இருக்கிறார்கள், அவர்கள் கேட்கும்போது, மகிழ்ச்சியுடன் வார்த்தையைப் பெறுகிறார்கள்; மேலும் இவைகளுக்கு வேர்கள் இல்லை, அவை சில காலம் நம்பி, சோதனையின் போது மறைந்துவிடும். - (லூக்கா 8:13)
இயேசு தம்முடைய சீஷர்களிடம், “மக்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கச் செய்யும் சூழ்நிலைகள் நிச்சயமாக எழும். ஆனால், ஒருவரை தன் நம்பிக்கையை இழக்கச் செய்பவருக்கு அது எவ்வளவு கொடுமையாக இருக்கும்! இந்தச் சிறியவர்களில் ஒருவன் தன் விசுவாசத்தை இழக்கச் செய்வதைவிட அவன் கழுத்தில் பெரிய கல்லைத் தொங்கவிட்டுக் கடலில் தள்ளப்படுவதே சிறந்தது. எனவே உங்களைக் கவனியுங்கள்! - (லூக்கா 17-1)
எபிரெயர் 11: 1-ல் உள்ள விசுவாசத்தின் ஒரு சிறிய விளக்கத்தை பைபிள் தருகிறது:
பதிலளிநீக்கு"இப்பொழுது விசுவாசம் நாம் எதை நம்புகிறோமோ, அதை நாம் காணாதவைகளோ நிச்சயமாய் இருக்கிறது." ( NIV )
ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. BG 4.40
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்
வேறல் எளிது; அரிது, சொல். ஏலாதி 39
இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது, தனக்குத் துணையாவதாகிய பெருந்தவத்திற்குச் செல்வது எளியது, நிட்டை கைகூடும் வரை நிலைத்தல் அரியது, தெளிந்த ஞானியரான விடத்தும் ஐம்புலன்களையும் வென்று அவித்தலை எளிய காரியமாகச் செய்தல் அரியதாகுமெனச்சொல்.
கருத்து: கல்வி கேள்விகளால் நிறைந்தொழுகுதல் முதலாயின அருமையாகும்.
அருங்கலச்செப்பு
பதிலளிநீக்குஇதுவும் அது
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
மெய்பெற இன்னவை நான்கு. 14
ஐயம் இன்மை
மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்
ஐயம் இலாத உறுப்பு. 17
https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_18.html
ஆனால் நம்பிக்கையோ, அறிவோ இல்லாதவர்கள், சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர்கள், வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். சந்தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சி இல்லை. (கீதை 4.40)
பதிலளிநீக்கு42:16. எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
பதிலளிநீக்குதெளிந்த பின் குழம்ப வேண்டாம்
பதிலளிநீக்குஅவ்வாறே, தாங்கள் நம்பாத ஒன்றை விவாதிக்க முன்வருவதனாலயே நம்பாதவர்கள் எல்லோரையும் பகுத்தறிவாளர்கள் என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள் சிலர். அப்படியும் சொல்லிவிட முடியாது. நம்பிக்கையோ, நம்பிக்கை இன்மையோ, தானே பகுத்தாராயாத எதுவும் மூட நம்பிக்கைதான்—கடவுள் இருப்பாக இருந்தாலும் சரி, கடவுள் மறுப்பாக இருந்தாலும் சரி.
தேற்றித் தெளிமின்; தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே,
மாற்றிக் களைவீர் மறுத்துஉங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே (திருமந்திரம் 172)
என்கிறார் திருமூலர். ஆற்று வெள்ளம் அகப்பட்டுக்கொண்டவரைப் புரட்டி எடுத்து அலைக்கழிப்பதுபோல, நீங்கள் கற்றுக்கொண்ட எல்லாம்—சிறுகச் சிறுகச் சேகரித்துக் கையிருப்பாக வைத்திருக்கும் எல்லாம்—செல்வம் என்று கருதுகிற எல்லாம்—உங்களை முரண்பட்ட திசைகளில் செலுத்திக் கலக்கி எடுக்கும். அலைக்கழிவை மாற்றிக் களைந்து மெல்ல நிலை கொள்ளுங்கள். எது திசை, எது வழி என்று ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின்னால் மீண்டும் குழம்பாதீர்கள். அந்தத் தெளிவு உங்களை ஏதோ ஒன்றின்மேல் சார்புபடுத்தும். அந்தச் சார்பு உங்களை உறுதிப்படுத்தும்.
https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை,
பதிலளிநீக்குயாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)
பொருள்: தேவருக்கெல்லாம் தலைவன் ! அழகுக்கெல்லாம் அழகன்!’ என்று சொல்லப்படுகிற கடவுளை அறிந்தபின், அவனது மறைநூலை ஓதி, அதன் விளக்கத்தை கேட்டு, அதை புரிந்து, புரிந்தபின் நிறுத்திவிடாமல் மீண்டும் மீண்டும் ஓதி உணர்ந்து அதில் ஒடுங்குவதன் மூலம் ஓங்கின் நின்றார்.
https://yarl.com/forum3/topic/201535-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
எபேசியர் 2:8-9
பதிலளிநீக்குகிருபையினாலே விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்கள் சொந்த செயல் அல்ல; இது கடவுளின் பரிசு, செயல்களின் விளைவு அல்ல, அதனால் யாரும் பெருமை பேசக்கூடாது