மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம்

தமிழர் நெறி 

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகநானூறு 66)

கருத்துரை - (இம்மை = இவ்வுலக வாழ்க்கை; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலக வாழ்க்கை; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் =பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.- (நாலடியார் 58)

கருத்துரை - பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக் கொள்வதல்லாமல் தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர்

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (குறுந்தொகை 49)

கருத்துரை - (இம்மை = இந்த வாழ்க்கை; மறுமை = அடுத்து வரும் வாழ்க்கை; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)
இந்தப் வாழ்க்கை முடிந்து அடுத்தப் வாழ்க்கையிலும் நீ தான் எனக்குக் கணவன். நான் தான் உனக்கு மனைவி
 
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)

கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. - (நாலடி 275)

கருத்துரை - மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).

மறுமை என்றால் என்ன ?


அகநானூறு 66-இல் குறிப்பிட்டு இருப்பதுபோல் மறுமை என்பது வேறு உலகம் ஆகும் இவ்வுலகத்தில் இருப்பதாக சொல்லப்படும் மறுபிறவி அல்ல என்பதும் உறுதியாகிறது.

இஸ்லாமிய நெறி 


(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின் மறுமையில்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.  - (திருக்குர்ஆன் 11:113)

ஏன் அனைத்து நூல்களும் மறுமை பற்றி பேசுகிறது? வாசிப்பார் சிந்தைக்கே..

மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம், அதில் நெருப்பை கொண்ட நரகம் என ஒன்று உண்டு
  

சான்றுகள் 


4 கருத்துகள்:

  1. இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். https://tamilchristiansongs.in/tamil/daniel-12-2/

    பதிலளிநீக்கு
  2. மறுமைக்கு அறமே துணை

    ஈட்டிய ஒண்பொருளும் இல்ஒழியும் சுற்றத்தார்
    காட்டுவாய் நேரே கலுழ்ந்துஒழிவர் - மூட்டும்
    எரியின் உடம்புஒழியும் ஈர்ங்குன்ற நாட
    தெரியின் அறமே துணை பாடல் - 14

    விளக்கவுரை : குளிர்ச்சியுடைய மலை நாட்டின் மன்னனே! தேடிய சிறந்த செல்வமும், வீட்டில் தங்கிவிடும், உறவினர் சுடுகாட்டின்வரை அழுதுகொண்டு வந்து நீங்கிவிடுவர், மூட்டப்படுகின்ற நெருப்பால் உடம்பானது அழிந்துவிடும், ஆராயின் ஒருவனுக்குத் துணையாவது அறமே ஆகும்

    பதிலளிநீக்கு
  3. முதுமொழிக் காஞ்சி

    8. எளிய பத்து

    ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

    1. புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது.

    புகழ் வெய்யோர்க்கு - புகழப்படும் அறச்செயல்களைச் செய்ய விரும்பினோர்க்கு
    புத்தேள் நாடு - தேவர்கள் வாழும் விண்ணாடு

    புகழ்மிக்க அறச்செயல்களைச் செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும். - குறள் 98

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும். - குறள் 1042

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. - குறள் 23


    இஸ்லாம்

    (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - (திருக்குர்ஆன் 2:25)

    பதிலளிநீக்கு