தமிழர் சமயம்
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் - 1:4)
கருத்து: தெய்வம் ஒன்று என்றே வணங்க வேண்டும், வேறு இணை துணைகள் அவனுக்கு இல்லை என்று அறிந்தவர்களே புண்ணியம் செய்தவர்கள்.
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதேதவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
இஸ்லாம்
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ஏக இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)(ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ( 21:108)
உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளை யிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)
கிறிஸ்தவம் / யூதம்
வேறெந்த கடவுளையும் வணங்க கூடாது என்று பத்து கட்டளைகளில் யெகோவா சொல்லியிருந்தார். எந்தவொரு சிலையையும் வணங்க கூடாது என்றும் சொல்லியிருந்தார். (உபா. 5:6-10)
முடிவுரை
கடவுள் ஒன்று என்று பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் வாங்குதல் என்று வரும் பொழுது அதில் சிலைகளையும், நல்ல மனிதர்களையும், மற்ற சில உயிரினங்களையும், இயற்கையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் நான்மறைகள் அதை வன்மையாக கண்டிக்கிறது.
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்.
பதிலளிநீக்கு2:83. இன்னும் (நினைவுகூருங்கள்:) நாம் இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும் - எதனையும்) நீங்கள் வணங்கக் கூடாது; (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடமும் அழகானதைப் பேசுங்கள்; மேலும், தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம்; ஆனால், உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதிமொழியை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கிறீர்கள்.
3:51. "நிச்சயமாக, அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே, அவனையே வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்."
4:13. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிகிறாரோ அவரை சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; இது மகத்தான வெற்றியாகும்.
4:36. மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை நேசிப்பதில்லை.
4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்களுடன் இருப்பார்கள்; இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள் ஆவார்கள்.
4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார்; எவர் (இவ்வாறு கீழ்ப்படிவதை) புறக்கணித்தால் (அதற்காக நீர் வருந்த வேண்டியதில்லை; ஏனெனில்,) உம்மை அவர்களின் மீது கண்காணிப்பவராக நாம் அனுப்பவில்லை.
5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் திட்டமாக நிராகரித்துவிட்டனர்; ஆனால், மஸீஹ் கூறினார்: "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!" என்று; எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பானோ, அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாகத் தடுத்துவிட்டான்; மேலும், அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:76. "அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையோ செய்ய சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
https://www.tamililquran.com/qurantopic.php?topic=78
6:102. அவன்தான் உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) எந்தக் கடவுளும் இல்லை; அவனே எல்லாப் பொருட்களின் படைப்பாளன் ஆவான்; ஆகவே, அவனையே வணங்குங்கள் - இன்னும், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளன் ஆவான்.
பதிலளிநீக்கு7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம்: அவர் (தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்: உங்களுக்கு அவனன்றி வேறு கடவுள் இல்லை: நிச்சயமாக நான் உங்களின் மீது (வர இருக்கும்) மகத்தான வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" என்று கூறினார்.
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பிவைத்தோம்); அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" என்று கேட்டார்.
11:2. நீங்கள் அல்லாஹ்வையேயன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்! (என்றும்)
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; அவனிடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்; நீர் அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! ஆகவே, நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
15:99. உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!
20:14. "நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும்; என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்தும்."
19:65. "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான்; ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகிப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மையில்) அவனுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?"
21:92. நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்; மேலும், நானே உங்கள் இறைவன்; ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
20:14. "நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும்; என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்தும்."
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) இறைவன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமல் இல்லை.
22:77. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூஉ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்.
23:32. அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம்; "அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு (வேறு) தெய்வம் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்சவேண்டாமா?" (என்றும் அவர் கூறினார்).
27:45. தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: 'நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்' (என்று போதிக்குமாறு) அனுப்பினோம். ஆனால், அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்துகொள்ளலானார்கள்.
29:16. இன்னும், இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: "அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனையே நீங்கள் அஞ்சுங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்" என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக)!
29:56. நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால், நீங்கள் என்னையே வணங்குங்கள்.
33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கிவைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ, அவர் மகத்தான வெற்றிகொண்டு விட்டார்.
36:60. "ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவன்" என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
39:2. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கினோம்; ஆகவே, அல்லாஹ்வை - முற்றிலும் மார்க்கத்தை (-வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவராக - நீர் வணங்குவீராக!
39:66. மாறாக, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், (அவனுக்கு) நன்றி செலுத்துபவர்களில் இருப்பீராக!
43:64. நிச்சயமாக அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன்; ஆகவே, அவனையே வணங்குங்கள்: இதுவே நேரான வழி" (என்றும் கூறினார்).