தமிழர் சமயம்
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறுதெள்ளியர் ஆதலும் வேறு. - (குறள் 374)
பதவுரை:
இருவேறு உலகம் - மனித உலகம், அசுரர் உலகம்
இயற்கை - இயல்பு, அமைப்பு, பண்பு;
திரு வேறு - சிறப்பு வேறு;
தெள்ளியர் ஆதலும் வேறு - ஞானம் பெறுதலும் வேறு.
பொருளுரை: இரு வேறு உலகத்தின் இயல்பு வேறு, அதன் சிறப்பு வேறு, அதில் அறிவுடையார் ஆதலும் வேறு. அதாவது அறிவின் தன்மையும் அளவும் வேறு வேறு.
இதில் "இருவேறு உலகம்" என்பதன் பொருளாக அனைத்து பொழிப்புரையாளர்களும் இவ்வுலகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் இருவேறு நிலைகளை குறிப்பிடுவதாக எழுதியுள்ளனர். ஆனால் அது இருவேறு இயற்கை இயல்பை குறிக்கிறது.
"திரு"-வுக்கு செல்வந்தர் என்று குறிப்பிடும் உரையாசிரியர்கள், செல்வந்தருக்கு உலகத்தின் இயற்க்கை மாறுபடவில்லை என்பதை சிந்திக்க வில்லை என்றே கருதுகிறேன். ஞானம் பெற்றோருக்கும் பெறாதோருக்கும் உலகம் இரு வேறு இயற்கையை வழங்கவில்லை. ஞானம் என்பதே இயற்கையை புரிந்து கொள்ளும் அறிவுதான். எனவே இது இயற்கை மாறுபடும் இரு உலகை குறிப்பிடுகிறது. அது மனித மற்றும் அசுர (ஜின்) உலகமாக இருக்கலாம் அல்லது பூவுலக மற்றும் மேலுலகமாக இருக்கலாம்.
இஸ்லாம்
இஸ்லாம் ஒரே பூமியில் இரண்டு வகையான உலகத்தை குறிப்பிடுகிறது. மனித உலகம், ஜின்கள் உலகம். நம்முடைய உலகின் இயல்பும் சிறப்பும் நாம் அறிந்ததே. அதில் உள்ள ஞானத்தை அறியவே நாம் கல்வி கற்கிறோம். ஜின்கள் உலகம் பற்றியும் அதன் இயல்பு பற்றியும் இஸ்லாம் கூறும் செய்திகள் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.
ஜின்னுலக இயற்கை
நம் கண்களுக்கு புலப்படாத ஜின்கள் உலகம்
ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்!ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம்!நம்முடைய கண்களுக்கு ஜின்கள் ஒரு போதும் தெரியாது ஆனால் விலங்குகள் கண்களுக்கு தெரியும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன! (நூல் : அபூதாவுத் : 4439)
ஜின் படைப்பு
இந்த உலகில் அல்லாஹ் மனிதர்களை படைக்கும் முன்பே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான்!
மனிதர்களை அல்லாஹ் மண்ணால் படைத்தான் என்றால் ! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்த்தவன் தான்! ஜின் இனத்தை அல்லாஹ் நெருப்பால் படைத்தான் ! (அல்குர்ஆன் :15 : 27 | 55 : 15 | 18 : 50)
உருவ அமைப்பு
ஹதீஸ்களில் உள்ள செய்திகளை வைத்து ஜின்களில் மொத்தம் மூன்று வகையினர் உள்ளனர் !
1 ) நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ளவைகள்!2 ) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழும் ஜின்கள்!3 ) ஆகாயத்தில் பறக்கக்கூடிய ஜின்கள்! (நூல் : முஷ்கிலுல் ஆஸார் : 2473)
வசிப்பிடம்
ஜின்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.
1 ) இருட்டான இடங்கள்2 ) பாழடைந்த இடங்கள்3 ) பராமரிப்பில்லாத கட்டிடங்கள்4 ) பராமரிப்பில்லாத மைதானங்கள்5 ) பாலை வனங்கள்6 ) அடர்ந்த காடுகள்7 ) மலைகள்8 ) ஓடைகள்9 ) மையவாடிகள்10 ) பாழடைந்த பள்ளிவாசல்கள்11 ) கிணறுகள்12 ) சமுத்திரங்கள்13 ) வயல் வெளிகள்14 ) சுரங்கங்கள்15 ) பொந்துகள்16 ) வீட்டின் முகடுகள்17 ) மரங்கள்18 )குகைகள்19 ) ஒட்டகம் போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள்20 ) அசுத்தமான (நஜீஸ்) இடங்கள் போன்றவைகளில் ஜின்கள் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. (நூல் : மஜ்முஉல் பதாவா : பாகம் 19 : பக்கம் 40 : 41)
உணவு
ஜின்களும் மனிதர்களை போன்று உண்ணும் ஆனால் அவைகளின் உணவுகள் மாறுபடும்!
1) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியின் எலும்புகள்!2) கெட்டியான சாணம்!3) இது அல்லாமல் சில ஜின்கள் நம்மை போன்று நெருப்பு மூட்டி பாத்திரங்களை வைத்து சமைத்து சாப்பிட கூடியவைகளும் உண்டு! (நூல் : புகாரி : 3860 | முஸ்லீம் : 762 |திர்மிதி : 3311)
ஆற்றல்
நபி சுலைமான் (அலை) அவர்களிடம் ஒரு பலம் பொருந்திய ஜின் கூறியது : நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் பைத்துல் முகத்திஸில் ராணியின் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறிய ஒரு பலம் பொருந்திய ஜின் அதையும் செய்தும் முடித்தது! (அல் குர்ஆன்: 27 : 39)
ஆனால் அல்லாஹ் அதற்கு பின்பு ஜின்களால் வானம் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பாதுகாப்பை உண்டாகினான் அது தான் நெருப்பு கல் (வால் நட்சத்திரம்) அவர்கள் வானம் பக்கம் சென்றால் அல்லாஹ் அவர்களை நெருப்பு கல் மூலம் விரடி அடிப்பான் அல்லது அதனை கொண்டு நெருப்பில் பொசுக்கி விடுவான் (அல்குர்ஆன் : 72:9)
பெரும் பெரும் கட்டிடங்களை எந்த கருவின் உதவி இல்லாமல் அவைகளை கட்டி முடிக்க முடியும்! (அல் குர்ஆன் : 38 : 37)
ஜின்னுலக ஞானம்
ஜின்களுக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்
மனிதர்களுக்கும் மற்றும் ஜின் படைப்புகளுக்கும் நேர் வழி படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி உள்ளான்!
ஜின்களில் நபி மார்களின் பேச்சை கேட்டு கட்டுப்பட்டவர்களும் உண்டு அவர்களை மறுத்துவர்களும் உண்டு! (அல்குர்ஆன் : 6 : 130)
மேலுலகம்
இரு உலகம் என்று குறள் கூறுவது பூவுலகையும் மேலுலகையும் குறிப்பிடுவதாக இருந்தால், அதன் சிறப்பும் ஞானமும் வேறுபட்டே இருக்கிறது.
மேலுலக இயற்கை
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். - (திருக்குர்ஆன் 2:25)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)
முடிவுரை
இரண்டு உலகம் என்பது இங்கேயே என்றால் அது மனிதர் மற்றும் அசுரர் (ஜின்) உலகை குறிக்கிறது. பூவுலக அல்லது மேலுலகை குறிக்கிறது என்று கருத முடியுமா என்று தெரியவில்லை. மேலும் வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. கீழுலகை அது குறிப்பிட வாய்ப்பில்லை ஏனென்றால் அங்கு எந்த "திரு"-வும் அதாவது சிறப்பும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக