கர்மா

இந்து மதத்தில் கர்மா என்று அழைக்கப்படும் சொல்லுக்கு தமிழ் சமய நூல்களில் கருமம் என்றும், பைபிளில் கிரியை என்றும், இஸ்லாத்தில் அமல் என்றும் சொல்லப்படுகிறது. 

அது அல்லாமல் செயல், வினை, தொழில், வேலை, காரியம் போன்ற வார்த்தைகளாலும் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் Deeds, Actions, doings போன்ற வார்த்தைகளால் குறிப்பிடப் படுகிறது.

கருமம் இருவகைப்படும் அவை வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு சொற்க்களால் அடையாள படுத்தப்பட்டுளள்து. அவையாவன,

அறம் மறம்
நல்லறம் புல்லறம் 
நற்செயல் தீச்செயல்
சரி தவறு 
பாவம் புண்ணியம்
நீதி அநீதி
நியாயம் அநியாயம்
கிரமம் அக்கிரமம் 
ஹலால் ஹராம்
அனுமதிக்கப்பட்டது தடுக்கப்பட்டது 

இவைகள் பெரும்பாலும் அனைத்து பண்பாடுகளிலும் ஒரே வரையறையுடன் காணப்படுகிறது. அவைகளின் பட்டியல் ஆதாரங்களுடன் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

இந்துவோ, தமிழரோ, முஸ்லீமோ, கிறிஸ்தவனோ அல்லது அவர் எந்த சமையத்தை சார்ந்தவராகிலும், தான் எதை நம்புகிறானோ குறைந்தபட்சம் அந்த நம்பிக்கையின் படி எது சரியோ அதைச் செய்யவும், எது பாவமோ அதை விட்டு விடவும் ஆர்வம் ஏதுமமின்றி, அடுத்தவர் நம்பிக்கையையும் சமையத்தையும் நோக்கி விரல் சுட்டுவதும், பொறாமைப்படுவதும், வெறுப்பை உமிழ்வதும் யாருக்கு என்ன பயனைத் தரும்? 

ஆய்வாளர்கள் பெரும்பாலும் பண்பாடுகளிடையே உள்ள வேற்றுமையை மட்டுமே முதல் பொருளாக கைக்கொண்டு பட்டியலிட முனைந்துள்ளார். ஆனால் ஒற்றுமையயை பட்டியலிட்டு அவற்றை மக்களிடையே செயல்பாட்டுக்கு கொண்டுவர இயன்றால் அது மகத்தான சமூக இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும். 

கருமங்களில் நல்லதும் தீயதும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளது. 

3 கருத்துகள்:

  1. மத்தேயு 4:17
    அச்சமயத்திலிருந்து இயேசு,, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்பா : 37
      வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
      அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
      கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
      விண்ணுறுவார்க் கில்லை விதி.
      விளக்கம்:
      பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே.

      நீக்கு
  2. கர்மா என்றால் என்ன?
    கர்மா என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு,
    கருமம், செயல், வினை என்று தமிழிலும் (தமிழர் சமயங்கள்)
    Deeds, Actions, doings என்று ஆங்கிலத்திலும் (கிறிஸ்தவம் யூதம்)
    அமல் என்று அரபியிலும் (இசுலாம்) சொல்லப்படுகிறது.
    அதாவது நாம் தினமும் செய்யும் செயல்களே கர்மா ஆகும். அது மிக மிக சிறியதாக இருந்தாலும் சரியே. உதாரனமாக, பாதையிலிருந்து கல்லை அகற்றுவது நல்ல கர்மா. ஒரு எழியவனை அல்லது எழையை கண்டு கேளியாக மெல்லியதாக சிரிப்பது.
    நம்மால் செய்யப்படுகின்ற வினைக்கு நமக்கு கிடைக்கும் பதில் வினையும் கர்மா எனப்படும். இது நன்மை தீமை என இருவகைப்படும். தீயவற்றை அழித்து நன்மையாக மாற்றுவதை தான் கர்மாவை அழிப்பதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
    எனவே தீய கர்மாவை அழிக்க, வேதங்கள் கூறும் அறத்தை பின்பற்றுவது தான் வழி. இந்த கர்மாவின் அதாவது செயலில் நல்லது தீயதை பிரித்து விளக்கவும், தீய செயல்களால் உண்டாகும் வினைப்பயனை அழிக்கும் வழிமுறையையும் மறைநூல்கள் நமக்கு சொல்கின்றன.
    தீய செயலை அழிக்க நன்மை செய்ய வேண்டும். நமது விருப்பத்துக்கு அல்ல, வேதம் கூறுவன போல செய்ய வேண்டும்.
    கர்மப் பயனை அழிக்க இதுதான் ஒரே வழி.

    பதிலளிநீக்கு